தபால் துறையில் 160 ஆண்டாக புழக்கத்திலிருந்த தந்தி சேவை, வரும் ஜூலை 15 முதல் நிறுத்தப்படுகிறது. இதற்கு பதிலாக, "இ-போஸ்ட்" எனப்படும் மின்னணு தந்தி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் விடுத்த செய்திக் குறிப்பு:
"இ-போஸ்ட்" முறையில், 'ஏ4 ஷீட் சைஸ்' அளவிலான செய்திகளுக்கு, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். தமிழகம் முழுவதும், கணினி உள்கட்டமைப்பு பெற்ற அனைத்து தபால் நிலையங்களிலும், "இ-போஸ்ட்" தந்தி சேவை வழங்கப்படும்.
"இ-மெயில்" போல செயல்படும் இம்முறையில், கையால் எழுதப்பட்ட தகவல் அல்லது, "பிரின்ட்" செய்யப்பட்ட தகவல், "ஸ்கேன்" செய்து, கணினி மூலம், தகவல் தருபவர் குறிப்பிடும் இடத்தில் உள்ள தபால் நிலையத்திற்கு அனுப்பப்படும். பின், சம்பந்தப்பட்ட இடத்திலுள்ள தபால்காரர் மூலம், அத்தகவல் உரியவரின் இடத்திற்கு கொண்டு சேர்க்கப்படும்.
பன்னாட்டு நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கு, "இ-போஸ்ட் கார்ப்பரேட்" என்ற சிறப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 9,999 முகவரிகளுக்கு, ஒரே நேரத்தில் தகவலை அனுப்ப முடியும். "ஏ4 ஷீட் சைஸ்" அளவிலான ஒரு தகவலுக்கு, ஆறு ரூபாய் வசூலிக்கப்படும். அதே தகவலை, 50க்கும் மேற்பட்டவர்களுக்கு அனுப்ப ஒரு தகவலுக்கு ஐந்து ரூபாய் வசூலிக்கப்படும்.
No comments:
Post a Comment