jaga flash news

Saturday 10 December 2016

ஸ்ரீராம ஜெயம் என்றால்?

    ஸ்ரீராம ஜெயம் என்றால்?
    இலங்கையிலே ராமனுக்கும், ராவணனுக்கும் போர்...
    அசோகவனத்திலே இருந்த சீதாதேவியின் மனத்திலும் போர்...தன் கணவர் வெற்றிவாகை சூடிவிட்டாரா...தகவல் ஏதுமில்லையே என்று! அப்போது, சீதாதேவி முன்னால் வந்து நின்ற அனுமன், "ஸ்ரீராம ஜெயம்' என்று ஆர்ப்பரித்தார்.
    ராமன் ஜெயித்துவிட்டார் என்பதை ஒரே வார்த்தையில் சொல்லி முடித்து விட்டார். அதனால் தான், அவர் சொல்லின் செல்வர் ஆனார்.
    பல சந்தர்ப்பங்களில், அவர் தனது சுபமான வார்த்தைகள் மூலம் சீதாராமருக்கு உயிரூட்டி இருக்கிறார்.
    "ரா' என்றால் "அக்னி பீஜம்'. "பீஜம்' என்றால் "மந்திரம்'. அது அகங்காரத்தை அழிக்கும் தன்மை யுடையது.
    "மா' என்றால் "அமிர்த பீஜம்'. அது மனதில் அன்பை நிறைக்கிறது.
    அகங்காரத்தை நீக்கி, மனதில் அன்பை நிறைப்பதே ராமநாமம்.
    "ராம' என்று சொன்னால் ஒரு செயலில் வெற்றி கிடைத்து விடும். அதனால் தான் "ராம'வுடன் "ஜெயம்' (வெற்றி) சேர்க்கப்பட்டது.
    அனுமனின் வெற்றிக்கு காரணம் என்ன தெரியுமா?
    அவர் 33 கோடி தடவை "ராம' நாமம் சொல்லியிருக்கிறார்.
    அதிலும், பலனை எதிர்பாராமல் அந்த நாமத்தைச் சொன்னதால், இன்றும் நம்மோடு வாழும் சிரஞ்சீவியாக இருக்கிறார்.
    ராமபாணம் எதிரிகளை வீழ்த்தும்.
    "ஸ்ரீராம ஜெயம்' எதிரிகளை நம் அருகிலேயே வரவிடாமல் தடுத்துவிடும்.
    வடஇந்தியாவில் உள்ள பக்தர்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என அனுஸந்திப்பதை மூச்சுக்காற்றாகக்கொண்டுள்ளனர்....
    அந்தி, காலை, நடுப்பகல் ஆகிய மூன்று வேளைகளும் புண்ணிய தீர்த்தமாடுகின்ற பலன் ராம நாம உச்சரிப்பில் கிடைக்கும். சந்தியாவந்தனம், முன்னோரை நோக்கிச் செய்யும் தர்ப்பணம், தவங்கள், செபங்கள் இவற்றால் கிடைக்கும் பயனும், ராம உச்சரிப்பில் கிடைக்கும். உள்ளத்தில் உருப்பெரும் அறிவும் ராம நாமத்தால் நன்கு வளர்ச்சியடையும் .
    ஸ்ரீராம ஜெயம்! ஸ்ரீராம ஜெயம்! ஸ்ரீராம ஜெயம் !!!
    LikeShow More Reactions
    Comment
    Comments
    Jagadeesan Naidu
    Write a comment...

No comments:

Post a Comment