jaga flash news

Wednesday 26 February 2014

பெண்களின் உடல் எடை குறைக்கும் வழிகள்

போலிக் ஆசிட் பெண்களின் உடலுக்கு அவசியம். கர்ப்பிணிகளுக்கு மிக அவசியம். இதற்காக ஆரஞ்சும், தவிடு நீக்காத தானிய உணவுகளும் சாப்பிட வேண்டும். கேரட் ஜூசில் போலிக் ஆசிட் உள்ளது. டாக்டரின் ஆலோசனைப்படி அதற்கான மாத்திரைகள் சாப்பிடலாம்.
உப்பு, இனிப்பு இந்த இரண்டையும் முடிந்த அளவு பெண்கள் உணவில் இருந்து அப்புறப்படுத்திவிட வேண்டும்.
ரத்த சோகை பெரும்பாலான பெண்களை தாக்குகிறது. சோர்வு, தலைசுற்றுதல், தலைவலி, தளர்ச்சி போன்றவை அதன் அறிகுறிகள். ரத்த சோகையால் முடியும் உதிரும். அவர்களுக்கு இரும்பு சத்து அவசியம். ஈரல், கீரை வகைகள், நெல்லிக்காய், திராட்சை போன்றவைகளை அதிகம் சாப்பிடவேண்டும். டாக்டர் ஆலோசனைப்படி இரும்பு சத்து மாத்திரைகளும் சாப்பிடலாம். ரத்த சோகை இருப்பவர்கள் உணவுகளை இரும்பு பாத்திரங்களில் சமைத்து சாப்பிடுவது நல்லது.
உடலில் அசிடிட்டி சீராக இருக்கவேண்டும். மது, காபியில் இருக்கும் கபீன், நிகோடின் போன்றவைகள் மூலம் அஸிடிட்டி நிலை அதிகரிக்கும். அதனால் அவைகளை தவிர்த்திடுங்கள். மாமிச உணவுகளும் அஸிடிட்டியை அதிகரிக்கும். அதனால் மாமிச உணவுகளைவிட அதிகமாக, காய்கறிகளை சாப்பிடவேண்டும்.
உடலின் ஆரோக்கியத்திற்கு பற்களின் சுத்தம் அவசியம். தினமும் இருமுறை பல் துலக்கவேண்டும். பிரஷ் பழையதாகிவிட்டால் மாற்றிவிடவேண்டும். பற்களின் ஆரோக்கியத்திற்கு கேரட், ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் நல்லது. 13. பழங்கள், காய்கறிகளை தினமும் 250 கிராம் அளவுக்கு சாப்பிட்டால்தான் உடலுக்கு தேவையான நார்சத்து கிடைக்கும்.
கொழுப்பு என்றாலே பெண்கள் தவிர்க்க நினைக்கிறார்கள். ஆனால் உடலுக்கு நல்ல கொழுப்பு அவசியமாகிறது. நமது மூளையின் 60 சதவீதத்தை கொழுப்பு திசுக்கள்தான் நிர்மாணிக்கிறது. அதனால் வனஸ்பதி போன்ற கெட்ட கொழுப்பு கொண்ட பொருட்களை மட்டும் தவிர்த்திடுங்கள்.
எண்ணெய்யை மீண்டும் சூடாக்கியும் பயன்படுத்தக் கூடாது. பாதாம், தேங்காய், ஆலிவ் எண்ணெய் போன்றவை எல்லாம் உடலுக்கு நல்லது. வாரத்தில் 2-3 மேஜை கரண்டி ஆலிவ் எண்ணெய் சமையலில் பயன்படுத்தினால், சருமத்திற்கு நல்லது. கொழுப்பு அதிகரித்து விடக்கூடாது. ஆனால் குறைந்துவிட்டால், உடல் நலம் பாதிக்கும்.
உடல் மெலிய வேண்டும் என்பதற்காக உணவு சாப்பிடாமல் இருக்கக்கூடாது. திடீரென்று உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக குறுக்கு வழி எதையும் கடைபிடிக்கக்கூடாது. அது உடல் மெட்டோபாலிக் சிஸ்டத்தை பாதிக்கும். ஜீரணத்தில் கடுமையான சிக்கலை தோற்றுவிக்கும். அதனால் உடல் எடையை குறைக்க முறையான வழிகளை கையாள வேண்டும்.

1 comment: