வாஸ்து படி வீட்டிற்குள் தரைத்தளம் (Flooring) அமைப்பதில் கவனம் கொள்ள வேண்டியவை:-
வீட்டை வாஸ்து படி அழகாக வடிவமைத்து கட்டினாலும் வீட்டிற்குள் அமைக்கப்படும் தரைத்தளமும் வாஸ்து சாஸ்திரப்படி சரியான முறையில் அமைக்கப்பட வேண்டும். தட்பவெப்பநிலைகளில் மாறாமல், வெடிப்புகள் தோன்றாமல் இருக்க வேண்டும். நடக்கும் போது ஒலி தோன்றாதவாறு இருக்க வேண்டும். கழுவ, துடைக்க எளிதாக இருக்க வேண்டும்.
* புறப்பகுதித் தரையை விட வீட்டிற்குள் அமைக்கப்படும் தரைத்தளம் கண்டிப்பாக உயரமாக இருக்க வேண்டும்.
* வீட்டின் தரைத்தளம் முழுவதும் சமமாக இருக்க வேண்டும்.
* வீட்டிற்குள் அமைக்கப்படும் கழிவறையின் தரைத்தளம் வீட்டின் தரைத்தளத்தை விட உயரமாக இருக்க கூடாது.
* வீட்டின் மேல்தளத்தில் (மாடியில்) அமைக்கப்படும் கழிவறையின் தரைத்தளம் அந்த வீட்டின் தென்மேற்கு தரைதளத்தை விட உயர்ந்து இருக்காமல் இருக்கும் படி அமைக்க வேண்டும்.
No comments:
Post a Comment