jaga flash news

Wednesday 17 April 2024

வாரிசு அல்லாதோருக்கும் உயிலில் சொத்துக்களை எழுதி வைக்க முடியுமா?

வாரிசு அல்லாதோருக்கும் உயிலில் சொத்துக்களை எழுதி வைக்க முடியுமா? அப்படியா?
பத்திரப்பதிவு, நிலம், வீடு, சொத்து விவகாரங்களில் அடிக்கடி பயன்படுத்தும் சொல் உயில்.. இதற்கான அர்த்தம் தெரியுமா? உயில் எழுத வேண்டுமானால் அதற்கான வழிமுறைகள் என்னென்ன தெரியுமா?


ஒருவர் தன்னுடைய சொத்துக்களை தன் வாழ்நாளுக்கு பிறகு, தன்னுடைய உறவினர்களுக்கு சேரும்படி எழுதி வைக்கும் பத்திரமே "உயில் பத்திரம்" ஆகும்..


Are these the Major Points of preparing a Will document and Importance of Will Settlement
ஆனால் சிலர், உயிலும், செட்டில்மென்ட் பத்திரமும் ஒன்றுதான் என நினைக்கிறார்கள். ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துகளை, தனக்கு பிறகு இன்னொருவருக்கு எழுதி வைப்பது உயில்.. இது முழுக்க முழுக்க சுயநினைவுடன் மட்டுமே எழுத முடியும்.. தன்னுடைய சொத்துக்களை அவரது விருப்பத்தின் அடிப்படையில், வாரிசுகளுக்கு அவரது விருப்பப்படி, பிரித்து எழுதி வைக்கப்படுவதுதான் செட்டில்மென்டு பத்திரம் ஆகும்.


விதிமுறை என்ன: அதேபோல, உயில்களை வாரிசுகளுக்கு மட்டுமே எழுதி வைக்க வேண்டும் என்பதில்லை.. தனக்கு விருப்பமானவர்கள் அல்லது டிரஸ்ட்களுக்கும் எழுதி வைக்கலாம்..

ஒருவேளை வாரிசு இருந்தும், அவர்களை தவிர்த்து பிறருக்கும் எழுதி வைக்கலாம். அப்படி எழுதி வைத்தால் வாரிசுகளால் அதை கேள்வி கேட்கவோ, எதிர்க்கவோ முடியாது. அதுக்காக, வாரிசுகளுக்கு எழுதி வைத்தால், அந்த சொத்து மனைவிக்கு கிடைக்கும் என்றும் அர்த்தம் கிடையாது.

நாமினி: அவசியமிருந்தால், வாரிசுக்கு எழுதி வைக்கும்போது, மனைவியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து உயில் எழுதினால் சிறந்தது.. அல்லது வாரிசுதாரரையே நாமினியாக நியமித்துவிட்டால், வருங்காலத்தில் சிக்கல்கள் எதுவும் இருக்காது.


உயில் எப்போது செல்லுபடியாகிறது? எதற்காக சுயநினைவுடன் இருக்கும்போதே உயில் எழுதப்படுகிறது? உயில் எழுதியே ஆக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாவிட்டாலும், அந்த சொத்துக்களால், பிற்காலத்தில், குடும்பத்தில் ஒருவருக்கும் எந்தவிதமான பிரச்சனையும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, முன்கூட்டியே எழுதி வைக்க நேரிடுகிறது. எனினும், அவரது மரணத்துக்கு பிறகே இது உயிலாக கருதப்படும்.

சுயநினைவு: குடும்பங்கள் பிரியவும், சிதையவும், இந்த சொத்துக்கள்தான் பல இடங்களில் முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. ஒருவேளை சொத்தை எழுதி வைக்காமல், சம்பந்தப்பட்டவர் இறக்க நேரிடுமானால்,சொத்தை பிரித்துக்கொள்வதிலும் பல தகராறுகள், வன்முறைகள் வெடித்துவிடுகின்றன. இது தொடர்பாக நீதிமன்றத்தையே நாடினாலும்கூட, உடனடியாக தீர்வை எதிர்பார்க்க முடியாது. எனவேதான், ஒருவர் உயிருடன் இருக்கும்போதே, சுயநினைவுடன் சொத்தை பிரித்து எழுதி வைத்து விடுவார்கள்.


திமுக, தேர்தல் பத்திரம், டெஸ்லா கார்.. பிரதமர் மோடி பேட்டியில் பகிர்ந்த 3 விஷயங்கள் திமுக, தேர்தல் பத்திரம், டெஸ்லா கார்.. பிரதமர் மோடி பேட்டியில் பகிர்ந்த 3 விஷயங்கள்
ஒருவர் தான் சொந்தமாக சம்பாதித்ததை, தனக்குரிய சொத்துக்களை மட்டுமே உயிலாக எழுதி வைக்க முடியும்.. பூர்வீக சொத்தாக இருந்தாலும் அதை யாருக்கும் உயிலாக எழுத முடியாது, பிரித்து எழுதி வைக்கவும் முடியாது..

உயில் எழுதும் முறை: சொத்தை, யாருக்கு, எவ்வளவு தருவது என தீவிரமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். இதில் 2 சாட்சி கையெழுத்துக்கள் முக்கியம். ஆனால் சாட்சி கையெழுத்து போடுபவர்கள், உயிலுக்கு சம்பந்தம் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். உயிலில் டாக்டர் மற்றும் வக்கீல்களின் சாட்சி கையெழுத்து அவசியம்.

நீங்கள் எழுதிய உயிலை ரத்து செய்யலாம், திருத்தம் செய்யலாம்.. இதற்கு முத்திரைத்தாள் தேவைப்படாது.. சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்து, பதிவு செய்துகொள்ளலாம்.. அரசு நிர்ணயம் செய்துள்ள பதிவு தொகையை மட்டும் செலுத்தி, பதிவு செய்துகொள்ளலாம்.


No comments:

Post a Comment