#சந்திரன்_ராகு இணைய மனநிலை பதற்றம் இருந்து கொண்டே இருக்கும்.அசட்டு தைரியம். எந்த பாவகத்தில் இவ்விணைவு உள்ளதோ என்ன ஆதிபத்யங்கள் தொடர்புபடுகிறதோ அவைகள் சார்ந்த மனபதற்றம் இருக்கும். தாய்க்கும் ஜாதகருக்கும் இடையே பிரச்சினைகள் வரும். உணவுகளை உண்ணுவதில் விருப்பம். ஜாதகர் ஒரு இடத்தில் இருக்கமாட்டார். எதையாவது செய்து கொண்டே இருப்பார். தன்னை தானே நேசிப்பார்கள்.
ஆறாம் பாவகத்துடன் இச்சேர்க்கை தொடர்புபட தோல் நோய், விஷபூச்சி கடி, லக்னம் மற்றும் லக்னாதிபதி பலவீனமானால் புற்றுநோயும் உண்டாகலாம்.
பத்தாம் பாவகத்துடன் தொடர்புற நீர் சார்ந்த தொழில்களும் வெளிநாட்டு வேலைகள், உணவகங்கள் செய்யலாம்.
#சந்திரன்_கேது சேர்க்கை பெற மனவிரக்தி இருக்கும். எந்த பாவக ஆதிபத்யம் தொடர்புறுகிறதோ அது சம்பந்தமான மனஉளைச்சலுக்கு ஆளாவதுடன் அந்த பாவகத்தை விரைவில் வெறுப்பார். தாயின் வெறுப்பிற்கும் ஆளாவார். ஜாதகர் தனிமையில் இருப்பதையே விரும்புவார். உணவு உண்ணுவதில் நாட்டம் இருக்காது. பழையதை நினைத்து நினைத்து பார்த்து மனஅழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்வார்கள். தன்னை தானே அழிப்பார்கள்.
இச்சேர்க்கையுடன் ஆறாம் பாவகம் தொடர்புபட்டால் மாலைகண், மனோ வியாதி, தேமல், வெண்குஷ்டம் போன்றன உண்டாக்கும்.
பத்தாம் பாவகத்துடன் தொடர்புபட்டால்
சித்தமருந்துகள் தயாரிப்பது, ஆன்மீகம் சார்ந்த தொழில் செய்வது, ஆலயத்தில் பணி புரியலாம்.
No comments:
Post a Comment