jaga flash news

Monday 5 May 2014

திருமண பொருத்தம்

திருமண பொருத்தம் -
===============================
ஒருவருக்கு வாழ்க்கையில் முக்கியமான மற்றும் திருப்பு முனையாக இருப்பது இந்த திருமண பந்தம். சிலர் திருமண வாழ்க்கை இனிக்கிறது சிலர் வாழ்க்கை கசக்கிறது சிலருக்கு முறிவு (விவாகரத்து) ஏற்படுகிறது. இதற்கு பல காரணங்கள் சொல்ல படுகிறது. ஆனால் இதற்கு அடிப்படை காரணமாக இருப்பது மணமக்கள் ஜாதகத்தை சரியாக பொருத்தாமல் / ஆராயாமல் திருமணம் செய்வது முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே தங்கள் குழந்தைகளின் திருமண ஏற்பாடு செய்யும் போது கீழ்க்கண்ட ஜாதக ஒற்றுமை உள்ளதா என்பதை சரிபார்த்து வாழ்க்கையை அமைத்து கொடுத்தால் மிக சிறப்பாக அவர்கள் வாழ்க்கை நடத்த உதவியாக இருக்கும்.
திருமண பொருத்தம் பார்க்கும் போது இந்த இருவகை பொருத்தம் பார்க்க வேண்டும்
1. நட்சத்திர பொருத்தம்
2. ஜாதக பொருத்தம்
தற்போது நடைமுறையில் தசவித (1௦ பொருத்தம்) களை வைத்து திருமணங்கள் நிச்சயம் செய்யப்படுகிறது.
(நட்சத்திர பொருத்த நூல்கள்
முகூர்த்த சிந்தாமணி, முகூர்த்த சாரம், முகூர்த்த ரத்னம், முகூர்த்த தத்துவம், முகூர்த்த சங்கீரம், முகூர்த்த தத்துவம், முகூர்த்தம் மாதவியம்,
கால விதானம், காலம்ருதம், ஆசார சங்கீரம், காலப்பரகாசிகை இன்னும் பல)
மேற்கூறிய நூல்களில் பரஸ்பர முரண்பாடுகள் நிறையவே உள்ளன. இவைகளில் 36 பொருத்தங்கள் கொடுக்கப்பட்டு அவைகளில் 23 (ராசி அடிப்படையில் 4 + ராசி அதிபதி 1 + நட்சத்திர அடிப்படையில் 18). தற்காலத்தில் அதுவும் சுருங்கி தசவித பொருத்தம் மட்டும் பார்க்க படுகிறது
அவை
தினம்,கணம்,மாகேந்திரம்,ஸ்தீரி தீர்க்கம்,யோனி,ராசி,ராசிஅதிபதி,வசியம்,ரஜ்ஜு,வேதை
இவைகளை தவிர ஜாதக பொருத்தம் கண்டிப்பாக பார்க்க பட வேண்டும்
அவைகள்
1. எல்லா பாவங்களுக்கும், கிரகங்களுக்கும் உள்ள தொடர்பு
2. சஷ்டாங்கம்
3. சூரிய தோஷம்
4. செவ்வாய் தோஷம்
5. 7மிட தோஷம்
6. 7மிட அதிபதி தோஷம்
7. சுக்ரன் தோஷம்
8. பாவகிரக தோஷம்
9. புத்திர தோஷம்
10. பஞ்சனை தோஷம்
11. திசா சந்தி
12. கோச்சர குரு, சனி நிலை
13. நடக்கும் திசா புத்திகள்
14. யோகி அவயோகி நிலை
15. தோஷ சாம்யம் உண்டா
16. பரிகாரம் உண்டா
ஆகியவைகள் கணக்கில் கொண்டு பொருத்தினால் நல்ல பலன்கள் கிட்டும்

No comments:

Post a Comment