லட்சுமி குபேர விரதம் கதை
விச்ரவசு என்ற முனிவரின் மகன் வைஸ்ரவணன். குழந்தையாக இருந்தபோதே பிரம்மாவை நோக்கி தவம் இருந்தான். உணவு, தண்ணீர் இல்லாமல் வெறும் காற்றை மட்டும் சுவாசித்தபடி கடும் தவம் இருந்த அவனது பக்தியை மெச்சி, பிரம்மா தரிசனம் தந்தார்.
உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். உங்களை தரிசிப்பதைவிட வேறே என்ன பாக்கியம் எனக்கு வேணும்? இதைவிட நான் வரமாக எதைக் கேட்பது? என்றான் குழந்தை. இப்படி செல்வங்கள் மீது பற்றற்ற பக்திமானாக அவன் இருப்பதைப் பார்த்து சிலிர்த்த பிரம்மா, அவனை அஷ்டதிக்கு பாலகர்களில் ஒருவராக்கி, எல்லா செல்வங்களையும் பாதுகாக்கும் அதிபதி ஆக்கினார்.
அப்போதிலிருந்து வைஸ்ரவணன் என்கிற பெயர் மாறி குபேரன் என ஆனது. எல்லா செல்வங்களும் அவனிடம் சேர்ந்ததால், அவன் லட்சுமி குபேரன் ஆனான். வைஸ்ரவணன் போல கடுமையான தவமோ, விரதமோ நம்மால் இருக்க முடியாதுதான்.
ஆனால் எளிமையாக லட்சுமி குபேர விரதத்தைக் கடைபிடித்தால் நிம்மதியாக வாழவும், நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவும் போதுமான செல்வத்தை அருள்வார்கள் லட்சுமியும் குபேரனும்!
எந்த திசையில் அமர்ந்து செய்வது?....
பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி இருப்பது நல்லது. பொதுவாக மேற்கு பார்த்தபடி இருந்தால், அதன் எதிரே அமர்ந்து கிழக்கு திசையைப் பார்த்து பூஜை செய்வது வசதி. வீட்டில் இப்படிச் செய்வது வசதிப்படவில்லை என்றால், வடக்கு திசை பார்த்துகூட பூஜை செய்யலாம்.
என்ன பலன்?
நமது வாழ்வில் ஏற்படும் சங்கடங்கள் அகலவும், காரியத்தடைகள் நீங்கவும், கடன் பிரச்னைகளிலிருந்து மீளவும், இல்லத்தில் வளம் கொழிக்கவும், செல்வம் செழிக்கவும் லட்சுமி குபேரன் ஆசி தருவான்!
Nice Information.
ReplyDelete