Parenting Tips |
தவறு செய்யும் குழந்தைகளிடம் மிகுந்த கோபத்தை வெளிக்காட்டினால், அவர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கக் கூடும். அதாவது, பெற்றோர் தன்னை அடிக்கும் நிலையில், தான் ஏன் மற்றவர்களை அடிக்கக் கூடாது என்ற குழப்பமான மனநிலை உண்டாகும்.
குழந்தைகளை நல்ல பண்போடும், ஒழுக்கத்தோடும் வளர்க்க வேண்டியது பெற்றோரின் கடமை. இதற்காகத் தான் பல பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம் கண்டிப்புடன் நடந்து கொள்கின்றனர். சில சமயம், தண்டிக்கவும் செய்கின்றனர். ஆனால், குழந்தைகள் கள்ளம், கபடமற்ற பிஞ்சு மனம் கொண்டவர்கள். அவர்கள் தவறு செய்யும் நேரங்களில் திட்டுவது, ஆவேசமாக மிரட்டுவது போன்ற பாணிகளை கையாளக் கூடாது. குழந்தைகள் மனதில் வன்மம், வெறுப்பு உள்ளிட்டவை உண்டாக இது காரணமாகும்
பொறுமை அவசியம்: தவறு செய்யும் குழந்தைகளிடம் மிகுந்த கோபத்தை வெளிக்காட்டினால், அவர்களுக்கு குழப்பத்தை உண்டாக்கக் கூடும். அதாவது, பெற்றோர் தன்னை அடிக்கும் நிலையில், தான் ஏன் மற்றவர்களை அடிக்கக் கூடாது என்ற குழப்பமான மனநிலை உண்டாகும். அதே சமயம், எந்த இடத்தில் குழந்தை தவறாக நடந்து கொண்டதோ, அங்கிருந்து அழைத்து வந்து, தன் தவறை தானே சிந்திப்பதற்கான நேரத்தை கொடுக்க வேண்டும். மாறாக, உங்களுடைய கோபத்தையும், உணர்ச்சிகளையும் கொட்டக் கூடாது.
தீர்வுகளை கண்டறிய உதவுங்கள்: குழந்தைகளிடம் ஆரோக்கியமான முறையில் பேசுவது மிக முக்கியம். குறிப்பாக, நீங்கள் மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல் குழந்தைகள் பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும்
மனதினுள் சுய வேலி ஒன்றை உருவாக்கும். நல்லது, கெட்டது இடையே உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வைக்கும்
யதார்த்தம் என்னவென்று புரிய வைப்பது: எது யதார்த்தம், எது இயல்புக்கு மாறானது என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். சில தவறுகளை செய்வதினால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்து குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும். சத்தான உணவுகளை குழந்தை சாப்பிட மறுக்கும் நாட்களில் அவர்களுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ்களை கொடுக்கக் கூடாது
குழந்தைகளின் உணர்வுகளை குறைவாக மதிப்பிட வேண்டாம்: உங்கள் குழந்தை வயதில் சிறியவராக இருக்கலாம். ஆனால், பெரியவர்களைப் போல அவர்களுக்கும் தங்களுடைய உணர்வுகள் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். அவர்களின் உணர்வுகளை புறக்கணித்தால், நாளடைவில் அது வன்மமாக மாறும்.
மதிப்புகளை உணர கற்றுக் கொடுங்கள்: குழந்தைகளின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் நோக்கில் பெற்றோர் கடுமையாக உழைக்கின்றனர். அதே சமயம், ஒவ்வொரு விஷயத்தின் மதிப்புகளையும் அவர்களுக்கு கற்றுக் கொடுங்கள். சிறப்பினும், சிறப்பானதை தேர்வு செய்ய சொல்லிக் கொடுக்கவும்.
No comments:
Post a Comment