jaga flash news

Saturday 10 December 2016

ஜோசியருக்கு பெரியவாளின் அறிவுரை

'உங்க ஜாதகத்திலே குரு நீசன்,சனி பாபி,புதன் வக்ரம்'
இப்படியெல்லாம் வாயால் சொல்லக்கூடாது
(ஜோசியருக்கு பெரியவாளின் அறிவுரை)
கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-14
தட்டச்சு-வரகூரான் நாராயணன்
புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்
ஒரு ஜோசியர், பெரியவாளை தரிசனம் செய்து
.கொண்டார்.
"பெரிய குடும்பம்,வருமானம் போறல்லே,ஜோசியம்
சொல்றதிலே வரும்படி குறைவு.ரொம்ப கஷ்டம்"
என்று முறையிட்டார்.
பெரியவா கேட்டார்கள்; "நீ உங்கப்பா இருந்த
பூர்வீக வீட்டில்தானே இருக்கே?"
"இல்லே.அதில் என் அண்ணா இருக்கார். அதற்கு
மேற்குப் பக்கம் ஒரு வீட்டில் குடியிருக்கேன்".
"நீ அங்கே இருக்க வேண்டாம்.பூர்வீக கிருஹத்துக்குக்
கிழக்கே,பழைய மாட்டுக் கொட்டகை இருக்கோன்னோ?
அந்த இடத்திலே ஒரு குடிசை போட்டுண்டு குடியிரு".
(அவர்கள் பரம்பரையாக அம்பாளைப் பூஜை செய்த
குடும்பமாம். அதனால் பசு மாட்டுக் கொட்டகையில்
இருக்கச் சொன்னார்)
பெரியவாள் மேலும் சொல்கிறார்;
"எல்லாக் கிரகங்களையும் நன்னாத் திட்டறயோன்னோ,
'உங்க ஜாதகத்திலே குரு நீசன்,சனி பாபி,புதன் வக்ரம்'
இப்படியெல்லாம் வாயால் சொல்லக்கூடாது.
"குரு என்பது பெரிய கிரகம்.தட்சிணாமூர்த்தி ஸ்வரூபம்
அவரைப் போய் நீசன்,பாபி,வக்ரம் என்றெல்லாம்
திட்டக்கூடாது.சனி என்பவர் சூரியனின் புத்திரன்
ஈஸ்வர பட்டம் பெற்றவர்.அவரைப் போய் பாபி என்கிறே.
"கிரகங்கள் சரியான இடத்தில் இல்லை, கால பலன்
சரியில்லை'ன்னு பொதுவாகச் சொன்னால் போதுமே?
"பெண் பிள்ளை ஜாதகப் பொருத்தம் பார்க்க
வருகிறவர்களிடம். 'பொருத்தமில்லை' என்று
நிர்த்தாட்சண்யமாகச் சொல்ல வேண்டாமே...
பெண்ணுக்கு விவாக காலம் வர நாளாகும்;
பையனுக்குப் புத்திர பாக்கியம் போன்றவை
கேள்விக்குறி' என்கிற மாதிரி சொல்லி விடலாம்.
" முப்பது வயதாகியும் பல பெண்கள் கல்யாணம்
ஆகாமல் இருக்கிறார்கள்.அப்படிப்பட்டவர்களுக்கு
வரன் ஜாதகப் பொருத்தம் பார்க்க வந்தால் கூடியவரை
நிராகரிக்காமல் பதில் சொல்லணும்...."
(கல்யாண விஷயத்தில் ஆண் - பெண் ஜாதகப்
பொருத்தத்துக்குப் பெரியவாள் அதிக மதிப்பு
கொடுப்பதில்லை.குலம்,கோத்திரம் பார்த்து
மனப் பொருத்தம் இருந்தால் போதும். பழங்காலத்தில்
ஜாதகப் பொருத்த விஷயம் இவ்வளவு
முக்கியமானதாக இருந்ததில்லை என்பார்கள்.)
ஜோசியருக்கு ரொம்ப திருப்தி.
"இனிமே பெரியவா சொன்னபடியே செய்கிறேன்"
என்று சொல்லிவிட்டு பிரசாதம் பெற்றுக் கொண்டார்.

1 comment: