jaga flash news

Saturday 3 August 2024

அமாவாசையான இன்று மறந்தும் இந்த பொருட்களை வாங்கிடாதீங்க..

 அமாவாசையான இன்று மறந்தும் இந்த பொருட்களை வாங்கிடாதீங்க.. இல்ல பாவம் வந்து சேரும்...
 இந்து மதத்தில் ஆடி அமாவாசை மிகவும் முக்கியமான மற்றும் சிறப்பான நாளாக கருதப்படுகிறது. என்ன தான் ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும், ஆடி அமாவாசை நாள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்நாளில் இதுவரை முன்னோர்களுக்கு திரி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், இந்த நாளில் அவற்றை செய்தால், பித்ரு தோஷம் நீக்கி, அவர்களின் ஆசி கிட்டும் மற்றும் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. அமாவாசை நாளில் தான் சனி பகவான் பிறந்தார். இந்த சனி பகவான் ஒருவருக்கு கர்ம பலன்களை அளிப்பவர். இந்த அமாவாசை நாளில் ஒருசில விதிகளும், ஒழுங்கு முறைகளும் உள்ளன. அவற்றை ஒருவர் தவறாமல் கடைப்பிடித்து வந்தால், வாழ்க்கை சிறக்கும். இந்த மருந்துகளை காபியுடன் சாப்பிடாதீர்கள்.. அமாவாசைக்கு கண்டிப்பாக சமைக்க வேண்டிய காய்கறிகள் என்னென்ன? அதுவும் பித்ருக்களுக்கு உரிய ஆடி அமாவாசை நாளில் ஒருசில பொருட்களை வாங்கினால், அது பாவத்தை சேர்ப்பதோடு, சனி பகவானின் கோபத்திற்கும் ஆளாக்கும். இப்போது ஆடி அமாவாசை நாளில் எந்த மாதிரியான பொருட்களை வாங்கக்கூடாது மற்றும் எந்த விஷயங்களை செய்யக்கூடாது என்பதைக் காண்போம்.
 1. ஆல்கஹால் அமாவாசை நாள் மிகவும் முக்கியமான நாளாக கருதப்படுவதால், இந்நாளில் ஆல்கஹால் வாங்குவது மற்றும் அதை குடிப்பதை தவிர்க்க வேண்டும் என வேதங்கள் கூறுகின்றன. மேலும் அமாவாசை நாள் சனி பகவானுடன் தொடர்புடையது என்பதால், எந்த வகையான ஆல்கஹாலை வாங்கினாலும், குடித்தாலும், அது வாழ்வில் எதிர்மறை ஆற்றலைக் கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. மேலும் இந்த தாக்கம் நீண்ட காலம் நீடித்திருக்கும். Advertisement 
2. தானியங்கள் அமாவாசை நாட்களில் வாங்கக்கூடாத மற்றொரு பொருள் தானியங்கள் மற்றும் மாவு பொருட்கள். அதுவும் ஆடி அமாவாசை நாளில் கோதுமை மற்றும் கோதுமை மாவை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வாங்கி அமாவாசை நாளில் சமைத்து உண்பது கெட்டதாக கருதப்படுகிறது. எனவே இவற்றை வாங்காதீர்கள். தினமும் பீட்ரூட் ஜூஸ் குடிக்கிறீங்களா? எச்சரிக்கை..! அதில் நன்மைகள் மட்டும் அல்ல தீமைகளும் இருக்கு..! 
.! 3. பூஜை பொருட்கள் ஆடி அமாவாசை நாளில் புனிதமான எந்த ஒரு பூஜை பொருட்களையும் வாங்கக்கூடாது. அதாவது, ஊதுபத்தி, சாம்பிராணி, பூக்கள், கற்பூரம் அல்லது தெய்வங்களுக்கு உரிய பிற பொருட்களை வாங்குவது நல்லதாக கருதப்படுவதில்லை. எனவே இப்படியான பொருட்களை வாங்காதீர்கள். 
4. துடைப்பம் அமாவாசை நாள் பித்ருக்களுக்கு உரிய நாளாகும். துடைப்பம் லட்சுமி தேவியுடன் தொடர்புடையதாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த அமாவாசை நாளில் துடைப்பத்தை வாங்கினால், லட்சுமி தேவியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். இதன் விளைவாக நிறைய பண பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். மேலும் வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளாலும் அவதிப்பட வேண்டியிருக்கும்.
 5. இறைச்சி அமாவாசை நாளில் எப்படி மது அருந்தக்கூடாதோ, அதேப் போல் அசைவ உணவுகளையும் வாங்கி உண்பது அசுபமாக கருதப்படுகிறது. மேலும் சனி பகவானுக்கு உரிய அமாவாசை நாளில் இறைச்சிகளை வாங்கி உட்கொண்டால், அது சனியின் கோபத்திற்கு ஆளாக்கி, வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த தவறையும் எக்காரணம் கொண்டும் செய்யாதீர்கள். .

No comments:

Post a Comment