#சனி_சந்திரன் சேர்க்கை
வேகமாக பிரயாணிக்கும் சந்திரனும் மெதுவாக பிரயாணிக்கும் சனியும் ராசிக்கட்டத்தில் சேர்க்கைப் பெற்று அமரும் போதோ, சமசப்தமாக அமரும் போதோ, சார பரிவர்த்தனையாக அமரும் போது,
உடல் சோர்வு அடைவது,
உடல் குளிர்ச்சி அடைவது
மந்தமான செயற்பாடுகள்,
பழைய உணவுகளை உட்கொள்வது,
மெதுவாக உண்ணுவது
குளிர்பான பிரியர்.
தயிர்
புளிப்பு உணவு
பனங்கள்ளு
மந்த பார்வை
மலச்சிக்கல்
தகாத பெண்களின் தொடர்பு
மந்தமான தாய்
விறுவிறுப்பாக தொழில்
குறைவான வருமானம்
அடிக்கடி தலைவலி,
அச்ச உணர்வு,
பரபரப்பு,
படபடப்பு
இரவை நேசிப்பது
இச்சேர்க்கை நீர்வற்றிய குளத்தை குறிக்கும்.
சனி எனும் ஊனக்கிரகத்துடன் சேரும் உடல் காரகன் சந்திரன் பெறுகின்ற பலத்தை பொருத்து உடல் ரீதியாக ஊனத்தை தரவும் கூடும்.
இச்சேர்க்கையில் சந்திரனின் ஆதிபத்யம் மந்தமாகவும், சனியின் ஆதிப்யம் விறுவிறுப்பாகவும் இருக்கும்.
இச்சேர்க்கையோ,சமசப்த பார்வையோ, சார பரிவர்த்தனையோ #புனர்பூ_தோஷத்தை உண்டாகிறது.
இத்தகைய தோஷம் திருமணத்தை மேடை வரை சென்றும் தடை செய்ய கூடிய அமைப்பு ஆகும்.
சந்திரன் பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில் அமரும் போதோ, சனி ரோகிணி, அஸ்தம், திருவோண நட்சத்திரத்தில் அமரும் போது திருமணம் சார்ந்த தடைகள் உண்டாவதை நடைமுறையில் காணக்கூடியதாக உள்ளது.
#பரிகாரம்: பிரதோஷ வழிபாடு செய்வது, சிவலிங்கத்தின் மீது பால் பார்வதி தேவிக்கு தயிரும் ஊற்றி அபிஷேகம் செய்ய தோஷம் குறையும். வரண்ட நிலத்தில் சிவலிங்கம் வைத்து அபிஷேகம் செய்ய தோஷம் குறையும். வறுமையான மக்களுக்கு உண்ண உணவு நீர் வாங்கிக் கொடுப்பது.
No comments:
Post a Comment