jaga flash news

Tuesday, 10 February 2015

ஏழாமிடம் .........ஏழாமதிபதி

1. ஏழுக்குடையக் கிரகம் நல்லக் கிரகங்களின் மத்தியில் இருந்தால், மனைவியாக வாய்ப்பவள் நல்ல குணவதியாக இருப்பாள்.
2. நவாம்ச லக்கினத்துக்கு ஏழில், குருசந்திரன் இருக்க, அவனின் மனைவி அழகுநிரம்பியவளாக இருப்பாள்.
3. இலக்கினத்திற்கு நான்கிலோ, பத்திலோ ஏழாமதிபதி இருந்தால், அவனுக்கு வாய்க்கும் மனைவி பத்தினியாய் இருப்பாள்.
4. இலக்கினத்திலும், ஏழாமிடத்திலும் பாவக் கிரகங்கள் இருந்தால், கணவன் மனைவியருக்குள் அடிக்கடி வம்பு வழக்குகள் வரும்.
5. இலக்கினாதிபதியும், ஏழாமதிபதியும் ஒன்றுக்கொன்று பகை, நீசம் பெற்று இருக்கக் கூடாது.

No comments:

Post a Comment