எது யதார்த்தமான பக்தி.
........................
மனிதர்கள் தங்களது சொந்த காரியங்கள் நிறைவேற்றுவதற்கும், நிறைவேறுவதற்கும், துன்பங்கள் வந்து தங்களை வாட்டி வதைக்கும் போதும், உலகத்தில் உள்ள சகல சம்பத்துகளும், சௌக்கியங்களும், மற்றவர்களை விட தனக்கு ஒரு படி அதிகம் வேண்டும், என்பது அது யதார்த்தமான பக்தி கிடையாது,
அது பக்தி கிடையாது,
வேண்டுதல்கள் , அதனுள்ளில் நுழைந்து யோசித்தால் சுயநலம் நிறைந்த கபடம் நிறைந்திருக்கும்,
இந்த உலகத்தில் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது அனைத்தும் ஈஸ்வரனால் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது ஆதால் அந்த சிருஷ்டி சுகங்கள் காசு கொடுத்தால் வாங்கலாம்,
ஆமாம் காசு கொடுத்தால் வாங்கலாம்.
அந்த காசை இறைவன் கொடுக்க வேண்டும் என்கின்ற மண்டத்தரமான. வேண்டுதல்கள் , அது ஒரு முட்டாள் தனமான பிரார்த்தனை,
பாரதீய பகவான்கள் நாசிக் நகரில் இந்திய கரன்சி நோட்டடிக்கும், இயந்திரங்களை தங்கள் அருகில், அதாவது க்ஷேத்ரங்களில் வைத்திருக்கவில்லை,
யார் பக்தர்கள்??
தங்களுடைய ஜென்மஜென்மாந்தர சஞ்சித பாப, புண்ணிய கர்ம்மங்கள் அடிஸ்தானத்தில் இந்த பிரபஞ்சத்தில் பிறந்து வாழ்கிறோம்,
அதில் தோல்விகளும். விஜயங்களும் உண்டு,
காரணம் இல்லாமல் காரியம் இல்லை!
காரீயம் இல்லாமல் காரணம் இல்லை, ஆட்டுவிக்கிறான் ஆடுகின்றோம்
தங்களுடைய மனோ துக்கங்கள் தங்களுடைய சிருஷ்டி கர்த்தவான தேவன், தேவிகளிடத்தில் பங்கு வைத்த பின்,
, பகவான் பார்த்து கொள்வார்,
என்பது தான் யதார்த்த பக்தி,
யாருக்கு!
எப்போது!
எங்கு!!!
எதை கொடுப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தி மனிதர்களுக்கு உண்டா? என்று கேட்டால் அது இல்லை.
Men proposas,
god disposed!!
மனிதன் நினைப்பதுண்டு!
வாழ்வு நிலைக்குமென்று!
இறைவன் நினைப்பதுண்டு!!!
பாவம் மனிதனென்று!!!
மனிதன் நினைக்கின்றான்!
இறைவன் அதை மாற்றுகின்றான்!!
எனக்கு இன்று இது நடக்கும் என்பது, ஈஸ்வரன் முன்கூட்டியே தெரிந்திருக்கிறார், என்றும்,
ஈஸ்வரன் தான் இந்த பிரபஞ்சத்தின், ஸர்வ குணங்களுக்கும், சக்திகளுக்கும், காரண கர்த்தா ஆகின்றார் என்றும்,
எனது சஞ்சித கர்ம்மத்தின் அடிஸ்தானத்திலும், இப்போது நடக்கும் ஆகம கர்ம்மா அடிஸ்தானத்திலும், எனக்கு பகவான் கொடுக்க வேண்டியது நிச்சயம் கொடுப்பான்,
ஒவ்வொரு கோதுமையின் நெற்றியிலும் அது எந்த வாயில் உணவாக போக வேண்டும் என்பது பகவானின் தீர்மானம் மட்டுமே.
இதை புரிந்து கொள்பவர்கள் தான் யதார்த்த பக்திமான்கள்
No comments:
Post a Comment