jaga flash news

Saturday, 28 November 2015

சக்கரத்தாழ்வார்

சக்கரத்தாழ்வார்
மகாவிஷ்ணுவின் கைகளில் பல்வேறு ஆயுதங்கள் இருக்கின்றன .அவர் வலது கையில் இருக்கும் ஆயுதமான ஸ்ரீ சக்கரம் மிகவும் முக்கியமானது .
சக்கரம் என்பது சக்கரத்தாழ்வாரை குறிப்பதாகும் .பகைவர்களை அழிக்கும் ஆயுதமாக சக்கரத்தாழ்வார் விளங்குகிறார்..கலியுகத்தில்மனிதன் , பிறவிப்பெருங்கடல் சுழலில் சிக்கி, சிறு துரும்பு கிடைக்காதா கரை சேர, என ஏங்கித்தவிக்கும் வேளையில், நான் இருக்கிறேன் உனக்கு , நீ நினைக்கும் துரும்பாக இல்லை, ஆழ்கடலில் நிம்மதியாக வழிநடத்தி உன்னைக் கரை தேற்றும் ஞானக்கப்பலாக, என கலியுக மாந்தர் அனைவரையும், அரவணைத்துக் கடைத் தேற்றும் அற்புத காக்கும் தெய்வம் தான் ஸ்ரீ சக்கராத்தாழ்வார்
சக்கரத்தாழ்வாருக்கு ஸ்ரீ சுதர்சனர் ,ஸ்ரீ சக்கரம் ,திகிரி ,ஸ்ரீ சக்கரம் ,திருவாழியாழ்வான் எனும்
திருநாமங்கள் உண்டு .ஸ்ரீ சுதர்சனர் என்பதற்கு நல்வழி காட்டுபவர் என்று பொருள் .சுதர்சனம் மங்களமானது .
"ஓம் நமோ பகவதே மகா சுதர்சனாய நம " என்று சொன்னால் கிரக தோஷம் விரைவில் நீங்கி விடும் .
இவருக்கு உகந்த நாள் ----வியாழன் ,சனி .
கொடிய முதலையிடம் மாட்டிக் கொண்டு போரிட முடியாமல் ஆதிமூலமே !என்று அலறிய
கஜேந்திரன் என்னும் யானையை காப்பாற்ற முன் வந்ததும் இந்த சக்கரமே .
சிசுபாலன் என்ற அசுரனின் தாய்க்கு அவன் செய்யும் 100 பிழைகளை பொறுத்து கொள்வதாக வாக்களித்தார் கிருஷ்ணன்.சிசுபாலன் 101 வது பிழைகளை புரிய ,கிருஷ்ணனின் ஆணைப்படி ,சீறி எழுந்து அழித்ததும் இந்த சக்கரம் தான் .
விஷ்ணு எப்போதெல்லாம் வைகுண்டத்தை விட்டு மண்ணுலகில் அவதாரம் செய்கின்றாரோ அப்போதெல்லாம் இந்த சக்கராயுதமும் ஓர் அவதார புருஷராகப் பிறவியை எடுப்பது குறிப்பிடத்தக்கது. வராக அவதாரத்தின்போது ஹிரண்யாட்சன் என்னும் அசுரனை அழிக்க வராகத்தின் மூக்குப் பகுதியில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார்.
ஹிரண்யகசிபுவை அழித்தபோது, நரசிம்மரின் கை நகங்களாக இருந்தவர் ஸ்ரீசுதர்சனர். மகாவிஷ்ணு, ராமஅவதாரம் எடுத்தபோது அவரது வில்லில் ஸ்ரீசுதர்சனர் இருந்தார்
பரசுராமர் அவதாரத்தின்போது அவரது ஏர்க்கலப்பையின் சக்தியாக ஸ்ரீசுதர்சனர் இருந்தார். கிருஷ்ண அவதாரத்தின்போது நேரடியாகவும், மறைமுகமாகவும் இருந்து நீதி நிலைக்கப்பாடுபட்டார் ஸ்ரீசுதர்சனர்..
சக்கரத்தாழ்வார் மகிமை சொல்லில் அடங்காத ஒன்றாகும். இவர் மந்திரங்களால் ஆன மூர்த்தி ஆவார். மந்திரங்களால் அதிகமாகத் துதிக்கப்படும் மூர்த்தி என்றும் சொல்லலாம்..
தீயவர்களை அழிக்கவே ,விஷ்ணு கையில் இருக்கும் சக்கரத்தாழ்வார் எனும் ஸ்ரீ சக்கரம்
செயல்படுகிறது .சக்கரத்தாழ்வாரை தினமும் தொடர்ந்து வணங்கி வழிபட்டு வந்தால் கீழ்வரும் பலன்கள் கிடைக்கும். கண்ணுக்கு தெரிந்த, தெரியாத எதிரிகள் எல்லோரும் கூண்டோடு அழிந்து போவர். இவரை எவரும் எதிர்க்க மாட்டார்கள். அனைவரும் இவர்கள் மேல் அன்பைப் பொழிவார்கள்..எங்கெல்லாம் அநியாயமும், அட்டகாசமும், அயோக்கியத்தனமும் நிகழ்கின்றனவோ அங்கெல்லாம் உதவிக்கு வரக்கூடிய மூர்த்தி யார் என்றால் இந்தச் சக்கரத்தாழ்வார்தான்.திருமோகூர் புராதனமான சக்கரத்தாழ்வார் சன்னதியில் உற்சவர் சிலையில் 154 மந்திரங்களும், மூலவர் சிலையில் மந்திரங்களுக்குரிய 48 அதி தேவதைகளும் பொறிக்கப்பட்டுள்ளன. பதினாறு கைகளில் ஆயுதங்களுடன் அக்னி கிரீடத்துடன், ஓடி வரும் நிலையில் காட்சி தருகிறார். ஶ்ரீ சக்கரத்தாழ்வாரை சரணாகதி அடைந்து அவர் தம் தாழ் பணிந்தால், நம் பாவ வினைகளைப் போக்கி, நல் வாழ்வு அமைத்துக்கொடுத்து , நற்கதி அளிப்பார்.
சக்கரத்தாழ்வார்
(எதிரிகளை வெல்ல)
ஓம் சுதர்ஸனாய வித்மஹே
ஜ்வாலா சகராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாஜ்வாலாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
ஹேதிராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
மஹாமந்த்ராய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்
ஓம் சுதர்சனாய வித்மஹே
சக்ரராஜாய தீமஹி
தன்னோ சக்ரஹ் ப்ரசோதயாத்

No comments:

Post a Comment