இந்தியாவில் இயங்கும் ட்ராய்
அமைப்பின் உத்தரவுப்படி, பி.எஸ்.என்.எல். தன் ப்ரீ பெய்ட் இணைப்புகளுக்கு,
வெளிநாட்டு எண்களை அழைத்துப் பேசும் வசதியை தடை செய்திருப்பதாகத் தகவல்
வெளியாகியுள்ளது.
ட்ராய் விதிகளின்படி, தடை செய்யப்பட்ட இந்த வசதி, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும், எஸ்.எம்.எஸ். மூலம் அறிவிக்கப்பட வேண்டும். ஆனால், பி.எஸ்.என்.எல். அவ்வாறு அறிவிக்காததால், பலரும் குழப்பத்திற்கு ஆளாகினார்கள். இறுதியில், வெளிநாட்டு எண்களை அழைக்கும் வசதியை மீண்டும் பெற, எந்த வழியைக் கையாள வேண்டும் எனத் தெரிந்து கொண்டு, அவ்வழியின் மூலம், ஐ.எஸ்.டி. அழைப்புகளை மேற்கொள்ளும் வசதி மீண்டும் பெறப்பட்டது.
எந்த சிம் கார்டுக்கு அந்த அழைப்பு வசதி வேண்டுமோ, அதிலிருந்து 53733 என்ற எண்ணுக்கு ACT ISD GÚ (Activate ISD) எஸ்.எம்.எஸ். அனுப்பினால், உடனே நம் விண்ணப்பம் பெறப்பட்டதாகவும், முடிவு உடனே அறிவிக்கப்படும் எனவும் எஸ்.எம்.எஸ். பெறப்பட்டது. சில நிமிடங்கள் கழித்து, ஐ.எஸ்.டி. அழைப்பு வசதி தரப்பட்டுள்ளதாக எஸ்.எம்.எஸ். கிடைத்தது. இந்த வசதியை வேண்டாம் என எண்ணுபவர்கள், மீண்டும் ‘DEACT ISD’ என அதே எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பலாம்.

sir ungal thagavaluku nandri
ReplyDelete