jaga flash news

Saturday, 11 April 2020

அந்திமல்லி:

அந்திமல்லி:

  • அந்திமல்லி இலையைய சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி எடுத்து பழுக்காத கட்டிகளின் மீது சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி வதக்கிய இலைகளை அதன் மீது பரவலாக ஒட்டி வைக்க கட்டிகள் விரைவில் உடைந்து சீழ் வெளியேறி சீக்கிரத்தில் குணமாகும்.
     
  • அந்திமல்லிக் கிழங்கை சுத்தம் செய்து நெய்விட்டு வதக்கி 10 முதல் 15 கிராம் அளவு வரை அன்றாடம் உண்டு வர உடல் பலம் பெறும்.
     
  • அந்திமல்லி சாறு எடுத்து இரண்டு தேக்கரண்டி அளவு சாற்றோடு போதிய தேன் கலந்து உள்ளுக்குக் குடிப்பதனால் பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப்படுதல் மற்றும் அதனால் ஏற்படும் அரிப்பு, புண் ஆகியவை குணமாகும்.
     
  • அந்திமல்லி இலைகளை சேகரித்து மைய அரைத்து சாறு எடுத்து தோலில் தடிப்புடன் கூடிய நமைச்சல் ஏற்படும் போது மேலே பூசிவந்தால் நமைச்சல் அடங்குவதோடு சில்லென்று சுகமாய் இருக்கும்.
     
  • அந்திமல்லியின் வேர்ப் பகுதியைக் எடுத்து நன்றாகக் கழுவி சுத்திகரித்து அதன் மேல் தோலை சீவி நீக்கிவிட்டு கிழங்கு பகுதியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி மைய அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் குணமாகும்.
     

குறிப்பு :
அந்திமல்லிக்கு வேறுபெயர் – அந்திமந்தாரை , பத்தராஷி
ஆங்கிலப் பெயர் – FOUR “O “ CLOCK FLOWER
தாவரவியல் பெயர் – MIRABIBIS  
இது இந்தியாவில் தோட்டங்களில் அலங்காரமா இருக்க பயிரிடப்படுகிறது. இது மாலை, 3  மணிக்கு பிறகுதான் மலரும். இதன் பூ வெண்மை, மஞ்சள், செம்மை, கலப்பு நிறமுள்ளதாகவும் கண்கவரும் வகையிலும் இருக்கும்.

No comments:

Post a Comment