jaga flash news

Tuesday 7 February 2017

பூணூலை வலது தோளில் போடுவது ஏன்

பித்ரு காரியம் செய்யும் போது பூணூலை வலது தோளில் போடுவது ஏன்!ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய அருமையான விளக்கம்:
தெய்வ காரியங்களுக்கு பக்தி வேண்டும். பித்ரு காரியங்களுக்கு சிரத்தை வேண்டும். பக்தியோடு செய்வது யக்ஞம்; சிரத்தையோடு செய்வது சிராத்தம்.
தெய்வகாரியங்களைப் பண்ணும்போது சிகையை நன்றாக முடிந்து கொண்டு, யக்ஞோபவீதம் (பூணூல்) இடது தோளில் இருக்கும்படியாக, பக்தியோடு செய்ய வேண்டும்.
பித்ரு காரியங்களைச் செய்யும்போது சிகையை முடியாமல், யக்ஞோபவீதம் (பூணூல்)வலது தோளில் இருக்கும்படியாக, சிரத்தையோடு செய்ய வேண்டும்.
இதற்காகத்தான் சிகை, யக்ஞோபவீதம் (பூணூல்)இரண்டும் இருக்கின்றன.
சந்நியாசிகளுக்கு இவை இரண்டும் இல்லை. பித்ரு காரியத்தையும், பல தேவதைகளின் உபாஸனையையும் விட்டுவிட்டு, நேரே பரமாத்ம உபாஸனையை எந்தவிதமான லௌகிக அபேக்ஷையும் இன்றிச் செய்பவர்கள் அவர்கள்.
நேராகவே கடவுளிடம் போகிற பிற மதத்தவர்களுக்குசிகை, யக்ஞோபவீதம் இல்லை.
ஏன் இப்படித் தேவர்களுக்கு இடது தோளில் பூணூலோடும், பித்ருக்களுக்கு வலது தோளில் பூணூலோடும் காரியம் பண்ண வேண்டும் என்று சொல்கிறேன்:
கிழக்கு முகமாக இருந்து கொண்டே காரியங்களைச் செய்ய வேண்டும். வடக்கு தேவர்களிடம் போகிற திசை, உத்தராயனம் என்பது அதுதான். உத்தரம் என்றால் வடக்கு.
தெற்கு பித்ருக்கள் இருக்கும் பக்கம். 'தென்புலத்தார்' என்று திருவள்ளுவர்கூடச் சொல்கிறாரல்லவா?
தக்ஷிணம் என்றால் தெற்கு. தக்ஷிணாயனம் என்பது பித்ரு லோக மார்க்கம்.
' உத்தராயணம்' என்பதில் மூன்று சுழி
------------
'ண ' போட்டும், ' தக்ஷிணாயனம் '
------------
என்னும்போது இரண்டு சுழி 'ன' போட்டும் சொல்ல வேண்டும்.
'அயனம்' என்றால் மார்க்கம், வழி என்றும் அர்த்தம். 'உத்தர' என்பதில் வருகிற 'ர' காரத்தினால் 'ன' என்பது ' ண ' வாக மாறிவிடும். இது வியாகரண விதி. தற்காலத்தில் மனம் போனபடி பத்திரிகைகளில் எழுதுவதால் இதைச் சொல்ல நேர்ந்தது...
உத்தராயண தேவ மார்க்கத்தையும், தக்ஷிணாயன பித்ரு மார்க்கத்தையும் பற்றிப் பகவான் கீதையில் சொல்லியிருக்கிறார்.
நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு பித்ரு காரியம் பண்ணும்போது, எந்தத் தோள் தெற்குப் பக்கமாக இருக்கிறது? வலது தோள்தான்.
அதனால்தான் பித்ரு காரியத்தில் யக்ஞோபவீதம்(பூணூல்) அந்தத் தோளின்மேல் இருக்கும்படியாகப் போட்டுக்கொள்ள வேண்டும் என்பது.
"பிரதக்ஷணம் பண்ணுவது" என்கிறோமே, இதற்குக் கூட தக்ஷிண (தெற்கு) திசையை நோக்கிப் போவது என்றுதான் அர்த்தம்.
முக்காலே மூன்றுவாசிக் கோயில்களில் ராஜகோபுரம் கிழக்குப் பார்க்கத்தான் இருக்கும். அதற்குள் நுழைந்து நாம் பிரதக்ஷிணம் ஆரம்பிக்கும்போது, முதலில் தெற்குப் பார்க்கத்தான் போவோம்.
இதே மாதிரி, நாம் கிழக்குமுகமாக இருந்துகொண்டு தேவகாரியம் பண்ணும்போது, தேவர்களின் திசையான வடக்கு திசையைப் பார்க்க இருப்பது நம்முடைய இடது தோள்தான். அதனால்தான், தேவ காரியங்களில் பூணூல் இடது தோள்மேல் இருக்க வேண்டும் என்பது.
- ஸ்ரீ சங்கரசேகரேந்திர சரஸ்வதி

No comments:

Post a Comment