jaga flash news

Tuesday, 17 February 2015

ராகு கேது ஏன் ரிவர்ஸ் கியர்ல் வண்டி ஓட்டுகிறார்கள் ?

ஒரு  நான்கு சக்கர வாகனத்தை முன்னால் இயக்க எப்படி 5 கியர் இருக்கிறதோ, அதே போல் பின்னல் இயக்க ரிவேர்ஸ் கியர் ஒன்று உண்டு, இவை அனைத்தும் சரியாக இயங்கினால் மட்டுமே வாகனம் முன்னும் பின்னும் இயக்க முடியும், ரிவேர்ஸ் கியர் இல்லை எனில் வாகனத்தை முனால் மட்டுமே இயக்க முடியும் அது மிகவும் கடினம் மேலும் பல இடையூறுகள் ஏற்ப்படும், மேற்கண்ட அமைப்பில் ஒரு வாகனத்திர்க்கே ரிவேர்ஸ் கியர் தேவை படும் பொழுது 6 அறிவு கொண்ட மனிதனுக்கு ராகு கேது எனும் இரண்டு சாயா கிரகங்களும் எதிர் வட்ட பாதையில் சஞ்சாரம் செய்யும் பொழுதே நான்கு சக்கர வாகனத்தை போன்று , மனித வாழ்க்கை முழுமை பெறுகிறது.

பொதுவாக ராகு கேது கிரகங்கள் என்பது சாய கிரகம் ஆகும் ( உருவம் அற்ற தன்மை ) சூரியனை சுற்றி எதிர் வட்ட பாதையில் எப்பொழுதும் நிலையாக சுற்றி வந்துகொண்டு இருக்கும் காந்த அலை பாதைகள், எனவே நமது ஜாதகங்களை எதிர் திசையில் சஞ்சாரம் செய்து நன்மை தீமை பலன்களை எவ்வித பாகுபாடுகள் இன்றி வாரி வழங்கி கொண்டு இருக்கிறது, மேலும் ராகு கேது எனும் சாயா கிரகங்கள் ஒருவரின் ஜாதகத்தில் பலன்களை வழங்குவதில், மற்ற கிரகங்களின் தன்மையை போல் அன்றி தனிப்பட்ட சிறப்பை பெற்று இருப்பதை எவராலும் மறுக்க இயலாது .

குறிப்பாக ராகுவோ அல்லது கேதுவோ ஒருவரின் சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தில் அமர்கிறதோ அந்த பாவகத்தின் தன்மையை முழுமையாக தானே ஏற்று நடத்தும் வலிமையை இயற்கையாக பெற்று விடும் , இதனுடன் சேர்ந்த கிரகத்தின் தன்மையினையும், பார்த்த கிரகத்தின் தன்மையையும் தானே ஏற்று நடத்தும் என்பதனையும் இங்கே குறிப்பிட வேண்டியது அவசியம், ஆக மற்ற கிரகத்திற்கு இல்லாத  தனி தன்மை இந்த சாய கிரகங்களுக்கு உண்டு மேலும் தான் தரும் நன்மை தீமை பலன்களில் எவ்வித குறையும் இன்றி சிறப்பாக செய்யும் என்பதனையும் இங்கே கவனிக்க வேண்டியது அவசியம் .

ஆக ராகு கேது கிரகங்கள் எதிர் திசையில் சஞ்சாரம் செய்யும் பொழுதே இவை சாத்தியமாகின்றது , இந்த இயற்க்கை அமைப்பை இறை நிலை சாயாகிரகங்களுக்கு  வழங்கி இருப்பதில் ஆச்சர்யம் இல்லை, ஒருவரின் ஆன்மீக வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றத்தையும், பூலோக வாழ்க்கையில் தன்னிறைவான தன்மையையும் முறையே கேதுவும் , ராகுவும் வழங்குகிறது , ஒருவரின் கருமைய்யம் தெளிவு பெற உதவுபவர் ராகு, ஒருவரின் துரிய நிலையை விழிப்பிற்கு கொண்டு வரும் தன்மையை கேது வழங்குகிறார், எனவே ராகு கேது கிரகங்களின் எதிர் வட்ட பாதை சஞ்சாரம் ஒரு ஜாதகத்தில் மிக மிக அவசியமான ஒன்று என்பதை கருத்தில் கொண்டே இறை நிலை இந்த இயக்கத்தை சாயா கிரகங்களுக்கு வழங்கி இருக்க கூடும்.

No comments:

Post a Comment