சித்திரா பௌர்ணமி
பூமியைச் சுற்றிவரும் சந்திரன்பௌர்ணமி அன்று முழு நிலவாகத் தோன்றி மிகப் பிரகாசமாகக் காட்சிதரும். இந்தப்பௌர்ணமி தினமானது மாதம் ஒருமுறை வந்தாலும் சித்திரை மாதம் வரும் பௌர்ணமிக்கு சில தனிச் சிறப்புக்கள் உள்ளன.

மாதம் தோறும் வரும்பௌர்ணமி நாளில் மலைக்கோவில்களுக்குச் சென்று மக்கள்
கிரிவலம் வருகின்றனர்.எனினும், சித்திரைப் பௌர்ணமியன்று கிரிவலம் வருதல்,
கோவில்களிலும் புனிதத்தலங்களிலும்தம் குடும்பத்தாருடன் பொங்கல் வைத்தல்
போன்றனசிறப்பானவையாகும்.
சித்திரைப் பௌர்ணமியானது, சித்திரகுப்தனாரின் திருமண நாளாகும். அவர் நமதுபிறப்பு, இறப்பு கணக்குகளைப் பார்த்துவரும் எமதர்மனின் கணக்குப்பிள்ளை ஆவார். பூமியில் மனிதர்கள் செய்யும் பாவ,புண்ணியங்களைக்கணக்கெடுத்துஅவைகளுக்குத் தகுந்தால் போல் நமக்குரிய சொர்க்க, நரகங்களை முடிவு செய்வதே சித்திர குப்தனின் கடமையாகும்.
எனவே அவரது திருமண நாளான சித்திரா பௌர்ணமியன்று பொங்கலிட்டும் கிரிவலம் வந்தும் இறைவனை வழிபடும்போது, சித்திர குப்தனை மனதில் நினைத்து ” நாங்கள் மலையளவு செய்த பாவங்களை கடுகளவாகவும் கடுகளவு செய்த புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்” என வேண்டி வழிபட வேண்டும்.
மேலும் அன்றைய தினம் புனித நதிகளில் நீராடியும் நமது பாவங்களைப் போக்கிக்கொள்ளலாம்.
சித்திரா பௌர்ணமியில் சித்திரை நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்து வருவதால், அன்று கடலில் நீராடுவது மிகவும் சிறப்பானதாகக் கூறப்படுகின்றது. ஏனெனில்அன்றைய தினம் கடலில் நீராடுபவர்களின் பாவங்களை கழித்தும் சிலவற்றை தாமே ஏற்றுக்கொள்ளவும் அங்கே பிரசன்னமாகியுள்ள பித்ருக்கள், மகரிஷிகள், சித்த புருஷர்கள், யோகியர்கள் தயாராக இருப்பார்களாம்.
சித்ரா பௌர்ணமியன்று பெரும்பாலான ஊர்களில் உள்ள அம்மன் கோவில்களில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்வார்கள்.நாளை 3-ஆம் திகதி நடைபெறவுள்ள சித்ரா பௌர்ணமியை நாம் சிறப்புடன் அனுஷ்டித்து பயன் பெறுவோம்.
சித்ரா பௌர்ணமி விரதமுறை:
சித்ரா பௌர்ணமி அன்று காலையில் பூஜை அறையில் விநாயகர் படத்தை வைத்து அருகில் ஏடும் எழுத்தாணியும் (கொப்பி&பேனா ) வைத்து, ஒரு பேப்பரில் ”சித்திர குப்தன் படியளப்பு”என்று எழுதி வைக்க வேண்டும். சர்க்கரைப் பொங்கல் அல்லது வெண் பொங்கலை ஒரு தலை வாழை இலையில் வைத்து படைக்க வேண்டும். படையலுடன் மாங்காய், தேங்காய், பலவகை காய்கறிகள், பருப்புகள் , தயிர் கடையும் மத்து, உளி போன்றவற்றையும் வைக்க வேண்டும்.
தொடர்ந்து தேங்காய் உடைத்து தீப ஆராதனை காட்டி வழிபட்டு பொங்கலை எல்லோருக்கும் தானமாகக் கொடுக்க வேண்டும்.
இந்த வழிபாட்டின்போது
”சித்ரா குதம் மஹா ப்ராக்ஜம் லேகணீ பத்ர தாரிணம் சித்ர ரத்னாம் பரதாரம் மத்யஸ்தம் சர்வ தேஹினாம்”
என்ற மந்திரத்தைக் கூறி சித்ர குப்தனை வழிபட வேண்டும் என்பது ஐதீகம்.
பலன்கள் :
1. சித்திர குப்தரைப் பிரார்த்திப்பதால் அவர் நம் பாவங்களைப் பொருத்தருள்வார்.
2. ஒவ்வொரு வருடத்தின் முதலாவது பவுர்ணமியன்று செய்யப்படும் இந்த வழிபாட்டின் மானசீகமான பலன், இந்த பூவுலகில் நம் ஒவ்வொருவருடைய செயல்களையும் இடை விடாமல் கண்காணிக்கும் ஒரு மேலான சக்தி இருக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுவதாகும்.
3. ஒவ்வாருவர் தோளிலும் சித்திரகுப்தர்கள் அமர்ந்திருக் கிறார்கள் என்ற எண்ணம் உருவானதற்கு காரணம் நாம் நல்ல செயல்களைச் செய்ய வேண்டும் என்று தூண்டுவதற்காகவேயாகும்.
4. தானம் செய்வதால் இறையருள் கிட்டும்.
5.விநாயகப்பெருமானின் சந்நிதியில் அமர்ந்து சித்ரா பௌர்ணமி அன்று சித்திர குப்தரின் கதை நூலை படித்து பிரார்த்தித்தால் சகல துன்பங்களும் நீங்கும் என்பது ஐதீகம் .
சித்திரபுத்திர நாயனார் விரதத்தால் நமக்கு பாவம் செய்யும் மனப்பான்மையே மறைந்துவிடும்.மேலும் இவ்விரதம் இருப்பவர்களுக்கு எமபயம் கிடையாது எனக் கூறுகிறார்கள்.
சித்திரகுப்தனிடம் மலையளவு பாவத்தை கடுகளவாகவும், கடுகளவு புண்ணியத்தை மலையளவாகவும் எழுதிக்கொள்ளும்படி பிரார்த்திப்பார்கள்.
மறுமையில் நன்மை வேண்டுபவர்கள், மீண்டும் பிறவாமை வேண்டுபவர்கள், பிறப்பில் துன்பமிலா நற்பிறவி வேண்டும் என்பவர்கள் இந்த விரதத்தை அவசியம் கைக்கொள்ள வேண்டும். சித்திரகுப்த பூஜை செய்ய விரும்புபவர்கள் சித்ராபௌர்ணமி அன்று பூஜை செய்யலாம். அன்று உபவாசமிருந்து பூஜை செய்ய வேண்டும்.
சித்திரகுப்தருக்கு பிரியமானவையாக சித்ரான்னம், தயிர் சாதம், தேங்காய் சாதம், உளுந்து வடை ஆகியவற்றை நிவேதனம் செய்ய வேண்டும். கோவில்களில் சித்திரகுப்தருக்கென்று தனியாக சிறு சந்நிதி எழுப்பியிருப்பர். உபவாசநாள் அன்று மாலை கோவிலுக்கு சென்று கற்பூர ஆரத்தி காட்டி வணங்கி வழிபாடு செய்வது நலம்.
ஒவ்வொரு சித்ரா பவுர்ணமி அன்றும் நமது பாவ புண்ணிய கணக்குகள் சித்ர குப்தனால் எழுதப்படுகிறது. எனவே சித்ரா பவுர்ணமியன்று சித்ரகுப்தனை நினைத்து விரதம் இருந்து வழிபட்டால், நல்ல பலன்கள் கிடைக்கும். சித்ரா பவுர்ணமி அன்று காலை விரதத்தை ஆரம்பித்து சித்ரா குப்தாய என்று சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பவுர்ணமியிலும் சித்ரகுப்தனுக்கு விரதம் இருந்து அவரை வழிபட்டால் அளவு கடந்த புண்ணியம் கிடைக்கும். வழி படுவோம் பலன் அடைவோம்..!

No comments:
Post a Comment