jaga flash news

Monday, 2 November 2015

காகத்திற்கு உணவிடும் பலன்;

காகத்திற்கு உணவிடும் பலன்;
நாம் தினமும் சாப்பிடும் முன் காகத்ததிற்கு ஒருபிடி உணவாவது வைத்தல் வேண்டும். ஏனெனில் நம்முடைய முன்னோர்களும், பித்ருக்களும், பித்ரு தேவதைகளுமே காகத்தின் வடிவில் வருவதாக ஐதீகம். அவர்களுடைய ஆசியால் தான் நாம் இப்பூவுலகில் அமைதியாக வாழ முடிகின்றது.
எனவே அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் காகத்திற்கு தினந்தோறும் உணவு வைப்பது அவசியமாகும். மேலும் காகத்திற்கு உணவிடும் நல்ல பழக்கத்தினால் கணவன்-மனைவி இடையே ஒற்றுமை வளர்ந்து குடும்பத்தில் எப்போதும் அமைதி நிலவ வழி ஏற்படுகிறது.
மற்றும் காகம் ஸ்ரீசனீஸ்வர பகவானின் பிரியமான வாகனம் என்பதால் நாம் காகத்திற்கு உணவளிப்பதன் மூலம் சனீஸ்வரரின் தீய பலன்களில் இருந்து விடுபடலாம். அது மட்டுமின்றி, பகவானின் பூரண அருளையும் பெறலாம்

No comments:

Post a Comment