jaga flash news

Monday, 22 January 2024

திராட்சை கொட்டை.. ஒரு விதையைகூட இனிமேல் கீழே போட்றாதீங்க.. அத்தனையும் நன்மை.. செம திராட்சை விதைகள்


 திராட்சைப்பழத்துடன் அதன் விதைகளையும் சேர்த்து சாப்பிடுவதுதான் நல்லது என்கிறார்கள்.. இதற்கெல்லாம் என்ன காரணம் தெரியுமா? விதைகளிலுள்ள சத்துக்கள் என்னென்ன தெரியுமா?


வைட்டமின் E, C, லினொலெனிக் ஆசிட், பாலிபீனால் போன்ற சத்துக்கள் இந்த திராட்சையில் உள்ளது. திராட்சை பழத்தை பொறுத்தவரை, பிரான்ஸ் நாட்டினர் இதை ஒயினாக பயன்படுத்துகிறார்கள்.


Do you know the Excellent Health Benefits of Grape Seeds and 5 Super Uses of Grape Seed Juice for Women
அதனால்தான், அவர்களுக்கு இதய நோய் பாதிப்பு குறைவாக இருக்கிறதாம். அந்த அளவுக்கு இதயத்துக்கு நன்மை தரக்கூடியது இந்த பழம். ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்ட்ராலை கரைக்கிறது.

Different types of marketing


கருப்பை கோளாறு: பெண்களுக்கு எல்லா வகையிலும் சிறந்த பழம் இந்த திராட்சைதான். கருப்பை கோளாறுகள் இருந்தாலும்சரி, ஹீமோகுளோபின் பிரச்சனை இருந்தாலும்சரி, கருப்பு திராட்சை ஒன்றே போதும், ரத்த நாளங்கள் விரிவடைவதுடன், ரத்தசோகையும் தடுக்கப்படும்..

ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவும் குறைந்து விடும். பெண்களின் மார்பகப்புற்றுநோய் செல்களை தடுக்கப்படுகிறது. மூப்பு காலங்களில், ஆண்களுக்கு தொல்லை தரும் புராஸ்டேட் புற்று வராமலும் தடுக்கிறது.

ஆனால், திராட்சையை பயன்படுத்தும்போது, பலரும் விதைகளை பயன்படுத்துவதில்லை.. இந்த பழத்திலிருக்கும், வைட்டமின் E சத்தைவிட, திராட்சை விதையில் 50 விழுக்காடு அதிக சக்தி இருக்கிறதாம்.. வைட்டமின்-C சத்தைவிட 20 மடங்கு சக்தி கொண்டதாம்.. அதனால்தான், காயங்களையும், ரணங்களையும், குடல் புண்களையும், வாய்ப்புண்களையும் ஆற்றும் தன்மை, திராட்சை விதைகளுக்கு உண்டு.


அஜீரணம்: அஜீரணம் பிரச்சனை உள்ளவர்கள், கருப்பு திராட்சையை விதையுடன் அரைத்து சாறு எடுத்து, வெறும் வயிற்றில் குடித்து வந்தால், மந்த நிலை நீங்கும்.. நன்றாக பசி எடுக்கும். நினைவாற்றலை வளர்ப்பதால், இந்த திராட்சையை குழந்தைகளுக்கு நிறைய தர வேண்டும். உடல் பலவீனம் உள்ளவர்கள், தோல் வியாதி, மூட்டு வலி, மூட்டு வலி வீக்கம் உள்ளவர்கள், இந்த திராட்சை விதைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

திராட்சை விதைகளுடன் சேர்த்து அரைத்து ஜூஸ் குடித்து வருபவர்களுக்கு, கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதில்லை.. முக்கியமாக, கண்ணில் புரை வளருவது தடுக்கப்படுகிறது..


விதைகள்: அதைவிட முக்கியமாக, இந்த விதையில் உள்ள முக்கிய உட் கூறுகள், புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது.. மூலநோய் உள்ளவர்களுக்கு அதிக ரத்தப்போக்கை இருந்தால், அதனை இந்த திராட்சை விதைகள் கட்டுப்படுத்துகின்றன.. அதேபோல, சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துப்போகும் தன்மையையும், இந்த விதைகள் தீர்க்கின்றன..

இது கேமுக்கான நேரம் - விளையாடுங்கள் இப்போதே!


Friday, 19 January 2024

இந்த 10 பொருட்களை மறந்தும் கூட தானமாக அளித்து விடாதீர்கள்! உங்கள் வீட்டில் வறுமை கூட‌ ஏற்படலாம் !!!


நமது சம்பாத்தியத்தில் ஒரு பகுதியை தானமாக அளிக்க வேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது. அதனைக் கூட எப்படி தர வேண்டும் என்றால் வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூட தெரியக் கூடாதாம். அதாவது நாம் தானம் அளிப்பதைப் பற்றி பெருமையாக நினைத்து பிறரிடம் கூறிக் கொண்டு இருக்கக் கூடாது. அவ்வாறு அளிக்கும் தானத்தின் பலன் பல மடங்கு கூடும் என்றாலும் பலனை எதிர்பார்த்து தானம் அளித்தல் கூடாது.

தானம் அளிப்பது மிகவும் சிறந்த விஷயமாக இருந்தாலும் தானமாக கொடுக்கும் சில பொருட்கள் தானம் கொடுப்பவர்களின் அதிர்ஷ்டத்தை குறைத்துவிடும். எனவே தானம் கொடுப்பதற்கு முன்பு எந்த பொருட்களை எல்லாம் தானமாக வழங்கக்கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் நல்லது. அந்த வகையில் எந்தெந்த பொருட்களை தானமாக வழங்க கூடாது என்பதனை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.


கல் உப்பு

கல் உப்பு என்பது மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படுகிறது. அப்படிப்பட்ட கல் உப்பினை நாமும் தானமாக பெறக்கூடாது மற்றவர்களுக்கும் தானமாக அளிக்கக்கூடாது. ஒருவேளை உப்பினை நாம் தானமாக அளித்துவிட்டோம் என்றால் நம்முடைய வீட்டில் குடியிருக்கும் மகாலட்சுமியானவள் வெளியே சென்று விடுவாள் என்று நம்பப்படுகிறது. அதனால் எக்காரணத்திற்க் கொண்டும் உப்பினை தானமாக அளிக்கக்கூடாது.

கிழிந்த ஆடைகள்
நாம் துணிகளை தானமாக கொடுப்போம். ஆனால் அந்த துணி கிழிந்த துணிகளாக இருக்க கூடாது. கிழிந்த துணிகளை மற்றவர்களுக்கு தானமாக கொடுத்தால் நம்முடைய வீட்டில் வறுமை நிலை ஏற்பட்டு விடும். அதனால் நல்ல நிலையில் உள்ள துணிகளை மட்டுமே நாம் தானமாக வழங்க வேண்டும்.

விளக்குகள்

நமது வீட்டில் பயன்படுத்தும் அகல் விளக்கு அல்லது காமாட்சி விளக்கு, அது எந்த விளக்காக இருந்தாலும் அதனை மற்றவர்களுக்கு தானமாக அளிக்க கூடாது. விளக்கில் தான் அனைத்து தெய்வங்களும் குடிக்கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட விளக்கினை நாம் தானமாக அளித்து விட்டோம் என்றால் நமது வீட்டில் உள்ள தெய்வ சக்தி குறைந்து விடும்.

கூர்மையான பொருட்கள்
நமது வீட்டில் இருக்கும் கூர்மையான பொருட்கள், அதாவது கத்தி, ஊசி, அருகாமனை போன்ற பொருட்களை நாம் தானமாக அளிக்க கூடாது. கூர்மையான பொருட்களை தனமாக வழங்கினால் வீட்டில் துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும். அதுமட்டுமல்லாமல் நாம் யாருக்கு தானமாக இந்த பொருட்களை வழங்குகிறோமோ அவர்களுக்கும் நமக்கும் இடையே பகை ஏற்பட்டு விடும். எனவே இந்த பொருட்களை நாம் எக்காரணத்திற்க் கொண்டும் தானமாக அளிக்க கூடாது.

அன்ன‌ தானம்

தானத்தில் சிறந்த தானமான அன்னதானத்தை வழங்குவதால் புண்ணியம் கிடைக்கும். உணவில் கெட்டு போன பொருட்களை தானமாக கொடுக்க கூடாது. அப்படி கொடுத்தால் செலவுகள் அதிகமாக ஏற்படும். அதுமட்டுமல்லாமல் அது நம்மையும் நமது தலைமுறையும் பாதிக்கும். எனவே பழைய உணவுகளை எப்போதும் தானமாக வழங்கக்கூடாது.

பழைய பாத்திரங்கள்

நமது வீட்டில் பயன்படுத்தாத அல்லது விரிசல் விட்ட பாத்திரங்களை மற்றவர்களுக்கு தானமாக அளிக்கக்கூடாது. அதிலும் குறிப்பாக நாம் பயன்படுத்தாத குடத்தை ஒருவருக்கு தானமாக அளிக்க கூடாது இப்படி செய்தோமே ஆனால் நமது வீட்டில் தரித்திரம் ஏற்பட்டு விடும்.


துடைப்பம்

துடைப்பத்தை ஒருவருக்கு தானமாக கொடுக்க கூடாது. துடைப்பம் மகாலட்சுமி தாயார் வாசம் செய்யும் பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் துடைப்பத்தை மற்றவர்களுக்கு கொடுத்தால் நமது வீட்டின் செல்வத்தை அவர்களுக்கும் கொடுப்பதாம்.

மணி பர்ஸ்

ஆண்கள் பயன்படுத்தும் மணி பர்ஸாக இருந்தாலும் சரி, பெண்கள் பயன்படுத்தும் பேக்குகளாக இருந்தாலும் சரி, நாம் அதனை பயன்படுத்தவில்லை என்றால் மற்றவர்களுக்கு அதை தானமாக அளித்து விடுவோம் ஆனால் அப்படி செய்யக்கூடாது. ஏனென்றால் பணம் புழங்குவதற்கு நமது வீட்டில் பல வகையான பரிகாரத்தை நாம் மேற்கொண்டிருப்போம் அதற்கு மூல காரணமான இந்த மணி பர்ஸை நாம் யாருக்கும் தானமாக அளிக்கக்கூடாது.



படுக்கை விரிப்புகள்

படுக்கையறை பொருட்களான தலையணை, பாய், படுக்கை விரிப்பு, முதலிய பொருட்களை தானமாக அளிக்க கூடாது. ஒருவேளை இந்த பொருட்களை நாம் தானமாக அளித்தால் நமது வீட்டில் தரித்திரம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அலங்காரப் பொருட்கள்
நமது வீட்டு அலங்காரத்திற்காக பல பொருட்கள் வாங்கி வைத்திருப்போம். அதாவது குதிரை பொம்மை, பசு பொம்மை, யானை பொம்மை இது போன்ற பொம்மைகளை வாங்கி வைத்திருப்போம். பொதுவாக இந்த பொருட்கள் எல்லாம் ஐஸ்வர்யம் நிறைந்த பொருட்களாக கருதப்படுகிறது. இதனை நமது வீட்டிற்கு வருபவர்களுக்கு ஒருபோதும் தானமாக அளிக்கக் கூடாது. ஒருவேளை நாம் தானமாக அழித்து விட்டோம் என்றால் நமது வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைந்து விடும்.


உணவில் ஐந்து தோசங்கள் உண்டு...

இந்து சமயத்தவரின் வாழ்க்கை முறையில் உணவை எப்படி எங்கே யார் மூலம் செய்யப்பட்டு, பரிமாறப்பட்டு சாப்பிடுகிறோம் என்பது மிகவும் முக்கியமானது. அன்னம் என்பது ப்ராணனைத் தாங்குவது. ஆகவே அதை யார் சமைக்கிறார்கள், எப்படிச் சமைக்கிறார்கள் என்பதும் கூட முக்கியம் தான்.

உணவில் ஐந்து தோசங்கள் உண்டு.

1. அர்த்த தோசம்

2. நிமித்த தோசம்

3. ஸ்தான தோசம்

4. ஜாதி தோசம்

5. சம்ஸ்கார தோசம்

1. அர்த்த தோசம்

பண்டிதர் ஒருவர் தனது சீடர் ஒருவரின் வீட்டிற்கு உணவருந்த வந்தார். உணவருந்தி முடியும் போது அவரது வாடிக்கையாளர் ஒருவர் பணம் நிரம்பிய மூட்டை ஒன்றைச் சீடரிடம் தந்ததைப் பார்த்தார். உணவருந்தி முடிந்து தனியே அறையில் இருக்கும் போது அவருக்கு பணத்தாசை தோன்றியது. சீடருக்கு வந்த பைக்குள் கைவிட்டு கை நிறைய பணத்தை எடுத்துக் கொண்டார். பின்னர் விடை பெற்றுக் கொண்டு வீடு திரும்பினார். மறுநாள் காலையில், பூஜை செய்யும் போது முதல் நாள் தான் செய்ததை நினைத்துப் பார்த்தார். அடடா என்ன தவறு செய்து விட்டோம் இந்தத் தவறை நான் எப்படி செய்தேன் என்று நினைத்து வருந்தினார். பணத்தை எடுத்துக் கொண்டு நேரடியாகத் தன் சீடனின் வீட்டிற்குச் சென்றார். நடந்ததைச் சொல்லி தான் எடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்தார். சீடனின் வீட்டில் உணவருந்திய பின்னர் இந்தக் கெட்ட எண்ணம் தோன்றியதும் இரவில் அது ஜீரணமாகி கழிவுகள் வெளியேறிய பின்னர் மனம் பரிசுத்தம் ஆனதையும் அவர் நினைத்துப் பார்த்தார். தன் சீடனிடம் நீ சம்பாதித்த பணம் எப்படி வந்தது என்று கேட்டார். வெட்கமடைந்த சீடன் தான் நேர்மையற்ற வழியிலேயே பணம் சம்பாதிப்பதாக ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டான். இது பொருளால் வரும் தோஷம் அதாவது அர்த்த தோஷம்! அர்த்தம் என்றால் பொருள் என்று அர்த்தம். நாம் சமைக்கும் உணவுப் பொருள்கள் நியாயமான சம்பாத்தியத்தில் வாங்கியதாக இருத்தல் வேண்டும்.

2. நிமித்த தோசம்

உணவைச் சமைக்கும் சமையல்காரர் நல்ல மனதைக் கொண்டிருத்தல் அவசியம். நேர்மையானவராகவும், அன்பானவராகவும் நல்ல சுபாவம் உடையவராகவும் அவர் இருத்தல் வேண்டும். அத்தோடு சமைக்கப்பட்ட உணவு நாய், எறும்பு, பல்லி, காகம் போன்ற ஜந்துக்களால் தொடப்படாமல் இருத்தலும் அவசியம். அப்படித் தொடப்பட்ட உணவுகள் அசுத்தமானவை. உணவில் தூசி, தலை மயிர், புழுக்கள் போன்றவையும் இருக்கக் கூடாது. பீஷ்மர் 27 நாட்கள் அம்புப் படுக்கையில் இருந்தார். கிருஷ்ணரும் பஞ்ச பாண்டவர்களும் அவரைச் சுற்றி இருந்தனர். திரௌபதி மனதிற்குள் தன்னை சபையில் துரியோதனன் ஆடையை அவிழ்க்க உத்தரவிட்ட போது இந்த பீஷ்மர் வாயை மூடிக் கொண்டு ஏன் இருந்தார் என்று எண்ணினாள். அவளது மன ஓட்டத்தைப் புரிந்து கொண்ட பீஷமர் அம்மா நான் துரியோதனனது ஆதரவில் அவனால் படைக்கப்பட்ட உணவைச் சாப்பிட்டு வந்தவன். என் அறிவை முற்றிலுமாக அந்த உணவு மறைத்து விட்டது. இதோ இந்த 27 நாட்களில் சாப்பிடாமல் இருக்கும் போது என் பழைய ரத்தம் சொட்டுச் சொட்டாக வெளியேறும் போது நான் பரிசுத்தனாகிறேன். எனது அறிவு பிரகாசிக்கிறது” என்று கூறினார். அசுத்தமான உணவு அனர்த்தத்தையே விளைவிக்கும். தீயவன் சமைத்த உணவு தீமையான எண்ணங்களையே உருவாக்கும். நல்லவன் சமைத்த உணவு நல்ல எண்ணங்களையே உருவாக்கும்.

3. ஸ்தான தோசம்

எந்த இடத்தில் உணவு சமைக்கப்படுகிறதோ அங்கு நல்ல அதிர்வுகள் இருத்தல் அவசியம். சமைக்கும் போது அனாவசிய சண்டைகள் அற்ப விவாதங்கள் நடந்தால் அந்த உணவு அசுத்தப்பட்டு விடும். அது மட்டுமின்றி கழிப்பறை, மருத்துவமனை, யுத்த களம், கோர்ட் ஆகியவற்றின் அருகே சமைக்கப்படும் உணவும் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல. துரியோதனன் 56 விதமான விசேஷ உணவு வகைகளைத் தயாரித்து கிருஷ்ணரைச் சாப்பிடக் கூப்பிட்டான். அவரோ மறுத்து விட்டார். அவரை சிறைப்பிடிக்கவும் அவன் முயன்றான். ஆனால் அவரோ நேராக விதுரன் வீட்டிற்குச் சென்றார். அவரைப் பார்த்த விதுரரின் மனைவி புளகாங்கிதம் அடைந்தாள். எதைத் தருகிறோம் என்பதே தெரியாமல் வாழைப்பழத்தை உரித்து பழத்தைத் தூக்கி எறிந்து விட்டு தோலை அன்புடன் கிருஷ்ணருக்குத் தந்தாள். அதை வாங்கித் தின்ற கிருஷ்ணர் ஆனந்தமுற்றார். இதைப் பார்த்துப் பதறிப் போன விதுரர் மனைவியை நோக்கிக் கோபமான பார்வையை வீசவே கிருஷ்ணர் விதுரா! நான் அன்பிற்காகத் தான் ஏங்குகிறேன். எனக்கு உள்ளன்புடன் ஒரு துளி ஜலம், ஒரு இலை, ஒரு பழம் எதைத் தந்தாலும் அதுவே எனக்குப் போதும் என்று அருளினார். உள்ளன்புடன் உணவு படைக்கப்பட வேண்டியது அவசியம்.

4. ஜாதி தோசம்

உணவில் அடங்கி இருக்கும் மூலப் பொருள்கள் சாத்வீக குணமுடையதாக இருத்தல் அவசியம். பால், நெய், அரிசி, மாவு, பருப்பு போன்றவை சாத்வீகமானவை. புளிப்பு, உரைப்பு, உப்பு உள்ளவை ராஜஸிகமானவை. உள்ளிப்பூண்டு, வெங்காயம், மாமிசம், முட்டை போன்றவை தாமஸிகமானவை. சாத்விக உணவு ஆன்மீக முன்னேற்றத்தைத் தருகிறது. ராஜஸிக உணவு உலோகாயத உணர்வைத் தூண்டி சுயநலத்திற்கு வழி வகுக்கிறது. தாமஸிக உணவு தீய பிசாசு குணத்தை வளர்க்கிறது.


5. சம்ஸ்கார தோசம்

தூய்மையாக உணவு சமைக்கப்பட்டாலும் கூட உணவு வகைகள் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டிருகக்க் கூடாது. அதிகமாக வேக வைத்தல், அதிகமாக வறுத்தல், பழைய உணவு போன்றவை தோஷமானவை. உடம்புக்கும் உள்ளத்திற்கும் ஊறு விளைவிப்பவை. ஆக, இந்த ஐந்து வித தோஷங்களையும் விலக்கி ஒருவன் உணவை உண்ண வேண்டும். தாயார் அல்லது மனைவி இல்லத்தில் சமைத்துப் பரிமாறும் உணவை ஏற்புடையது என்று அதனால் தான் முன்னோர்கள் சொல்லி வைத்தனர். உணவகங்களில் அசைவ உணவைத் தயாரிக்கும் அதே பாத்திரத்தில் தான் சாம்பார், அரிசி, பருப்பு போன்றவை தயாராகின்றன. தட்டுகள் உரிய முறைப்படி கழுவப்படுகிறதா இல்லையா என்று யாருக்கும் தெரியாது. விளம்பர உணவுகளின் மேல் மோகம் உச்சமடைந்திருக்கும் காலம் இது. அதன் விளைவையும் அனுபவித்துத்தான் ஆக வேண்டும்

Wednesday, 17 January 2024

கறிவேப்பிலையை கைகளில் கொடுக்க கூடாதது ஏன்?

பொதுவாகவே நாம் பயன்படுத்தும் அன்றாட பொருட்களில் ஒன்று தான் கறிவேப்பிலை. இது எல்லா வகை சமையலிலும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான பொருளாகும்.

ஆனால் கறிவேப்பிலை பற்றி நம்மில் பலரும் அறியாத விசித்திரமான விடயம் ஒன்று இருக்கிறது. கறிவேப்பிலையை கைகளில் கொடுக்க கூடாது என நமது முன்னோர்கள் சொல்லி வைத்திருப்பது ஏன் தெரியுமா?

கறிவேப்பிலையை கைகளில் கொடுக்க கூடாதது ஏன்? Why Do Not Give Curry Leaves To Others Hand

இது சாஸ்திரம் என நினைத்தே பலரும் பின்பற்றுகின்றார்கள், ஆனால் அதன் பின்னால் காணப்படும் அறிவியல் உண்மையை இந்த பதிவில் பார்க்கலாம்.



அறிவியல் காரணம்
கறிவேப்பிலையை மற்றவர் கைகளில் கொடுக்கக்கூடாது என கூறியமைக்கு காரணம் கறிவேப்பிலைக்கு எதிர்மறை சக்திகளை ஈர்க்கும் ஆற்றல் அதிகம். எனவே கறிவேப்பிலையில் எதிர்மறை ஆற்றல் நிறைந்து காணப்படுகின்றது.

இதனை நாம் மற்றர்களின் கைகளில் நேரடியாக கொடுக்கும் போது அவர்களுக்கு எதிர்மறை ஆற்றல் கடத்தப்படுகின்றது.



உதாரணமாக நம் அயலவர் கைகளில் கறிவேப்பிலையை கொடுத்தால் அவர்களுக்கும் நமக்கும் சண்டைகள் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்பு அதிகம், அதற்கு காரணம் எதிர்மறை சக்திகள் கடத்தப்படுவதுதான்.

அதனால் தான் முன்னோர்கள் வீட்டு முற்றத்தில் கறிவேப்பிலை செடியை வளர்ப்பதில்லை.குழம்பில் கறிவேப்பிலையை சேர்ப்பதற்கும் இதுவே காரணம், குழம்பில் ஏதாவது சிறிய அளவில் காணப்படும் நச்சித் தன்மையை கூட இந்த கறிவேப்பிலை உறிஞ்சிக்கொள்ளும் தன்மையுடையது.

கறிவேப்பிலையை கைகளில் கொடுக்க கூடாதது ஏன்? இது தெரிஞ்சா இனி பண்ணவே மாட்டீங்க | Why Do Not Give Curry Leaves To Others Hand

கறிவேப்பிலையில் எதிர்மறை ஆற்றல் அதிகமாக இருக்கின்றது என்பது அறிவியல் உண்மை, அதனாலேயே நல்ல உறவை பேண நினைப்பவர்களின் கைகளில் கறிவேப்பிலையை கொடுக்கக்கூடாது என கூறியிருக்கின்றார்கள். 


Tuesday, 16 January 2024

உக்ர ரத, பீம ரத, விஜய ரத சாந்திகள்.

உக்ர ரத, பீம ரத, விஜய ரத சாந்திகள்...- 61ஆவது பிறந்த தினம் – சஷ்டி அப்த பூர்த்தி 70- ஆவது பிறந்த தினம் – பீம ரத சாந்தி 81- ஆவது பிறந்த தினம...சதாபிஷேகம் 100- ஆவது பிறந்த தினம் – பூர்ணாபிஷேகம்







துளசி செடி....

தோட்ட பராமரிப்பு வீட்டில் துளசி செடி இருக்கா? அப்ப இந்த தவறுகளை செய்யாதீங்க.. பண கஷ்டம் வாட்டி எடுத்துடும்... இந்தியாவின் பெரும்பாலான இந்துக்களின் வீடுகளில் காணப்படும் ஒரு மங்களகரமான செடி தான் துளசி. ஏனெனில் துளசி செடியில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. எனவே லட்சுமி வாசம் செய்யும் துளசி செடியை வீட்டில் வைத்து வளர்க்கும் போது, அந்த வீட்டில் லட்சுமி தேவி எப்போதும் இருப்பதாக மக்கள் நம்புகின்றனர். ஆனால் வீட்டில் துளசி செடியை வளர்த்து வந்தால், அதை தினமும் வழிபட வேண்டும். அப்படி வழிபட்டால் தான் லட்சுமி தேவியின் அருளைப் பெற முடியும். Today Rasi Palan 15 January 2024: பொங்கல் நாள் இந்த 5 ராசிக்காரங்க வாழ்க்கையில் சந்தோஷம் பொங்கப்போகுதாம்.! வாஸ்து சாஸ்திரத்தில் கூட, வீட்டில் துளசி செடியை வைத்திருந்தால் ஒருசில விதிகளை பின்பற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அந்த விதிகளை பின்பற்றாமல் இருந்தால் அது வீட்டிற்கு வறுமையைக் கொண்டு வருவதோடு, துரதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். இப்போது துளசி செடியுடன் தொடர்புடைய வாஸ்து விதிகளைக் காண்போம். Gyser Ke Pani Se Nahane Se Kya Hota Hai |Memory Loss से लेकर Heart Fail...|Boldsky * துளசி செடியை எப்போதும் இருட்டான பகுதியில் வைக்கக்கூடாது. சூரிய அஸ்தமனத்திற்கு பின் துளசி செடிக்கு அருகில் ஒரு விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். மேலும் துளசி செடி வைக்கும் இடத்தில் எப்போதும் வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். * துளசி செடியை எப்போதும் திறந்த வெளியில் தான் வைக்க வேண்டும். அப்படி வைத்தால் தான் சூரிய ஒளி நேரடியாக அதில் படும், செடியும் செழிப்பாக வளரும். * துளசி செடிகளில் காய்ந்த இலைகள் இருந்தால், அதன் இலைகளை அவ்வப்போது அகற்றிவிட வேண்டும். அதுவும் அந்த காய்ந்த இலைகளை தூக்கி எறிந்துவிடாமல், அந்த செடிக்கு கீழே அருகிலேயே போட வேண்டும். மகர ராசிக்கு செல்லும் சூரியனால் இந்த 5 ராசிக்காரங்க பெரிய ஆபத்துகளை சந்திக்கப் போறாங்களாம்.! * வீட்டில் வைத்த துளசி செடிகள் காய்ந்து போனால், அவற்றை உடனே அப்புறப்படுத்திவிட வேண்டும். ஏனெனில் காய்ந்த துளசி செடியானது வீட்டிற்கு வறுமையையும், துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும். * முக்கியமாக துளசி செடியை வீட்டில் வைக்கும் போது சரியான திசை பார்த்து வைக்க வேண்டும். எப்போதும் துளசி செடியை தெற்கு அல்லது தென்கிழக்கு திசையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். துளசி செடியை வைக்க சிறந்த திசை வடக்க அல்லது வடகிழக்கு திசை தான். * துளசி செடியை எப்போதும் தொட்டியில் வைத்து தான் வளர்க்க வேண்டும். நேரடியாக தரையில் ஊற்றி வளர்க்கக்கூடாது. மேலும் சூரிய அஸ்தமனத்திற்கு பின் துளசி இலைகளைப் பறிப்பதைத் தவிர்க்க வேண்டும். நுரையீரல் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறம் மற்றும் மணமற்ற ரேடான் வாயு. இது நம்ம வீட்டிலேயே இருக்காம்.! * ஞாயிற்று கிழமைகளில் துளசி செடிக்கு நீரை ஊற்ற வேண்டாம். அதேப் போல் இந்நாளில் துளசி இலைகளைப் பறிப்பதும் அபசகுனமாக கருதப்படுகிறது. * துளசி செடியை தொடும் போது எப்போதும் கைகள் சுத்தமாக இருக்க வேண்டும். எப்போதும் துளசி இலைகளைப் பறிப்பதாக இருந்தால், அவற்றை கைகளில் தான் பறிக்க வேண்டும். கத்தரிக்கோல், கத்தி போன்ற எவற்றையும் பயன்படுத்தக்கூடாது. * முக்கியமாக தேவையில்லாத துளசி செடியைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக குளிக்காமல் துளசி செடியைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டு. அப்படி குளிக்காமல் தொடும் துளசி இலைகள் வழிபட்டால் ஏற்றுக் கொள்ளப்படாது. எனவே இந்த விஷயத்தில் சற்று கவனமாக இருங்கள்.

Sunday, 14 January 2024

அவ்வையாரின் ஆத்திசூடி...



அவ்வையாரின் ஆத்திசூடி

1.அறம் செய விரும்பு

அறம் - ( விதித்தன செய்தல் விலக்கியன ஒழித்தல்- நல்ல செயல்களை செய்வது மற்றும் கெடுதல் செயல்களைச் செய்யாமல் இருப்பது ) செய - செய்வதற்கு,

விரும்பு -நீ ஆசைப்படு.

·      தருமம் செய்ய நீ விரும்புவாயாக

·         நல்ல செயல்களைச்  செய்வதற்கு மனம் விருப்பம் கொள்ள வேண்டும். மனம் விருப்பம் கொள்ள அந்த நல்ல செயல்களை மகிழ்வுடன் செய்ய முடியும்.

2. ஆறுவது சினம்

ஆறுவது- தவிர்க்க வேண்டியது,

சினம் - கோபம்.

·         கோபம் தணிக்கப்பட வேண்டியதாகும்.

·         கோபம் வரும் போது நமது சிந்திக்கும் அறிவு குறைந்து உணர்ச்சிவசப்பட்டு தவறான முடிவு எடுக்கும் சூழ்நிலை உருவாகும். அது எல்லோருக்கும் நல்லது அல்ல.

3. இயல்வது கரவேல்

இயல்வது - நம்மால் முடிந்ததை கொடுப்பதற்கு

கரவேல் -  வறுமையினாலே இரப்பவர்களுக்கு நீ ஒளியாதே ( "கரவல்" கொடாது மறைக்கை, கரப்பு, மறைப்பு, மறைக்காதே)

·         உன்னால் கொடுக்கக்கூடிய பொருளை யாசிப்பவர்க்கு ஒளிக்காது கொடு.

4. ஈவது விலக்கேல்

ஈவது - தருமத்தைக் குறித்து ஒருவருக்கு ஒருவர் கொடுப்பதை

விலக்கேல் - நீ தடுக்காதே

·         ஒருவர், மற்றவர்க்கு கொடுப்பதை, வேண்டாமென்று தடுக்காதே

5.உடையது விளம்பேல்

உடையது - உனக்கு உள்ள பொருளை

விளம்பேல் - நீ பிறர் அறியும்படி  சொல்லாதே

·         உன்னிடத்திலுள்ள பொருளை அல்லது இரகசியங்களை பிறர் அறியுமாறு சொல்லாதே.

·         உனக்குள்ள பொருள் மற்றும் சிறப்புகளை பலரும் அறியும்படி பெருமையாக பேசாதே.

·         உன்னுடைய பலவீனத்தையும் பலரும் அறியும்படி சொல்லாதே. அதனால் நல்ல பயன் எதுவும் இல்லை.

6. ஊக்கமது கைவிடேல்

ஊக்கமது– செய்தொழிலில் மனஞ்சோராமை, உள்ளக் கிளர்ச்சியை

கைவிடேல்– நீ தளர்ந்து போக விடாதே.

·         எப்போதும் முயற்சியைக் கைவிடக்கூடாது.

7. எண் எழுத்து இகழேல்

எண் – கணித நூலையும்

எழுத்து - அற நூல்களையும், இலக்கண நூலையும்

·         எண்ணும் எழுத்தும் மக்களுக்கு இன்றியமையாதன; ஆகவே, அவற்றை வீணென்று இகழ்ந்து கற்காமல் விட்டு விடாதே.

8. ஏற்பது இகழ்ச்சி

ஏற்பது – ஒருவரிடத்திலே போய் இரப்பது  பிறரிடம் சென்று யாசித்தல்; இகழ்ச்சி – பழிப்பாகும் (அல்லது) இழிவு தரும்.

·         இரந்து வாழ்வது இழிவானது. அதனால் யாசிக்கக் கூடாது.

9. ஐயம் இட்டு உண்

ஐயமிட்டு – உன்னிடம் உணவு கேட்பவற்குக் கொடுத்து

உண் - பிறகே நீ உண்ண வேண்டும்.

·         யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.

10. ஒப்புரவு ஒழுகு

ஒப்புரவு – உலக போக்கிற்கு எற்றவாறு;

ஒழுகு – நட

·         உலக நடையை அறிந்துகொண்டு, அத்தோடு பொருந்துமாறு நடந்துகொள்.

11. ஓதுவது ஒழியேல்

·         நல்ல நூல்களை எப்பொழுதும் படித்துக்கொண்டிரு.

12. ஔவியம் பேசேல்

·         ஒருவரிடமும் பொறாமை கொண்டு பேசாதே.

13.அஃகஞ் சுருக்கேல்

·         அதிக இலாபத்துக்காக, தானியங்களை குறைத்து அளந்து விற்காதே.

உயிர்மெய் வருக்கம்[தொகு]

14.கண்டொன்று சொல்லேல்.

·         கண்ணாற் கண்டதற்கு மாறாகப்(பொய் சாட்சி) சொல்லாதே.

15.ஙப் போல் வளை.

·         'ங' என்னும் எழுத்தானது எப்படி தான் பயன்னுள்ளதாக இருந்து தன் வருக்க எழுதுக்களை தழுவுகிறதோ
அது போல நாமும் நம்மைச் சார்ந்தவர்களால் என்ன பயன் என்று பாராமல் அவர்களை காக்க வேண்டும்.

·         "ங" என்னும் எழுத்தை கூர்ந்து நோக்கினால், ஒருவர் வளைந்து வணக்கம் சொல்வது போல் உள்ளது விளங்கும். அதைப்போல பணிவாக பெரியவர் முன் வளைய வேண்டும் என்று ஔவை உரைத்ததாகவும் எடுத்துக்கொள்ளலாம்.

16.சனி நீராடு.

·         சனி(குளிர்ந்த) நீராடு.

17.ஞயம்பட உரை.

·         கேட்பவருக்கு இன்பம் உண்டாகும் படி இனிமையாகப் பேசு.

18.இடம்பட வீடு எடேல்.

·         உன் தேவைக்கு மேல் வீட்டை பெரிதாக கட்டாதே.

19.இணக்கம் அறிந்து இணங்கு.

·         ஒருவரிடம் நட்பு கொள்ளும் முன்,அவர் நல்ல குணங்களும்,நல்ல செய்கைகளும் கொண்டவரா எனத் தெரிந்த பிறகு அவருடன் நட்பு கொள்ளவும்.

20.தந்தை தாய்ப் பேண்.

·         உன் தந்தையையும் தாயையும் அவர்களுடைய முதுமைக் காலம் வரை அன்புடன் காப்பாற்று.

21.நன்றி மறவேல்.

·         ஒருவர் உனக்கு செய்த உதவியை ஒரு போதும் மறவாதே.

22.பருவத்தே பயிர் செய்.

·         எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்.

23.மண் பறித்து உண்ணேல்.

·         பிறர் நிலத்தை திருடி அதன் மூலம் வாழாதே (அல்லது)

·         நீதி மன்றத்தில் இருந்து கொண்டே லஞ்சம் வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்காதே (என்றும் பொருள் கொள்ளலாம்)

24.இயல்பு அலாதன செய்யேல்.

·         நல்லொழுக்கத்துக்கு மாறான செயல்களைச் செய்யாதே.

25.அரவம் ஆட்டேல்.

·         பாம்புகளை பிடித்து விளையாடாதே.

26.இலவம் பஞ்சில் துயில்.

·         'இலவம் பஞ்சு' எனும் ஒரு வகை பஞ்சினால் செய்யப்பட்ட படுக்கையிலே உறங்கு

27.வஞ்சகம் பேசேல்.

·         கபடச்(உண்மைக்கு புறம்பான,கவர்ச்சிகரமான) சொற்களை பேசாதே

28.அழகு அலாதன செய்யேல்.

·         இழிவான செயல்களை செய்யாதே

29.இளமையில் கல்.

·         இளமை பருவத்தில் இருந்தே கற்கவேண்டியவைகளை (இலக்கணத்தையும், கணிதத்தையும்) தவறாமல் கற்றுக்கொள்.

30.அறனை மறவேல்.

·         கடவுளை (அறன் = சிவபெருமானை) மனதில் எப்பொழுதும் நினைக்கவேண்டும்

31.அனந்தல் ஆடேல்.

·         மிகுதியாக தூங்காதே

ககர வருக்கம்[தொகு]

32.கடிவது மற

·         யாரையும் கோபத்தில் கடிந்து பேசிவிடாதே.

33.காப்பது விரதம்

·         தான் செய்யத் தொடங்கிய தருமத்தை விடாமல் செய்வதே விரதமாகும் (அல்லது)

·         பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் அவற்றைக் காப்பாற்றுவதே தவம் ஆகும்.

34.கிழமை பட வாழ்

·         உன் உடலாலும் பொருளாலும் பிறருக்கு நன்மை செய்து வாழ்

35. கீழ்மை யகற்று

·         இழிவான குணஞ் செயல்களை நீக்கு

36. குணமது கைவிடேல்

·         நன்மை தரக்கூடிய நல்ல குணங்களை பின்பற்றுவதை நிறுத்திவிடாதே(கைவிடேல்).

37. கூடிப் பிரியேல்

·         நல்லவரோடு நட்பு செய்து பின் அவரை பிரியாதே

38. கெடுப்ப தொழி

·         பிறருக்கு கேடு விளைவிக்கும் செயல்களை செய்யாதே.

39. கேள்வி முயல்

·         கற்றவர் சொல்லும் நூற் பொருளை கேட்பதற்கு முயற்சி செய்

40. கைவினை கரவேல்

·         உங்களுக்கு தெரிந்த கைத்தொழிலை மற்றவர்களிடமிருந்து ஒளியாமற் செய்து கொண்டிருக்கவும்.

41. கொள்ளை விரும்பேல்

·         பிறர் பொருளை திருடுவதர்க்கு ஆசைப்படாதே.

42. கோதாட் டொழி

·         குற்றமான விளையாட்டை விட்டு விடு (நீக்கு)

43.கௌவை அகற்று

·         வாழ்வில் செயற்கையாக ஏற்படும் துன்பத்தை நீக்கு

சகர வருக்கம்[தொகு]

44. சக்கர நெறி நில்

·         தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )

45.சான்றோ ரினத்திரு

·         அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.

46. சித்திரம் பேசேல்

·         பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே

47. சீர்மை மறவேல்

·         புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.

48. சுளிக்கச் சொல்லேல்

·         கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்

49. சூது விரும்பேல்

·         ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.

50. செய்வன திருந்தச் செய்

·         செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்

51.சேரிடமறிந்து சேர்

·         நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.

52. சையெனத் திரியேல்

·         பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே

53. சொற்சோர்வு படேல்

·         பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே

54. சோம்பித் திரியேல்

·         முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.

தகர வருக்கம்[தொகு]

55. தக்கோ னெனத்திரி

·         பெரியோர்கள் உன்னைத் தக்கவன்(யோக்கியன்,நல்லவன்) என்று புகழும்படி நடந்துக்கொள்

56. தானமது விரும்பு

·         யாசிப்பவர்களுக்கு தானம் செய்.

57. திருமாலுக்கு அடிமை செய்

·         நாராயணமூர்த்திக்கு தொண்டு செய்

58. தீவினை யகற்று

·         பாவச் செயல்களைச் செய்யாமல் இரு.

59.துன்பத்திற் கிடங்கொடேல்

·         முயற்சி செய்யும் பொழுது வரும் உடம்பின் வருத்தத்திற்கு அஞ்சி அதனை விட்டு விடாதே.

60. தூக்கி வினைசெய்

·         ஒரு வேளையை முடிப்பதற்க்கான் வழிமுறைகளை நன்கு ஆராயிந்து அறிந்து பின்பு அச்செயலை செய்யத தொடங்கவும்

61. தெய்வ மிகழேல்

·         கடவுளை பழிக்காதே.

62. தேசத்தோ டொத்துவாழ்

·         உன் நாட்டில் வசிக்கும் மக்களுடன் பகை இல்லாமல் வாழ்

63. தையல்சொல் கேளேல்

·         மனைவி சொல் கேட்டு ஆராயாமல் நடவாதே.

64. தொன்மை மறவேல்

·         பழைமையை மறவாதிருக்க வேண்டும் (பழங்கால மற்றும் பண்டைய முறையிலான நம் தமிழ் கலாச்சாரத்தை  விட்டு கொடுக்காமல் இயற்கையோடு ஒத்து வாழ வேண்டும்)

65. தோற்பன தொடரேல்

·         ஒரு செயலைச் செய்தால் தோல்வியில் தான் முடியும் எனத் தெரிந்தே அதை தொடங்காதே.

நகர வருக்கம்[தொகு]

66. நன்மை கடைப்பிடி

·         நல்வினை செய்தலை எவ்வளவு இடையுறு வந்தாலும் உறுதியாகத் தொடரவும்

67. நாடொப் பனசெய்

·         நாட்டில் உள்ள பலரும் ஒத்துக்கொள்ளத்தக்க நல்ல காரியங்களை செய்

68. நிலையிற் பிரியேல்

·         உன்னுடைய நல்ல நிலையில் இருந்து என்றும் தாழ்ந்து விடாதே.

69. நீர்விளை யாடேல்

·         வெள்ளபெருக்கில்  நீந்தி விளையாடாதே

70. நுண்மை நுகரேல்

·         நோயைத் தரும் சிற்றுண்டிகளை அதிகமாக உண்ணாதே

71. நூல்பல கல்

·         அறிவை வளர்க்கும் பல நூல்களைப் படி

72.நெற்பயிர் விளை

·         நெற்பயிரை விளையச் செய்வதை உன் வாழ்க்கை தொழிலாகக் கொண்டு வாழ்.

73. நேர்பட வொழுகு

·         ஒழுக்கந் தவறாமல் நேர்வழியில் நட

74. நைவினை நணுகேல்

·         பிறர் வருந்தத் தகுந்த தீ வினைகளைச் செய்யாதே

75. நொய்ய வுரையேல்

·         பயன் இல்லாத அற்ப வார்த்தைகளைப் பேசாதே.

76. நோய்க்கிடங் கொடேல்

·         மிகுந்த உணவு உறக்கம் முதலியவற்றால் நோய்க்கு வழிவகை செய்யாதே.

பகர வருக்கம்[தொகு]

77. பழிப்பன பகரேல்

·         பெரியோர்களால் பழிக்கப்படும் இழிவான சொற்களான பொய்,கடுஞ்சொல் ஆகியவற்றைப் பேசாதே.

78. பாம்பொடு பழகேல்

·         பாம்புபோல கொடிய குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே.

79. பிழைபடச் சொல்லேல்

·         குற்றம் உண்டாகும் படி எதையும் பேசாதே.

80. பீடு பெறநில்

·         பெறுமையை அடையும் படியான நல்ல நிலையிலே நில்

81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்

·         உன்னையே நம்பியவர்களை காப்பாற்றி வாழ்

82. பூமி திருத்தியுண்

·         விளைநிலத்தை உழுது அதில் பயிர்செய்து உண்.(அ)விவசாயத்தை வாழ்க்கைத் தொழிலாகக் கொள்

83. பெரியாரைத் துணைக்கொள்

·         அறிவிலே சிறந்த பெரியோர்களை உனக்குத் துணையாகப் பேணிக்கொள்

84. பேதைமை யகற்று

·         அறியாமையைப் போக்கு

85. பையலோ டிணங்கேல்

·         அறிவில்லாத சிறுவனோடு கூடித் திரியாதே.

86. பொருடனைப் போற்றிவாழ்

·         பொருள்களை(செல்வம் உட்பட)வீண் செலவு செய்யாமற் பாதுகாத்து வாழ்.

87. போர்த்தொழில் புரியேல்

·         யாருடனும் தேவையில்லாமல் சண்டை பொடுவதை ஒரு வேலையாகச் செய்யாதே

மகர வருக்கம்[தொகு]

88. மனந்தடு மாறேல்

·         எதனாலும் மனக்கலக்கம் அடையாதே

89. மாற்றானுக் கிடங்கொடேல்

·         பகைவன் உன்னை துன்புறுத்தி உன்னை வெல்வதற்க்கு இடம் கொடுக்காதே.

90. மிகைபடச் சொல்லேல்

·         சாதாரணமான விஷயத்தை மாயாஜால வார்தைகளால் பெரிதாகக் கூறாதே.

91. மீதூண் விரும்பேல்

·         மிகுதியாக உண்ணுதலை விரும்பாதே.

92. முனைமுகத்து நில்லேல்

·         எப்போதும் யாருடனாவது சண்டையிடுவதற்காக போர் முனையிலே நிற்காதே

93. மூர்க்கரோ டிணங்கேல்

·         மூர்க்க குணம் கொண்டவர்கள் உடன் பழகாதே

94. மெல்லினல்லாள் தோள்சேர்

·         பிற மாதரை விரும்பாமல் உன் மனைவியுடன் மட்டும் சேர்ந்து வாழ்.

95. மேன்மக்கள் சொற்கேள்

·         நல்லொழுக்கம் உடைய பெரியோர் சொல்லைக் கேட்டு நட.

96. மைவிழியார் மனையகல்

·         விலைமாந்தர் உடன் உறவு கொள்ளாமல் விலகி நில்

97. மொழிவ தறமொழி

·         சொல்லப் படும் பொருளை சந்தேகம் நீங்கும் படி சொல்

98.மோகத்தை முனி

·         நிலையில்லாத பொருள்களின் மேலுள்ள ஆசையை வெறுத்திடு

வகர வருக்கம்[தொகு]

99. வல்லமை பேசேல்

·         உன்னுடைய சாமர்த்தியத்தை நீயே புகழ்ந்து பேசாதே

100. வாதுமுற் கூறேல்

·         பெரியோர்களிடத்தில் முறன் பட்டு வாதிடாதே

101. வித்தை விரும்பு

·         கல்வியாகிய நற்பொருளை விரும்பு

102. வீடு பெறநில்

·         முக்தியை பெறுவதற்கான சன்மார்கத்திலே வாழ்க்கையை நடத்து

103. உத்தமனாய் இரு

·         உயர்ந்த குணங்கள் கொண்டவனாக வாழ்.

104. ஊருடன் கூடிவாழ்

·         ஊராருடன் நன்மை தீமைகளில் கலந்து வாழ்

105. வெட்டெனப் பேசேல்

·         யாருடனும் கத்தி வெட்டுப் போலக் கடினமாக பேசாதே

106. வேண்டி வினைசெயேல்

·         வேண்டுமென்றே தீய செயல்களைச் செய்யாதே

107. வைகறை துயிலெழு

·         நாள்தோறும் சூரியன் உதிக்கும் முன்பே தூக்கத்தில் இருந்து எழுந்திரு

108. ஒன்னாரைத் தேறேல்

·         பகைவர்களை நம்பாதே

109. ஓரஞ் சொல்லேல்

·         எந்த வழக்கிலும் ஒருபுடைச் சார்பாக பேசாமல் நடுநிலையுடன் பேசு.

  


கொன்றை வேந்தன்....



கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன்
கொன்றை வேந்தன் அவ்வையார் இயற்றிய ஒரு தமிழ் நீதி நூல். . இதில் மொத்தம் 91 பாக்கள் உள்ளன.

1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் - தாய், தந்தையர் கண்கண்ட தெய்வம்
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று - கோவிலுக்குச் சென்று இறைவனைத் தொழுவது மிகவும் நல்லது
3. இல்லறமல்லது நல்லறமன்று - இல்லறவாழ்வே மிகவும் நன்மை பயக்கக் கூடியது
4. ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர் - பிறருக்கு உதவி செய்யாதோர் பொருளைத் தீயவர் பறித்துக் கொள்வர்
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க் கழகு - குறைத்து உண்ணுதல் பெண்களுக்கு அழகு தரும்
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் - ஊராரோடு பகைத்துக் கொண்டால் குடும்பம் அழிந்து விடும்
7. எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் - அறிவியலுக்கு ஆதாரமான எண்ணும், இலக்கிய அறிவுக்கு ஆதாரமான எழுத்தும் நமக்குக் கண் போன்றவை
8. ஏவா மக்கள் மூவா மருந்து - செய் என்று சொல்லும் முன்பே குறிப்பறிந்து செயலாற்றும் பிள்ளைகள் அம்ருதம் போன்றவர்கள்
9. ஐயம் புகினும் செய்வன செய் - பிச்சை எடுத்தாவது செய்ய வேண்டிய நல்ல கார்யங்களை செய்
10. ஒருவனைப் பற்றி ஓரகத்திரு - ஒருவனை மணந்து புகுந்த வீட்டிலே வசிக்க வேண்டும்
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம் - ஒழுக்கமானது வேதம் ஓதுவதை விட மிக நல்லது
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற் கழிவு - பொறாமைப் பேச்சு வளர்ச்சியை அழிக்கும்
13. அஃகமும் காசும் சிக்கெனத் தேடு - சிக்கனமாயிருந்து தான்யத்தையும், செல்வத்தையும் தேட வேண்டும்.
14. கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை - கணவன் சொல்லுக்கு மாறாக நடவாதிருத்தலே கற்பு
15. காவல்தானே பாவையர்க்கு அழகு - காவல், கட்டுப்பாட்டோடு இருத்தலே பெண்களுக்கு அழகு
16. கிட்டாதாயின் வெட்டென மற - நமக்குக் கிடைக்காது என்ற ஒன்றை மறந்து விடு
17. கீழோராயினும் தாழ உரை - உன்னை விடத் தாழ்ந்தோராயினும் நயமாகப் பேசு
18. குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை - பிறர் குற்றங்களையே ஆராய்ந்து கொண்டிருந்தால், சுற்றத்தார் என்று எவருமே இருக்க மாட்டார்கள்
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல் - பலவானாக இருந்தாலும், கர்வப் பேச்சு பேசாதே
20. கெடுவது செய்யின் விடுவது கருமம் - நமக்கு ஒருவர் கெடுதல் செய்தால், அதை அப்படியே விட்டு விடுதலே உயர்ந்த செயல்
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை - தாழ்வு வந்த போதும் மனந்தளராது இருப்பதே மீண்டும் எல்லாவற்றையும் சேர்க்கும்
22. கைப்பொருள் தன்னில் மெய்ப்பொருள் கல்வி - கையில் இருக்கும் பொருளை விட உண்மையான செல்வம் கல்வியே ஆகும்
23. கொற்றவன் அறிதல் உற்றிடத்து உதவி - தேவையிருக்கும் இடம் சென்று உதவி செய்தலே, ஆட்சி செய்வோர் அறிய வேண்டியது
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு - கோள் மூட்டி கலகம் செய்வோர் காதில் கோள் சொல்வது காற்றுடன் கூடிய நெருப்பு போன்றது
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை - எவரையும் பழித்துக் கொண்டே இருந்தால், அனைவருக்கும் அவன் பகையாளி ஆவான்
26. சந்ததிக்கு அழகு வந்தி செய்யாமை - மலடின்றி வாழ்தலே, குடும்பம் தழைப்பதற்கு அழகு
27. சான்றோர் என்கை ஈன்றோட்கு அழகு - பெற்றோருக்குப் பெருமை, அவர் பிள்ளைகள் சான்றோர் எனப் பாராட்டப்படுவதே
28. சிவத்தைப் பேணில் தவத்திற்கு அழகு - தவத்திற்கு அழகு இறை நினைவோடு இருப்பதே
29. சீரைத்தேடின் ஏரைத் தேடு - புகழோடு வாழ விரும்பினால், பயிர்த் தொழிலில் ஈடுபட வேண்டும்
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல் - எந்த நிலையிலும் கூடி இருத்தலே சுற்றத்திற்கு அழகு.
31. சூதும் வாதும் வேதனை செய்யும் - சூதாட்டமும், தேவையில்லாத விவாதமும் துன்பத்தையே தரும்
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும் - தவம் செய்வதை விட்டு விட்டால் அறியாமை (கைதவம்) ஆட்கொண்டு விடும்
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு - காவல் வேலைக்கு சென்றாலும் நள்ளிரவில் உறங்க வேண்டும்
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண் - பொருள் கொடுக்குமளவு இருந்தால், பிறருக்கு உணவிட்டு உண்ண வேண்டும்
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர் - பொருளுள்ளவர், மீதமுள்ள அறம், இன்பம், வீட்டை பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர் - சோம்பெறிகள் வறுமையில் வாடித் திரிவர்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - தந்தை சொல்லெ உயர்ந்த மந்திரம் போலாகும் 
38. தாயிற் சிறந்த ஒரு கோயிலு மில்லை - தாயே சிறந்த தெய்வமாகும்
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - கடல் கடந்தாவது பொருள் தேட வேண்டும்
40. தீராக் கோபம் போராய் முடியும் - கோபம் சீக்கிரமாகப் போய் விட வேண்டும்.  இல்லையேல் அது சண்டையில் போய் முடியும்
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு - கணவனுக்குத் துன்பம் வந்த போது, கவலைப் படாத பெண்கள், மடியில் நெருப்பைக் கட்டிக் கொண்டதற்கு ஒப்பாவர்.
42. தூற்றம் பெண்டிர் கூற்றெனத் தகும் - எப்போதும் அவதூறுக் கூறிக் கொண்டே இருக்கும் பெண்கள் குடும்பத்திற்கு எமன் போன்றவர்.
43. தெய்வம் சீறின் கைதவம் மாளும் - தெய்வம் கோபித்துக் கொண்டால், நம் தவமும் அழிந்து போம்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும் - பொருளைத் தேடிச் சேர்க்காது, இருப்பதை செலவிட்டுக் கொண்டிருந்தால் துன்பத்தில் முடியும்
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு - தை, மாசி (வெயில் காலம்) மாதங்களில் வைக்கோல் வேய்ந்த வீட்டில் உறங்கு
46. தொழுது ஊண் சுவையின் உழுது ஊன் இனிது - பிறரிடம் வணங்கி அந்த ஊதியத்தில் உண்பதை விட பயிர் செய்து உண்பதே இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல் - நெருங்கிய நண்பனிடத்தும் நம் வறுமை பற்றிப் பேசக் கூடாது
48. நல்இணக்கம் அல்லது அல்லல் படுத்தும் - நல்லோர் நட்பு இல்லையேல், அல்லல் படுவோம்
49. நாடு எங்கும் வாழக் கேடு ஒன்றும் இல்லை - நாடு செழித்திருக்குமானால் எவருக்கும் இன்பமே.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை - சொன்ன சொல் தவறாது இருத்தலே, நிலையான கல்வி கற்றதற்கு அழகு
51. நீர்அகம் பொருந்திய ஊர்அகத்திரு - நீர் நிறைந்த ஊரில் வசிக்க வேண்டும்
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி - சிறிய கார்யமாக இருந்தாலும், யோசித்து செயல் பட வேண்டும்
53. நூன் முறை தெரிந்து சீலத் தொழுகு - நல்ல நூல்களைப் பயின்று, ஒழுக்கத்தோடு நடந்து கொள்
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை - நமக்குத் தெரியாமல் ஒருவருக்கு வஞ்சனை செய்ய முடியாது.
55. நேரா நோன்பு சீர் ஆகாது - மனம் ஒப்பி செய்யாத எந்த விரதமும் சிறப்பாக முடியாது
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல் - சக்தியற்றவர் இடத்தும் மனம் நோகுமாறு பேசக்கூடாது
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர் - சிறியவர்களும் செய்யும் கார்யத்தால் சிறந்தவர் ஆவர்
58. நோன்பு என்பது கொன்று தின்னாமை - உயிரைக் கொன்று அதை உண்ணாமல் இருப்பதே விரதமாகும்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும் - ஒருவர் புண்ணியம் அவர் அடைந்த விளைச்சலில் தெரியும்
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண் - சிறந்த உணவாக இருந்தாலும், காலமறிந்து உண்ண வேண்டும்
61. பிறன்மனை புகாமை அறம் எனத்தகும் - அடுத்தவன் மனைவியை விரும்பாததே சிறந்த அறம்
62. பீரம் பேணில் பாரம் தாங்கும் - தாய்ப்பாலை ஊட்டி வளர்த்தால், அந்தக் குழந்தை பலம் பெறும், நிர்வாக சுமைகளைத் தாங்கும்
63. புலையும், கொலையும் களவும் தவிர் - புலாலுண்ணுதல், கொலை, திருடு இம்மூன்றையும் செய்யாதே
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம் - கொடியவர்களிடம் சிறந்த ஒழுக்கங்கள் இருக்காது
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும் - ஞானம் பெற்றோர்க்கு சுற்றம் என்ற பந்தமும், கோபமும் கிடையாது
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம் - அறியாதவர் போன்று இருப்பது பெண்களுக்கு அணிகலன்
67. பையச் சென்றால் வையந் தாங்கும் - நிதானமாகச் செய்யும் கார்யங்களில் வெற்றி நிச்சயம்
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர் - அனைத்துத் தீங்குகளையும் விட்டு விடு
69. போனகம் என்பது தானுழுது உண்ணல் - தான் முயன்று உழைத்து சம்பாதித்ததே உணவு என்பதாகும்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண் - தேவாம்ருதமே கிடைத்தாலும், பிறரோடு சேர்ந்து உண்
71. மாரி அல்லது காரியம் இல்லை - மழையின்றி ஒன்றும் இல்லை
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை - மழை வரப்போவதற்கு அறிகுறியே மின்னல்
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது - மாலுமி இல்லாத ஓடம் செல்லாது
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - பிறருக்கு செய்யும் நன்மை, தீமைகள் பின்பு நமக்கே வரும்
 
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம் - முதியோர்கள் அறிவுரை அமிர்தம் போன்றது
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு - மெத்தையில் படுத்து உறங்குதலே தூக்கத்திற்கு சுகம்
77. மேழிச் செல்வம் கோழைப் படாது - கலப்பையால் உழைத்துச் சேர்த்த செல்வம் ஒரு போதும் வீண் போகாது
78. மைவிழியார் தம் மனைஅகன்று ஒழுகு - விலை மாதர் இல்லங்களிலிருந்து ஒதுங்கி இரு
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம் - பெரியோர் சொல்லை கேளாமல் மறுத்தால் அந்த காரியங்கள் கெட்டுவிடும்
80. மோனம் என்பது ஞான வரம்பு - மௌனமே மெய்ஞ்ஞானத்தின் எல்லை
81. வளவன் ஆயினும் அளவு அறிந்து அழித்து உண் - சோழ வளவனை ஒத்த 
செல்வம் படைத்திருந்தாலும், வரவு அறிந்து செலவு செய்து உண்ண வேண்டும்
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும் - மழை குறைந்து விடுமானால் பல தான தர்மங்கள் குறைந்து விடும்
83. விருந்தில்லோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம் - விருந்தினரை உபசரித்தறியாத இல்லத்தில் தேவையான ஒழுக்கம் இருக்காது
84. வீரன் கேண்மை கூர் அம்பாகும் - வீரனுடன் கூடிய நட்பு, கையில் கூர்மையான அம்பை வைத்திருப்பதற்கு ஒப்பாகும்
85. உரவோர் என்கை இரவாது இருத்தல் - யாசிக்காமல் இருப்பதே வல்லவர்க்கு இலக்கணம்
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு - உற்சாகமான முயற்சியோடு இருப்பதே முன்னேற்றத்திற்கு அழகு
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை - தூய்மையான மனமுள்ளோருக்கு, வஞ்சக எண்ணம் இல்லை
88. வேந்தன் சீறின் ஆம்துணை இல்லை - அரசின் கோபத்துக்கு ஆளானவருக்கு வேறு துணை இல்லை
89. வைகல் தோறும் தெய்வம் தொழு - தினமும் காலையில் தெய்வத்தை வணங்கு
90. ஒத்த இடத்து நித்திரை கொள் - பழக்கப்பட்ட, சமமான இடத்தில் படுத்து உறங்கு
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வோடு ஒழுக்கம் - படிக்காதவர்களிடம் மனமறிந்த ஒழுக்கம் இருக்காது.
 
.

நைஷ்கர்ம்ய சித்தி என்பதன் பொருள்

 நைஷ்கர்ம்ய சித்தி என்பதன் பொருள் ஆத்ம ஸ்வரூபத்தை அடைதல் என்பதாகும். அதாவது தன்னுடைய இயல்பான ஸ்வரூபத்தை அடைதலாகும். ஆத்மா தன்னிடத்திலேயே இருந்தாலும் அதை உணரவிடாமல் அறியாமை மறைத்திருக்கிறது. எனவே அறியாமை நீக்கிவிட்டால் ஆத்மஸ்வரூபத்தை அடைந்தவிடலாம். அந்த அறியாமையை நீக்கக்கூடிய அறிவை கொடுப்பதே இந்த நூலின் குறிக்கோள்

 
வேதாந்த சாஸ்திரம் (உபநிஷத்) ஆத்மஞானத்தை நேரிடையாக கொடுக்கக்கூடிய ஒரே பிரமாணமாகும். கண்கள் பார்க்கின்ற பொருளைப் பற்றிய அறிவைக் கொடுக்கக்கூடிய பிரத்யக்ஷ பிரமாணமாக இருப்பதைப் போல உபநிஷத் ஆத்மஞானத்தை கொடுக்கக்கூடிய பிரத்யக்‌ஷய பிரமாணமாக இருக்கிறது. கண்கள் அனாத்மா விஷயங்களை அறிவதற்கு உதவும் பிரமாணம், உபநிஷத் ஆத்ம விஷயத்தை அறிவதற்கு உதவுகின்ற பிரமாணமாகும்.  இரண்டு பிரமாணங்களும் கொடுக்கின்ற அறிவை வேறெந்த பிரமாணத்தாலும் நீக்கவும் முடியாது, சரிபார்க்கவும் முடியாது. வேதாந்தத்தை சாஸ்திரத்தின் கண்கள் என்றும், பிரத்யக்ஷம் என்றும் அழைக்கப்படுகிறது.
 
வேதாந்தம் மகாவாக்கியத்தின் மூலம் நானே பிரம்மனாக இருக்கிறேன் (அஹம் பிரம்ம அஸ்மி) என்ற அறிவைக் கொடுத்தாலும், அந்த அறிவில் நிலைபெற முடிவதில்லை, காரணம் நம்முடைய புத்தியில் உள்ள குறைகள்தான். இந்த குறைகள் நீங்கிவிட்டால் அடைந்த அறிவில் நிலைத்துநிற்க முடியும், சம்சாரத்திலிருந்த முழுவதுமாக விடுபட்டு விடுவோம். எனவே ஆத்மஞானத்தை அடைந்தாலும் ஞானநிஷ்டை அடைவதற்கு புத்தியிலுள்ள குறைகளை நீக்குவதற்கு தொடர்ந்து முயற்சியை மேற்கொண்டு வரவேண்டும். வேதாந்த மகாவாக்கியம் அறிவை கொடுக்கும், பிரகரண கிரந்தங்கள் நம் புத்தியிலுள்ள குறைகளை நீக்குவதற்கு உதவி செய்வதால் அடைந்த அறிவு சுபாவமாக மாறிவிடும்.
 
நைஷ்கர்ம்ய சித்தி ஒரு பிரகரண கிரந்தமாகும். இது த்வம்(நான்) என்ற சொல்லின் பொருளை புரிந்து கொள்ள தடையாக இருக்கின்ற புத்தியிலுள்ள உள்ள குறைகளை, சந்தேகங்களை நீக்குகிறது. பலர் இந்த த்வம்(நான்) என்ற சொல்லின் பொருளைப் புரிந்துக் கொள்ள கஷ்டப்படுகிறார்கள் என்று ஆசாரியாக நினைக்கிறார்.
 
இந்த நூல் நான்கு அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. அவைகளாவது,
 
அத்தியாயம்-1:       
இதில் மோட்சத்தை அடைய உதவும் வழியைப் பற்றி பேசப்படுகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் மோட்சம்தான் அடையவேண்டிய இறுதி லட்சியமாகும். எனவே அதை அடைய உதவும் வழிகளைப் பற்றி கூறப்பட்டிருக்கிறது. கர்மத்தின் பயனென்ன என்பதையும், வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள கர்மங்களைப் பற்றி;யும், ஞான காண்டத்தில் கூறப்பட்டுள்ள உபதேசங்களைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. மோட்சத்தை உடைய நோரிடையான வழி எது கர்மமா அல்லது ஞானமா என்பதையும் விவாதிக்கப்படுகிறது.. மற்ற மதங்களின் தத்துவங்களைப் பற்றியும் பேசப்படுகிறது. ஞான-கர்ம சமுச்சயம் பற்றியும் விவாதிக்கப்படுகிறது.
 
அத்தியாயம்-2:       
த்வம் பத விசாரத்தைப்பற்றி பேசப்படுகிறது. நான் என்ற சொல்லின் உண்மையான பொருளை சரியாக புரிந்து கொள்ளவில்லையென்றால் மகாவாக்கியமான அஹம் பிரம்ம அஸ்மி என்பது பொருளற்றதாகிவிடும். எனவே த்வம் பதார்த்த விசாரம் அவசியம் செய்யவேண்டியதாக இருக்கின்றது.. இது ஆத்மா-அனாத்மா விவேகத்தைப் பற்றியும் விசாரம் செய்ய உதவுகின்றது.
 
அத்தியாயம்-3:       
ஆசாரியார் மகாவாக்கியமானது கேட்பவர்கள் மனதில் எப்படி செயல்படுகிறது என்பதையும், எப்படி ஞானத்தை உண்டு பண்ணுகிறது என்பதைப் பற்றியும் விரிவாக கூறியிருக்கிறார். மகாவாக்கியத்தினால் மட்டுமே நோரிடையாக ஆத்மஞானத்தை அடைய உதவுகின்றது. அதை சாரியாக புரிந்து கொண்டுவிட்டால் வேறெந்து சாதனமும் மோட்சத்தை அடைவதற்கு தேவை இரிருக்காது. ஆனால் இதை சாரியாக புரிந்து கொள்வதற்கு புத்தியிலுள்ள குறைகள் அனைத்தும் நீங்கியிருக்க வேண்டும்.
 
மேலும் ஆசாரியார் மகாவாக்கிய சிரவணம்தான் மிகமுக்கியமான ஞானயோக சாதனம். ஏனென்றால் இந்த சாதனமே ஆத்ம ஞானத்தை அடைவதற்கு போதுமானதாக இருக்கிறது. மனனம், நிதித்யாஸனம் இவைகளை விட சிரவணம்தான் மிகவும்  முக்கியமானது.  மேலும் அக்ஞானத்தின் ஸ்வரூபத் தன்மையையும் இந்த அத்தியாயத்தில் விளக்கியிருக்கிறார்.
 
அத்தியாயம்-4         
இதில் முதல் மூன்று அத்தியாயத்தில் கூறியுள்ள கருத்துக்களைத் தொகுத்து கூறியிருக்கிறார். பிறகு ஜீவன் முக்தி நிலையைப்பற்றியும், ஞானி எப்படி பிராரப்த கர்மப்பலனை எதிர்கொள்கிறான் என்பதைப் பற்றியும் கூறியிருக்கிறார்.
 
முதல் அத்தியாயத்தில் ஆசாரியார் இரண்டு கருத்துக்களை மிகவும் வலியுறுத்தி கூறியிருக்கிறார். அவைகளாவது:
 எல்லா மனிதர்களுக்கும் ஒரு குறிக்கோள் உள்ளது. இதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. இந்த குறிக்கோள் இயல்பானது, தேர்ந்தெடுக்கவோ அல்லது சிந்தித்து எடுக்கும் குறிக்கோள் கிடையாது. முதல் அம்சமானது துக்கத்தைப் போக்கிக்கொள்வதாகும். மனிதனுக்குரிய இயல்பான போக்கு மனதுக்கு வரும் வலியையும், உடலுக்கு வருகின்ற வலியையும், புத்திக்க வருகின்ற துன்பத்தையும் போக்கிக்கொள்வதற்கு முயற்சி செய்வதுதான். துன்பத்தைப் போக்கிக் கொள்வது எல்லா ஜீவராசிகளுக்கும் பொதுவானது. எனவே இது சுபாவமாகவே இருக்கிறது. இரண்டாவது அம்சமானது சுகத்தை அடைதலாகும். உலகத்திலுள்ள இன்பங்களை அடையவேண்டும் என்ற இயல்பான மனதை உடையதாகும்.
ஆத்மஞானத்தை அடையாமல் துன்பத்திலிலுந்து முழுவதுமாக விடுதலை பெறமுடியாது. நமக்கு வருகின்ற துன்பங்கள் அனைத்தும் மூன்று விதமான வழிகளிலிருந்த வருகின்றது. அத்யாத்மிகம், ஆதிபௌதிகம், அதிதைவிகம் ஆகிய  மூன்று வழிகளிலிருந்து ஆத்ம அக்ஞானத்தால் அனுபவிக்கப்படுகிறது. எனவே துன்பத்திலிருந்து நிலையாக விடுபெற வேண்டுமானால் அக்ஞானம் முற்றிலுமாக நீங்கிவிடவேண்டும்.  ஆத்மஞானத்தை அடைவதன் மூலமாகத்தான் அக்ஞானத்தை முழுவதுமாக நீக்கிக் கொள்ளமுடியும். ஆத்மஞானமானது அக்ஞானத்தை அடியோடு நீக்கிவிடும். அக்ஞானம் நீங்கிவிட்டால் எல்லாவிதமான துன்பங்களும் அடியோடு நீங்கிவிடும்.     
ஆனால் மனிதனின் பகுத்தறிவு இந்தக் கருத்தை ஒத்துக் கொள்ளாது. இதை நன்கு அறிந்துள்ள ஆசாரியார் இந்த நூலில் அக்ஞானம் நேரிடையாக நாம் அனுபவிக்கின்ற துன்பங்களுக்கு காரணமாகாது, ஆனால் மறைமுகமாக எவ்வாறு துன்பத்திற்கு காரணமாகிறது என்பதை கீழ்கண்ட கருத்துக்கள் மூலம் புரிய வைக்கிறார்.
 தன்னைப்பற்றிய அறியாமை இருமையை தோற்றுவிக்கிறது.
இந்த இருமையை ஏற்றுக் கொள்வதால், உலகத்தில் இருக்கும் பொருட்களில் வேண்டுவது, வேண்டாதது, பிடித்தது, பிடிக்காதது என்று பிரித்து வைத்துக் கொள்கிறோம்.
இதிலிருந்து ஆசை, கோபம், பற்று, வெறுப்பு போன்ற உணர்ச்சிகள் மனதில் உருவாகின்றது.
இவைகள் நம்மை தர்ம-அதர்ம காரியங்களைச் செய்யத் தூண்டுகிறது.
கர்மங்கள் செய்வதால் அதற்கான பலன்களான பாவ-புண்ணியங்கள் சேருகிறது.
புண்ணிய பலன்கள் மீண்டும் மனிதபிறவியெடுக்க வைக்கிறது, உடலின் மீது அபிமானம் கொள்ள வைக்கிறது.
ஸ்தூல, சூட்சும உடலின் மீது வைக்கின்ற அபிமானமே துக்கத்திற்கு காரணமாகின்றது.
எனவே துன்பத்தை போக்கிக் கொள்ள வேண்டுமானால், உடல் மீது வைத்திருக்கின்ற அபிமானத்தை நீக்கிவிட வேண்டும். இதனால் கர்மபலன்களை தரக்கூடிய செயல்களை செய்யமாட்டோம். ஆசை, கோபம், பற்று ஆகியவைகள் நீங்கப்பெற்று, இருமையை நீக்கிவிடுவோம். இதனால் ஆத்மாவைப் பற்றிய அறியாமை நீங்கி விடும். இது ஆத்மஞானத்தை அடையவைத்துவிடும். ஆத்ம ஞானத்தை தவிர்த்து வேறெதனாலும் துன்பத்தை நிலையாக நீக்க முடியாது. இந்த உண்மையை உணர்ந்தவர்களுக்காக இந்த நூலானது என்னால் எழுதப்பட்டிருக்கிறது.
 
பிரம்மா முதல் சிறுஉயிரினங்கள வரையுள்ள அனைத்துமே இயல்பாகவே துன்பத்தை போக்கிக் கொள்ளவே முயற்சி செய்துக் கொண்டிருக்கிறார்கள். அகங்காரமும், மமகாரமும் இந்த தேகத்தோடு சம்பந்தமுடையது. இந்த உடலானது வயோதிகம், நோய், மரணம் இவைகளின் பிடியில்தான் இருக்கிறது. ஆகவே இந்த தேகத்தோடு சம்பந்தம் வைத்துக் கொண்டிருக்கும் வரையில் துன்பத்தின் பிடியிலிருந்த விடுபடவே முடியாது. ஆழ்ந்த உறக்கத்தில் தேகசம்பந்தமே இல்லாமல் இருப்பதால் நம்மால் எந்தவிதமான துன்பத்தையும், உடல்வலியையும் அனுபவிப்பதில்லை.
 
இந்த உடல் இறந்தபிறகு தேகசம்பந்தமற்று போய்விடுவதால் மோட்சம் அடைந்து விடமாட்டோமா என்ற சந்தேகம் வரலாம். நாம் முற்பிறவியில் செய்த பாவ-புண்ணிய பலன்களினால் இந்த தேகம் தோன்றியிருக்கிறது. இந்த தேகம் வீழ்ந்தபின் இனி வெளிப்படப் போகும் பிராரப்த கர்மத்தின் அடிப்படையில் வேறொரு தேகம் எடுப்போம், சம்சாரத்தை அனுபவிப்போம். இந்த சம்சார சக்கரத்திலிருந்து விடுபட வேண்டுமானால் ஆத்மஞானத்தை அடைவதை தவிர வேறெந்த வழியும் கிடையாது.
 
பாவ-புண்ணிய கர்மபலன்களை அனுபவித்து தீர்க்கவே முடியாது. நாம் செயல்கள் செய்வதன் மூலம் இவைகளில் ஏதாவதுவொன்று சேர்ந்து கொண்டேயிருக்கும். சஞ்சித கர்மம் என்கின்ற கர்மபலன் தொகுப்பில் இவை சேர்ந்து கொண்டிருக்கும். வெளிப்பட்ட சிறு பாவ-புண்ணிய பலன்கள் மூலம் கிடைத்த சரீரத்தைக் கொண்டு இவைகளை மட்டும்தான் தீர்க்கமுடியும். அதேசமயம் இந்தப் பிறவியில் சேர்க்கின்ற பாவ-புண்ணியங்கள் ஆகாமி என்கின்ற பாவ-புண்ணிய தொகுப்பில் சேர்ந்து கொண்டிருக்கும். தேகம் வீழ்ந்தவுடன் ஆகாமி கர்மத்தில் உள்ளவைகள் சஞ்சித கர்மபல தொகுப்பில் சேர்ந்துவிடும். ஆகவே கர்மங்கள் செய்வதன் மூலம் கர்மபலன்களும் சேர்ந்து கொண்டே போகும். எனவே கர்மத்தை யோகமாக செய்வதன் மூலம் பலன்கள் எதுவும் புதியதாக உருவாகாது. ஆத்மஞானத்தை அடைவதற்கு தகுதிபடுத்திவிடும்.. ஆத்மஞானம் மூலம் சஞ்சித, ஆகாமி; கர்மபலன்கள் அழிக்கப்பட்டு வெளிப்பட்ட பிராரப்தம் மட்டும் செயல்பட்டு கொண்டிருக்கும்.
 
விருப்பும், வெறுப்பும் ஒருவனை செயலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும். இவைகள் நீங்கிவிட்டால் செயல் செய்ய வேண்டிய சூழிநிலையே ஏற்படாது. அதனால் கர்மபலன்களும் ஏற்படாது. பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணர் இதையேதான் கூறியிருக்கிறார். ஆசையும், கோபமும் ஒருவனை தர்ம-அதர்ம செயலில் ஈடுபடுத்திக் கொண்டிருக்கும்.
 
இதிலிருந்து விருப்பு, வெறுப்பை நீக்கிவிடவேண்டும் என்று தோன்றுகிறது. இருந்தாலும் நம்மால் அவ்வாறு செய்யமுடிவதில்லை. காரணம் நாம் இந்த உலகத்தை எனக்கு பிடித்தமானவைகள் (உறவு, சூழ்நிலை, மக்கள் இவைகள் மூலம் இன்பத்தை அனுபவித்தல்), பிடிக்காதவைகள் (உறவு, சூழ்நிலை, மக்கள் இவைகள் மூலம் துன்பத்தை அனுபவித்தல்), என்று பிரித்து வைத்திருக்கிறோம்.
 
இந்த உலகத்தில் பிடித்தமானவைகள், பிடிக்காதவைகள் என்று பாகுபடுத்தி வைத்திருப்பதாலதான் ஆசையும், கோபமும் மனதில் வருகின்றது. இருமையை பார்க்கின்ற வரையில் இந்த பாகுபாட்டை நீக்கிக் கொள்ளமுடியாது. இந்த உலகத்தை ஈஸ்வரனாக பார்க்கின்ற மனதை அடையவேண்டும். இந்த உலகமே பிரம்மமயமாக உணர்கின்ற மனநிலையை அடைந்திட வேண்டும். அப்போதுதான் உலகத்தை பிடித்தவைகள், பிடிக்காதவைகள் என்ற வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
 
பொய்யான இந்த உலகத்தை விசாரிக்காமல் உண்மையை தெரிந்துக் கொள்ள முடியாது. வேதாந்தத்தில் பொதுவாக எடுத்துக்காட்டுகின்ற உதாரணங்களான சிப்பியில் வௌ;ளி என்ற உதாரணமானது ஆசையினால் செயலை செய்ய தூண்டுவதற்கும், கயிற்றில் பாம்பு என்ற உதாரணமானது பயத்தினால் செயல் எதுவும் செய்யாமல் ஓடுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. வேதாந்தம் இந்த உலகமே சிப்பியில் பார்க்கும் வௌ;ளியைப் போலவும், கயிற்றில் பார்க்கும் பாம்பைப் போலவும் நாம் பார்த்துக் கொண்டிருப்பதால் செயலில் ஈடுபடுவதற்கும், செயல் செய்யாமல் நீங்கியிருப்பதற்கும் காரணமாக இருக்கிறது. சரியான முறையில் விசாரம் செய்யாததால் இந்த தவற்றை நாம் செய்கின்றோம். தோன்றிக் கொண்டிருக்கும் இந்த உலகமே பிரம்மமயமானது என்ற உறுதியான நம்பிக்கை ஏற்பட்டுவிட்டால். உலகமே ஈஸ்வர ஸ்வரூபமாக பார்க்க முடியும். பகவான் கிருஷ்ணரும் இந்த உலகத்தில் என்னைத் தவிர வேறெதுவும் கிடையாது என்று கூறியிருப்பதை சிந்தித்துப் பார்த்து தெளிவடைய வேண்டும்.
 
ஆதலால், எல்லோரிடத்திலும் அறியாமை இருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. இருமையிருக்கும்வரை சம்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கும், துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருப்போம்.  ஆசாரியார் இரண்டு அடைமொழிகளை ஆத்மாவிற்கு கொடுக்கிறார். அவைகள் ஒன்று அத்விதீயம் (இரண்டற்றது), மற்றொன்று தானே பிரகாசித்துக் கொண்டேயிருக்கிறது என்பதாகும். அதாவது அதை காட்டிக் கொடுப்பதற்கு வேறெந்த பிரமாணமும் தேவை கிடையாது.  சுய அறியாமையே எல்லா பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது.. எங்கிருந்தும் வராதது, எங்கும் செல்லாதது, எதையும் சார்ந்திருக்காது இவைகளே உண்மையான ஆனந்தத்தின் இயல்பாகும். சுய அறியாமை இந்த ஆனந்தத்ததை மறைத்திருக்கிறது.
 
உண்மையான ஆனந்தம் வந்துபோவதல்ல, எப்பொழுதும் நிலையாக இருக்கூடியதாகும். மற்ற ஆனந்தங்கள் நிலையற்றவை, வந்து போகக்கூடியது. சமாதி நிலையில் அனுபவிக்கின்ற ஆனந்தமும் உண்மையான ஆனந்தமல்ல, அதனுடைய பிரதிபிம்பமே அனுபவிக்கப்படுகிறது.  ஆத்மானந்தம் என்பது அனுபவிக்கக்கூடியது இல்லை. எப்பொழுதும் ஆனந்தமாக இருப்பதே நம்முடைய உண்மையான ஸ்வரூபம். இந்த ஆத்மானந்தம் வெளியேயுள்ள எந்தவொன்றையும் சார்ந்திருப்பது கிடையாது. ஆனால் அனாத்மானந்தம் வெளியேயுள்ள பொருட்களையும், சூழ்நிலைகளையும் சார்ந்திருக்கிறது. ஆத்மானந்தம் காலத்தையும் சார்ந்திருப்பது கிடையாது.
 
ஒரு பெரியத் துணியைக் கொண்டு நம்முடலை மறைக்கலாம். ஆனால் எல்லையே இல்லாததும், எப்பொழுதும் அனுபவித்துக் கொண்டிருப்பதும், தானே பிரகாசித்துக் கொண்டிருப்பதுமானதும், நிலையானதுமான ஆத்மாவை எப்படி அறியாமையால்  மறைக்க முடியும்? ஆத்மாவைப் பற்றிய அறிவேயில்லாதவனுக்கு ஆத்மா மறைக்கப்பட்டிருப்பதாகதான் கூறமுடியும்.
 
அவித்யாவின் இரண்டு சக்திகளான விக்ஷேபம், ஆவரணம் இவைகள்தான் மனிதர்களின் துன்பத்திற்கு காரணங்களாகும். அறியாமையால் துன்பத்தை அனுபவிக்கின்றோம். நம் இயல்பான ஆனந்த ஸ்வரூபமானது இநத இரண்டு மாபெரும் சக்தியால் மறைக்கப்பட்டிருப்பதால் நிலையற்ற இன்பத்தை நாடி நாம் சென்று கொண்டிருக்கின்றோம். இவையிரண்டும் சேர்ந்தவையே சம்சாரமாகும். எனவே இந்த அறியாமையை போக்கிக் கொள்வதே நம்முடைய முக்கியமான குறிக்கோளாகும்.
 
இந்த அக்ஞானத்தை ஆத்மஞானத்தை அடைவதன் மூலம்தான் போக்கிவிட முடியும். வேறெந்த வழியும் கிடையாது. இருட்டறையில் உள்ள பொருட்களை பார்ப்பதற்கு வெளிச்சம் மட்டும்தான் தேவை வேறெதுவும் தேவையில்லை அதுபோலதான் இந்த ஞானம். பக்தியோகமோ, உபாஸன யோகமோ, ராஜயோகமோ, ஹதயோகமோ இதற்கு பயனபடாது. மனத்தூய்மையை அடைவதற்கு பலவழிகள் உண்டு, ஆனால் அறியாமையை நீக்கிக் கொள்வதற்கு ஆத்மஞானத்தை அடைவதை தவிர வேறெந்த வழியும் கிடையாது. நாம சங்கீர்த்தனம் சித்தசுத்தியைத்தான் கொடுக்குமே தவிர மோட்சத்தை கொடுக்காது. இந்த ஆத்மஞானத்தை வேதாந்தத்தை தவிர வேறெதனாலும் கொடுக்க முடியாது. குருமுகமாக மகாவாக்கியத்தை நன்றாக விசாரம் செய்து அடையப்படுவதே ஆத்மஞானமாகும். இதை அடைவதற்கு நீண்டகாலமானாலும், இதைத்தவிர வேறெந்த உபாயமும் கிடையாது.
 
இத்துடன் முகவுரையை முடித்துவிட்டு, மங்கள ஸ்லோகத்துடன் விசாரத்தை தொடங்குகிறார்.
 
நான் பகவான் ஹரிக்கு என் நமஸ்காரத்தை செலுத்துகிறேன். சாட்சி ஸ்வரூபமாகவும், அறிவு ஸவரூபமாகவும், அறியாமை என்கின்ற இருளைப் போக்கக்கூடியவரும், கயிற்றில் தோன்றும் பாம்பு போல அவரிடத்திலிருந்து ஆகாசம், காற்று, நீர், நெருப்பு, பூமி ஆகியவைகள் தோன்றின.
 
பிறகு குருவுக்கு நமஸ்காரம் தெரிவிக்கின்றார். தன்னிடத்திலிருந்த அறியாமை என்கின்ற முடிச்சுக்களை அவிழ்த்துவிட்ட குருவுக்கு வணக்கம் செலுத்துகின்றார்.
 
இந்த நூலின் மூலம் தெளிவாக சொல்ல விரும்பும் முக்கியக் குறிக்கோளான, வேதாந்தத்தில் மறைந்திருக்கும் முழுமையான உண்மையை எடுத்துச் சொல்கிறேன் என்று உறுதி கூறுகிறார்.
 
முழுமையான உண்மையென்பது சுத்த சைதன்யமாகும். இது எல்லாப ;பொருட்களுக்கும் இருப்பைக் கொடுக்கிறது. எல்லாபொருட்களிலும் இருக்கிறது, ஆனால் அதனிடத்தில் எதுவும் கிடையாது. எல்லாப்பொருட்கள் அழிந்தாலும் அதுமட்டும் இருந்து கொண்டிருக்கும். இதை கேட்கும் போது இந்த தத்துவத்தை அறிந்துக் கொள்ள மனம் விரும்புகிறது. உபநிஷத் நீயேதான் அந்த சுத்தசைதன்யம் என்று சொல்கிறது.
 
வேதாந்தம் இந்த தத்துவத்தை உபதேசிக்கும் போது மூன்று படிகள் மூலமாக இறுதி லட்சியத்தை அடைகிறோம். முதல்படி பரோக்ஷபிரம்மன் (ஆத்மா எங்கேயோ இருக்கிறது என்ற அறிவு), இரண்டாவதுபடி ப்ரத்யக்ஷ பிரம்மன் (என்னருகேதான் இருக்கிறது), மூன்றாவது படியானது அபரோக்ஷ பிரம்மன் (நானே அந்த பிரம்மன்) என்ற இறுதியான ஞானத்தை அடைதல்.
 
பார்க்கப்படுகின்ற உலகம் பார்ப்பவனான என்னை சார்ந்திருக்கிறது. காட்சியளிக்கின்ற அனைத்திற்கும் இருப்பைக் கொடுப்பது நான்தான். எனவே இந்த உலகமே பொய்யான தோற்றமாகும், நான் மட்டும் உண்மையான வஸ்து. ஆசிரியர் இந்த கருத்தைத்தான் எடுத்துக் கொண்டு விளக்கப் போகிறார். சரியான அறிவு என்கின்ற நெருப்பானது ஆத்ம அறியாமையை எரித்துவிடுகிறது. சரியான அறிவு எல்லா கர்மபலன்களையும் நாசம் செய்துவிடுகின்றது, எரித்து சாம்பலாக்கிவிடுகிறது.

ஆத்ம ஞானத்தை நெருப்புடன் இரண்டு கோணங்களில் ஒப்பிட்டுப் பார்க்கிறார்:

நெருப்பானது இருட்டறையில் உள்ள மறைந்திருக்கின்ற பொருட்களை காட்டிக் கொடுக்கின்றது.
நெருப்பானது எரிக்கக்கூடிய சக்தி உடையதாக இருப்பது போல ஆத்மஞானமும் சம்சாரத்தை, அத்யாஸத்தை, அகங்காரத்தை, கர்மவாசனைகளை எரித்துவிடக்கூடியது.
இரண்டு அரணிகட்டைகளை தேய்ப்பதனால் நெருப்பு உண்டாகின்றது. கீழேயுள்ள அரணிக்கட்டையை மனதிற்கும், மேலேயுள்ள அரணிக் கட்டையானது வேதாந்த உபதேசத்திற்கும் ஒப்பிட்டு இரண்டையும் சிரவணம், மனனம், நிதித்யாஸனம் என்கின்றவற்றை கொண்டு தேய்க்கும்போது ஞானம் என்கின்ற நெருப்பு தோன்றுகின்றது.
 
ஆசிரியர் வைராக்கியத்தைப் பற்றி அவருடைய பாணியில் கூறியிருக்கிறார். வைராக்கியத்தை உடைய மனம் இரண்டு விதமான நல்லொழுக்கங்களைக் கொண்டு இருக்கிறது. அவைகளாவது,
 
வெளியேயுள்ள புலனுகர் பொருட்கள், விஷயங்கள், மனிதர்கள் ஆகியவைகளின் பிடியில் இருப்பதில்லை. ஆசை-துவேஷம் கொண்ட மனம்தான் இவைகளின் பிடியில் சிக்கி துன்பத்தை அனுபவிக்கின்றது. இந்த மனம் வேதாந்தத்தை படிப்பதற்கு ஏற்றதாக இருக்காது. எனவே வெளியேயுள்ள உள்ள பொருட்கள், விஷயங்கள், மனிதர்கள் போன்றவற்றின் பிடியிலிருந்து நம்மை விலக்கிக் கொள்வதே முதல் அம்சமாகும். மனதில் ஆழ்ந்து, எப்பொழுதும் சிந்தித்துக் கொண்டிருக்கும் அனாத்மா விஷயங்களை, மனிதர்களை முழுவதுமாக நீக்கிவிடவேண்டும்.
இரண்டாவது மனமானது இயல்பாகவே வேதாந்த உபதேசத்தை கேட்க விரும்பவதாக இருக்கவேண்டும். மனதை வலியுறுத்தி கேட்க வைக்கக் கூடாது. விரும்பிக் கேட்கின்ற விஷயத்தைத்தான் மனம் நன்கு கிரகிக்கும், அதையை சிந்தித்துக் கொண்டிருக்கும். எனவே ஆத்மஞானத்தை அடைய வேண்டும் என்ற இயல்பான மனதை உடையவனாக இருக்க வேண்டும். 
வேதம் உரைத்த தர்ம,-அதர்மப்படி  நித்திய-நைமித்திக கர்மங்களை தொடர்ந்த செய்து கொண்டுவந்தால் இத்தகைய வைராக்கியத்தை உடைய மனதை அடையலாம். வைராக்கியத்தை அடைந்தவுடன் மனதளவிலாவது கர்மங்களை செய்வதை விட்டுவிடவேண்டும்.
 
மனதை அமைதிப்படுத்துவதற்கு யோக அப்யாஸம் தேவைப்படும். அமைதியான மனம்தான் நீண்டநேரம் வேதாந்த உபதேசத்தை கேட்பதற்கும், அதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருப்பதற்கும் உதவியாக இருக்கும். அஷ்டாங்க யோகத்தின் மூலமாக சிந்தனைச் செய்கின்ற, ஆத்மவிசாரம் செய்யக்கூடிய மனதை அடைந்திடலாம்.
 
யோக அப்யாஸத்தின் மூலம் மனதை அமைதிபடுத்தி விடுவதால், அது தனிமையில் இருக்க பழகிவிடுகிறது. இதனால் வேதாந்த சிரவணம், மனனம், நிதித்யாஸளனம் செய்வது எளிதாகிறது. மனதை தனிமையில் இருக்க பழக்கி வைப்பது சுகத்தைக் கொடுக்கக்கூடியது. இவ்வாறு மனதை தயார்படுத்தி விட்டால் நாம் வேதாந்த சிரவணம் செய்வதற்கு எந்த தடையும் வராது. முக்கியமாக தன்னிடத்தில் இருக்கின்ற செல்வங்கள், கடமைகள், உறவுகள் ஆகியவற்றினால்  நாம் செயல்களை செய்து கொண்டிருக்க வேண்டும் என்ற உந்துதலும் இல்லாமல் மனம் அமைதியாக இருக்கவேண்டும்.  இதற்கு பிறகு ஆத்மஞானத்தை தரக்கூடிய மகாவாக்கியத்தை முழுமையாக விசாரம் செய்யவேண்டும். அபரோக்ஷ ஞானம் வேதாந்த சிரவணம்-மனனம்-நிதித்யாஸம் என்கின்ற வேதாந்த விசாரத்தின் மூலம் அடைந்து விடலாம்.
இதனால் அக்ஞானமானது முழுமையாக நீக்கப்பட்டுவிடும். பிறகு ஆத்ம ஸ்வரூபமாக இருந்துகொண்டு மற்ற அனைத்தையும் அனாதமாவாக, மித்யாவாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
 
ஆத்மஞானம் மூன்று படிகளில் அடையப்படுகிறது. அவைகளாவது,
 
முதல்படி: வெளிச்சம் வந்தவுடன் இருள் நீங்கிவிடுவது போல, ஆத்மஞானம் வந்தவுடன் அறியாமை சென்றுவிடும்.
 
இரண்டாவதுபடி: அக்ஞானம் என்பது காரக த்வைதத்தின் அடிப்படையாகும். காரகம் என்பது செயல் செய்வதற்கு உதவி புரிகின்ற பலவகையான பொருட்களை சேர்த்து குறிக்கின்ற ஒரு சொல். செயல் செய்பவன், செயல் செய்வதற்கு உதவும் கருவிகள், செய்யப்படும் பொருள், இடம் போன்றவைகளாகும். கர்மம் செய்வதற்கு காரகம் தேவைப்படுகிறது, அக்ஞானம் காரகத்திற்கு துணைபுரிகிறது.
 
மூன்றாவதுபடி: ஞானம் அக்ஞானத்தை அழித்துவிடுகிறது. இதனால் காரகமும் அழிக்கப்படுகிறது, செயல் செய்வதும் தேவையில்லாமல் போய்விடுகிறது.
 
பொதுவாக சிரவணம் மட்டுமே தெளிவான அறிவைக் கொடுத்துவிடும். ஆத்ம தத்துவத்தைப் பற்றிய தெளிவான் புரிதலைக் கொடுத்துவிடும். ஆனால் பலருக்கு அவர்களுடைய புத்தியில் உள்ள குறையினால் புரிந்துக் கொள்ளமுடியாமல் போகலாம். இத்தகைய சாதகர்களுக்குத்தான் மனனம், நிதிதியாஸனம் போன்ற சாதனங்கள் தேவைப்படுகின்றது. இவைகள் புத்தியில் உள்ள குறைகளை நீக்கி ஆத்மஞானத்தை அடைவதற்கு உதவியாக இருக்கும். இந்த இரண்டு சாதனங்ளும் ஞானத்தைக் கொடுக்காது, ஞானத்தை அடைவதற்கு தடையாக இருக்கின்ற புத்தியில் உள்ள குறைகளை நீக்கிவிட்டு சிரவணத்திற்கு தயார் செய்துவிடுகின்றது.
 
புத்தியில் உள்ள குறைகள் நீங்கியபின்னர், அமைதியான மனதை அடைந்த பின்னர். சாதகன் மீண்டும் சிரவணத்தை மேற்கொள்ள வேண்டும். பயனைத் தரக்கூடிய அளவுக்கு முழுமனதுடன் செய்யப்படும் சிரவணத்தால்தான் இறுதி ஞானத்தை அடையமுடியும்.  ஆசிரியர் மகாவாக்கியத்தை சரியாக புரிந்து கொள்வதை தவிர வேறெதுவும் ஞானத்தை அடையத் தேவைப்படாது.
 
புத்தியிலுள்ள முதல் தடை:
எந்தவொரு அறிவையும் புத்தகத்தின் மூலமாக அடைந்தாலும் அதை அன்றாட செயல்களில் பயன்படுத்தினால்தான் அதைப்பற்றிய சரியான புரிதலை நாம் அடைந்திருக்கின்றோம் என்பது பொதுவான கருத்து.  இந்த கருத்தை வேதாந்த உபதேத்திற்கு பொருந்தாது. இந்தக் கருத்துப்படி வேதாந்த உபதேசத்தைப் பெற்ற பின்னர், அதைப்பற்றிய புத்தக அறிவை அடைந்து விட்டேன். இனி அடைந்த அறிவை அனுபவத்திற்கு கொண்டுவர வேண்டும் என்று நினைக்கத் தோன்றும். இதுதான் புத்தியில் ஏற்படுகின்ற முதல் தடையாகும். இந்த தடையை மனனம் என்ற சாதனத்தின் மூலமாக நீக்கிக் கொள்ளலாம். இந்த சாதனத்தின் மூலமாக வேதாந்த அறிவென்பது மற்ற அறிவிலிருந்து வேறுபட்டது, இந்த சப்தபிரமானமே இறுதியான அறிவைக் கொடுக்கக்கூடியது என்ற நம்பிக்கையை பெற்றுவிடுவோம். இதனால் மனதில் உள்ள முதல் தடையானது நீக்கப்படுகிறது.
 
புத்தியிலுள்ள 2வது தடை:
தேகாபிமானம் இருக்கும் வரைக்கும், அவைகளுக்கு வரும் கஷ்ட-நஷ்டங்கள் தன்னைப்பாதிக்கிறது என்று துயரப்படுகிறோம். வேதாந்தத்தை நன்கு படித்து, நானே ஆத்மா என்ற அறிவை அடைந்திருந்தாலும், மனதையும், உடலையும் நான் என்றுதான் எண்ணிக்கொண்டிருக்கிறான். அதனால் துன்பப்பட்டு கொண்டிருக்கிறான். இதையே விபரீத பாவனா என்று கூறப்படுகிறது. இந்தத் தடையிருக்கும் வரையில் ஒருவனால் இறுதி ஞானத்தை அடையவே முடியாது. இந்தத்தடையை நீக்கிக் கொள்வதற்குதான் நிதித்யாஸனம் என்கின்ற சாதனத்தை பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் தேகாபிமானத்தை முற்றிலுமாக நீக்கிவிட்டால் ஆத்மஞானத்தை அடைந்துவிடலாம்.
 
எனவே மனனம், நிதித்யாஸனம் மூலமாக மனதிலுள்ள தடைகளை நீக்கிவிட்டால் மகாவாக்கிய சிரவணமே சம்சாரத்திலிருந்து விடுவித்துவிடும். சிரவணம்தான் முக்கிய சாதனம், மற்ற இரண்டும் புத்தியிலுள்ள குறைகளை நீக்கிக் கொள்வதற்கு பயன்படுகிறது.
 
தொகுப்புரை
 
முதல் அத்தியாயம் ஆறு தலைப்புகளாக பிரிக்கப்படுகிறது. அவைகளாவது,
முகவுரை
வேதாந்த உபதேசத்திற்கு எதிரான மூன்றுவகையான மறுப்புக்கள். அவைகளாவது 1.முதல் மறுப்பை நிராகரித்தல், 2. இரண்டாம் மறுப்பை நிராகரித்தல், 3.மூன்றாம் மறுப்பை நிராகரித்தல்
முடிவுரை.
1.முகவுரை
ஈஸ்வரனையும், தனது குருவான ஆதிசங்கரரையும் துதித்துவிட்டு எதற்காக இந்த நூலை எழுதுகிறேன் என்று கூறுகிறார். எனது குருவின் உபதேசம் போதுமானதாக,  முழமையானதாக இல்லை என்று நினைத்தோ, குறைகள் இருக்கின்றது என்று நினைத்தோ, எனக்கு பேரும், புகழும் வரவேண்டும் என்று நினைத்தோ இந்த நூலை எழுதவில்லை. நான் பெற்ற அறிவை மேலும் மெருகூட்டிக் கொள்ளவே எழுதுகிறேன்.
 
பிறகு வேதாந்தம் உபதேசத்தின் முக்கியமான அம்சத்தை நான்கு பகுதிகளாக பிரித்து சுருக்கமாக கூறியிருக்கிறார். அவைகளாவது,
அறியாமையே சம்சாரத்திற்கு காரணம். தன்னுடைய உண்மையான ஸ்வரூபத்தை அறியாமல் இருப்பதற்கு சம்சாரத்தினால் அடையும் விளைவுகள்.
ஆத்ம ஞானமே மோட்சத்திற்கு காரணமாகும். தன் உண்மை ஸ்வரூபத்தை அறிவை அடைவதே மோட்சத்தை அடையும் வழிகளாகும்.
உபநிஷத்தின் மகாவாக்கியமே மோட்சத்தை அடைவதற்கு காரணமாக இருக்கிறது.
கர்மம் எந்தவகையிலும் மோட்சத்தை அடைவதற்கு காரணமாக இல்லை.
அக்ஞானம் சம்சாரத்திற்கு காரணமாக இருக்கிறது. எப்படி சம்சாரத்தை அனுபவிப்பதற்கு அறியாமையே காரணமாக இருக்கிறது என்பது சுருக்கமாக கூறப்படுகிறது.
அத்வைத தத்துவத்தைப் பற்றிய அறியாமையினால் இருமை(த்வைதம்) இருப்பதாக தவறாக புரிந்துக் கொள்ளப்படுகிறது.
இருமையை பார்ப்பதால் இந்த உலகமே தனக்கு சாதகமான, பாதகமான சூழ்நிலைகளுடையதாக தோன்றுகிறது.
இந்த நிலையில்தான் ஆசை, கோபம் என்ற மன உணர்ச்சிகளும், பிடித்தமானவைகள், பிடித்தமற்றவைகள் என்ற வேற்றுமைகளும் மனதில் எழுகின்றது.
ஆசையும், கோபமும் தர்ம-அதர்ம செயல்களை செய்யத் தூண்டுகின்றது.
தர்ம செயல்கள் புண்ணிய பலனையும், அதர்ம செயல்கள் பாவப்பலனையும் கொடுக்கின்றது
இந்த புண்ணிய-பாவ பலன்கள் மீண்டும் பிறப்பதற்கு காரணமாகின்றது. புண்ணயம் அதிகமாக இருந்தால் உயர்ந்த ஜீவராசியாகவும். பாவங்கள் அதிகமாக இருந்தால் கீழான பிறவியாக பிறப்பதற்கு காரணமாக இருக்கின்றது.
தேகத்தின் கொண்டிருக்கம் பற்றினால் பலவகையான துன்பங்களை அனுபவிக்கப்படுகின்றது. அதாவது பிறப்பு, வியாதி, இறப்பு, துக்கம் போன்ற பலவகையான துன்பங்களை அனுபவிக்கின்றோம். இவையனைத்தும் சேர்ந்துதான் சம்சாரம் எனக்கூறப்படுகிறது.
இதிலிருந்து அறிந்து கொள்ள வேண்டியது அறியாமை சம்சாரத்திற்கு காரணமாக இருக்கின்றது. ஆத்மஞானமே மோட்சத்தை அடைவதற்கு காரணமாக இருக்கிறது.

2. வேதாந்த உபதேசத்திற்கு எதிரான மூன்றுவகையான மறுப்புக்கள்
மூன்று வகையான கர்மகாண்டம், அதைச்சார்ந்த தத்துவவாதிகளின் எதிர்வாதங்கள்.
 அப்4யுபேத3ய கர்மவாதம்
அப்4யுபேத்3ய சமுச்சய வாதம்
அனப்4யுபேத3ய கர்மவாதம்
 
1. அப்4யுபேத3ய கர்மவாதம்
இந்த பூர்வபக்ஷி ஆத்மஞானம் வேதத்தில் கூறப்பட்டிருக்கிறது.  ஆனால் அதை மோட்சம் அடைவதற்கு பயன்படுத்தக்கூடாது. மோட்சத்தை அடைவதற்கு ஆத்மஞானம் தேவைப்படாது. செயல் செய்வதன் மூலமாகத்தான் மோட்சத்தை அடைய முடியும். கர்மமே மோட்சத்தை அடைவதற்கு போதுமானதாக இருக்கும் போது எதற்காக ஆத்மஞானத்தை அடைய முயற்சிக்க வேண்டும்.
 
ஆசாரியார் இந்த வாதத்தை நீக்குவதற்கு ஐந்து வகையான குறிப்புக்கள் கொடுக்கிறார். அவைகளாவது,
எத்தனை லௌகீக, வைதீக கர்மங்கள் செய்தாலும் அவைகளால் ஆத்ம அறியாமையை நீக்கமுடியாது. ஏனென்றால் கர்மம் செய்வதே அறியாமையின் விளைவினால்தான், அதுவே நம்மை அறியாமையில் வைத்திருக்கிறது. கர்மம் அறியாமையின் விளைவு மட்டுமல்ல அது நம்மை அறியாமையில் தொடர்ந்த வைத்திருந்து உண்மையை தவறாக புரிந்து கொள்ள வைத்துக்  ;கொண்டிருக்கிறது. நான் செயல் செய்பவன், வைதீக கர்மங்களை செய்வதற்கு வர்ணாசிரம தர்மங்களுக்கு உட்பட்டவன் என்று தவறாக நினைக்க வைத்துக் கொண்டிருக்கிறது. இவ்வர்று தன்னைப் பற்றிய உண்மையை அறியாதவாறு கர்மம் நம்மை வைத்துக் கொண்டிருக்கிறது. கர்மத்தால் இந்த அறியாமையை நீக்கமுடியாததால், இதன் மூலம் மோட்சத்தை அடையவே முடியாது. ஏனென்றால் மோட்சம் என்பது ஆத்மாவின் இயல்பாகும். அதனால் அக்ஞானம் நீங்காதவரை மோட்சம் என்பதை அடையவே முடியாது.
கர்மத்தால் அடையும் பலன்கள் நிலையற்றவைகள். கர்மமே ஒரு எல்லைக்குள் வரையறுக்கப்பட்டதாக இருப்பதால் அதிலிருந்து அடையப்படும் பலன்களும் வரையறுக்கப்பட்டதாகவே இருக்கும். செயல் செய்வதன் மூலம் நான்கு வகையான முடிவுகளை அடையப்படுகிறது. அவைகளாவது ஓரிடத்தை அடைதல், புதியதாக ஒன்றை உருவாக்குதால், ஒன்றிலிருந்து வேறான்றாக மாற்றத்தை அடைதல், தூய்மைப்படுத்துதல் ஆகியவைகளாகும்.  ஆனால் மோட்சம் என்பது வரையறுக்கப்பட முடியாதது, நிலையானது. கர்மம் செய்வதால் அடையப்படும் பலன்கள் நிலையற்றதாக இருக்கும் போது எப்படி நிலையான மோட்சத்தை அடையமுடியும.
கர்மத்தினால் மோட்சத்தை தவிர மற்ற பலன்களை அடையலாம். கர்மகாண்டத்தில் விதவிதமான கர்மங்கள் கூறப்பட்டிருக்கிறது. அவைகளால் அடையப்படும் பலன்கள் புத்திரபேறு, செல்வம், சொர்க்கம் போன்றவைகளாகும்.  சில கர்மங்கள் பலனைக் குறிப்பிடாமல் இருக்கிறது அது மோட்ச பலனாக எடுத்துக் கொள்ளலாம் என்று வாதம் செய்தால், அது மாதிரி பலனைக் குறிப்பிடாத எந்தக் கர்மத்தையும் வேதம் குறிப்பிடவில்லை.
மேலும் வேதாந்தம் கர்மத்தினால் அடையப்படுகின்ற விளைவுகள் சம்சாரம், மீண்டும் மீண்டும் பிறத்தலாகும் என்று அதிலுள்ள குறைகளை கூறியிருக்கிறது. கைவல்ய உபநிஷத் தியாகத்தினால் மட்டுமே சிலர் சாதகர்கள் மீண்டும் பிறவாத நிலையை அடைகிறார்கள். இந்த நிலையை சாஸ்திர கர்மங்களை செய்வதாலோ, சந்ததியை அடைவதாலோ, அளவற்ற செல்வத்தை அடைவதாலோ அடைவதில்லை.
இன்னொரு பூர்வபக்ஷியின் உபாயத்தை நிராகாரித்தல். அந்த உபாயமானது. காம்யமான கர்மங்களை செய்யாமல் இருந்தால் புண்ணியம் சேராது, அதேபோல நிஷித்த கர்மங்களை செய்யாமல் இருந்தால் பாவமும் சேராது. இதனால் பாவ-புண்ணியங்கள் எதிர்காலத்தில் சேராமல் தடுத்துவிடலாம். அடைந்த பாவ-புண்ணியங்களை அனுபவித்து தீர்த்துவிட வேண்டும். மரணகாலத்தில் பாவ-புண்ணியங்கள் இரண்டும் இல்லாமல் போய்விடுவதால் மோட்சமானது அடையப்படுகிறது.  ஆசாரியார் இது நடக்கமுடியாத காரியமாகும். ஏனென்றால் அறியாமை இருக்கும்வரை ஆசைகள் இருக்கும், இது காம்ய கர்மங்களை செய்ய தூண்டிக்கொண்டிருக்கும். அதேமாதிரி ராக-துவேஷங்கள் இருக்கும்வரை நிஷித்த கர்மங்களை செய்யாமல் இருக்க முடியாது. பழைய பாவ-புண்ணியங்கள் கணக்கற்ற முற்பிறவிகளில் சேர்ந்திருக்கிறது. அவைகளை ஒரே பிறவியில் அனுபவித்து தீர்த்துவிட முடியாது. எனவே உன்னுடைய உபாயத்தை பயன்படுத்தவே முடியாது என்று அவனுடைய கருத்தானது நிராகாரிக்கப்பட்டது.
கர்மம் செய்வது முற்றிலும் பயனற்றதல்ல. அதை யோகமாக செய்யும்போது சித்த சுத்தியை (மனத்தூய்மையை) அடையலாம். இது    ஞானயோகத்திற்கு செல்ல உதவி செய்யும்.
 
2. அப்4யுபேத3ய சமுச்சய வாதம்
இது இரண்டாவது வகையான பூர்வபக்ஷியின் வாதம். கர்மத்தையும், ஞானத்தையும் சேர்ந்து செய்தால்தான் மோட்சத்தை அடையமுடியும். இந்த வாதத்தை ஐந்து விதமான விவாதங்கள் மூலமாக நீக்கிவிடுகிறார்.
இளமையும், முதுமையும் எப்படி சேர்ந்து இருக்காதோ அதுபோல ஞானமும், கர்மமும் சேர்ந்தே இருக்கமுடியாது. கர்ம சாதனம் பயன்படுத்தும்போத ஞான சாதனத்மை பயன்படுத்த முடியாது.  ஏனென்றால் கர்மத்தை யோகமாக செய்து மனத்த}ய்மை அடைந்திடலாம். மனத்தூய்மையை அடைந்திடாமல் ஞானத்தை அடையமுடியாது. ஞானம் செயல்படுகின்றதென்றால் மனத்தூய்மை அடையப்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். இந்த நிலையில் கர்மம தேவைப்படாது. எனவே ஞானமும், கர்மமும் ஒரே நேரத்தில் செயல்பட முடியாது என்றிருக்கும்போது எப்படி இவையிரண்டையும் சேர்த்து செய்யமுடியும். கர்மயோகம் சாதனமென்றால், ஞானயோகம் சாத்தியமாக இருக்கும்போது இவையிரண்டும் சேர்ந்திருக்கவே முடியாது.
செயல் செய்வதற்கு செய்பவன், செய்யப்படும் பொருள், இடம், கருவிகள் போன்றவைகள் தேவைப்படுகிறது. இவைகளையே காரகம் என்று அழைக்கப்படுகிறது. ஞானம் இருமையை நீக்கக்கூடியது. காரகங்களை நீக்கி விடுகின்றது. எனவே காரகங்களை சார்ந்திருக்கின்ற கர்மமும் நீக்கப்படுகிறது. இப்படியிருக்கும்போது எப்படி இவையிரண்டையும் சேர்த்து செய்யமுடியும். இருளும், ஒளியும் சேராதிருப்பது போல ஞானமும், கர்மமும் சேராது.
ஞானம் வர்ணாசிரம பிரிவையே நீக்கிவிடுகிறது. ஆனால் வர்ணாசிரம அபிமானம் வைதிக கர்மங்களை செய்வதற்கு தகுதியுடையவனாக கருதப்படுகிறது. ஞானம் இந்த அபிமானத்தையே நீக்கிவிடுகிறது. இப்படி இருக்கும்போத எப்படி இடையிரண்டும் ஒன்றுசேர முடியும்.
ஞானம் மோட்சத்தையும் கொடுத்துவிட்டு மோட்ச விருப்பத்தையும் நீக்கிவிடுகிறது. ஆதனால் கர்மத்தை ஞானத்துடன் சேர்த்து செய்ய வேண்டிய அவசியமில்லை.
இன்னொரு வாதம். வேதம் முற்பகுதி கர்மத்தையும், பிற்பகுதி ஞானத்தையும் கூறியிருக்கிறது. எனவே வேதத்தை மதித்து இரண்டையும் செய்ய வேண்டும். இவையிரண்டையம் செய்ய வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடில்லை. ஒரேநேரத்தில் செய்ய முடியாது. முதலில் கர்மத்தை யோகமாக செய்து மனத்தூய்மையை அடைந்து ஞானயோகத்திற்கு தகுதியடைய வேண்டும்.
3. அனப்4யுபேத3;ய கர்மவாதம்
 
இந்த பூர்வபக்ஷியின் வாதம் வேதத்தின் முக்கிய உபதேசம் ஆத்மஞானம் கிடையாது என்பதாகும். இதற்கு நான்கு வகையான வாதத்தை வைக்கிறான் அவைகளை ஆசாரியார் நிராகரிக்கிறார்.
இந்த எதிர்வாதியின் வாதமானது, ஆதம்ஞானம் என்று ஒன்றே முக்கிய குறிக்கோளாக வேதத்தில் உபதேசிக்கப்படவில்லை. எங்கேயெல்லாம் ஞானம் பேசப்படுகிறதோ அங்கேயெல்லாம் கர்மத்தின் அங்கமாகவே பேசப்படுகிறது. ஞானமே எந்த பலனையும் தந்துவிடாது. ஆசாரியாரின் பதிலானது, வேதம் ஆதம்ஞானத்தையே முக்கிய குறிக்கோளாக உபதேசித்திருக்கிறது. ஆத்மஞானமே மோட்சத்தை அடைய உதவுகின்ற தனித்துவமுள்ள வழியாகும் என்று பலவிடங்களில் கூறியிருக்கிறது.
கர்மம் செய்துக்கொண்டே நூறு வருடங்கள் வாழ்வாயாக என்று வேதம் சொல்வதிலிருந்து கர்மம் எப்பொழுதும் மனித வாழ்வில் இருந்து கொண்டு இருக்கிறது. இதிலிருந்து சுத்தஞானம் இல்லையென்று உறுதியாகின்றது. இது எதிர்வாதியின் இன்னொரு வாதம். ஆசாரியார் பதில்: நீ வேதத்தை தவறாக புரிந்து கொண்டிருக்கிறாய். அதே வேதம் ஆசைகள் இருந்துக் கொண்டிருந்தால் கர்மம் செய்து கொண்டு வாழ்வாயாக என்று கூறியிருக்கிறது. அதாவது தேகாபிமானம் நீங்கும் போது கர்மம் தானாகவே செய்யாமல் விட்டுவிடுவோம்
ஜெய்மினி மகாரிஷியின் மீமாம்ஸ சூத்திரத்தின் அடிப்படையில் பார்க்கும் போது வேதம் கர்மத்தை மட்டுமே பேசுகிறது, ஞானத்தைப் பற்றி பேசவே இல்லை. இதற்கு ஆசாரியாரின் பதில்: ஜெய்மினி மகாரிஷி கர்மகாண்டத்தை மட்டுமே எடுத்துக் கொண்டு விளக்கம் எழுதியிருக்கிறார். அவரது குருவான வியாசபகவான் இவருக்கு முன்னமே ஆத்மஞானத்தை பற்றிய விளக்கத்தை தனது உத்தரமீமாம்ஸில் கூறியிருக்கிறார்.
வேதம் முழுவதுமே வாக்கியங்களால் எழுதப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு வாக்கியமும் ஒரு வினையை கொண்டிருக்கும். இந்த வினையானது எதாவது ஒரு செயலைக் குறிக்கின்றது. இதிலிருந்து வேதம் முழுவதும் கர்மத்தை மட்டும் பேசப்பட்டிருக்கிறது. ஞானத்தைப் பற்றி பேசவேயில்லை. ஆசாரியாரின் பதில்: எல்லா வினைச்சொற்களும் செயலைக் குறிக்காது. சில வினைச்சொற்கள் ஒரு உண்மையை கூறுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. உதாரணமாக “தத் த்வம் அஸி ”இ“அஹம் பிரம்மாஸ்மி” என்ற வாக்கியங்களில் உள்ள அஸி, அஸ்மி என்ற வினைச் சொற்கள் இருப்பதைக் காட்டிக்கொடுக்கிறது. எனவே உன்னுடை வாதம் தவறானது. கயிறு-பாம்பு உதாரணத்தில் கயிற்றைப் பற்றிய ஞானமே பயத்தைப் போக்குவதற்கு போதுமானது
3. முடிவுரை
 
ஆசாரியார் முகவுரையில் கூறியுள்ள நான்கு கருத்துக்களையே மீண்டும் கூறி முடிக்கிறார்.
அக்ஞானமே சம்சாரத்திற்கு காரணமாகும்.
 ஞானத்தினால் மட்டுமே மோட்சத்தை அடையமுடியும்.
மகாவாக்கிம் மட்டுமே ஞானத்தை கொடுக்கும்.
கர்மம் மோட்சத்தை கொடுக்கவே கொடுக்காது.
ஆகையினால் சித்தசுத்தி அடைந்து வேதாந்த சிரவணத்திற்கு தகுதியை அடைந்திருப்பவர்களுக்கு வேதாந்த மகாவாக்கியத்தின் மூலமாக அறிவைக் கொடுக்க விரும்புகிறேன். ஆறிவை அடைந்தவர்கள் முக்தியை அடைவதற்கும் உதவி செய்ய விரும்புகிறேன்.
---oo000oo---