jaga flash news

Wednesday, 25 February 2015

ஈசான்யம்

 சனி மூலை தெரியுமா?
நான்கு திக்குகள் என்பது, கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்காகும். எட்டுத் திக்கு என்பது, இவைகளோடு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு பதினாறு திக்குகள் என்பது, மேற்சொன்னவைகளோடு, 1. வடக்கு சார்ந்த வடகிழக்கு: 2. கிழக்கு சார்ந்த வடகிழக்கு: 3. கிழக்கு சார்ந்த தென்கிழக்கு: 4. தெற்கு சார்ந்த தென்கிழக்கு: 5. தெற்கு சார்ந்த தென்மேற்கு: 6, மேற்கு சார்ந்த தென்மேற்கு: 7. மேற்கு சார்ந்த வடமேற்கு: 8. வடக்கு சார்ந்த வடமேற்கு. என மொத்தம் பதினாறு திசைகளாகும். இதில் நாம் காணப் போவது, “சனிமூலை” என்று குறிப்பிடப்பட்டுள்ள, (ஈசான்யம்) வடகிழக்கு திசையைப் பற்றியதாகும்.
ஒரு வீட்ட “வாஸ்து” செய்யும் போது, இந்த ஈசான்ய மூலையை மிக கவனமாக வடிவமைக்க வேண்டும். சரியாக 90 பாகையிலோ, அல்லது சற்றுக் குறைவாகவோ இழுவை உள்ளதாக அமைத்துக் கொள்ளலாம். இந்த சனிமூலைப் பகுதி துருத்திக் கொண்டிருக்கலாம். இத்திசையில் தெருக்குத்து (முச்சந்தி) அமைந்தால், மிக நல்லது.
ஒருவர் வீட்டின் வடகிழக்குப் பகுதி சேதமடைந்து, இடிந்து போய் கிடந்தால், அவர்களின் வீட்டில் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும். குழந்தை உற்பத்தியானால், ஊனமாகலாம். அல்லது மந்த சுபாவம் உள்ள குழந்தையாக இருக்கவும் வாய்ப்புள்ளது. குழந்தைகளின் முன்னேற்றம் பாதிக்கும். வருவாய் இழப்பும், பொருள் அழிவும் உண்டாகும். அதனால் வீட்டின் மற்றமூலைகளை உருட்டிக் கட்டுவதுபோல், சனிமூலையை உருட்டிக் கட்டாதீர்கள்.
உடல்நோய்க்கான மருந்துப் பொருட்களை சனிமூலைப் பகுதியில் வைத்து வேளாவேளைக்கு தின்ன நோயின் தீவிரம் குறையும். இப்பகுதி மற்ற பகுதிகளைக் காட்டிலும், சற்றுப் பள்ளமாக தரைப்பகுதி இருக்கலாம். கழிவு நீர் வெளியேறுவது, நிலமட்ட நீர்த் தொட்டி, கிணறு, வடிகால், ஆனால், கழிநீர் தேங்கக் கூடாது.
இந்த பகுதி புனிதமானதாக இருக்க வேண்டும். தியானம் செய்வதற்கு ஏற்ற இடம். இந்த பகுதி இதயத்தைப் போன்ற மென்மையானப்பகுதி. இதயச்சுமையோடு ஒருவன் வாழமுடியாதோ, அதேபோல் பூமியின்,அல்லது வீட்டின் இதயம் போன்ற பகுதியும் சுமையோடு இருக்கக் கூடாது. இப்பகுதியில் அல்லது கோவில் போன்ற பீடங்களையோ, அதில் விக்கிரகங்களையோ வைத்து வழிபடக் கூடாது. அதனால் கனமான மரங்களையும் வைக்கக் கூடாது.
புளிய மரத்தில் முனி குடியிருக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அப்படியிருக்கும் போது, ஒருவன் சனிமூலையான வடகிழக்கில் புளியவிதையை நடப்போனால், அந்த வீட்டிலும் பேய், பிசாசு, முனி, கருப்பு என அத்தனை துர்தேவதைகளும் குடிபுக வாய்ப்புள்ளது அல்லவா? அதனால்தான் நம் பெரியவர்கள், நட்டுவைக்கப் போகும் புளிய விதைக்கு சனிமூலை தெரியுமா? என்றனர். மேலும், புளியமரம் வெப்பத்தை அதிகம் வெளிப்படுத்தும். நாம் சுவாசிக்கும் ஆக்ஜினை அதிக அளவு எடுத்துக் கொண்டு, அதிகக்படியான ஹைட்ரஜனை வெளியிடும். அதனால், வீட்டில் குடியிருப்பவர்களுக்கு சுவாசக் கோளாறுகள், மூச்சுத் திணறல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. அதனாலும் கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment