jaga flash news

Sunday, 14 October 2012

மலர்களை பூஜைக்கு வைத்திருக்கும் கால அளவு


மலர்களை பூஜைக்கு வைத்திருக்கும் கால அளவு

<தாமரை ஏழு நாள்கள், அரளி மூன்று நாள், வில்வம் ஆறுமாதம், துளசி ஒரு வருஷம் வைத்து பூஜிக்கலாம் ஒருமுறை அர்ச்சனை செய்த துளசி, வில்வம், கரு ஊமத்தை, நீலோத்பலம் ஆகியவற்றைப் பொன் மலரைப் போல் கழுவிச் சாற்றலாம் என்று சிவபூஜா பத்ததி என்ற நூல் கூறுகிறது. பறித்தபின் மலர்ந்த பூ, பழம் பூ, எருக்கு மற்றும் ஆமணக்கு இலையில் கட்டி வைத்த பூ, கட்டிய ஆடையிலும் கையிலும் வைத்த பூ, கீழே உதிர்ந்த பூ, இடுப்புக்குக் கீழ் உள்ள உறுப்புகளில் பட்ட பூ, புழுகடித்த பூ, சிலந்தி மற்றும் பறவைகள் எச்சமிட்ட பூ, மயிர் பட்ட பூ, இரவில் எடுத்த பூ, நீரில் மூழ்கிய பூ, அசுத்தரால் எடுக்கப்பட்ட பூ முதலானவை பூஜைக்கு ஆகாதவை.

No comments:

Post a Comment