jaga flash news

Tuesday 19 December 2023

பாரசீகம் என்று நாம் எந்த நாட்டை கூறுகிறோம்?

ஈரான் நாட்டை தான் பண்டைய காலத்தில் பாரசீகம் என்று அழைத்தோம். இவ்வுலகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிக மிக முக்கிய நாடுகளில், இந்தியா, சீனா, பாரசீகம், ஆகியனவற்றை குறிப்பிடலாம்.

நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கும் “ஆரியர்கள்” பாரசீகத்தில் இருந்து வந்தார்கள் என்று பெரும்பான்மை அறிஞர்களால் நம்பபடுகிறது. உதாரணம், அன்றைய பாரசீக மக்களின் “சொராட்டிரிய” மதத்தின் (Zoroastrianism) புனித நூலான ஜெந் அவெஸ்தா (Avesta) விலும், நம் நாட்டின் ஹிந்துக்களின் புனித நூலான “ரிக் வேதத்திலும்” பல சொற்கள், வாக்கியங்கள், சமமாக பொறுந்தி உள்ளது. ஆகையால், நம் இந்திய கலாச்சாரத்திற்கும் பாரசீக கலாச்சாரத்திற்கும் நிறைய ஒற்றுமை உள்ளன !
பாரசீகம் என்று நாம் எந்த நாட்டை கூறுகிறோம்? சமூக அறிவியல் புத்தகம் படிக்கும் போது எனக்கு எழுந்த சந்தேகம் இது.
இன்றைய ஈரான் நாட்டை தான் பண்டைய காலத்தில் பாரசீகம் என்று அழைத்தோம். இவ்வுலகத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மிக மிக முக்கிய நாடுகளில், இந்தியா, சீனா, பாரசீகம், ஆகியனவற்றை குறிப்பிடலாம்.

நாம் அதிகம் கேள்விப்பட்டிருக்கும் “ஆரியர்கள்” பாரசீகத்தில் இருந்து வந்தார்கள் என்று பெரும்பான்மை அறிஞர்களால் நம்பபடுகிறது. உதாரணம், அன்றைய பாரசீக மக்களின் “சொராட்டிரிய” மதத்தின் (Zoroastrianism) புனித நூலான ஜெந் அவெஸ்தா (Avesta) விலும், நம் நாட்டின் ஹிந்துக்களின் புனித நூலான “ரிக் வேதத்திலும்” பல சொற்கள், வாக்கியங்கள், சமமாக பொறுந்தி உள்ளது. ஆகையால், நம் இந்திய கலாச்சாரத்திற்கும் பாரசீக கலாச்சாரத்திற்கும் நிறைய ஒற்றுமை உள்ளன !


பாரசீகத்தின் மிக முக்கிய பேரரசுகள்,

அகாமனிசியப் பேரரசு (Achaemenid Empire) - காலம் -கிமு 550-330,

செலூக்கியப் பேரரசு (Seleucid Empire) - காலம் - கி.மு. 312 - கி.மு. 63,

பார்த்தியப் பேரரசு (Parthian Empire)- காலம் - கி மு – 247 - கி பி 224,

சாசானியப் பேரரசு (Sasanian Empire) - காலம் - கி.பி. 224 - 651 .

மேற்கண்ட அனைத்து பேரரசுகளும், சொராட்டிரிய மதத்தையே பின்பற்றின. சொராட்டிரிய மதம் ஓரிறைக்கொள்கை உடைய மதம் (Monotheistic religion ).

பின்பு வந்த இஸ்லாமியர்களால் பாரசீக நாடு முழுவதும் இஸ்லாம் மதம் மிக வேகமாக பரவியது. இதில் வருத்தம் என்னவென்றால்,சொராட்டிரிய மதம் முற்றிலுமாக அழிய தொடங்கியது. பல நூறு சொராட்டிரியர்கள் இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடம்பெயர்ந்தார்கள். இந்தியாவிற்கு வந்தவர்களை நாம் பார்சிகள் (Parsi) என்று இன்றும் அழைக்கிறோம். இந்தியாவின் குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பார்சிகள் அதிகம் வசிக்கிறார்கள்.

பின்பு இஸ்லாம் மதம், அரசியல் ரீதியாக பிளவுப்பட்டு, சன்னி, ஷியா என்று ஆனது. பெரும்பான்மை பாரசீகர்கள் ஷியா பிரிவு இஸ்லாத்தை பின்பற்றினார்கள் (பின்பற்றுகிறார்கள்). பின்பு

சபாவித்து வம்சம் (Safavid dynasty) - 1501 கி.பி - 1736 கி.பி,

குவாஜர் வம்சம் (Qajar dynasty)- 1794கி.பி. - 1925 கி.பி.

பகலவி வம்சம் (Pahlavi dynasty) - 1925 கி.பி. - 1979 கி.பி.

ஆகிய வம்சங்கள் பாரசீகத்தை ஆண்டன. இங்கே, நம் இந்தியாவை ஆண்ட முகலாய பேரரசின் (1526 கி.பி. - 1857 கி.பி.) ஆட்சி மொழி பாரசீகம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக, பகலவி வம்சத்தை 1979 இல் ஈரானியப் புரட்சி மூலம் ஆயதுல்லா ரூகொல்லா கொமெய்னி (Ayatollah Ruhollah Khomeini) முடிவிற்கு கொண்டு வந்தார். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய முடியாட்சி முறை 1979 இல் மக்களாட்சியாக மறுமலர்ச்சி பெற்றது. ஈரான் என்று தற்போது அழைக்கப்படுகிறது.


இங்கே கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம், பகலவி வம்சம், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு மிக நெருக்கமாக இருந்தது. ஆனால், தற்போதைய ஈரான், அமெரிக்காவையும், இஸ்ரேலையும் மிகக்கடுமையான முறையில் எதிர்கிறது. தற்போது ஈரானின் ஆதிக்கம் மத்தியகிழக்கில் பல அரசியல் மாற்றத்தை தந்துள்ளது. இந்தியாவிற்கு மிக நெருக்கமான நாடக ஈரான் தற்போது உள்ளது.

No comments:

Post a Comment