தெரு குத்தில் வீடு அமைவது நல்லதா கெடுதலா?
வீடுகள் வரிசையாகவும் பக்கம் பக்கத்தில் ஒரே சீராகவும் அதே போல எதிர்திசையிலும் வீடுகள் அழகாகவும், வரிசையாகவும் அமைவதே நல்லது. ஆனால் சில இடங்களில் வீட்டிற்கு நேர் ஏதிராக தெருக்கள் செல்வதை காணலாம். அதனால் ஏதாவது பிரச்சனைகள் வருமோ, தெருகுத்து வீடாகி விடுமோ என்ற பயம் எல்லோருக்குமே உண்டு. அதனால் அப்படி அமையும் தெருக்குத்து வீடுகளின் வாகனங்களில் பிள்ளையாரை வைத்து தினமும் பூஜை செய்வார்கள். அதுபோல அந்த தெரு முடியும் இடத்திலும் பிள்ளையாரை வைத்து கோயில் கட்டுவதும் உண்டு. இப்படி தெரு குத்தில் வீடு அமைவது நல்லதா கெட்டதா என வாஸ்து ரீதியாக ஆராயும் போது ஒவ்வொரு திசைக்கும் ஒவ்வொரு பலன் உண்டு.
பொதுவாக உச்ச ஸ்தானத்தில் ஏற்படக் கூடிய தெருகுத்து நன்மையை தரும். நீச்ச ஸ்தானத்தில் மீது ஏற்படும் தெரு குத்து கெடுதியை தரும். அதாவது
வடக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு திசையின் மீது ஏற்பட கூடிய தெரு குத்து நன்மையை செய்யும். அதுவே வடமேற்கு திசையில் தெருக்குத்து ஏற்பட்டால் அது கெடுதியை தரும்.
கிழக்கு பார்த்த வீட்டிற்கு வடகிழக்கு பகுதியில் தெரு குத்து ஏற்பட்டால் அது கெடுதியை செய்யாது. அதுவே தென் கிழக்கு பகுதியில் தெரு குத்து ஏற்பட்டால் அதனால் கெடுபலன்கள் ஏற்படும்.
தெற்கு பார்த்த வீட்டிற்கு தென்கிழக்கு பகுதியில் ஏற்பட கூடி தெரு குத்து கெடுதியை செய்யாது. அதுவே தென்மேற்கு பகுதியில் தெரு குத்து ஏற்பட்டால் கடுமையான பாதிப்பை தரும்.
மேற்கு பார்த்த வீட்டிற்கு வடமேற்கு பகுதியில் ஏற்பட கூடிய தெரு குத்து கெடுதியை செய்யாது அதுவே தென்மேற்கு பகுதியில் ஏற்பட கூடிய தெரு குத்து கெடுபலனை உண்டாக்கும்.
No comments:
Post a Comment