திரிபலா இரஸாயனம்
நோய் எதிர்ப்பு சக்தி ஆயுள் நீட்டிக்க..
செய்பாகம்:
நெல்லி வற்றல்
கடுக்காய் தோல்
தான்றிக்காய் தோல்
திப்பிலி
வகைகக்கு 50 கிராம்
மேற்கண்ட கடைசரக்குகளை தூசி போக புடைத்து நீரில் அலாசி காயவைத்து தூள் செய்து அதற்கு தேவையான அளவு தேன் விட்டு பிசைந்து பஞ்சாமிர்த பதமாக எடுத்து கொள்ளவும்.
மேற்கண்ட இரஸாயனத்தை பெரியோர்களுக்கு சிறு நெல்லி பிரமாணமும் சிறுவர்களுக்கு சுண்டக்காய் பிரமாணம் வெந்நீரில் தினம் இருவேளை சாப்பிட
சளி இருமல் இரைப்பு சுவாச காசம் இரத்த சோகை தீரும். உடலுக்கு பலமும் நோய் எதிர்ப்பு சக்தியும் உடலுக்கு தீங்கும் செய்யும் நுண்ணுயிரிகளுக்கு (வைரஸ் பாக்டீரியா போன்ற) தடுப்பாகவும் மேலும் ஞபாக சக்தியும் புத்தி தெளிவும் மேலான மதி நுட்பமும் தேகம் மற்றும் மன நலத்துடன் ஆயுளையும் நீட்டிக்கும் ஒர் கற்ப இரஸாயனம்மாகும்.
சமயோசிதம் போல் சகல நோய்களுக்கும் அதற்கான மருந்துகளுடன் இந்த இரஸாயனத்தையும் சேர்த்து சாப்பிட அந்நோய்கள் துரிதமாக குணமாகும்.
நோய் நொடி இல்லாமல் ஆரோக்கியமாகவும் ஆயுளையும் நீட்டிக்க தினமும் சாப்பிட கூடிய இலகுவான காய கற்பம்.
குறிப்பு:மேற்காணும் திரிபலா சூரணத்திற்கு சம அளவு பனங்கற்கண்டும் கலந்து அரை முதல் ஓரு தேக்கரண்டி வீதம் வெந்நீரில் தினம் இருவேளை சாப்பிடலாம்.
சித்தர் நியூஸ்✍
No comments:
Post a Comment