jaga flash news

Saturday 25 November 2023

Bad Food Combo For Bones...


எலும்புகளை பலவீனப்படுத்தும் கீரைகள்! கீரையுடன் சாப்பிடக்கூடாத உணவுகள்
Bad Food Combo For Bones: எலும்பு பலவீனத்தை ஏற்படுத்தும் காய்கறிகளில் கீரைக்கு தான் முதலிடம் உண்டு. கீரையில் கால்சியம் இருக்கும்போது அது எப்படி எலும்பை பலவீனப்படுத்தும்? தெரிந்துக் கொள்ளுங்கள்

எலும்புகளை பலவீனப்படுத்தும் கீரைகள்! கீரையுடன் சாப்பிடக்கூடாத உணவுகள்

கீரையில் கால்சியம்
எலும்பை பலவீனப்படுத்தும் உணவுகள்
மோசமான உணவு காம்பினேஷன்கள்

ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் சில பொருட்கள், தீமையையே செய்யும். அதற்கு காரணம், சத்தான பொருளுடன் மற்றொரு உணவு இணையும்போது ஏற்படும் மாற்றங்கள் தான். அதற்கு உதாரணமாக உடலில் இருக்கும் கால்சியத்தை கரைத்து விடும் தன்மை கொண்ட ஒரு நல்ல உணவைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள். பச்சை பசேலென்று இருக்கும் இந்த காய்கறி எலும்புகளில் இருந்து கால்சியத்தை அழித்துவிடும், உணவு உடலுக்கு ஆரோக்கியதை கொடுக்கும் வேலையை மட்டுமல்ல, கெடுக்கும் வேலையையும் செய்யும்.



எலும்புகளை வலுவாக வைத்திருக்க, காய்கறிகளை உள்ளடக்கிய சரியான உணவைக் கொண்டிருப்பது முக்கியம். ஆனால் சில காய்கறிகள் எலும்பு பலவீனத்தையும் ஏற்படுத்தும் என்பது ஆச்சரியமான ஆனால் சத்தியமான உண்மை ஆகும். எலும்புகள் நமது உடலின் கட்டமைப்பின் முக்கிய அடிப்படையாகும், நமது உடலில் உள்ள தசைகளின் பங்களிப்பு எலும்புகளின் பங்களிப்புக்கு சமம். எனவே, எலும்புகளை வலுவாக வைத்திருக்க சரியான உணவைக் கடைப்பிடிப்பது அவசியம்.

எலும்புகளை வலுவாக வைத்திருக்க, பால், விதைகள், உலர் பழங்கள் மற்றும் மீன் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவை அனைத்தும் எலும்புகளுக்கு கால்சியத்தை வழங்கும் உணவுகள், ஆனால் சில வகையான உணவுகள் எலும்புகளில் கால்சியம் பற்றாக்குறையை ஏற்படுத்தும்.

மேலும் படிக்க | சுகர் லெவலை சூப்பரா கட்டுப்படுத்தும் கொய்யா இலை: இப்படி சாப்பிடுங்கள்

இந்த உணவுகளை நாம் அறியாமல், தினமும் இந்த உணவுகளை உட்கொண்டால், நமது எலும்புகள் வலுவிழந்துவிடும். இதன் காரணமாக, எலும்பு முறிவு ஏற்படும் ஆபத்து அதிகரிக்கிறது.

குறிப்பாக ஏற்கனவே எலும்பு சம்பந்தமான நோய் உள்ளவர்கள் இந்த உணவுகளை பற்றி தெரிந்து கொள்வது அவசியம். அதனால் அவர்களின் நோயின் அறிகுறிகள் தீவிரமடைவதைத் தடுக்கலாம்.

எலும்பை பலவீனப்படுத்தும் கீரை

எலும்புகளை வலுப்படுத்துவதற்குப் பதிலாக பலவீனமடையச் செய்யும் உணவுகளில் கீரையும் ஒன்று. கீரையில் கால்சியம் அதிகம் இருந்தாலும், அதனுடன் ஆக்சலேட்டும் இதில் உள்ளது. ஆக்சலேட் என்பது ஒரு சிறப்பு வகை கலவை ஆகும், இது கால்சியம் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. கீரையில் உள்ள கால்சியம் எலும்புகளில் உறிஞ்சப்படுவதில்லை என்பதால் எலும்புகளுக்கு அது சென்று சேராது.

மேலும் படிக்க | கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் உணவுகள்! சகல ரோக நிவாரணியாகவும் மாறும் இயற்கைக்கொடை

கீரையின் பக்க விளைவுகள்
கால்சியம் சத்து தரும் கீரையுடன் கூடிய உணவுகளை சாப்பிட்டால் அதன் முழு பலனையும் பெற முடியாது. உதாரணமாக, இரவு உணவில் கீரையை சாப்பிட்டுவிட்டு, இரவு தூங்கும் முன் பால் குடித்தால், பாலில் உள்ள கால்சியத்தை முழுமையாகப் பெற முடியாமல் போகலாம். கீரையில் உள்ள ஆக்சலேட் தான் இதற்கு காரணம் ஆகும்.

இருப்பினும், கீரை மிகவும் நன்மை பயக்கும் உணவாகும், இது நம் உடலுக்கு இரும்பு, வைட்டமின்கள் உட்பட பல வகையான ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. செரிமானத்திற்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. எனவே, கீரை சாப்பிடுவதை நிறுத்த வேண்டாம். ஆனால் அதனுடன் அதிக கால்சியம் உணவுகளை எடுத்துக் கொள்ளாதீர்கள். உதாரணமாக, நீங்கள் கீரை காய்கறிகளை சாப்பிடுகிறீர்கள் என்றால், 4 முதல் 5 மணி நேரம் கழித்து பால் குடித்தால் தான் அதன் பயன் கிடைக்கும்.


No comments:

Post a Comment