jaga flash news

Saturday 10 December 2016

சிவகணங்களே

சிவன் கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்த பிறகு வெளியே வரும்போது அவசியம் சிறிது நேரம் அமர்ந்து விட்டு கூற வேண்டிய மந்திரம்:
சிவ தரிசனம் செய்ய நாம் சிவன் கோவிலுக்குள் நுழையும் போதே, சிவ தூதர்கள் {சிவ பக்தர்கள்} வந்து நம்மை அழைத்துச் செல்வதுடன் நாம் தரிசனம் முடித்து திரும்பும்வரை நம் கூட இருந்து ஆலயத்தை விட்டு நாம் வெளியேரும்போது அவர்கள் கோவில் வாசல் வரை நம்மை பின் தொடர்ந்து வருகிறார்கள். அப்போது அவர்களிடமிருந்து நாம் விடைபெறும் நோக்கத்துடன் கீழ்கண்ட ஸ்லோகத்தைச் சொல்லி அங்கேயே சிறிது நேரம் தங்கிவிட்டு வெளியேற வேண்டும்.
மஹாபலி முகா ஸர்வே, சிவாக்ஞா பரிபாலகா:
மயா ஸம்ப்ராத்திதா: யூயம் வர்த்த்வம் சிவ ஸன்னிதௌ.
ஸ்லோகத்தின் பொருள்:
சிவனின் கட்டளையை நிறைவேற்றுவதற்காக காத்திருக்கும் மஹாபலி முதலிய சிவகணங்களே. நீங்கள் அனைவரும் எனது வேண்டுகோளை ஏற்று இங்கேயே {சிவ சன்னிதியிலேயே} இருங்கள். என்று ப இந்த ஸ்லோகத்தை சொல்லி {கோவில் வாசற்படியில் அமராமல் வாசலுக்கருகில் ப்ராகாரத்திலோ கோவிலின் வெளிப்புறத்திலோ} சிறிது நேரம் அமர்ந்து விட்டு ஆலயத்திலிருந்து வெளியேற வேண்டும்.

1 comment: