jaga flash news

Monday 17 July 2023

கனவுகளும் பலன்களும்

நம்முடைய மறைந்த முன்னோர்கள் தாத்தா, பாட்டி, சித்தப்பா, பெரியப்பா என யாராவது ஒருவர் கனவில் வந்து எதையாவது சொல்ல முயற்சி செய்வார்கள். செத்துப்போனவர்கள் கனவில் வருவது நல்லதா? கெட்டதா? ஏதேனும் பிரச்சினை வருமா? என்றெல்லாம் பலரும் யோசிப்பார்கள். கனவில் இறந்து போனவர்கள் வந்தால் என்ன பலன் நடைபெறும் என்று பார்க்கலாம்.


கனவுகளும் பலன்களும்: கனவுகளை உளவியல் ரீதியாக முதன்முதலில் அணுகி விளக்கம் கொடுத்தவர் சிக்மண்ட் ஃபிராய்ட். அதற்கு பின் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன. கனவுகள் என்பவை நாம் நடக்கவேண்டுமென்று நினைப்பது மட்டுமல்ல, நாம் செய்யத் தவறியதாகவும், அதை அறியாமலும் கூட இருக்கலாம். கனவுகள் நமக்கு அவற்றை நினைவுபடுத்தலாம். சுருக்கமாக கனவுகள் ஒரு சம்பவத்தின், ஆசையின், உணர்வின் விளைவாகவும் இருக்கலாம், காரணமாகவும் இருக்கலாம். பகலில் கனவு பலிக்காது அதே நேரத்தில் அதிகாலையில் காணும் கனவு நிச்சயம் பலிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. சிலருக்கு தினம் தினம் புதிது புதிதாக கனவு வரும். சிலருக்கு பெரும்பாலும் கெட்ட கெட்ட கனவுகள், அகோரமான பயங்கரமான கனவுகளும் வந்து அச்சுறுத்தும். என்ன மாதிரியான கனவுகள் வந்தால் என்ன பலன் என்று பார்க்கலாம்.


நல்ல கனவு: விவசாயிகள் உழுவதைப்போல் கனவு கண்டால், சேமிப்பு பெருகும். வானவில்லை கனவில் கண்டால் பணம், செல்வாக்கு அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். கனவில் நிலவை கண்டால் தம்பதிகளிடையே அன்பு பெருகும். ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்களை கனவில் கண்டால் பதவி உயர்வு நிச்சயம் உண்டு. திருமணமாகாதவர்கள் பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணமானோருக்கு செல்வம் வந்து சேரும். ஆசிரியர் பாடம் நடத்துவதைப் போல் கனவு கண்டால் நாம் நினைத்தது எல்லாம் நிறைவேறும். இறந்தவர்களின் சடலத்தைக் கனவில் கண்டால் சுபநிகழ்ச்சிகள் நடக்கும்.


பண வருமானம் வரும்: உயரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் பணம், பாராட்டு குவியும். தெய்வங்களை கனவில் கண்டால் புதையல் கிடைக்கும். திருமண கோலத்தை கனவில் கண்டால், சமூகத்தில் நன்மதிப்பு உயரும். சிறு குழந்தைகளை கனவில் கண்டால் நோயிலிருந்து விடுதலை கிடைக்கும். கர்ப்பிணியை கனவில் கண்டால் பொருள் வந்து சேரும், நலம் அதிகரிக்கும். மாமிசம் உண்பது போல் கனவு கண்டால் பெரிய அதிர்ஷ்டம் தேடி வரும். மலத்தை கனவில் கண்டால் பண வரவு வரும். மலத்தை மிதிப்பதை போல் கனவில் கண்டால் சுபச்செலவுகள் ஏற்படும்.


ஜாக்பாட் அடிக்கும்: தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் நொருங்கி வந்த ஆபத்துகள் நீங்கி, நன்மை பிறக்கும். நண்பன் இறந்ததாக கனவு கண்டால் நண்பனின் ஆயுள் கூடும். இறந்தவர் கனவில் வந்தாலே இறந்தவருடன் பேசுவதைப் போன்று கனவு கண்டால் அதிகாரம் ,பதவி, லாபம் நிச்சயம் கூடி வரும். இறந்தவர்களுடன் பேசுவது போல் கனவு கண்டால் பெயரும், புகழும் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.

நல்ல செய்தி தேடி வரும்: பொதுவாகவே இறந்தவர்கள் கனவில் வந்தால் நல்ல செய்தி வரும் மேலும் நீங்கள் நீண்ட காலம் வாழ்வீர்கள் என்று பொருள். இறந்தவர்கள் கனவில் வந்து நம்மை ஆசிர்வதிப்பது போல கனவு கண்டால் நன்மைகள் அதிகரிக்குமாம். இறந்து போனவர்கள் உங்கள் வீட்டில் தூங்குவதை போல கனவு கண்டால் பெரிய கண்டத்தில் இருந்து தப்பிப்பீர்கள் என்று பொருள்.


வரக்கூடாத கெட்ட கனவுகள்: சவபெட்டியை கனவில் கண்டால் நமக்கு நெருங்கியவர்கள் இறக்க போகிறார்கள் என்று அர்த்தம். இறந்தவர்கள் நம் கனவில் வந்து அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, கோவிலில் அர்ச்சனை செய்வது நல்லது. பசுமாடு விரட்டுவதை போல் கனவில் கண்டால் உடல் நலம் கெட்டு நோய்கள் தாக்கும். நோய் பிடித்ததாக கனவு கண்டால், நண்பர் ஏமாற்றுவார். அடிபட்டு ஊனமாவதை போன்று கனவு கண்டால் சோகமான செய்தி வந்து சேரும். முத்தமிடுவது போல் கனவு கண்டால் செல்வாக்கு சரியும். நிர்வாண கோலத்தை கனவில் கண்டால், அவமானம் தேடி வரும். குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு கண்டால் கொடிய வறுமை வரும்,செல்வாக்கு சரியும். சமையல் செய்வது போல் கனவு கண்டால் அவமானம் வந்து சேரும். முட்டை சாப்பிடுவது போல் கனவு கண்டால் வறுமை பீடிக்கும். ஒருவேளை கெட்ட கனவுகள் வந்தால் நாம் சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் உறங்கி விட வேண்டும். அரை மணி நேரம் கழித்து மீண்டும் எழுந்து வழக்கமான வேலையை பார்க்கத் தொடங்கலாம்.

 

No comments:

Post a Comment