jaga flash news

Tuesday 23 September 2014

'சனி யாரை பாதிப்பதில்லை.? 'சனி யாரை பற்றிக் கொள்வார்......?

'சனி யாரை பாதிப்பதில்லை.? 'சனி யாரை பற்றிக் கொள்வார்......?
1. நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.
2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு.
அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்ப்தில்லை.
3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார்.
4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை.
5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார்.
6. சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து பாதுகாப்பார்.
7. சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் மஹாலக்ஷ்மி என்பார்கள். அந்த திருமகள் இருக்கும் இடத்தை திரும்பிக்கூட பார்ப்பதில்லை சனி. அதாவது சத்தியம் தவறாதவரை.
8. ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று.
9. எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை.
10. வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை.
11. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லை.
தீமை தரும் சனி பார்வை !!!!!
1. உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனிக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார்.
2. ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனிக்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.
3. முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி மிகவும் பிடிக்கும். எப்படியும் சனி பிடித்துக் கொள்வார்.
4. குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனிக்கு பிடிக்கும்
5. விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவம் பிடித்தமானவர்கள். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.
6. பொய், களவு, சூது, வாது செய்பவர்களை ஊக்குவித்து, போகாத ஊருக்கு வழிச் சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தர சனிக்கு பிடிக்கும்.
7. சுத்தம் இல்லாத இடத்தில் சூன்யம் குடியிருக்குமே தவிர, திருமகள் இருக்க மாட்டாள். ஆனால் சனிக்கு அவ்விடங்கள்தான் அதிகம் பிடிக்கும்.
8. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனிக்கு பிடிக்கும்.
9. மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சன்டாளர்களை முதலில்¢ ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனிக்கு நிகர் சனியே.
10. அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி நீங்காமல் நிரந்தரமாக இருப்பார். 11. தாயிக்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார்...

No comments:

Post a Comment