jaga flash news

Saturday, 4 June 2016

"பொறுத்திரு!


"பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. 
அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கில்லை. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே.
வனுக்கு பகவான் எந்தச் சமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது.
சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.
ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள்.
இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்.

2 comments:

 1. பொறுத்திரு (R) காத்திரு.

  இத் தலைப்புக்கு ஒரு கதை.

  மோரியா மலையின் அடிவாரத்தில், கனிதரும் மரங்கள் ஏராளமாய் இருந்தன. அந்தப் பகுதியில் குறிப்பிடும்படியாய் ஒரு மரம் இருந்தது.
  அந்த மரத்துக்கு *மர்* என்று பெயர்.
  அந்த மரம் மிகவும் உயரம் குறைவானது. ஆனால் மஞ்சள் நிற பூக்களோடும், திராட்சைப் பழ வடிவில்
  அதன் சிறிய கனிகளோடும், பார்ப்பதற்கு மிக அழகாகவும் காணப்பட்டது. நற்கனிகளைத் தேடி சிலர் அந்த மலைக்கு வருவது வழக்கம். அதன்படி, பழங்களைத் தேடி, அநேக மக்கள் வந்தார்கள். ஆனால் அந்த மர் மரத்தின் அருகே ஒருவர் கூட வரவில்லை. மற்ற மரங்களை எல்லாம் விரும்பி நாடிச் சென்றவர்கள், இந்த மர் மரத்தை மட்டும் உதாசீனப் படுத்தினார்கள். இது ஏன் என்று அந்த மர் மரத்துக்கு புரியவேயில்லை. இது அந்த மர் மரத்துக்கு வேதனையைக் கொடுத்தது.

  ஒருநாள் அந்த மர் மரம் பார்த்துக் கொண்டிருக்கையில், அதன் அருகில் நின்ற மரத்தில் அநேகர் பழங்களைப் பறித்தார்கள். ஆனால் அந்த மர் மரத்தை ஒருவர்கூட ஏறிட்டுப் பார்க்க வில்லை. அந்த மர் மரம் மிகவும் மனமுடைந்து போனது.

  இவ்வாறு பார்த்துக் கொண்டிருக்கும் போது, ஒரு சிறுவன் ஓடி வந்து, மர் மரத்தின் கனிகளில் சிலதைப் பறித்தான். மர் மரத்துக்கோ மிகவும் சந்தோஷம். தன் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு சிறு பையன் தன் கனிகளைப் பறித்து புசிக்கப் போவதை ஆவலாய் பார்த்தது. ஆனால் அதற்குள், அந்த சிறுபையனின் தகப்பன் விரைந்து வந்து அவன் கையில் இருந்த, மர்மரத்தின் கனிகளைத் தட்டிவிட்டு, அந்த மர் மரத்தைக் காட்டி, இந்த மரத்தின் உச்சிக் கொப்பு முதல், வேர் வரை அத்தனையும் கசப்பு சுவை உடையது, அதைத் தொடாதே என்றான்.

  மர் மரத்துக்கு அப்போது தான் புரிய ஆரம்பித்தது. தன் பூ, இலை, கனி, மரப்பட்டை, வேர் என்று அத்தனை பாகங்களும், (Bitterness) கசப்பு மிகுந்தது என்று.

  மர் மரம் தன் அருகே நின்றவர்களை எல்லாம் கூப்பிட்டு புலம்ப ஆரம்பித்தது.
  ஐயா! கசப்போடு படைக்கப்பட்டது என் தவறல்ல. என் கசப்புச் சுவைக்கு நான் காரணமல்ல.
  உங்களைப் படைத்த இறைவன் தான் என்னையும் படைத்தார். அவர்தான் இந்த கசப்பை என்னுள் வைத்துவிட்டார் நான் என்ன செய்வது ஐயா, என்னைப் புறக்கணிக்காதீர்கள், என் கனிகளிலும் சிலதை எடுத்துச் செல்லுங்கள் ஐயா, என்று கெஞ்சியது. ஆனால் ஒருவர் கூட அதன் சத்தத்தைக் கேட்கவில்லை.

  மனிதர்கள்தான், தனக்குச் செவி கொடுக்கவில்லை, பறவைகளையாவது கூப்பிடலாம் என்று அவற்றையும் கூப்பிட்டுப் பார்த்தது. ஆனால் பறவைகளோ, நாங்கள் எத்தனையோ கசப்பான மரங்களின் கனிகளைப் புசிக்கிறோம். ஆனால் உன்னுடைய கனிகளைப்போல் கசப்பான கனியை நாங்கள் பார்த்ததில்லை. அது எங்களுக்கு வேண்டாம், அவைகள் புசிக்கத் தகாதவை என்று சொல்லிவிட்டன. *மர் மரம் தன்னுள் உடைந்துபோனது.*

  அந்த மர் மரம் ஈசனை நோக்கி கூப்பிட ஆரம்பித்தது. எத்தனையோ விதமான
  மரங்கள் உள்ளன, ஆனால் எனக்குள் மட்டும் இப்படி ஒரு *கசப்பை* நீர் வைத்ததென்ன? கசப்போடு படைக்கப் பட்டது என்னுடைய தவறா? ஏன் என் வாழ்க்கையில் இந்த கசப்பை அனுமதித்தீர்? என் கசப்பை என்னிடமிருந்து எடுத்துவிடும்,என்னை மாற்றும் என்று கெஞ்ச ஆரம்பித்தது.

  தன்னை நோக்கிக் கூப்பிடுகிற காக்கைக் குஞ்சுகளுக்கும் பதில் கொடுக்கிற இரக்கமுள்ள ஈசன் அல்லவா அவர்.

  ஈசன் பதில் கொடுத்தார். அவர் கொடுத்த பதில் இதுதான்.

  *பொறுத்திரு.* என்பதே. ஈசனுடைய வார்த்தையை நம்பி மர்மரமும் காத்திருந்தது. பல மாதங்கள், வருஷங்கள் கடந்தும் , எந்த மாற்றமும் இல்லை. மர்மரமும், எத்தனைநாள் தான் பொறுத்திருக்கும். ஒருநாள் வியாகுலத்தின் மிகுதியால், ஈசனே! என்னுடைய கசப்பை மாற்றமாட்டீரா?
  என்று ஈசனை நோக்கி கதற ஆரம்பித்தது. அதன் உச்சிகொப்பு முதல் அதன் வேர் வரை ஈசனை நோக்கி கூப்பிட்டது. அதன் உள்ளம் எல்லாம் உடைந்து, அது வேதனையால் தாங்கிக் கொள்ள முடியாமல், மர் மரம் வியாகுலத்தால் *கண்ணீர் விட்டது.*

  அதன் கூக்குரல் ஈசனை எட்டியது. மர் மரத்தின் கசப்பு எல்லாம் கண்ணீராக வெளிப்பட வெளிப்பட அந்த பகுதியில் இருந்த எல்லோரும் ஒரு *தெய்வீக வாசனையை* உணர ஆரம்பித்து வாசனை வந்த திசையை நோக்கி ஓடி, அந்த வாசனை மர் மரத்தில் இருந்து தான் வருகிறது என்று எல்லோரும் அறிந்து கொண்டார்கள்.

  மர் மரம் வடித்த அதன் கசப்பான கண்ணீர், அதன் தண்டைச் சுற்றிலும் *பிசினாக* வடிந்து நின்றது. எல்லோரும் அதைப் போட்டி போட்டு பொறுக்கினார்கள்.

  அந்த கசப்பான மர் மரத்தின் கண்ணீர் தான்(பிசின்) *வெள்ளைப்போளம்.*

  மர் மரத்தின் கசப்பு, தெய்வத்தின் பார்வையிலே மட்டுமல்ல, உலகத்தின் பார்வையிலும், வெள்ளைப்போளம்(Myrrh Tears) எல்லாரும் விரும்பத்தக்க ஒன்றாய், *தங்கத்தைக் காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.*

  மர் மரத்தின் Bitter அதன் Better ஆக மாறியது.

  மர் மரத்தைப் போல், உங்கள் வாழ்க்கையில், நீங்கள் சந்தித்த நிகழ்வுகள், உங்கள் வாழ்க்கையை கசப்பாக்கி, தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறீர்களா? கலங்க வேண்டாம்.


  ReplyDelete
 2. நீங்கள் ஈசனின் பார்வையில் வெள்ளைப்போளம். வெள்ளைப்போளத்திற்கு ஒரு சிறப்பு உண்டு. அது எதன் மீதெல்லாம் படுகிறதோ அவை எல்லாவற்றையும் இனிமையானதாக மாற்றிவிடும்.

  மர் என்ற பெயரில் இருந்து தான் மாரா என்ற சொல் பிறந்தது. உங்கள் வாழ்வின் கசப்பான அனுபவங்களுக்குள், அநேகருடைய வாழ்வின் கசப்பை மாற்றும் வல்லமையை பகவான் வைத்திருக்கிறார்.

  ஈசனை நம்புங்கள். நம்பிக்கையுடன் கேளுங்கள். *பொறுத்திருங்கள்*. உங்கள் Bitterness எல்லாம் Betterness ஆக மாறும். உங்கள் கசப்பு எல்லாம் களிப்பாக மாறும். ஏனெனில் நீங்கள் ஈசனின் பார்வையிலே வெள்ளைப்போளம்.

  ReplyDelete