jaga flash news

Tuesday, 9 October 2012

13 ஆம் எண்


வெளிநாட்டவர்கள் ஆவிகளுக்குரிய எண்ணாக 13 கருதுகிறார்கள். துர் ஆவிகளின் எண் 13. அந்த எண்ணிற்குரிய வீடுகளுக்கு ஆவிகள் வருகின்றன என்று கருதுகிறார்கள்


ஆனால் நமது இந்திய ஜோதிடத்தில் 13ஆம் எண் அவ்வளவு ஒன்றும் மோசமானது அல்ல.

1 என்றால் சூரியன், 3 என்றால் குரு, ஒன்றும் மூன்றும் சேர்ந்து உருவாகக் கூடிய முடிவு 4. அதனால் அது ஒன்றும் அவ்வளவு மோசமான எண் கிடையாது.

உள் மனத்தில் இருக்கும் விஷயங்களை வெளிக்கொண்டு வரும் எண்தான் 13. 13ஆம் தேதியில் பிறந்தவர்கள் கொஞ்சம் அதிக ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.

ஆவிகளுடன் பேசுவது போன்றவற்றை செய்வார்கள். கோயிலுக்குச் செல்வதை விட, சித்தர்களின் மடங்களுக்குச் செல்வது, நள்ளிரவில் தனியாகப் போய் அமர்ந்து கொண்ட ஆவிகளுடன் பேசுவது போன்ற முயற்சிகள் செய்வார்கள்.

மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அதை அப்படியே ஒப்புக் கொள்ளாமல், அதனை அறிவுக்கு உட்படுத்தி, அது ஏன் எப்படி என்று தெளிவுப்படுத்திக் கொள்வார்கள்.

எனவே 13 கெட்ட எண் என்று சொல்லிவிட முடியாது. ஒரு சில நாடுகளில் அப்படி ஒரு நம்பிக்கை நிலவுகிறது. அவ்வளவுதான்.
13 ஆம் எண் பயங்கரமானதா? ஜோதிடம் என்ன கூறுகிறது?

No comments:

Post a Comment