jaga flash news

Saturday, 11 April 2020

நெருஞ்சில்



தாவரத்தின் பெயர்- நெருஞ்சில் 
(Tribulus terrestis)

#சிறுநீரகம்_தொடர்பான பிரச்சினைகளுக்கு அருமருந்தாகும்

நெருஞ்சிலுக்கு காமரசி, அக்கிலி,திரிகண்டம்,சுதம் சுவதட்டம்,விடுதலை இலை என்ற பெயர்களும் உண்டு

ஆண்மை பெருக,காமாலை, நீர்க்கட்டு,வெட்டை,படை சிரங்கு,
#கிட்னி_கல்_அடைப்பிற்கு_மிகவும் சிறப்பான மருந்தாகும்.சிறுநீர் அடைப்பு சிறுநீர் வெளியேறுவதில் சிரமம், பெண்களுக்கு வெள்ளைப்படுதல், சிறுநீரக வீக்கம், சிறுநீரகத்தில் சதை வளர்ந்து சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு இருப்பது 
( #kidney_prostate_problems)
போன்ற பிரச்சினைகளை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்துவதில் நெருஞ்சிலுக்கு ஈடான மூலிகை எதுவும் இல்லை.

(பி.கு) தகவல்கள் அனைத்தும் இயற்கை சார்ந்த புத்தகங்களில் படித்தது.
எனது நோக்கம் நமது பாரம்பரியம் பற்றியும் இயற்கையான தாவரங்கள், மரங்களை பற்றி விழிப்புணர்வு தருவதுதானே தவிர நான் மருத்துவர் கிடையாது.

நெருஞ்சில் பல வகை உண்டு 

மேற்கண்ட பிரச்சினைகள் உள்ளவர்கள்
அருகில் உள்ள பாரம்பரிய சித்த
மருத்துவரை சந்தித்து அவர் ஆலோசனைப்படி நடந்து கொள்ளவும்.
சுய மருத்துவம் வேண்டாம்.

No comments:

Post a Comment