ரத்த கொதிப்பு/ரத்த அழுத்தம் (BP) குறைந்து நல்ல தூக்கம் வர வெங்காய டீ
வெங்காய டீ செய்ய தேவையான பொருட்கள்:
◆வெங்காயம் -1 (பொடியாக நறுக்கியது) சிறிய வெங்காயம் அல்லது பெரிய வெங்காயம் ஏதேனும்
◆பூண்டு – 2-3 பல்
◆தேன் – 1 டீஸ்பூன்
◆தண்ணீர் – 1-2 கப்
◆எலுமிச்சைச் சாறு – வேண்டுமானால்
◆பிரியாணி இலை அல்லது பட்டை – விருப்பப்பட்டால்
#செய்முறை
முதலில் ஒன்றரை கப் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடவும்.
நீர் கொதிக்கும் போது அதில், பிரியாணி இலை நறுக்கிய வெங்காயத்துடன், பூண்டையும் தட்டி சேர்த்துக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு இரண்டும் நன்கு நீரில் கொதித்து, நீரின் நிறம் நன்கு மாறிய பின்னர் அடுப்பை அணைத்திடவும்.
இப்போது அந்த கலவையை ஒரு கப்பில் வடிகட்டிக் கொள்ளவும்.
அத்துடன், எலுமிச்சைச் சாறு, சுவைக்கேற்ப தேன் கலந்து குடிக்கலாம். வேண்டுமானால் பட்டை பொடி சிறிது சேர்த்து குடித்தாலும் நன்றாக இருக்கும்.
இந்த டீயை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக போடுவது உண்டு. ஆனால், இதில் வெங்காயம் தான் முக்கியமானது. இந்த டீயை தினமும் காலை வேளையில் குடித்து வந்தால் சுறுசுறுப்பாக இருப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment