jaga flash news

Tuesday 5 November 2013

வெளிநாட்டு பயண யோகம்

வெளிநாட்டு பயண யோகம்



பாடத்திற்கு இந்த தலைப்பு வைப்பதற்கு ஒன்றுக்கு இரண்டு முறையோசிக்க வேண்டி இருந்ததுவெளி நாட்டுப் பயணம் என்பதுயோகமா அல்லது தோஷமா என்றுதாய் தந்தைசகோதரசகோதரிகள்உற்றார் உறவினர்நண்பர்கள் இப்படி பலரைப் பிரியவேண்டியதிருக்கும்இதுவாவது பரவாயில்லைசிலர் மனைவிமக்களைப் பிரிந்து வாழ வேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்இப்படியிருந்தால் இதில் என்ன யோகம் இருக்கப்போகிறது.

சரி வெளி நாட்டுப் பயணம் எதற்காக ஒருவருக்கு ஏற்படும்.தொழில் காரணமாக பொருளீட்டுவதற்காக இருக்கலாம்அயல்நாட்டிற்கு தூதுவர்களாக செல்பவர்கள் தொழில் காரணமாகசென்றாலும் பொருளீட்டுவது அவர்களுடைய நோக்கமாக இருக்கமுடியாதுஅடுத்து உல்லாச பயணம்மேல் படிப்புமருத்துவசிகிச்சை போன்றவற்றிற்காகவும் வெளிநாட்டிற்கு செல்பவர்களும் இருக்கிறார்கள். (சொந்த ஊரில் நல்ல வசதி வாய்ப்புகள் இருந்தும்,குடும்பம் நல்ல வசதியான குடும்பமாக இருந்தாலும்தொழில்செய்ய வெளி நாட்டிற்கு செல்பவர்களும் இருக்கிறார்கள்பலசமயங்களில் இது ஏன் என்று எனக்கு விளங்காத புதிராகஇருந்திருக்கிறது.) இதைப் பற்றியெல்லாம் ஆராய்வதுதான் இந்தபாடத்தின் நோக்கம்.

ஜாதகத்தில் வெளிநாட்டுப் பயணம் மற்றும் வெளிநாட்டில்வசிப்பது போன்றவற்றை குறிப்பிடுபவை 9,12ம் இடங்கள்தான். இந்த இடங்கள் சர ராசிகளான மேசம், கடகம், துலாம், மகரம் போன்ற ராசிகளில் அமைந்தாலோ ஜல ராசிகளான கடகம், விருச்சிகம், மீனம் போன்ற ராசிகளில் அமைந்தாலோ வெளி நாட்டிற்கு செல்லும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படும்.

இவற்றுள் கடக ராசிக்கு வெளிநாட்டு யோகத்தைக் கொடுப்பதற்கான பலம் அதிகம் இருக்கிறது. காரணம் இது, சர ராசியாகவும், ஜல ராசியாகவும் இரட்டிப்புத் தகுதி பெறுகிறது.

12 லக்னங்களில் ரிஷப, சிம்ம, விருச்சிக, கும்ப லக்னக்காரர்களுக்கு மற்ற லக்னத்தில் பிறந்தவர்களை விட வெளிநாடு செல்லும் யோகம்/வாய்ப்பு அதிகம் ஏற்படும். காரணம் இந்த லக்னங்களுக்கு 9 மற்றும் 12 இடம் ஆகிய 2 இடங்களும் சர ராசியாகவோ அல்லது ஜல ராசியாகவோ வரும்.

உதாரணமாக ரிஷப லக்னகாரர்களுக்கு மகரம் 9ம் இடமாகவும், மேசம் 12ம் இடமாகவும், சிம்ம லக்ன காரர்களுக்கு மேசம் 9ம் இடமாகவும், கடகம் 12ம் இடமாகவும் அமையும். விருச்சிக லக்னகாரர்களுக்கு கடகம் 9ம் துலாம் 12ம் இடமாகவும் அமையும். கும்ப லக்னகாரர்களுக்கு துலாம் 9ம் இடமாகவும், மகரம் 12ம் இடமாகவும் அமையும்.

9,12ம் இடம் இவற்றில் ஒரு வீடு மட்டும் சர அல்லது ஜல ராசியில் அமைந்தால் சற்று குறைந்த அளவேனும் வெளிநாடு செல்லும் வாய்ப்பு ஏற்படும். இவற்றில் 9,12 வீடுகளில் ஒன்று கூட சர ராசியாகவோ/ஜல ராசியாகவோ இல்லாவிட்டால் வெளிநாடு செல்லும் வாய்ப்பு குறைந்தே காணப்படும். வாய்ப்பு குறைவு என்பதை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள். காரணம் வாய்ப்பே இல்லை என்று சொல்லவில்லை.

ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளாலும் வெளிநாட்டுப் பயணம் ஏற்படலாம். அந்த கிரக நிலைகளை வைத்து என்ன காரணத்திற்காக வெளிநாடு செல்ல வேண்டி வரும் என்பதையும் தெரிந்துக் கொள்ளலாம்.






உதாரணமாக ஒருவர் ஜாதகத்தில் 4ம் அதிபதி 9ல் இருந்து அந்த 9ம் இடம் சர ராசியாகவோ ஜல ராசியாகவோ இருந்து 12ம் அதிபதியுடன் சம்பந்தமானால் (பரிவர்த்தனை, சேர்க்கை, பார்வை இவற்றில் ஏதாவது ஒன்று) மேல் படிப்பிற்காக அவர் வெளிநாடு செல்வார் என்று முடிவெடுக்கலாம். (4 இடம், தொடக்க/இடைநிலைப் படிப்பிற்கான இடம் என்றும், 9ம் இடம் மேல் நிலை, பல்கலைக் கழக படிப்பைக் குறிப்பிடும் என்று சொல்லப் படுகிறது).

வேறொருவர் ஜாதகத்தில் 4ம் அதிபதி 12ல் இருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அப்படிப் பட்டவர் பிறந்த நாட்டில் இருப்பதை விட வெளி நாட்டில் இருப்பதையே அதிகம் விரும்புவார். வெளி நாட்டில் இருப்பது சொந்த நாட்டில் இருப்பதைப் போன்றே நினைத்துக் கொள்வார். ஆனாலும் சொந்த நாட்டின் கலாச்சாரத்தையே பின் பற்றுபவர்களாக இருப்பார்கள்.

தசாம்சத்தில் 5,9,12ம் அதிபதிகளின் தொடர்பு தொழில் செய்து பொருளீட்டுவதற்காக வெளிநாட்டிற்கு போவதைக் குறிக்கும். இந்த மூவரும் ஒருவருக்கொருவர் சம்பந்தப் பட்டிருந்தால், பெரும்பாலும் நிரந்தரமாகவே வெளிநாட்டில் தங்கி விடுவார்கள். யாராவது இருவர் மட்டும் சம்பந்தப் பட்டிருந்தால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு சொந்த நாட்டிற்கு திரும்பி விடும் வாய்ப்புகள் அதிகம்.

இதில் தர்ம கர்மாதிபதி யோகம் இருந்து 12ம் அதிபதி/வீட்டோடு தொடர்பிருந்தால் வெளிநாட்டில் பெரும் பதவி வகிப்பது, உயரிய விருதுகள் வாங்குவது போன்றவை நடக்கும். 10ம்,12ம் அதிபதிகள் சம்பந்தமும் (தசாம்சத்தில்) இதே போன்ற நிலையைத் தோற்றுவிக்கும். அயல் நாட்டு அரசதந்திரிகளுக்கு பெரும்பாலும் இத்தகைய கிரக நிலை இருக்கும்.

இங்கே நன்றாக கவனிக்கத் தக்கது என்னவெனில், சர ராசிகள் அதிகமாக வெளிநாட்டுப் பயணத்தைத் தரகூடியது. அடுத்து உபய ராசிகள் ஓரளவுக்கு வெளி நாட்டுப் பயணத்தை தர கூடியன என்றாலும் அவை ஒரு குறுகிய காலத்திற்கு உட்பட்டதாகவே இருக்கும். அதாவது, ஒன்று/இரண்டு வாரம் உல்லாசப் பயணம் போவது இந்த categoryயில் வரும்.

ஒரு பொதுவான அம்சமாக சொல்லப்படுவது குரு 9ல் இருந்தால் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் ஏற்படும் என்று. அதனால்தான்ஓடினவனுக்கு 9ல் குரு என்று சொல்லி வைத்தார்களோ என்னவோ.


Timing of Events

அதாவது எப்போது வெளிநாட்டுப் பயணம் ஏற்படும். ஏனென்றால் ஒரு சிலரைத் தவிர யாரும் எல்லா நேரத்திலும் வெளிநாட்டிற்கு போய்க் கொண்டிருக்கப் போவதில்லை. ஆகையால் எந்த கிரகத்தின் தசா புத்தி அந்தரங்களில் வெளி நாட்டுப் பயணம் ஏற்படும் என்று பார்ப்பது முக்கியம்.

1)      9ம், 12ம் அதிபதிகளின் அல்லது அவர்களோடு சம்பந்தப்பட்ட கிரகங்களின் தசா புத்தி அந்தர காலங்கள்.
2)      சந்திரனோடு சம்பந்தப் பட்டுள்ள கிரகத்தின் தசா, புத்தி, அந்தரம். (சந்திரன் ஜலக் கிரகம். அத்துடன் ஜல ராசியும், சர ராசியுமான கடகத்திற்கு அதிபதி என்பது இங்கே கவனிக்கத் தக்கது)
3)      ராகு, சந்திரன், சுக்கிரன் ஆகியோர் 12ல் இருந்தால் அவர்களது தசா, புத்தி, அந்தரங்கள்
4)      ஜாதகத்தில் உச்சம்/நீசம் பெற்ற கிரகங்களின் தசா புத்தி அந்தர காலங்கள்.
5)      ராகு தசையில், ராகு அல்லது கேது புத்திகள்
6)      குரு 12ம் இடத்து அதிபதியாக இருந்தால் சனி தசை குரு புத்தியில்
7)      9ம் அதிபதியுடன் சம்பந்தப் பட்ட கிரகத்தின் தசா, புத்தி அந்தரங்கள்.
8)      பிறந்த ஜாதகத்தில் சூரியன் இருக்கும் வீட்டை சனி கோச்சாரத்தில் கடக்கும் காலம்.
9)      கோச்சார குரு 9,12ம் இடத்தைப் பார்க்கும் காலங்கள் அல்லது 9,12 அதிபதிகளை பார்வையிடும் காலங்கள்


உண்மையில் பார்க்கப் போனால் இந்த தலைப்பில் ஒரு பகுதி பதிவிடுவிடுவதுதான் எனது நோக்கமாக இருந்தது. ஓரிரு பின்னூட்டங்களைப் பார்த்தப் பிறகு ஒரு சில விஷயங்கள் விடுபட்டு போனது தெரிய வந்தது. அத்துடன் மேலும் சில விளக்கங்களைக் கொடுக்க வேண்டியதும் இருக்கிறது. அதற்காகத்தான் இந்தப் பாகம் 2.


சரி பாடத்திற்குப் போகும் முன் சில அடிப்பபடை விஷயங்களைப் பார்த்து விடுவோம். வெளிநாட்டுப் பயணத்திற்கு 2 விதமான ராசிகள் முக்கியம் பெறுகின்றன. 1) சர ராசிகள் 2) ஜல ராசிகள். அடுத்து கிரகங்களில் ராகு.


சர ராசிகள் ஓரிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாறிக் கொண்டு இருக்கும் தன்மையைக் காட்டக்கூடியது. வெளிநாட்டுப் பயணம் போன்ற இடம், மதம், மொழி போன்ற மற்றத்தைக் கொண்டது என்ற வகையில் சேர்த்துக் கொள்ளலாம்.


அடுத்தது, ஜல ராசி. சரி, இது ஏன். கடலைக் கடந்து வெளிநாடுகளுக்கு போக வேண்டியிருப்பதால் என்று கூறப்படுகிறது. தரை வழி பாதையாக வெளிநாட்டிற்கு போக முடியுமே என்று யாரும் கேட்கலாம். அது எனக்கும் தெரியும். இருப்பினும், முந்தைய காலத்தில் முனிவர்கள் சொன்னதைத்தான் இங்கே குறிப்பிடுகிறேன்.


சர ராசிகள் - மேசம், கடகம், துலாம், மகரம்

ஸ்திர ராசிகள் - ரிஷபம், சிம்மம், விருச்சிகம், கும்பம்

உபய ராசிகள் - மிதுனம், கன்னி, தனுசு, மீனம்


பஞ்ச பூத தத்துவத்தில் நீர் ராசிகள் என  கடகம், விருச்சிகம், மீனம்

போன்றவை குறிப்பிடப் படுகின்றன.


அத்துடன், காற்று, நிலம், நெருப்பு, ஆகிய த்ததுவங்களை கொண்ட ராசிகளும் இருக்கின்றன. இவற்றுக்கு வெவ்வேறு குண நலன்களும் இருக்கின்றன. இவற்றை வேறொரு பதிவில் பார்க்கலாம்.


இவற்றைத் தவிர்த்து மகரமும் ஜல ராசி என சொல்லப் படுகிறது. ஒவ்வொரு ராசிக்கும் சில இடங்கள் அதற்குறிய அல்லது அவற்றால் குறிப்பிடப்படும் இடங்களாக கூறப் படுகிறது. அவற்றையும் பார்த்து விடுவோம்.


மேஷம் : மலை, குன்று, காடு, வெப்ப மண்டல நாடுகள், கிராமங்கள்

ரிஷபம் : ஆட்டுக் கொட்டகை, விவசாய நிலம்

மிதுனம் : சோலை, தோட்டம், சூதாடும் இடங்கள், படுக்கையறை, அரங்கம்

கடகம் : நீர் நிலைகள், விவசாய நிலங்கள்

சிம்மம் : குகை, மலை, குன்று, அடர்ந்த காடுகள், பாறைகள் நிறைந்த இடங்கள்

கன்னி : படுக்கையறை, பட்டறை, நகரம்

துலாம் : வியாபார ஸ்தலங்கள்

விருச்சிகம் : பாம்புப் புற்று, எறும்புப் புற்று, பாதாள அறை, கிராமங்கள்

தனுசு : போர்க்களம், காடுகள்

மகரம் : நீர் நிலைகள், நீரினால் சூழப்பட்ட இடங்கள்

கும்பம் : ரகசிய இடங்கள், கிராமங்கள், மது அருந்தும் இடம், சூதாட்ட களங்கள்

மீனம் : நீர் நிலைகள், நீரினால் சூழப்பட்ட இடங்கள்

இவை அனைத்தும் அக்கால சூழ்நிலைக்கு ஏற்ப சொல்லப் பட்டவை. இன்றைய சூழலுக்கு தகுந்தாற்போல் சில மாற்றங்கள் இருக்கலாம். 

ராகு கிரகம், வெளிநாட்டுப் பயணத்திற்கு உரிய கிரகம் என்று கூறப்படுகிறது. இது அன்னிய மதம், மொழி, தேசம் போன்றவற்றைப் பிரதிநிதிக்கக் கூடியது. ராகுவின் தசா, புத்தி, அந்தர மற்றும் சஞ்சார காலங்களில் வெளிநாட்டுப் பயணம், வெகு தூரத்தில் உள்ள ஊர்களுக்குப் பயணம் போன்றவை ஏற்படலாம்.

வெளி நாட்டு வாசம் ராகுவினால் ஏற்படும் என்பதைப் பற்றிப் பார்ப்போம். (இது முந்தைய பதிவில் விடுபட்டது). இதை வர்கச் சக்கரங்களில் உள்ள கிரக நிலையை வைத்தும் பார்க்கலாம். உதாரணமாக, வீடு, மனை, வசிப்பிடம் போன்றவற்றை சதுர்தாம்சம் (D4) குறிப்பிடுகிறது. ராசி சக்கரத்தின் (D1) 9,12 இடங்கள், அதன் அதிபதிகள், ராகு இவற்றுக்கான சம்பந்தத்தைப் பார்க்க வேண்டும். 12ம் அதிபதி சதுர்தாம்சத்தில், 9ல் ராகுவுடன் இருந்தால், 9,12ம் அதிபதிகள் அல்லது ராகுவின் தசா புத்தி அந்தரங்களில் வெளிநாட்டில் தங்கும் அல்லது  வசிக்கும் வாய்ப்பு, நிலை வரலாம். இது போன்ற உதாரணங்களை வைத்து உங்களுக்கு நீங்களே பலனைக் கணித்துக் கொள்ளுங்கள்.

லக்னம் சர ராசியாகவோ ஜல ராசியாகவோ இருந்து லக்னாதிபதி, ஜல கிரகங்களான சந்திரன், சுக்கிரன் இவர்களுடன் சம்பந்தப் பட்டாலோ அல்லது லக்னாதிபதி, 9ல், 12ல் இருந்து அது சர ராசியாகவோ ஜல ராரியாகவோ இருந்தாலும், வெளிநாட்டு யோகம் நிச்சயம். 

No comments:

Post a Comment