jaga flash news

Thursday, 9 April 2020

உணவை மருந்தாக்கு !! மருந்தை உணவாக்காதே !!!



உணவை மருந்தாக்கு !!
            மருந்தை உணவாக்காதே !!!

கீரைகள்  " நடமாடும் சித்தர்கள் "

தலைப்பு   : இடுப்பு வலி மற்றும் உடலில் உண்டாகும் அனைத்து வகை வாயுக்களையும் குணப்படுத்த உதவும் உன்னதமான கஞ்சி
------------------------------------------------

பிரண்டைக் கஞ்சி
---------------------------------------------------

தேவையான பொருட்கள்
---------------------------------------------
 பிரண்டை.                 -  ஒரு கைப்பிடி

முருங்கை இலை.     -  ஒரு கைப்பிடி

தூது வளை.               -   ஒரு கைப்பிடி

அரிசி நொய்.             -   100 கிராம்

செய்முறை
---------------------------------------
முதலில் பிரண்டை , முருங்கை இலை மற்றும் தூதுவளை ஆகியவற்றை சம அளவு எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து கால் லிட்டராகும் வரைநன்கு கொதிக்க வைக்க வேண்டும்.

பின்பு கொதிக்க வைத்து நீரை வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

வடிகட்டிய நீருடன் அரிசி நொய்யைப் போட்டு நன்கு வேக வைத்து கஞ்சியாக காய்ச்சி  இறக்கி வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்
----------------------
இந்தக் கஞ்சியை இரண்டு பாகமாக பிர்த்து தினமும் காலை மற்றும் மாலை என இரண்டு வேளை குடித்து வந்தால் தீராத இடுப்பு வலி மற்றும் உடம்பில் உண்டாகும் வாயுக்கள் அனைத்தையும் குணப்படுத்த உதவும் உன்னதமான ஆரோக்கிய கஞ்சி.

இரவு படுக்கப் போகும் முன்
---------------------------------------------------
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு
----------------------------------------
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும்.

பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும்

வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்.

No comments:

Post a Comment