ஏகாதசி' மகத்துவம்!
பாரதப் போருக்கு முன், பாண்டவ தூதுவராக அஸ்தினாபுரம் சென்றார் பகவான் கிருஷ்ணர். அங்கே, அரண்மனையில் தங்காமல் விதுரரின் வீட்டுக்குச் சென்று உணவருந்தி, இளைப்பாறினார். அவருக்காக காத்திருந்த துரியோதனன் முதலானோர், ''உனக்காக நாங்கள் காத்திருக்க... நீயோ, தகுதிக்குப் பொருந்தாத இடத்தில் தங்கி, உணவு உண்டிருக்கிறாயே...'' என்று ஏளனம் செய்தார்களாம்.
அவர்களிடம், ''இறை நாமத்தை அனுதினமும் உச்சரிக்கிற, இறைவனின் அற்புதங்களையும் லீலைகளையும் உபந்யாசம் பண்ணுகிற பாகவதர்கள் சாப்பிட்டுவிட்டு மீதம் வைக்கும் உணவு தூய்மையானது. சகல பாவங்களையும் போக்கும் சக்தி அந்த உணவுக்கு உண்டு... சுத்தம் பாகவதஸ்யான்னம்!'' என்று பதில் தந்த ஸ்ரீகிருஷ்ணர், விதுரர் வீட்டு உணவின் மேன்மையை அவர்களுக்கு உணர்த்திய துடன், மேலும் சில மேன்மைகளையும் பட்டியலிட்டார்.
''சுத்தம் பாகீரதி ஜலம்
சுத்தம் விஷ்ணு பதத்தியானம்
சுத்தம் ஏகாதசி விரதம்...''
அதாவது, பகவானின் திருவடியில் பட்ட ஒரு துளி தீர்த்தம், கங்கைக்குச் சமமான புனிதம் வாய்ந்தது. பெருமாளின் திருவடியைத் தரிசிப்பது, வைகுண்ட தரிசனத்தைவிட பவித்திரமானது. இத்தனை நற்செயல்களுக்கும் ஈடானது ஏகாதசி விரதம் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
எனில், வைகுண்ட ஏகாதசியின் மகத்துவத்தை கேட்கவும் வேண்டுமா? அதிலும் வைகுண்ட ஏகாதசி துவங்கி, ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசி தினங்களிலும் விரதமிருந்து பெருமாளை வழிபடுவது, மறுபிறப்பற்ற சொர்க்கத்தை தரவல்லது

No comments:
Post a Comment