jaga flash news

Saturday, 30 January 2021

ஷட்திலா ஏகாதசி எனும் மோட்ச ஏகாதசி..

ஷட்திலா ஏகாதசி எனும் மோட்ச ஏகாதசி! மாசி மாதத் தேய்பிறை ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி எனப்படும். அமாவாசை அல்லது பெளர்ணமிக்கு பதினோராம் நாள் ஏகாதசி என அழைக்கப்படுகிறது. ஏகாதசி ஒவ்வொரு மாதத்திலும் 2 முறை வரும். ஒன்று கிருஷ்ண பக்ஷத்திலும், மற்றொன்று சுக்லபக்ஷத்திலும் வரும். சுக்லபக்ஷம் என்பது அமாவாசையிலிருந்து பௌர்ணமிக்கு முனிதினம் வரை உள்ள 15 நாட்கள்.கிருஷ்ணபக்ஷம் என்பது பௌர்ணமியிலிருந்து அமாவாசைக்கு முன்தினம் வரையிலான 15 நாட்கள்.

The important aspect of Shattila Ekadashi

ஒருசமயம் தாலப்ய ரக்ஷி புலஸ்திய முனிவரிடம், முனிசிரேஷ்டரே! பூமியில் மக்கள் அறியாமையின் காரணமாக கொலை, கொள்ளை, அடுத்தவர் வளர்ச்சியைக் கண்டு பொறாமை கொள்ளுதல், போன்ற மகாபாபமான செயல்களில் ஈடுபடுகின்றனர். பின்னர் அதனை எண்ணி சிலர் வருந்துகின்றனர். அப்படிப்பட்டவர்கள் நரகத்திலிருந்து மீள வழி இருக்கிறதா என்று வினவினார். பிரம்மஹத்தி, பசுவைக் கொன்ற பாவம் அடுத்தவர் பொருட்களைத் திருடிய பாவம் போன்றவை தீர என்ன செய்ய வேண்டும்? தயவுசெய்து சொல்லுங்கள்!'' என வேண்டினார்.

புலஸ்தியர் பதில் சொல்லத் தொடங்கினார்: ''தால்ப்யரே! மாசி மாத ஆரம்பத்தில், பசுமாடு சாணமிடும் போது, அது தரையில் விழாதபடி கைகளில் ஏந்த வேண்டும். அதனுடன் எள் மற்றும் பருத்திக்கொட்டை ஆகிய வற்றைச் சேர்த்து, தூய்மையான ஓர் இடத்தில் (வீட்டுக்குள்ளேயே பூஜை அறையில் அல்லது மாட்டுக் கொட்டகையில் ஒரு பக்கமாக) வைக்க வேண்டும். அந்தக் கலவை, பௌர்ணமி வரை காயாமல் ஈரப் பதத்துடன் இருந்தால் நமது பாவம் அனைத்தும் விலகும்!'' என்ற புலஸ்தியர், ஷட்திலா ஏகாதசி பூஜை முறை யைப் பற்றியும் கூறினார்.

Thursday, 28 January 2021

பாலாரிஷ்டம்.....

பாலாரிஷ்டம்
பாலாரிஷ்டம் என்றால் பாலனுக்கு கேடு என்பதாம்.
இப்பாலாரிஷ்டம் என்பது சந்திரன் குழந்தை ஜெனனமானபோது ராசியிலோ அம்சத்திலோ தீய இல்லத்தை அடைந்திருந்தாலும் அல்லது நீச்சம் பெற்றிருந்தாலும் குழந்தைக்கு பாலாரிஷ்டம் ஏற்படும்.
12,வயதுவரை பாலாரிஷ்டம் என்றும்.
20,வயதுவரை எவ்வனாரிஷ்டம் என்றும்.
32,வயதுவரை அற்ப ஆயுள் எனவும்.
50,வயதுவரை மத்திமாயுள் எனவும்.
80,வயதுவரையில் தீர்க்காயுள் எனவும் கூறப்படுகிறது....

அன்னையவள் முற்பிறப்பில் ஈட்டிய தீவினை வயத்தால் ஆண்டு நான்கும்.
பின்னுமொரு நான்காண்டும் பிதுர் பாவத்தால் சிசு வினையின் பெருக்கால் பின்பு
மன்னு மொரு நான்காண்டும் அரிட்டமது சம்பவிக்கும் வருமுன் நான்காயச்
சென்றவயதின் பின்னர் வயதளவைக் கண்டுரைப்பார் தூயோரன்றே..
         (குப்புசுவாமியம்)
குழந்தை 4,வயது வரை தாய் செய்த கர்ம ஊழ்வினைப்பயனாலும்,
8,எட்டு வயதுக்குள் தந்தை செய்த கர்ம ஊழ்வினைப்பயனாலும்,
11,வயதுக்குள் தனது பூர்வ கர்மப்பயனாலும் தோஷம் உண்டாகும்.
இதன் பின்னர் வயதில் ஏற்படும் திசை புத்தி பலன்களைக்கொண்டு அரிட்டம் சொல்ல வேண்டும்...

பாலாரிஷ்டத்தை இரண்டு வகையாகப்பிரித்துக்கூறுவர்.
அசைவத்தியோ பாலாரிஷ்டம்,
அசைவத்தியோ பாலாரிஷ்டம் என்பது குழந்தை பிறந்தவுடனோ அல்லது,2-3மாதத்திற்குள்ளாக அன்றி1வருடத்திற்குள்ளாவது உண்டாவது.. இதற்கு விதிவிலக்கு யாதெனில் சுப கிரகங்கள் கேந்திரம் பெற்றிருப்பதுவே...

செளம்மிய பாலாரிஷ்டம் என்பது பிறந்தபோது உண்டான திசைமுடிவிற்குள் சம்பவிக்கும் தோஷம்...

குரு பகவான் ஆயுள் கர்த்தா என்பதால் குழந்தை பிறந்த போது, ஆட்சி, உச்சம், நட்பு, மூலத்திரிகோணம் போன்ற நல்ல அமைப்பில் இருந்தால் குழந்தைக்கு நீண்ட ஆயுள் உண்டு..

ஜோதிடர் ஒரு குழந்தைக்கு சாதகம் கணிப்பதற்கு முன் ஆயுள் நிர்ணயம் செய்ய இயலுமா?.அதனாலே பாலாரிஷ்டம் இல்லாத குழந்தைதானா என்பதை அறிந்த பின்னர் சாதகம் கணிப்பதே சிறந்தது.
(இதனாலே குழந்தைக்கு சாதகம் கணிப்பதென்பது 1வயது முதல்3வயதுவரை செய்வதில்லை பல ஜோதிடர்கள்)

இலக்கிணத்திற்கு,6,8,ல் பாவக்கிரகங்கள் இடம் பெற்றால் குழந்தை பிறந்தவுடன் மரணமென்றும். ஜெனன லக்கினத்தில் செவ்வாய் இருந்தாலும் அல்லது லக்ன த்திற்கு6,8,ல் சனியுடன் கூடியிருந்தாலும் குழந்தை இறக்கும்.
லக்ன த்திற்கு,68,ல் சந்திரனிருந்து சுபர்களாகிய புதன். குரு. சுக்கிரன் பார்வை பட்டால் எட்டாண்டுகள் இருக்கும் என்பதாம்...

எல்லா கிரகங்களும் ஸ்திர ராசியிலிருந்து சனி அம்சம்ஏறி இவை கேந்திர கோணமாகியிருந்தால் எண்ணிக்கை யில் அடங்காத வயதுடையவரென்க..
(இப்படி ஒரு அமைப்பு உண்டாவது கடினமே)
6,ல் புதனும்,7,ல்குருவும்,8,ல் சுக்கிரனும், தனித்தனி யாக இருந்தாலும். தனுசில் செவ்வாயும் மீனத்தில் சனி இருக்க மற்ற கிரகங்கள் எல்லாம் இவர்களுக்கிடையில் இருந்தால் நீண்ட ஆயுளுடன் நிறைய அதிசயங்களை நடத்திக்கொண்டிருப்பார்கள். 
லக்னத்திற்கு8,ல் பாவக்கிரகங்களிருப்பின் அக்குழந்தை ஏழுநாள் வரை இருக்கும். அதன்மேலும் உயிரோடிருப்பின் அக்குழந்தையின் கண் களுக்கு
தோஷம் உண்டாகும்.
லக்னத்தில் செவ்வாய் இருப்பினும்,6,8,12,ல் சனி செவ்வாய் இருப்பினும்.
லக்னம்,5,7,8,9,12,ஆகிய வீடுகளில் ஏதேனும் ஒன்றில் சூரி செவ் சனி இவர்களில் ஏதேனும் ஒருவருடன் அல்லது பலருடன் தேய்பிறை சந்திரன் கூடியிருக்கப்பிறந்த குழந்தைக்கு சரீர பீடையும் அரிட்டதோஷமும் உண்டாம்....

சாமுத்திரிகாலட்சணம்....

சாமுத்திரிகாலட்சணம்....
 தலைமயிர். நெற்றிபுருவம். கண்.காது. மூக்கு. வாய். பல்.முகம். கழுத்து. தோள். முன்கை. அகங்கை. விரல் கைவிரல். நகம். கொங்கை. கொங்கைக்கண். வயிறு.வயிற்றுரோமம். வயிற்று மடிப்பு. இடை. நாபி. குறி. தொடை. முழங்கால். கணைக்கால். புறங்கால். காற்பரடு குதிகால். கால்விரல் அதன்நகம். உள்ளங்கால் என்பனவாம்.....

உத்தமபுருஷலட்சணம்....
ஒருஉத்தமபுருஷனுக்குள்ள உறுப்புகள். உன்னதமான அவயங்கள்..6
நீண்ட உறுப்புகள்..5
சிறிய உறுப்புகள்..5
குறுகிய உறுப்புகள்..4
அகன்ற உறுப்புகள்..2
சிவந்த உறுப்புகள்..7
ஆழ்ந்த உறுப்புகள்..3....
ஆக முப்பத்திரண்டாம் அவற்றின் இலக்கணங்கள்
சுருக்கமாக....
வயிறு. தோள்.நெற்றி. நாசி. மார்பு. கையடி. இவை ஆறும் உயர்ந்திருப்பின் அவன் இந்திரபோகத்துடன் இருப்பான்.

கண். கபோலம். செங்கை. மூக்கு. முலை. மார்பு.இவை ஐந்தும் நீண்டிருப்பின் அவன் நன்மையடைவான்...

சிகை. சருமம். விரற்கணு. நகம். பற்கள். இவை ஐந்தும் சிறியதாயிருப்பின் அவன் தீர்க்காயுள் உள்ளவனாவான்...

கோசம். கணைக்கால். நாக்கு. முதுகு. இவைநான்கும் குறுகியிருப்பின் அவன் செல்வமுள்ளவனாவான்...

சிரம். நெற்றி. இவையிரண்டும் அகன்றிருப்பின் அவன் மிகுந்த நன்மையுடையவனாவான்...

கண்கள். உள்ளங்கால். உள்ளங்கை. இதழ்கடை. அண்ணம். நாக்கு. நகம். இவை ஏழும் சிவந்திருப்பின் அவன் மிக்க இன்பமுடையவனாவான்...

இதழ். ஓசை. நாபி. இம்மூன்றும் ஆழ்ந்திருப்பின் அவன் மேலான நன்மைகளடைபவனாவான்...
இவைகளை ஒருவரின் இலக்கிணத்தைக்கொண்டு அறிலாம்... 

இருபத்தேழு நட்சத்திரங்களுக்குறிய கோவில்

ஜோதிடவிதிப்படி,27,நட்சத்திரங்கள். இந்த இருபத்தேழு நட்சத்திரங்களுக்குறிய கோவில்களை அறியலாம்....

அஸ்வினி...
ஶ்ரீ பவ ஔஷதீஸ்வரர் திருக்கோவில்.. ஊர்திருத்துறைப்பூண்டி...

பரணி...
ஶ்ரீஅக்னீஸ்வரர் திருக்கோவில்
ஊர்நல்லாடை....

கிருத்திகை...
ஶ்ரீகாத்ர சுந்தரேஸ்வரர் திருக்கோவில்...
ஊர் கஞ்சனாகரம்...

ரோகிணி...
ஶ்ரீபாண்டவதூத கிருஷ்ணன் கோவில்...
ஊர் காஞ்சிபுரம்...

மிருகசீரிடம்...
ஶ்ரீஆதி நாராயணப்பெருமாள் திருக்கோவில்...
ஊர் எண்கல் கொரடாச்சேரி...

திருஆதிரை...
ஶ்ரீஅபய வரதீஸ்வரர் திருக்கோவில்...
ஊர் அதிராம்பட்டினம்...

புனர்பூசம்...
ஶ்ரீஆதிதீஸ்வரர் திருக்கோவில்..
ஊர் வாணியம்பாடி...

பூசம்...
ஶ்ரீ ஆட்சயபுரீஸ்வரர் திருக்கோயில்...
ஊர் விளங்குளம்...

ஆயில்யம்...
ஶ்ரீகற்கடகேஸ்வரர் திருக்கோயில்...
ஊர் திருந்தேவன்குடி...

மகம்...
ஶ்ரீமகாலிங்கசுவாமி திருக்கோயில்...
ஊர் தவசிமடை...

பூரம்...
ஶ்ரீ ஹரிதீர்த்தேஸ்வரர்திருக்கோயில்...
ஊர் திருவரங்குளம்...

உத்திரம்...
ஶ்ரீமாங்கல்யேஸ்வரர் திருக்கோயில்...
ஊர் இடையாற்றுமங்கலம்...

ஹஸ்தம்...
ஶ்ரீகிருபா கூபாரேஸ்வரர் திருக்கோயில்...
ஊர்கோமல்...

சித்திரை...
ஶ்ரீ சித்திர ரத வல்லபப்பெருமாள் திருக்கோயில்...
ஊர் குருவித்துறை...

சுவாதி...
ஶ்ரீ தாந்தீஸ்வரர் ஶ்ரீசுந்தராஜப்பெருமாள் திருக்கோயில்...
ஊர் சித்துக்காடு...

விசாகம்...
ஶ்ரீதிருமலை முருகன் திருக்கோயில் ...
ஊர் திருமலை செங்கோட்டை...

அனுஷம்...
ஶ்ரீலட்ஷ்மிபுரீஸ்வரர்திருக்கோயில்...
ஊர்திருநின்றவூர்....

கேட்டை...
ஶ்ரீவரதராஜப்பெருமாள் பசுபதி திருக்கோயில்...
ஊர் தஞ்சாவூர்...

மூலம்...
ஶ்ரீசிங்கீஸ்வரர் திருக்கோயில்..
ஊர்மப்பேடு சென்னை...

பூராடம்...
ஶ்ரீஆகாசபுரீஸ்வரர் திருக்கோயில்...
ஊர் கடுவெளி திருவையாறு...

உத்திராடம்...
ஶ்ரீசுந்தரேஸ்வரர் திருக்கோயில்
ஊர் கீழப்பூங்குடி...

திருவோணம்...
ஶ்ரீ பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்...
ஊர் காவேரிப்பாக்கம்....

அவிட்டம்...
ஶ்ரீ பிரம்மஞானபுரீஸ்வரர் திருக்கோயில்...
ஊர் கொறுக்கை பட்டீஸ்வரம்..

சதயம்...
ஶ்ரீ அக்னிஸ்வரர் திருக்கோவில்
ஊர் திருப்புகலூர்..நன்னிலம்..

பூரட்டாதி...
ஶ்ரீதிருஆனேஸ்வரர் திருக்கோயில்...
ஊர் ரெங்கநாதபுரம்..தஞ்சாவூர்

உத்திரட்டாதி....
ஶ்ரீசகஸ்ரலட்மீஸ்வரர் திருக்கோயில்...
ஊர் தீபத்தூர் ஆவுடையார்கோயில்...

ரேவதி...
ஶ்ரீகைலாசநாதர் திருக்கோயில்...
ஊர் காருகுடி திருச்சி....

அன்பர்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் அவரவர் நட்சத்திரங்களுக்கான திருக்கோவில் சென்றுவழிபாடு செய்துவர நன்மைகள் உண்டாகும்....


பக்தி என்பது.......................

பக்தி என்பது.......................

சூரியன் வலுவாய் உள்ளவர்களுக்கு அமைதியாய் இருக்கும்......
சந்திரன் வலுவாய் உள்ளவர்களுக்கு மனதளவில் இருக்கும்......
செவ்வாய் வலுவாய் உள்ளவர்களுக்கு ஆவேசமாய் இருக்கும்...........
புதன் வலுவாய் உள்ளவர்களுக்கு
மெளனமாய் இருக்கும்...........
குரு வலுவாய் உள்ளவர்களுக்கு
தேடலாய் இருக்கும்........
சுக்கிரன் வலுவாய் உள்ளவர்களுக்கு
ஆடம்பரமாய் இருக்கும்........
சனி வலுவாய் உள்ளவர்களுக்கு
சஞ்சலமாய் இருக்கும்...........
இராகு வலுவாய் உள்ளவர்களுக்கு
வீம்பாய் இருக்கும்..............
கேது வலுவாய் உள்ளவர்களுக்கு
தெளிவுபோல இருக்கும்.......
 
மொத்தத்தில் பக்தி உணரும் வரை
வெளியேயும் உணர்ந்தபின் உள்ளேயும் இருக்கும்.............

உணரவைக்கிறேன் என்பவர் மெய்யுடலாய் இருப்பார் குரு போல
உணர்ந்தேன் என்பவர் பொய்யுடலாய் இருப்பார் கேது போல

ஞானம் என்பது...............

ஞானம் என்பது..................

சூரியனைப் போல்
தன்னொளியாய் பேதமற்றும்
சந்திரனைப்போல்
பிரதிபலிப்பாய் குளிர்வுற்றும்............
செவ்வாயைப் போல்
உள் சிவந்து வலிவுற்றும்................
புதனைப் போல்
ஆய்ந்து தெளிவுற்றும்...........
குருவைப் போல்
மெளனமாய் பொலிவுற்றும்........
சுக்கிரனைப் போல்
அக உலகில் அழகுற்றும்............
சனியைப் போல்
சாதனையில் சிறப்புற்றும்..........
ராகுவைப் போல்
நீண்ட காலம் நிலைபெற்றும்
கேதுவைப் போல
தன்னை த் தான் அறிய முற்ப்பட்டதும்
ஆகும்........,

மொத்தத்தில் புறத்தில் தேடினாலும் ஓடினாலும் ஆடினாலும் அடங்கினாலும் சாதித்தாலும் 
சாதனை செய்தாலும் தெளிவதல்ல

ஞானம்.........
தனனுள் தானடங்கி தனக்கென்றில்லாது தவ நிலையில்
தானிருத்தலே தவிர
யாராலும் தரப்படுவதுமில்லை பெறப்படுவதுமில்லை............

உணர்வோம் தெளிவோம்..........
அன்புடன்; பரமானந்தன்...ௐ

தேடல் என்பது..............

தேடல் என்பது..............

சூரியன் வலுவாய் இருப்பின் பகிரங்கமாயும்.
சந்திரன் வலுவாய் இருப்பின்
பதிவிசாகவும்.
செவ்வாய் வலுவாய் இருப்பின்
வேகமாகவும்.
புதன் வலுவாய் இருப்பின்
விவேகமாகவும்.
குரு வலுவாய் இருப்பின்
பக்தியாகவும்.
சுக்கிரன் வலுவாய் இருப்பின்
அழகாகவும்.
சனி வலுவாய் இருப்பின்
சாதனை யாகவும்.
ராகு வலுவாய் இருப்பின்
பரப்பொருளாகவும்.
கேது வலுவாய் இருப்பின்
அகப்பொருளாகவும் இருக்கும்..........

யார் எதைத்தேடினாலும் அது அவர்களிடம் சேர்வதற்கு அவரவர்களின் ஊள் வினை உள்ளார்த்தமாகவே இருக்கும்.........
அந்த ஊள் வினைப்பயனே
அவரவர்களுக்கு தேவையானதை அவர்கள் தேடாமலே கொண்டு சேர்க்கும்.........

பின் எதற்காக மாந்தர்களே நாம் அனைவரும் காலையில் துவங்கி இரவு வரை இப்படி ஓடிக்கொண்டிருக்கின்றோம்?.......

கூடல் (சேர்தல்) என்பது......

கூடல் (சேர்தல்) என்பது......

சூரியன் வலுவாய் இருப்பின் பகிரங்கமாகவும்.
சந்திரன் வலுவாய் இருப்பின்
பாசமாகவும்.
செவ்வாய் வலுவாய் இருப்பின்
உரிமையாகவும்.
புதன் வலுவாய் இருப்பின்
உறவாகவும்.
குரு வலுவாய் இருப்பின்
சுயநலமாகவும்.
சுக்கிரன் வலுவாய் இருப்பின்
விட்டுக்கொடுத்தலாகவும்.
சனி வலுவாய் இருப்பின்
மேன்மையாக வரும்.
ராகு வலுவாய் இருப்பின்
ரகசியமாகவும்.
கேது வலுவாய் இருப்பின்
ஆனந்தமாவும் இருக்கும்...........

எது எப்படியாயினும் நல்லோருடன் கூடி நலமோடு வாழ்தலே அன்றி
பொல்லாருடன் கூடி புறங்கதை பேசி திரியாமல்
உன்னுடன் கூடி உயர்வான உள் உணர்ந்து ஊமையாய் வாழ்தலே உண்மையான கூடல் (சேர்தல்)........


சக்தி என்பது..............

சக்தி என்பது...............

சூரியன் வலுவாய் இருப்பின்
தலைமை யேற்று மற்றவரை பணியவைக்கும்.
சந்திரன் வலுவாய் இருப்பின்
அன்பால் மற்றவரை அடிமையாக்கும்.
செவ்வாய் வலுவாய் இருப்பின்
அதிகாரத்தால் அடி பணிய வைக்கும்.
புதன் வலுவாய் இருப்பின்
அறிவால் அடுத்தவரை அதிர வைக்கும்.
குரு வலுவாய் இருப்பின்
சாமார்த்திய பேச்சால் தன் பக்கம் சாய வைக்கும்.
சுக்கிரன் வலுவாய் இருப்பின்
அலங்கார வார்த்தை ஜாலத்தால் அடுத்தவரை அதிர வைக்கும்.
சனி வலுவாய் இருப்பின்
சலியாத மனத்தால் மற்றவரை
சட்டென்று அடிமையாக்கும்.
ராகு வலுவாய் இருப்பின்
தன் பின்புலத்தால் மற்றவரை அடிமையாக்கும்.
கேது வலுவாய் இருப்பின்
தன் ஆன்மீக பலத்தால் அடுத்தவரை
அடிமையாக்கும்..........

யார் யாரை யாரால் எப்படி அடிமை கொண்டாலும்
உள்ளார்ந்த அப்பழுக்கற்ற அன்பினால் மட்டுமே அனைவரையும்
ஏன் ஆண்டவனையும் கூட அடிபணிய வைக்க இயலும்..............

எந்த எதிர்பார்ப்பும் அற்ற ஆத்மார்த்தமான அன்பு ஒன்றே அனைவரையும் நமக்கு அடிமையாக்கும்.....,...

அடிபணிந்து அடிபணிய வைக்க அன்பால் மட்டுமே இயலும்.......

சுகம் என்பது..........

சுகம் என்பது.................

சூரியன் வலுவாய் இருப்பின்
பிறரால் இருக்கும்.....

சந்திரன் வலுவாய் இருப்பின்
பெண்மையால் இருக்கும்......

செவ்வாய் வலுவாய் இருப்பின்
ஆற்றலாய் இருக்கும்.........

புதன் வலுவாய் இருப்பின்
அறிவால் இருக்கும்..........

குரு வலுவாய் இருப்பின்
குணத்தால் இருக்கும்..........

சுக்கிரன் வலுவாய் இருப்பின்
அழகினால் இருக்கும்...........

சனி வலுவாய் இருப்பின்
உழைப்பினால் இருக்கும்........

ராகு வலுவாய் இருப்பின்
பேராசையில் இருக்கும்............

கேது வலுவாய் இருப்பின்
இழப்பதால் இருக்கும்...............

ஆயினும் அத்ம ஞானம் என்னும்
ஆன்ம எண்ணத்தினால் உண்டாகும்
அளப்பறிய பேரானந்த சுகமே
கிடைத்திட நாம் மனதளவில் வலுவான நிலையில் மெளனத்துடன் இருத்தல் வேண்டும்........