jaga flash news

Friday 5 April 2024

கூனைப்பூ...


கூனைப்பூவில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் ஒரு அலசல்…

HIGHLIGHTS
Medical benefits of artichoke
Medical benefits of artichoke




கூனைப்பூவில் சுகாதார நலன்கள் மற்றும் மருத்துவ பயன்பாடு அதிகமாக உள்ளன. நிறைய மக்கள் கூனைப்பூவின் இதய பகுதியைத்தான் அதிகமாக விரும்புகிறார்கள். கூனைப்பூவின் இலைகள் இதயத்திற்கு மிகவும் நன்மையை வழங்க கூடியதாக இருக்கிறது.

கூனைப்பூவின் மருத்துவ குணங்கள்:

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம்:

மற்ற காய்கறிகளை ஒப்பிட்டு பார்க்கும் போது கூனைப்பூவில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறது. ஆய்வு செய்யப்பட்டதில் கூனைப்பூ , நோய் எதிர்ப்பு சக்தி சார்ந்த உணவில் ஏழாம் இடத்தை பிடித்திருக்கிறது. கூனைப்பூவில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகளில் சில quercertin, rutin,  anthocyanins, cynarin, luteolin, மற்றும் silymarin உள்ளன.

புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சை:

கூனைப்பூ இலையின் சாறுகள் அப்போப்டொசிஸை தூண்டி செல்களை இறக்க செய்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும் புற்றுநோய் செல்கள் வளருவதையும் தடுக்கிறது.

புரோஸ்டேட் புற்றுநோய், லுகேமியா மற்றும் மார்பக புற்றுநோய் உட்பட புற்றுநோய்களையும் வராமல் தடுக்கிறது. கூனைப்பூவில் அதிகமாக ஃபிலேவொனாய்ட்ஸ் நிறைந்துள்ளதால் மார்பக புற்றுநோய் ஆபத்தை குறைக்கிறது என்று இத்தாலிய ஆய்வில் கண்டறியப்பட்டது.

செரிமானம்:

செரிமானம் நன்றாக நடக்க கூனைப்பூ மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. பித்தப்பை செயல்பாடு அதிகரிக்கிறது. அதுமட்டுமல்லாது கல்லீரலுக்கு பெரும் நன்மை அளிக்கிறது.

கொழுப்பு குறைப்பு:

கூனைப்பூ இலைகளில்  தேவையான பொருட்கள் HMG-CoA ரிடக்டேஸ் தடுப்பதன் மூலம் கொழுப்பை குறைக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. நல்ல கொழுப்பு (HDL) உயர்த்துகிறது.  கெட்ட கொழுப்பை (LDL) குறைக்கிறது.

நார்ச் சத்து:

ஒரு கப் கொடிமுந்திரியில்  உள்ள சத்தை விட நடுத்தர கூனைப்பூவில் நார் சத்து அதிகமாக உள்ளது.

 



No comments:

Post a Comment