jaga flash news

Thursday 25 September 2014

நாகதோஷம்

நாகதோஷம்
ஆண்,பெண் இருவர் ஜாதகங்களிலும், லக்னம், சந்திரன் இருக்கும் இடங்களிலிருந்து 2,4,5,7,8,12-வது இடங்களில், ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷமாகும்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 2-ல் ராகு அல்லது கேது இருப்பது நாகதோஷம். இதனால் கணவன்-மனைவி இடையே சண்டை, சச்சரவு, அல்லது விவாகரத்து உண்டாகலாம். லக்னம் என்பது என்ன? ஒரு ஜாதகரின் குணத்தை ஓரளவுக்கு பிரதி பலிக்கும் கண்ணாடி.
அங்கே பாம்பு கிரகங்கள் அமர்வதால் ஜாதகர் முரண்பட்டவராக காட்சி அளிப்பார். நம்பகத்தன்மை என்பது குறைவு. இரண்டில் ராகு கேது இருந்தால் முன்கோவம், முரட்டுத்தனம், வாய் நீளம்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 4-ல் ராகு அல்லது கேது உள்ளதும் நாகதோஷம். இதனால் இருதய சம்பந்தமான நோய், சொத்து விஷயமான தகராறு, மனைவிக்கு நோய், குடும்ப வாழ்க்கையில் அதிருப்தி, முதலிய கஷ்டங்கள் வர வாய்ப்பு உள்ளது.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 5-ல் ராகு அல்லது கேது இருந்தால் புத்திரபாக்யம் தடைபடக்கூடும். ஆனால் 5-ம் இடம் சுபச்சேர்க்கை பெற்று பலமாக இருப்பின் நாகதோஷம் நிவர்த்தி அடைந்து குழந்தைச் செல்வம் ஏற்படும்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 7-ல் ராகு அல்லது கேது நிற்பது களத்திர தோஷம். இதனால் மனைவியின் உடல்நிலை பாதிக்கப்படலாம். தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு, மனஸ்தாபம், அவநம்பிக்கை ஏற்படக்கூடும். சில தம்பதிகளிடையே பிரிவினை காணப்பட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும். ஏழில் இவர்களில் ஒருவர் இருந்தால் மணமேடை பாக்கியத்திற்கு தடைஉத்தரவு வந்து விடும்.
முறையற்ற உறவுகளில் முனைப்பும் ஆர்வமும் காட்டுவார்களாம். அது சுக்கிரன், செவ்வாய், சனி, சந்திரன் போன்ற ஏதாவது ஒரு கிரகங்களின் சேர்க்கை இருந்தால் கண்டிப்பாக மறுபக்கம் என்பது இருந்தே தீரும்.
லக்னம்,அல்லது சந்திரனுக்கு 8-வது இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் நாகதோஷமாகும். இதனால் விஷக்கடி, நோய், குடும்பத்தில் சண்டை சச்சரவு, பிரிவினை ஏற்பட வாய்ப்புண்டு, ஆனால் 8-வது வீட்டை சுப கிரகம் பார்த்தாலோ அல்லது 8-ம் அதிபதி பலமாக இருந்தாலோ தோஷநிவர்த்தி ஏற்படும். எட்டில்
பொண்ணுக்கு இருப்பின் மாங்கல்ய பலம் குறைவு. குடும்ப வாழ்வில் குளறுபடி, ஆணுக்கு இருந்தால் நோய், கடன், எதிரி, கண்டம்.
லக்னம் அல்லது சந்திரனுக்கு 12-ம் இடத்தில் ராகு அல்லது கேது இருந்தால் நாகதோஷம். இதனால் நோய் தொல்லை, விஷக்கடி ஏற்பட வாய்ப்பு உண்டு. பண விரயமும் ஏற்படும். 12-ம் அதிபதி பலமாக இருந்தால் தோஷ நிவர்த்தி ஏற்படும்.
ராகு கேது பாலுணர்வை தூண்டுவதில் வல்லவர்கள். இது ஆணுக்கு இருந்தால் அவர் மன்மதனுக்கு மருமகனாக இருப்பார்.ஆள் அந்த விஷயத்தில் பலே கில்லாடி.
பாம்பு புற்றை இடித்தாலோ அல்லது பாம்பினை அடித்து கொன்றாலோ நாகதோஷம் ஏற்படும். இதன் காரணமாக விந்து சக்தி நீர்த்துப்போய் குழந்தை தாமதம் அல்லது குழந்தை இல்லாத நிலையும் ஏற்படும்.
இது பலன். சரி.. ஒருவருக்கு இந்த அமைப்பு இருந்தால் மற்றவருக்கும் அப்படியே இருக்க வேண்டும் என்று சொல்லக் காரணம் என்ன?
பாம்பின் கால் பாம்பறியும். இருவரும் ஒரேகுணம் கொண்டவராக இருக்கும் போது, தவறுகள் நடக்காது. இது திருடன் கையிலே சாவி கொடுத்தால் திருட்டு போகாது என்கிற மாதிரி தான்.
நாகதோஷப் பொருத்தமும், திருமணமும் :
1. நாகதோஷம் ஆண்/பெண் இருவர் ஜhதகங்களில் இருந்தாலும் பொருத்தலாம். இல்லாவிட்டாலும் பொருத்தலாம்.
2. ஒருவர் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்து, மற்றவருக்கு நாகதோஷம் இல்லாவிட்டால் பொருத்தக்கூடாது.
3. ஆண், பெண் இருவருக்கும்; சுபர் பார்வையினால் நாகதோஷம் நீங்கினால் சேர்க்கலாம். ஒருவருக்கு மட்டும் நீங்கினால் போதாது. 4. ஆண் ஜாதகங்களில் 2, 4, 5, 7, 8. 12 வது இடங்களில ராகு அல்லது கேது சுபர் பார்வையுடன் இருக்கும்போது, பெண் ஜாதகத்தில் நாகதோஷம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திருமணம் செய்தால் அது மத்யம பலனைக் கொடுக்கும். இன்பமும் துன்பமும் கலந்த வாழ்க்கை அமையும்.
5. பெண் ஜாதகத்தில் ராகு அல்லது கேது உள்ள அதே இடத்திலேயே ஆண்; ஜாதகத்திலும் இருக்கவேண்டும் என்று ஒரு அபிப்ராயம் ஜோதிடர்களிடையே உள்ளது. அவ்வாறு அமைந்தாலும் நல்லதே. தோஷசாம்யம் ஏற்படும்.
6. அசுவினி, மகம், மூலம், நத்திரங்களில் பிறந்தவர்களுக்கு, கேது தசை ஜன்ம நட்த்திர தசையாக வருவதால், இந்த ஜாதகங்களில் கேது பகவான் லக்னத்திலோஅல்லது 2வது வீட்டிலோ இருப்பதால் பாதிப்பு ஏற்படாது.
7. அதே போல் திருவாதிரை, சுவாதி, சதயம் என்ற மூன்றும் ஜன்மநட்த்திரமாக வரும ஜாதகர்களுக்கும், லக்னத்தில் அல்லது 2வது இடத்தில் ராகு அல்லது கேது இருப்பது தோஷமாகாது என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
8. ஜாதகபலன் கூறும்போது, ராகுவிற்கு சனியின் பலனும், கேதுவிற்கு செவ்வாயின் பலனும் சொல்லுவார்கள்

No comments:

Post a Comment