jaga flash news

Friday, 10 December 2021

தூங்கும் முன்பு வெதுவெதுப்பான நீருடன் 2 கிராம்பு… என்னென்ன நன்மை இருக்குன்னு பாருங்க!

கிராம்பை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம், ஆனால் படுக்கைக்கு முன் அவற்றை உட்கொள்வது அதன் பலன் இரட்டிப்பாகும்.


இந்திய வீடுகளில் உணவுகளின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தப்படும் முக்கிய பொருளாக “கிராம்பு” உள்ளது. உடலுக்கு மந்திரம் போல் செயல்படும் இந்த அற்புத மருத்துவப் பொருளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், வயிற்றுக் கோளாறுகள் மற்றும் பல்வலி மற்றும் தொண்டை வலி ஆகியவற்றிலிருந்து நிவாரணம் பெற உதவும் என ஆயுர்வேதம் குறிப்பிடுகிறது.

தோற்றத்தில் சிறியதாகவும், சுவையில் சற்று கசப்பாகவும் இருக்கும் கிராம்பு, பல அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்தது. Eugenol எனப்படும் ஒரு தனிமம் கிராம்புகளில் காணப்படுவதால், மன அழுத்தம், வயிற்றுக் கோளாறுகள், பார்கின்சன் நோய், உடல்வலி மற்றும் பிற பிரச்சனைகளில் இருந்து தீர்வு தர உதவுகிறது.




கிராம்புகளில் வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தியாமின், வைட்டமின் டி, ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் போன்ற அத்தியாவசிய கூறுகளும் உள்ளன.

பொதுவாக, கிராம்பை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம், ஆனால் படுக்கைக்கு முன் அதை உட்கொண்டால், அதன் பலன் இரட்டிப்பாகும்.

கிராம்புகளை எப்படி சாப்பிடுவது


கிராம்பு உள் மற்றும் தோலுக்கு பயனுள்ளதாக இருக்கும். அதன் பலன்களைப் பெற, இரவில் படுக்கும் முன் 2 கிராம்புகளை மென்று சாப்பிடுங்கள். இதற்குப் பிறகு, 1 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கவும். இது முகப்பரு உள்ளிட்ட பல பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.



கிராம்பு மற்றும் வெதுவெதுப்பான நீரின் ஆரோக்கிய நன்மைகள்


கிராம்புகளை இரவில் சாப்பிடுவது, மலச்சிக்கல், அமிலத்தன்மை, வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும். கூடுதலாக, செரிமான அமைப்பு சரியாக வேலை செய்கிறது.

கிராம்புகளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. முகப்பருவுக்கு உதவும் ஒரு குறிப்பிட்ட வகை சாலிசிலேட் இதில் உள்ளது.

பற்களில் புழுக்கள் இருந்தால், கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் சேர்த்து சாப்பிட்டால், பற்களில் புழுக்கள் நீங்கும். இது பல்வலியைப் போக்கவும் உதவுகிறது.



கிராம்புகளை உட்கொள்வதால் வாயில் இருந்து துர்நாற்றம் வீசும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுகின்றன. இதனுடன், நாக்கு மற்றும் தொண்டையின் மேல் பகுதியில் உள்ள பாக்டீரியாக்களை சுத்தம் செய்ய உதவுகிறது.

இது தொண்டை புண் மற்றும் வலியிலிருந்து விடுபட உதவுகிறது.

கை, கால் நடுங்கும் பிரச்சனை உங்களுக்கு இருந்தால், படுக்கைக்கு முன் 1-2 கிராம்புகளை வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ளலாம். சில நாட்களில் பலன் கிடைக்கும்.

உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் பலவீனமாக இருந்தால், தினமும் கிராம்புகளை உட்கொள்ளத் தொடங்குங்கவும்.

சளி, இருமல், வைரஸ் தொற்று, மூச்சுக்குழாய் அழற்சி, சைனஸ், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட கிராம்புகளை தினமும் உட்கொள்ள வேண்டும்.



Wednesday, 8 December 2021

தர்மம் சாஸ்திரம்

🍀🍀தர்மம் சாஸ்திரம்.🍀🍀🍀🍀🍀
ஒரு ஜீவன் மரித்த மூன்று நாள் வரை நீரிலும், அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும், அடுத்த மூன்று  நாட்கள் ஆகாயத்திலும் வசிக்கிறது. 

இந்த 9 நாட்களிலும் ஒவ்வொரு நாளும் தன் வீட்டிற்கு துக்கம் கேட்க போவோர் வருவோரை பார்த்து கொண்டு நிற்கிறது. 

10வது நாளில் நம் வீட்டிற்குள் அந்த ஜீவன் வருகிது. ஆகவே தான் பத்தாம் நாள் காரியம் முக்கியம் என இந்து  சாஸ்திரம் கூறுகிறது. 

11வது, 12வது நாளில் நம்மால் கொடுக்கப்படும் பிண்டத்தை உண்கிறது. 

13வது நாள் தான் யம கிங்கரங்கள் கயிற்றால் இந்த ஜீவனை கட்டி இழுத்து செல்ல, தன் வீட்டை பார்த்து கதறிய வண்ணம், நாள் ஒன்றுக்கு 247 காத தூரம், பகலிலும், இரவிலும் செல்கிறது. 

இவ்வாறு நடந்து செல்லும் பொழுது, அந்த ஜீவனுக்கு பசி தாகம் அதிகம் ஏற்படும். பசியோடு நடந்து செல்லும் அந்த ஜீவன், மாதத்தில் ஒரு நாள், அதாவது அந்த ஜீவன் இறந்த திதியன்று ஓரிடத்தில் தங்க அனுமதி அளிக்கப்படும். 

ஆகவே ஒரு ஜீவன் இறந்த பின், ஒவ்வொரு மாதமுமம், இறந்த திதியன்று, மாசிகா பிண்டம் கொடுத்து, அந்த ஜீவனின் பசியை போக்கினால், உங்களை வாழ்த்தும். 

இவ்வாறு  12 மாதங்களும், வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து, அந்த ஜீவனின் பசியை போக்க வேண்டும். 
இவ்வாறு  ஒரு ஆண்டு காலம் நடந்து செல்லும் அந்த ஜீவன், ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன், யமபுரத்தை அடைகிறது. 

*உடலிலிருந்து நீங்கி ஆன்மா யமபுரிக்கு செல்வதற்கு ஓர் ஆண்டு காலம் பிடிப்பதால், அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம் சுப காரியம் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.*

ஒரு ஜீவன் பாவம் செய்திருப்பின், கர்மத்தால் ஆகிய சரீரம் பெற்று யமபுரம் செல்கிறது. 

அந்த ஜீவன் புண்ணியம் செய்திருப்பின், சூரிய மண்டலம் மார்க்கமாக பிரம்மலோகம் செல்கிறது.

எளிய முறைய சரணாகதி விளக்கம்:-
மாட்டு வண்டிக்கு உயிர் இல்லை.
மாட்டுக்கு உயிர், அறிவு, இரண்டும் உண்டு. 

ஆனால், *வண்டிக்காரன்* உயிரில்லாத வண்டியை, அறிவுள்ள மாட்டுடன் பூட்டி, எந்த இடம் செல்ல
வேண்டும் என்பதை தீர்மானித்து, வண்டியை செலுத்துவான்.

*எவ்வளவு தூரம்...* *எவ்வளவு நேரம்...* *எவ்வளவு பாரம்...*
அனைத்தையும் *தீர்மானிப்பவன் வண்டிக்காரன் மட்டுமே*!

அறிவிருந்தும், சுமப்பது தானாக இருந்தாலும், மாட்டால் ஒன்றும் செய்ய இயலாது. அது போல, உடம்பு என்ற ஜட வண்டியை ஆத்மா, உயிர் என்ற மாட்டுடன் பூட்டி, ஈசன் என்ற வண்டிக்காரன் ஓட்டுகிறான்.

*அவனே தீர்மானிப்பவன்*
*அவன் இயக்குவான்..*
*மனிதன் இயங்குகிறான்*
👉*எவ்வளவு காலம்.. 
👉எவ்வளவு நேரம்.. 
👉எவ்வளவு பாரம்.. 
தீர்மானிப்பது  ஈசனே!*

இது தான் நமக்காக ஈசன் போட்டிருக்கும் *டிசைன்..*! 
இது தான் ஈசன் நமக்கு தந்திருக்கும்
*அசைன்மென்ட்*..! 
*இதை உணர்ந்தவனுக்கு துயரம் இல்லை..*
*இதை* *உணராதவனுக்கு* *அமைதி இல்லை*.
இருக்கும் காலங்களில்* *இனியது ஈசனடி போற்றி நற்கதி   பெருவோமே🌠

Thursday, 25 November 2021

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓம நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

மிகச்சிறிய அளவிலான நறுமணமிக்க ஓர் மூலிகை விதை தான் ஓமம். இந்த ஓமம் அனைத்து வீட்டு சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள். ஓமம் ஆசிய நாடுகளைப் பிறப்பிடமாக கொண்டது. முக்கியமாக இந்தியாவில் ராஜஸ்தான் பகுதியில் பயிரிடப்படுகிறது. இதனால் வட இந்திய பகுதிகளில் ஓமமானது பூரி, கச்சோரி, ரசம், கதி போன்ற பல உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.ஓம விதைகள் உணவுகளுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. அதில் செரிமானத்தை சீராக்குவதில் இருந்து, பல் மற்றும் காது வலிகளை சரிசெய்வது வரை பல நன்மைகளை வழங்கும். இதற்காக ஓமத்தை அன்றாட உணவில் சேர்த்து வரலாம். இல்லாவிட்டால் அதனை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்தும் வரலாம்.ஓமம்

ஓமத்தில் தைமோல் என்னும் உட்பொருள் உள்ளது. இது தான் ஓமத்திற்கு தனித்துவமான சுவை மற்றும் மணத்தைக் கொடுக்கிறது. அதேப் போல் இந்த தைமோல் தைம் என்னும் மூலிகையிலும் உள்ளது. எனவே தான் தைம் மற்றும் ஓமம் இரண்டும் ஒரே மாதிரியான மணத்தைக் கொண்டுள்ளது. ஓமத்தினால் கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமே, அதில் உள்ள தைமோல் தான்.ஆயுர்வேதத்தில் ஓமம்

ஆயுர்வேத மருத்துவத்திலும், ஓமம் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. வாத உடல் கொண்டவர்கள் ஓமத்தை அன்றாடம் சாப்பிட ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் கப உடல் கொண்டவர்களும், ஓமத்தை சாப்பிடலாம். ஆனால் பித்த உடல் கொண்டவர்கள், ஓமத்தை தவிர்க்க வேண்டும்.Boldsky Tamil

Advertisement


முகப்பு » உடல்நலம் » Wellness

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓம நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

By Maha Lakshmi S

Published: Monday, September 9, 2019, 15:06 [IST]


மிகச்சிறிய அளவிலான நறுமணமிக்க ஓர் மூலிகை விதை தான் ஓமம். இந்த ஓமம் அனைத்து வீட்டு சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள். ஓமம் ஆசிய நாடுகளைப் பிறப்பிடமாக கொண்டது. முக்கியமாக இந்தியாவில் ராஜஸ்தான் பகுதியில் பயிரிடப்படுகிறது. இதனால் வட இந்திய பகுதிகளில் ஓமமானது பூரி, கச்சோரி, ரசம், கதி போன்ற பல உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.



Why You Should Drink Ajwain Water Every Day

ஓம விதைகள் உணவுகளுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. அதில் செரிமானத்தை சீராக்குவதில் இருந்து, பல் மற்றும் காது வலிகளை சரிசெய்வது வரை பல நன்மைகளை வழங்கும். இதற்காக ஓமத்தை அன்றாட உணவில் சேர்த்து வரலாம். இல்லாவிட்டால் அதனை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்தும் வரலாம்.




ஓமம்

ஓமத்தில் தைமோல் என்னும் உட்பொருள் உள்ளது. இது தான் ஓமத்திற்கு தனித்துவமான சுவை மற்றும் மணத்தைக் கொடுக்கிறது. அதேப் போல் இந்த தைமோல் தைம் என்னும் மூலிகையிலும் உள்ளது. எனவே தான் தைம் மற்றும் ஓமம் இரண்டும் ஒரே மாதிரியான மணத்தைக் கொண்டுள்ளது. ஓமத்தினால் கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமே, அதில் உள்ள தைமோல் தான்.



ஆயுர்வேதத்தில் ஓமம்

ஆயுர்வேத மருத்துவத்திலும், ஓமம் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. வாத உடல் கொண்டவர்கள் ஓமத்தை அன்றாடம் சாப்பிட ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் கப உடல் கொண்டவர்களும், ஓமத்தை சாப்பிடலாம். ஆனால் பித்த உடல் கொண்டவர்கள், ஓமத்தை தவிர்க்க வேண்டும்.





ஓம நீர் தயாரிப்பது எப்படி?

பொதுவாக அனைத்து வகையான மூலிகைகளும் வெறும் சுவைக்காக மட்டும் உட்கொள்ளப் படுவதில்லை. அதனால் ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாலேயே உட்கொண்டு வருகிறோம். அதிலும் ஒரு மூலிகையில் உள்ள சத்துக்களானது உடலால் உறிஞ்சப்படுவதற்கு 'ஊடகம்' தேவைப்படுகிறது. இந்த ஊடகங்ளாவன நெய், பால், தேன் மற்றும் நீர்.


ஓமத்தில் உள்ள முழு சத்துக்களையும் நீரின் மூலம் எளிதில் பெற முடியும். அதற்கு 2 டீஸ்பூன் ஓமத்தை லேசாக வறுத்து, ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். வேண்டுமானால், ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்தும் பருகலாம். பின் மறுநாள் காலையில் ஓமத்தை நீரில் நன்கு நசுக்கி வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


இப்போது ஓம நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.இரைப்பைக் குடல் வலி நீக்கி பண்புகள்

நீங்கள் நாள்பட்ட வாய்வுத் தொல்லையால் கஷ்டப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால், ஓம நீரை தினமும் குடித்து வாருங்கள். இதனால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். வாய்வுத் தொல்லை ஒருவருக்கு ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகள் அல்லது உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்றவை காரணங்களாகும். இப்பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணத்தை ஓம வாட்டர் வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லைBoldsky Tamil

Advertisement


முகப்பு » உடல்நலம் » Wellness

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஓம நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!

By Maha Lakshmi S

Published: Monday, September 9, 2019, 15:06 [IST]


மிகச்சிறிய அளவிலான நறுமணமிக்க ஓர் மூலிகை விதை தான் ஓமம். இந்த ஓமம் அனைத்து வீட்டு சமையலறையிலும் இருக்கும் ஒரு பொருள். ஓமம் ஆசிய நாடுகளைப் பிறப்பிடமாக கொண்டது. முக்கியமாக இந்தியாவில் ராஜஸ்தான் பகுதியில் பயிரிடப்படுகிறது. இதனால் வட இந்திய பகுதிகளில் ஓமமானது பூரி, கச்சோரி, ரசம், கதி போன்ற பல உணவுகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.



Why You Should Drink Ajwain Water Every Day

ஓம விதைகள் உணவுகளுக்கு நல்ல மணத்தையும், சுவையையும் கொடுப்பதோடு, பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது. அதில் செரிமானத்தை சீராக்குவதில் இருந்து, பல் மற்றும் காது வலிகளை சரிசெய்வது வரை பல நன்மைகளை வழங்கும். இதற்காக ஓமத்தை அன்றாட உணவில் சேர்த்து வரலாம். இல்லாவிட்டால் அதனை நீரில் ஊற வைத்து, அந்நீரைக் குடித்தும் வரலாம்.




ஓமம்

ஓமத்தில் தைமோல் என்னும் உட்பொருள் உள்ளது. இது தான் ஓமத்திற்கு தனித்துவமான சுவை மற்றும் மணத்தைக் கொடுக்கிறது. அதேப் போல் இந்த தைமோல் தைம் என்னும் மூலிகையிலும் உள்ளது. எனவே தான் தைம் மற்றும் ஓமம் இரண்டும் ஒரே மாதிரியான மணத்தைக் கொண்டுள்ளது. ஓமத்தினால் கிடைக்கும் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்கு காரணமே, அதில் உள்ள தைமோல் தான்.



ஆயுர்வேதத்தில் ஓமம்

ஆயுர்வேத மருத்துவத்திலும், ஓமம் பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. வாத உடல் கொண்டவர்கள் ஓமத்தை அன்றாடம் சாப்பிட ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் கப உடல் கொண்டவர்களும், ஓமத்தை சாப்பிடலாம். ஆனால் பித்த உடல் கொண்டவர்கள், ஓமத்தை தவிர்க்க வேண்டும்.





ஓம நீர் தயாரிப்பது எப்படி?

பொதுவாக அனைத்து வகையான மூலிகைகளும் வெறும் சுவைக்காக மட்டும் உட்கொள்ளப் படுவதில்லை. அதனால் ஆரோக்கிய நன்மைகள் கிடைப்பதாலேயே உட்கொண்டு வருகிறோம். அதிலும் ஒரு மூலிகையில் உள்ள சத்துக்களானது உடலால் உறிஞ்சப்படுவதற்கு 'ஊடகம்' தேவைப்படுகிறது. இந்த ஊடகங்ளாவன நெய், பால், தேன் மற்றும் நீர்.


ஓமத்தில் உள்ள முழு சத்துக்களையும் நீரின் மூலம் எளிதில் பெற முடியும். அதற்கு 2 டீஸ்பூன் ஓமத்தை லேசாக வறுத்து, ஒரு கப் நீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். வேண்டுமானால், ஓமத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்தும் பருகலாம். பின் மறுநாள் காலையில் ஓமத்தை நீரில் நன்கு நசுக்கி வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.


இப்போது ஓம நீரைக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று காண்போம்.


Advertisement


Advertisement


இரைப்பைக் குடல் வலி நீக்கி பண்புகள்

நீங்கள் நாள்பட்ட வாய்வுத் தொல்லையால் கஷ்டப்பட்டு வருகிறீர்களா? அப்படியானால், ஓம நீரை தினமும் குடித்து வாருங்கள். இதனால் வாய்வுத் தொல்லையில் இருந்து விடுபடலாம். வாய்வுத் தொல்லை ஒருவருக்கு ஏற்படுவதற்கு உண்ணும் உணவுகள் அல்லது உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்றவை காரணங்களாகும். இப்பிரச்சனையில் இருந்து நல்ல நிவாரணத்தை ஓம வாட்டர் வழங்கும் என்பதில் சந்தேகமே இல்லை.



எடை இழப்புக்கு உதவும்

ஆரோக்கியமான வழியில் உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால், செரிமான மண்டலத்தின் செயல்பாடு சிறப்பாக இருக்க வேண்டும். எப்போது உண்ணும் உணவுகள் சரியாக செரிமானமாகி, முறையாக வெளியேற்றப்படுகிறதோ, அப்போது உடல் பருமன் அடைவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும். ஓம நீரை தினமும் குடித்து வந்தால், உணவுகள் சரியாக செரிமானமாகி, உடல் எடை இழப்பிற்கு உதவியாக இருக்கும்.ஆரோக்கியமான செரிமானம்

ஓமம் ஒருவரது செரிமான சக்தியை மேம்படுத்தும். பொதுவாக நாம் எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை உட்கொண்டாலோ அல்லது அளவுக்கு அதிகமாக உணவை உட்கொண்டாலோ, வயிற்று உப்புசத்தினால் அவஸ்தைப்படுவோம். அப்போது ஓமத்தை அல்லது ஓம நீரை ஒருவர் உட்கொண்டால், அதில் உள்ள தைமோல், வயிற்றில் செரிமான திரவத்தின் சுரப்பிற்கு உதவி, செரிமான செயல்பாட்டை சீராக்கும்.


இருப்பினும் நாள்பட்ட செரிமான பிரச்சனையால் கஷ்டப்பட்டு வந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள். இல்லாவிட்டால், நிலைமை மோசமாகிவிடும்.கர்ப்பிணிகளுக்கு...

பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் மலச்சிக்கல் மற்றும் வயிற்று உப்புசத்தினால் அதிகம் கஷ்டப்படுவார்கள். ஓம நீரை தினமும் குடித்து வந்தால், இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். பிரசவத்திற்கு பின் செரிமானம் சிறப்பாக இருக்கவும், பிரச்சனையில்லா தாய்ப்பால் சுரப்பிற்கும், கர்ப்பையை சுத்தப்படுத்தவும் பல பெண்கள் ஓம நீரைக் குடிக்க பரிந்துரைக்கின்றனர். ஆனால் இதுக்குறித்து எவ்வித அறிவியல்பூர்வ நிரூபணமும் இல்லை மற்றும் மருத்துவர்கள் பச்சை கொடி காட்டாமல் எதையும் கண்மூடித்தனமாக பின்பற்றாதீர்கள்.அசிடிட்டியை எதிர்க்கும்

அசிடிட்டி என்னும் நிலை, இரைப்பையில் அளவுக்கு அதிகமாக அமிலம் சுரந்தால் ஏற்படுவதாகும். அசிடிட்டி வயிற்றில் கடுமையான எரிச்சலை உண்டாக்கும் மற்றும் சில சமயங்களில் நெஞ்சு, தொண்டை போன்ற பகுதிகளும் எரிச்சலுக்கு உள்ளாகும். ஒருவருக்கு அசிடிட்டியானது சரியான நேரத்தில் உண்ணாமல் இருப்பது மற்றும் அளவுக்கு அதிகமாக கார உணவை உண்பது போன்றவற்றால் ஏற்படுவதாகும். எனவே அளவுக்கு அதிகமாக உட்கொண்டு அசிடிட்டி ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், சோம்பு மற்றும் ஓமத்தை ஒன்றாக வாயில் போட்டு மெல்லுங்கள். இல்லாவிட்டால் ஓம நீரைக் குடியுங்கள்.சளி மற்றும் இருமலுக்கு...

சளி மற்றும் இருமலுக்கான ஒரு பாரம்பரிய வீட்டு வைத்தியம் தான், ஒரு டம்ளர் ஓம நீரைப் பருகுவது. அதிலும் நீரில் ஓமத்துடன், சிறிது துளசி இலைகளையும் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி, வடிகட்டி பருகினால், நெஞ்சி சளி பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Monday, 22 November 2021

உங்கள் வீட்டில் பல்லி தொடர்ந்து சத்தமிட்டு கொண்டிருக்கிறதா? உடனே இதைத் தெரிந்து தெரிந்து கொண்டு மிகவும் கவனமாய் இருங்கள்

வீடு என்று இருந்தாலே அங்கு பல்லிகள் இல்லாமல் இருக்காது. பல்லிகளை பார்த்தவுடன் பலரும் அதனை அடித்துத் துன்புறுத்துவார்கள். ஆனால் மற்ற பூச்சிகளை இப்படி செய்வதைப் போன்று பல்லிகளை மட்டும் இவ்வாறு செய்யக்கூடாது. பல்லிகள் நிறைய நேரங்களில் நற்பலன்களை கொண்டு சேர்க்கின்றன. ஒவ்வொரு வீட்டிலும் சில நேரங்களில் பல்லிகள் சத்தம் போடுவதுண்டு. இவ்வாறு பல்லி சத்தம் போடுகையில் வீட்டில் உள்ள பெரியவர்கள் சிட்டிகை செய்வார்கள். அல்லது ராமா ராமா என்று இறைவனின் பெயரை அழைப்பார்கள். இதற்கெல்லாம் என்ன காரணம் என்று தெரியுமா? பல்லி நமக்கு சொல்லும் வாக்கு பற்றி தெரியுமா? எந்த திசையில் இருந்து சப்தம் எழுப்பினால் என்ன பலன் என்று தெரியுமா? வாருங்கள் இவை அனைத்தையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.




பல்லி வீட்டில் ஏற்படுத்தும் சத்தம் நமக்கு ஏற்பட இருக்கின்ற நன்மை தீமைகளின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. ஒரு சொல் சொன்னால் துன்பம், இரண்டு சொல் சொன்னால் தனலாபம், மூன்று சொல் சொன்னால் மரணம், நான்கு சொல் சொன்னால் சௌக்கியம், ஐந்து சொல் சொன்னால் உறவினர் வருகை, ஆறு சொல் சொன்னால் பீடை, ஏழு எட்டு சொல் சொன்னால் அகமலிவு.வடகிழக்கு திசையிலிருந்து பல்லி சத்தமிட்டால் பண இழப்பு வரும் வேலை பார்க்கும் இடம் அல்லது தொழில் செய்யும் இடத்தில் ஆண்களால் பிரச்சனை ஏற்படும். வெளியூர் பயணம் செய்வதில் சில சிக்கல்கள் ஏற்படும். சில சமயம் சில பேருக்கு அடிபடவும் வாய்ப்பிருக்கும்


.

வடமேற்கில் இருந்து பல்லி சத்தம் எழுப்பினால் இறையருள் கிடைக்கப் போகிறது என்று அர்த்தமாகும். பண வரவு உண்டாகும். வரும் விருந்தாளிகள் ஏதேனும் நற்செய்தியை கொண்டு வருவார்கள். தென் கிழக்கில் இருந்து பல்லிகள் சத்தமிட்டால் பெண்களின் வருகை வீட்டிலிருக்கும். வரப்போகும் பெண்களினால் வீட்டில் பிரச்சனை ஏற்படவும் வாய்ப்பிருக்கும். அல்லது பெண்களுக்கு உடம்பில் ஏதேனும் நோய் உண்டாகவும் வாய்ப்பு இருக்கிறது.



தென்மேற்கில் பல்லி சத்தமிட்டால் வீட்டிற்கு வரப் போகும் தம்பதிகள், பெண்கள், 
உறவினர்கள் மூலமாக நன்மை ஏற்படப்போகிறது என்று அர்த்தமாகும். இவ்வாறு பல்லிகள் சத்தம் எழுப்பும் திசையைப் பொறுத்து அதற்கான பலன்கள் அமைகின்றன. இப்படி பல்லிகள் ஏற்படுத்தும் சத்தத்தினால் சில நேரங்களில் நன்மைகளும் நடைபெறும், தீமைகளும் நடைபெறும்.




நன்மைகள் நடைபெறுவதாக இருந்தால் அவை உடனே நடைபெறவேண்டும். தீமையாக இருந்தால் அவை நம்மை நெருங்காமல் இருக்க வேண்டும். இதற்காக தான் பெரியவர்கள் சில பழக்கங்களை பின்பற்றி வந்தனர். அப்படி பல்லிகள் சத்தமிடும் பொழுது நமக்கு இஷ்ட தெய்வமான ஏதாவது ஒரு இறைவனின் பெயரை சொல்லி விரல்களை பயன்படுத்தி தரையில் தட்ட வேண்டும். இப்படி செய்வதினால் வரும் கெடுதல் நம்மை அண்டாமல் இருக்கும். வரப்போகும் நன்மை எந்த வித தடங்கலும் இல்லாமல் நம்மைச் வந்து சேரும்.

அது என்ன அடைப்பு?

இறந்தவர்களுக்கும் நட்சத்திரம் பார்க்க வேண்டியது மிக அவசியமானது என சித்தர்கள் கூறியுள்ளார்கள்.

தனிஷ்டா பஞ்சமி என்றால் என்ன? தனிஷ்டா பஞ்சமியில் என்ன செய்ய வேண்டும்?

தனிஷ்டா பஞ்சமி நட்சத்திரங்கள் 13 ஆகும்.

• அவிட்டம், சதயம்,பூரட்டாதி, உத்திரட்டாதி,ரேவதி ஆகிய 5 நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு ஆறு மாதங்கள் அடைப்பு.

• ரோஹிணியில் இறந்தவர்களுக்கு நான்கு மாதங்கள் அடைப்பு.

• கார்த்திகை, உத்திரம் ஆகிய நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு மூன்று மாதங்கள் அடைப்பு.

• மிருகசீருஷம், சித்திரை, புணர்பூசம்,விசாகம், உத்திராடம் ஆகிய ஐந்து நட்சத்திரங்களில் இறந்தவர்களுக்கு இரண்டு மாதங்கள் அடைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

பிறக்கும் போது நட்சத்திரத்தையும், இறப்புக்குத் திதியையும் நாம் நினைவில் கொள்வோம். ஆனால் இறக்கும் போது நட்சத்திரம் பார்க்க வேண்டியது அவசியம் என்று சித்தர்கள் சொல்லி வைத்துள்ளனர். சில நட்சத்திரங்கள் அடைப்பு என்று வழங்கப்படுகின்றன. 

அது என்ன அடைப்பு? - அதாவது கர்மவினை, வினைப்பயன் காரணமாக மேலுலகம் செல்வதற்கு ஏற்படும் தடையையே அடைப்பு என்று சொல்கிறார்கள். சித்தர்கள் தனிஷ்டா பஞ்சமி என்றழைப்பதுவும் இந்த நட்சத்திரங்களில் ஏற்படும் மரணங்களைத்தான்.             தனிஷ்டா பஞ்சமி என்பது ஒரு துர்தேவதையாகச் சொல்லப்பட்டுள்ளது. தீய அல்லது அடைப்பு உள்ள நட்சத்திரங்களில் இறந்தவர்கள் வீட்டில் முறையான பரிகாரங்களைக் கைகொள்ளாவிட்டால் இந்த துர்தேவதை புகுந்து அந்த வீட்டில் உள்ளவர்களை ஆவிரூபமாகவோ, கனவு மூலமாகவோ, பிரம்ம ராக்ஸத ரூபமாகவோ தோன்றி பயமுறுத்தி, 6 மாதத்திற்குள் மரணப்படுக்கையில் தள்ளிவிடும் என்பார்கள்.


முக்தி பெற்ற உயிர்கள் கபாலம் திறந்து சூரியன் வழியாக ஒளிவடிவான இறைவனை அடைகின்றன. ஆனால் முக்திநிலையை எட்டாத உயிர்கள் மீண்டும் உடல் எடுக்க உடல்காரகனான சந்திரனையே அடைகின்றன.

கடந்த காலங்களில் இந்த அடைப்பு காலங்கள் முடியும் வரை வீட்டை பூட்டியே வைத்திருப்பார்கள். சில இடங்களில் இறந்தவருடைய சடலத்தை வாசல் வழியாக கொண்டு செல்லாமல் சுவரை இடித்து அதன்வழியாக எடுத்துக் கொண்டுபோவது, போன்ற கடுமையான விதிமுறைகளை எல்லாம் தனிஷ்டா பஞ்சமிக்காக கடைபிடித்திருக்கிறார்கள். கூரையைப் பிரித்து அதன்வழியாகக் கூட சடலத்தை அப்புறப்படுத்தி உள்ளதைக் கேள்விப் படுகிறோம்.ஒரு மனிதனானவன் எந்த நட்சத்திரத்தில் இறக்கிறானோ அந்த நட்சத்திரத்தின் வழியாகவே எமலோகத்திற்கு செல்வதாகச் சொல்லப்படுகிறது. 27 நட்சத்திரங்களில் இந்த தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களான 13 நட்சத்திரங்கள் போக மீதமுள்ள 14 நட்சத்திரங்களில் இறப்பவர்கள் விரைவில் தடையேதுமின்றி எமலோகம் அடைகிறார்கள். தனிஷ்டாபஞ்சமி நட்சத்திரங்களில் இறந்தவர்கள் எமலோகம் சென்றடைய அந்த அடைப்பு என்று சொல்லப்பட்டுள்ள கால அவகாசம் தேவைப்படுகிறது. இதையே கருடபுராணமும் உறுதிப் படுத்துகின்றது.

இதற்கு பரிகாரமாக வீட்டையெல்லாம் இடிக்கத் தேவையில்லை. அந்த குறிப்பிட்ட காலம்வரை இறந்த இடத்தில் ஒரு திண்ணை அமைத்து, மாலைநேரத்தில் தீபம் ஏற்றி,தண்ணீர், நைவேத்தியம் வைத்து, கற்பூர ஆரத்தி செய்து ''இறந்த இந்த உயிருக்கு உணவும், நீரும் சென்றடைய இறைவா நீ உதவவேண்டும் '' என்று வேண்டிக் கொண்டு,கற்பூர ஆராதனைக்குப் பிறகு தீபம் அனையாதவாறு ஒரு கூடையைப் போட்டு மூடி வைத்துவிட வேண்டும். அந்த குறிப்பிட்ட நட்சத்திரத்துக்கான காலம்வரை இதைச் செய்து முடிக்க வேண்டும். அதன் பிறகு அதற்கான கிரியைகளை தகுந்த வேதப் பயிற்சி பெற்ற அந்தணர்களைக் கொண்டு செய்து கொள்ளவேண்டும்

Friday, 19 November 2021

"உணவே மருந்து, மருந்தே உணவு"

இனிப்பு - தசையை வளர்க்கின்றது பழவகைகள், உருளைக் கிழங்கு, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது. புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது. கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது. உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது. துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது. கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது. நம் சித்த ம்ருத்துவர்களும், ஆயுர்வேத‌ மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொன்னார்கள்

Tuesday, 16 November 2021

பிறப்புடன் பிறக்கும் ஐந்து...

பிறப்புடன் பிறக்கும் ஐந்து... ஒரு குழந்தை கர்ப்பத்தில் உண்டாகிறது. அதனுடன் ஐந்து விஷயங்கள் கூடவே பிறக்கின்றன. (1) ஆயுள்: மனிதனுடைய ஆயுள். எவ்வளவு முயற்சி செய்தாலும் ஒரு நொடி கூட நீடிக்க முடியாது. (2) வித்தம்: இவ்வளவு பொருள் தான் அதற்கு ப்ராப்தம். அதற்கு மேல் எகிறி குதித்தாலும் ஒரு சல்லி காசு கூட சேமிக்க முடியாது. தங்காது. (3) வித்யா: இவ்வளவு கல்வி தான் வாய்க்கும். எவ்வளவு பணம் செலவு செய்தாலும் மணிக்கணக்காக படித்ததாலும் பயனளிக்காது. (4) கர்மா: தொழில், குணம், மனைவி மக்கள் அமைவது. இவன் இந்த தொழில் தான் செய்வான். இன்ன தொழில் செய்து தான் இந்த ஜீவன் ஜீவிக்கும் என்பது விதிக்கப்பட்டது. வாழ்க்கையில் நாமே காண்கிறோம். பலர் அவர்கள் படித்த படிப்பிற்கும் சிறிதளவும் சம்பந்தம் இருக்காது. நல்லவர்கள் கெட்டவர்களாகவும், அவ்வாறே கெட்டவர்கள் நல்லவர் களாக மாறுவதையும் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். (5) மரணம்: இன்றைய தினத்தில் இந்த க்ஷணத்தில் இந்த நிலையில் இந்த ஜீவனுக்கு ப்ராண வியோகம் என்று எழுதப்பட்டிருக்கிறது. அதை யாரும் மாற்றமுடியாது. யாராலும் மாற்றமுடியாது. ஒரு நோயாளியை மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்கிறோம். அங்கு பரிசோதித்துவிட்டு மருத்துவர் அரை மணி நேரம் முன்பு வந்திருந்தால் பிழைத்திருப்பார் என்கிறார். அரை மணி நேரம் முன்பு ஏன் போகமுடியவில்லை என்பது தான் கேள்வி. அரை மணி நேரம் முன்பு போயிருந்தாலும் மருத்துவர் இதே கேள்வியை தான் கேட்டிருப்பார். பிழைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால் தான் பிழைப்பார். ஆக இந்த ஐந்தும் கர்ப்பத்தில் இருக்கும் போதே பூர்வ வினைக்கு ஏற்ப நிர்ணயிக்கப படுகிறது. இதை மற்றயாராலும் மாற்ற முடியாது.. சிவ ஓம் நமசிவாய

Tuesday, 9 November 2021

உயர் இரத்த அழுத்தத்திற்கு ஓமம் தண்ணீர் செய்வது எப்படி?

ஓமம் தண்ணீர் தயாரிக்கும் செயல்முறை மிகவும் எளிதான மற்றும் எளிமையான செயல்முறையாகும்.

ஒரு டீஸ்பூன் உலர்ந்த வறுத்த ஓமம் விதைகளை ஒரு கப் தண்ணீரில் ஒருநாள் இரவு முழுதும் ஊற வைக்கவும்.

மறுநாள் தண்ணீரைக் கொதிக்க வைத்து வடிகட்டிக் கொள்ளவும்.

அவை குளிர்ந்ததும் பருகி மகிழவும். இந்த பானத்தை வெறும் வயிற்றில் எடுத்துகொள்ளவது மிகவும் நல்லது.

Thursday, 4 November 2021

பாதாமை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

வீட்டில் பாயாசம், கேசரி போன்றவற்றை சமைக்கும் போது உங்கள் அம்மா கை நிறைய முந்திரி, பாதாம் சேர்ப்பதை பார்த்திருப்பீர்கள். இன்னும் சில வீடுகளில் உள்ள அம்மாக்கள் பாதாமை இரவில் படுக்கும் போதே ஊற வைத்து, மறுநாள் காலையில் சாப்பிட கொடுப்பார்கள். இதற்கு காரணம், பாதாம் சருமத்தின் அழகை அதிகரிக்க உதவுவதோடு, ஞாபக சக்தியையும் அதிகரிக்கும்.

மேலும் பாதாமை சாதாரணமாக சாப்பிட்டு வந்தால், உடலுக்கு வேண்டிய பல்வேறு சத்துக்கள் கிடைத்து, உடல் வலிமையோடு ஆரோக்கியமாக இருக்கும். இங்கு பாதாமை அதிகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துப் பாருங்களேன்...



செரிமான மண்டலத்தை சுத்தம் செய்யும்
செரிமான மண்டலம் நன்கு ஆரோக்கியமாக இருக்கிறதா இல்லையா என்பதை நம் முகமே வெளிக்காட்டிவிடும். செரிமான மண்டலம் பலவீனமாக இருந்தால், மலச்சிக்கல் ஏற்படக்கூடும். அப்படி மலச்சிக்கல் ஏற்பட்டால், முகப்பருக்கள் வர ஆரம்பிக்கும். ஆனால் தினமும் காலையில் ஊற வைத்த பாதாமை உட்கொண்டு வந்தால், அது வயிற்றில் வளரும் பாக்டீரியாக்களின் அளவை அதிகரித்து, செரிமானத்தை சீராக்கி, இதனால் அழகான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெற உதவும்.


வைட்டமின் ஈ நிறைந்தது
உங்களுக்கு முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை அதிகம் இருந்து, மருத்துவரிடம் சென்று அதற்கான மருந்தை கேட்டால், அவர் பரிந்துரைப்பது வைட்டமின் ஈ மாத்திரைகளைத் தான். ஏனெனில் வைட்டமின் ஈ தான் சருமத்திற்கு அழகையும், ஆரோக்கியத்தையும் தருகிறது. இத்தகைய வைட்டமின் ஈ பாதாமில் அதிக அளவில் உள்ளது. ஆகவே தினமும் பாதாமை உட்கொண்டு வந்தால், முகப்பருக்கள் வருவதைத் தடுக்கலாம்.






முதுமையைத் தடுக்கும்
பாதாமில் முதுமையைத் தடுக்கும் பொருள் இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே தினமும் பாதாமை சாப்பிடுவதோடு, பாதாம் எண்ணெய் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து வந்தால், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது தடுக்கப்படும். மேலும் கருவளையங்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி, சருமத்தின் நிறமும் அதிகரிக்கும்.





இதயத்திற்கு ஆரோக்கியமானது
சிம்பிளாக சொல்ல வேண்டுமானால், இதயத்திற்கு சிறந்த பாதுகாப்பை பாதாம் வழங்கும். ஏனெனில் அதில் உள்ள நார்ச்சத்து, உடல் கொழுப்புக்கள் உறிஞ்சுவதைத் தடுக்கும். மேலும் இதில் உள்ள வைட்டமின் ஈ, மோனோ அன் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள், மக்னீசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்கும். கொழுப்புக்கள் உறிஞ்சுவது தடுக்கப்படுவதால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு குறைந்து, இதயத்திற்கு பாதிப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.

ஞாபக சக்தி மற்றும் ஆற்றல்
பாதாம் ஞாபக சக்தியை அதிகரிப்பதுடன், உடலின் ஆற்றலையும் அதிகரிக்கும். ஏனென்றால் இதில் ரிபோஃப்ளேவின் மற்றும் மக்னீசியம் போன்ற உடலின் எனர்ஜியை அதிகரித்து நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட உதவிபுரியும். சுருக்கமாக சொல்லப்போனால் பாதாம் உங்களின் ஆற்றல் திறனை அதிகரிக்கும்.

எடையைக் குறைக்கும்
அன்றாடம் பாதாம் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் மாற்றத்தைக் காணலாம். ஏனெனில் இவற்றில் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் இதர சத்துக்கள் நிறைந்திருப்பதால், இவை அடிக்கடி பசி ஏற்படுவதைத் தடுக்கும். இதனால் கண்ட கண்ட உணவுகளின் மேல் நாட்டம் வருவது தவிர்க்கப்படும். ஆகவே உடல் எடையைக் குறைக்க வேண்டுமானால் பாதாமை சாப்பிடுங்கள்.


தினமும் காலையில் ஊற வைத்த வேர்க்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் : மிஸ் பண்ணிடாதீங்க...

வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. தினமும் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட இன்னும் பல நன்மைகள் உள்ளன.
 வேர்க்கடலை ஊற வைத்து சாப்பிடுவதை சிலர் தவிர்க்கலாம். ஆனால் அப்படி சாப்பிடச் சொல்வதற்கு பின்னால் எத்தனை நன்மைகள் இருக்கின்றன தெரியுமா..? வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வேர்க்கடலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த கொட்டைகள் பீட்டா-சிட்டோஸ்டெரால் (beta-sitosterol) நிரம்பியுள்ளன. இது புற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. தினமும் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட இன்னும் பல நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன பார்க்கலாம்.1/ 6

வேர்க்கடலை ஊற வைத்து சாப்பிடுவதை சிலர் தவிர்க்கலாம். ஆனால் அப்படி சாப்பிடச் சொல்வதற்கு பின்னால் எத்தனை நன்மைகள் இருக்கின்றன தெரியுமா..? வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த வேர்க்கடலையில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. இந்த கொட்டைகள் பீட்டா-சிட்டோஸ்டெரால் (beta-sitosterol) நிரம்பியுள்ளன. இது புற்றுநோயிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். வேர்க்கடலை உடலுக்கு அவசியமான இரும்பு, ஃபோலேட், கால்சியம் மற்றும் துத்தநாகம் ஆகிய ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. தினமும் ஊறவைத்த வேர்க்கடலையை சாப்பிட இன்னும் பல நன்மைகள் உள்ளன. அவை என்னென்ன பார்க்கலாம்.

 வேர்க்கடலையில் இதயத்தை பாதுகாக்கும் பண்புகள் உள்ளன. பல்வேறு இதய பிரச்சனைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். வேர்க்கடலையின் இந்த கார்டியோ-பாதுகாப்பு பண்புகள் நீண்ட காலத்திற்கு இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது மற்றும் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.2/ 6

வேர்க்கடலையில் இதயத்தை பாதுகாக்கும் பண்புகள் உள்ளன. பல்வேறு இதய பிரச்சனைகளிலிருந்து உங்களைப் பாதுகாக்கும். வேர்க்கடலையின் இந்த கார்டியோ-பாதுகாப்பு பண்புகள் நீண்ட காலத்திற்கு இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது மற்றும் உடலில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.


 இடுப்பு மற்றும் முதுகு வலி : நீங்கள் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், வெல்லத்துடன் வேர்க்கடலையை ஊறவைக்கவும். பின் அதை சாப்பிடுவதால் முதுகு வலியை போக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.3/ 6

இடுப்பு மற்றும் முதுகு வலி : நீங்கள் முதுகு வலியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், வெல்லத்துடன் வேர்க்கடலையை ஊறவைக்கவும். பின் அதை சாப்பிடுவதால் முதுகு வலியை போக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

 புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது : வேர்க்கடலையில் பீட்டா-சிட்டோஸ்டெரால் நிரம்பியுள்ளது. புற்றுநோய் அபாயத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கிறது. உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க உதவுகிறது. வேர்க்கடலையை வாரத்திற்கு மூன்று முறை, எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும், புற்றுநோய் அபாயத்தை 58 சதவீதம் குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.4/ 6

புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது : வேர்க்கடலையில் பீட்டா-சிட்டோஸ்டெரால் நிரம்பியுள்ளது. புற்றுநோய் அபாயத்தை மிகப் பெரிய அளவில் குறைக்கிறது. உடலில் புற்றுநோய் கட்டிகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது. குறிப்பாக மார்பக புற்றுநோய் ஆபத்தை தவிர்க்க உதவுகிறது. வேர்க்கடலையை வாரத்திற்கு மூன்று முறை, எந்த வடிவத்தில் சாப்பிட்டாலும், புற்றுநோய் அபாயத்தை 58 சதவீதம் குறைக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

5/ 6
எடை குறைக்க உதவுகிறது : வேர்க்கடலை புரதம், கொழுப்பு மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றின் நல்ல கலவை என்பது தெரியுமா? இந்த ஊட்டச்சத்துக்களால், வேர்க்கடலை நமது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நீண்ட நேரம் நம்மை முழுமையாக வைத்திருக்கும். இது, அதிகமாகச் சாப்பிடுவதைத் தடுக்கிறது மற்றும் எடையை குறைக்க உதவுகிறது. அவற்றை அளவாகச் சாப்பிட்டால் நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்யும்.

6/ 6
செரிமானம் அதிகரிக்கும் : வேர்க்கடலையில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், எரிச்சலூட்டும் குடல் மற்றும் மலச்சிக்கலைத் தடுக்க உதவும். அதற்கு நீங்கள் தினமும் 6-7 வேர்க்கடலையை சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட செரிமானப் பிரச்னை ,குடல் அழற்சி பிரச்னை, மலச்சிக்கல் என வயிறு தொடர்பான பல பிரச்னைகளை தவிர்க்கலாம்.


இரவு தூங்கும் முன் 5 உலர் திராட்சையை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?

திராட்சையின் உலர்ந்த வடிவம் தான் உலர் திராட்சை. திராட்சையைப் போன்றே உலர் திராட்சையிலும் ஏராளமான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக இதில் பைட்டோ கெமிக்கல்கள் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இது ஒரு சூப்பர்உணவுகளில் ஒன்றாகும். உலர் திராட்சையை பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண மக்கள் சாப்பிடுகிறார்கள். ஆனால் இன்று நாம் காணப் போவது உலர் திராட்சையை இரவு தூங்கும் முன் சாப்பிடுவதால் பெறும் நன்மைகளைப் பற்றி தான். உலர் திராட்சையை அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் அல்லது தூக்கமின்மை பிரச்சனையைக் கொண்டவர்கள் சாப்பிடுவது நல்லது. படுக்கைக்கு முன் உலர் திராட்சையை சாப்பிடுவது உடலில் மெலடோனின், டிரிப்டோபேன் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றின் அளவை அதிகரிக்கிறது, இது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்துகிறது மற்றும் நரம்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. இது தவிர, காலையில் எழும் போது உடல் வலி என்று கூறுபவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும். இப்போது தினமும் இரவு தூங்கும் முன் 5 உலர் திராட்சையை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம். கண் பார்வையை அதிகரிக்கும் பலவீனமான கண்களைக் கொண்டவர்கள் உலர் திராட்சையை சாப்பிடுவது மிகவும் நல்லது. இதில் உள்ள பாலிஃபீனால்கள் என்னும் ஆன்டி-ஆக்சிடன்ட், கண்களில் உள்ள செல்களைப் பாதுகாக்கும். மேலும் ப்ரீ-ராடிக்கல்களால் கண்களில் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது. இது மட்டுமின்றி, மாகுலர் தசை சிதைவு மற்றும் கண் புரை போன்றவற்றைத் தடுக்கும். அதற்கு இரவில் உலர் திராட்சையை அப்படியே சாப்பிடலாம் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிடலாம். சோடியத்தைக் குறைக்கும் அதிகளவு உப்பை உணவில் சேர்த்து சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உப்பில் உள்ள சோடியம் உடலில் அதிகம் சேரும் போது, இது இரத்த நாளங்களுடன், உடலில் வீக்கத்தை அதிகரிக்க செய்கிறது. உலர் திராட்சை சோடியத்தை உறிஞ்சி, உடலில் உள்ள அதிகளவு சோடியத்தைக் குறைக்கும். மேலும் இதில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள சோடியத்தை சமநிலைப்படுத்த உதவுகிறது. இந்த இரண்டு வழிகளின் மூலம், உலர் திராட்சை இரத்த நாளங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன. இது தவிர, இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் உதவுகிறது குடலியக்கத்தை எளிதாக்கும் உலர் திராட்சை குடல் இயக்கத்தை எளிதாக்க உதவும். இவை குடலியக்கத்திற்கு நன்மை அளிப்பது மட்டுமின்றி, உடலில் மலத்தை அதிகமாக சேர்த்து, உடலில் இருந்து எளிதில் வெளியேற்ற உதவுகிறது. இதன் மூலம், உடலில் உள்ள அழுக்கு மற்றும் கழிவுப் பொருட்களை எளிதில் அகற்றி, நச்சுக்களை நீக்க உதவுகிறது எலும்புகளை ஆரோக்கியமாக்கும் உலர் திராட்சையை சாப்பிடுவது எலும்புகளுக்கு மிகவும் நல்லது. அதுவும் உலர் திராட்சையை பாலில் போட்டு கொதிக்க வைத்து சாப்பிடுவதன் மூலம், அதில் உள்ள சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்சுவதற்கு உதவுகிறது. அதோடு, இது கால்சியம் மற்றும் எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்கும் தாதுக்களை ஊக்குவிக்கிறது. இதன் மூலம் எலும்புகளை வலிமையாக்குகிறது எடை இழப்பிற்கு உதவும் உலர் திராட்சை எடை இழப்பிற்கு பெரிதும் உதவி புரியும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. அதனால் தான் இதை சிறிதளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்த உணர்வு எழுகிறது. அதுவும் உலர் திராட்சையை இரவு தூங்கும் போது சாப்பிட்டால், அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் பசியைத் தடுக்கும். இதன் மூலம் தேவையற்ற உணவுகளின் மீதான நாட்டத்தைக் குறைத்து, உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கிறது பிற நன்மைகள்... இது தவிர, உலர் திராட்சையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் உள்ளன. இதன் காரணமாக இது உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் இதய நோய், கீல்வாதம், சர்க்கரை நோய் மற்றும் அல்சைமர் நோய்களுக்கு எதிராக எதிர்த்துப் போராடும். ஒருவரது நல்ல தூக்கத்திற்கு ஆன்டி-ஆக்சிடன்ட் உணவுகள் மிகவும் அவசியம். ஏனெனில் ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் நல்ல தரமான தூக்கத்தில் நேரடி விளைவைக் கொண்டிருப்பதோடு, அதை மேம்படுத்தவும் உதவுகின்றன

Friday, 29 October 2021

முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள்

🌝 தவளை கத்தினால் மழை. 🌝 அந்தி ஈசல் பூத்தால் அடை மழைக்கு அச்சாராம். 🌝 தும்பி பறந்தால் தூரத்தில் மழை. 🌝 எறும்பு ஏறில் பெரும் புயல். 🌝 மார்கழி மழை மண்ணுக்கு உதவாது. 🌝 தை மழை நெய் மழை. 🌝 மாசிப் பனி மச்சையும் துளைக்கும். 🌝 தையும் மாசியும் வீடு மேய்த்து உறங்கு. 🌝 புற்று கண்டு கிணறு வெட்டு. 🌝 வெள்ளமே ஆனாலும் பள்ளத்தே பயிர் செய். 🌝 காணி தேடினும் கரிசல் மண் தேடு. 🌝 களர் கெட பிரண்டையைப் புதை. 🌝 கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு. 🌝 நன்னிலம் கொழுஞ்சி நடுநிலம் கரந்தை கடை நிலம் எருக்கு. 🌝 நீரும் நிலமும் இருந்தாலும் பருவம் பார்த்து பயிர் செய். 🌝 ஆடிப்பட்டம் பயிர் செய். 🌝 விண் பொய்த்தால் மண் பொய்க்கும். 🌝 மழையடி புஞ்சை மதகடி நஞ்சை. 🌝 களரை நம்பி கெட்டவனும் இல்லை மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை. 🌝 உழவில்லாத நிலமும் மிளகில்லாத கறியும் வழ வழ. 🌝 அகல உழவதை விட ஆழ உழுவது மேல் . 🌝 புஞ்சைக்கு நாலு உழவு நஞ்சைக்கு ஏழு உழவு. 🌝 குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை. 🌝 ஆடு பயிர் காட்டும் ஆவாரை கதிர் கட்டும். 🌝 கூளம் பரப்பி கோமியம் சேர் . 🌝 ஆற்று வண்டல் தேற்றும் பயிரை. 🌝 நிலத்தில் எடுத்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும். 🌝 காய்ச்சலும் பாய்ச்சலும் வேண்டும். 🌝 தேங்கி கெட்டது நிலம் தேங்காமல் கெட்டது குளம். 🌝 கோரையை கொல்ல கொள்ளுப் பயிர் விதை. 🌝 சொத்தைப் போல் விதையை பேண வேண்டும். 🌝 விதை பாதி வேலை பாதி. 🌝 காய்த்த வித்திற்கு பழுது இல்லை. 🌝 பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு. 🌝 கோப்பு தப்பினால் குப்பையும் பயிராகாது. 🌝 ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம். 🌝 கலக்க விதைத்தால் களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும். உழவே_தலை. தனி மனித மாற்றமே நம் சமுதாயத்தின் மாற்றம். நீர் இன்றி அமையாது உலகு. "என் மக்கள்" கடல் மலை மேகம்தான் எங்கள் கூட்டம். கடைசி மரமும் வெட்டி உண்டு கடைசி மரமும் விஷம் ஏறிக் கடைசி மீனும் பிடி பட அப்போதுதான் உறைக்கும். இனி பணத்தைச் சாப்பிட முடியாது என்பது!! ஆறும் குளமும் மாசு அடைந்தால் சோறும் நீறும் எப்படி கிடைக்கும்!. நீர் நிலைகளை காப்போம். இணைவோம். நம் மூத்த முன்னோர் சொல்மிக்க மந்திரமில்லை. மேழிச் செல்வம் கோழை படாது... முன்னோர்கள் சொன்ன ஒவ்வொரு பழமொழி வார்த்தைகளிலும் அர்த்தங்கள் உள்ளது..

Monday, 18 October 2021

ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது

*"சடாரி என்ற வார்த்தை எப்படி வந்தது அது தமிழ் வார்த்தையா? நாம் அனைவருமே தெரிந்து கொள்வோம்..."* ஸ்ரீ சடாரி என்ற திருநாமம் ஏன் வந்தது. 🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹🔸🔹 பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு துளசி தீர்த்தம்கொடுத்து சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு. ஒரு குழந்தையை தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரிய வாயுவிற்கு `சடம்' என்று பெயர். 🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹🌻🌹 வைணவ பக்தியில் சிறந்து விளங்கிய பன்னிரு ஆழ்வார்களுள் ஒருவர் நம்மாழ்வார். நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் வேதம் தமிழ் செய்த மாறன் என்று புகழப்படுகிறார். இவர் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியில் பிறந்தவர். நம்மாழ்வார் கலி பிறந்த 43 வது நாளில் காரியார் மற்றும் உடைய நங்கைக்கு மகனாகப் பிறந்தார். உலக வழக்கப்படி குழந்தை பிறந்தவுடன் அழும். ஆனால் இவரோ இவை எவற்றையும் செய்யாமல் உலக இயற்கைக்கு மாறாக இருந்தார். எனவே அவரை மாறன் என்று அழைத்தனர். 🔷🔹🔷🔹🌸🐚🌸🔹🔷🔹🔷 ஒவ்வொரு உயிரினமும் இந்நிலவுகில் பிறக்கும்பொழுது, அதன் உச்சந் தலையில் முதன் முதலாக இந்நிலவுலகக் காற்று படும். இக்காற்று பட்டவுடன், அக்குழந்தைக்கு முன் ஜென்ம நினைவுகள் மறக்கும். மீண்டும் இந்நிலவுலக மாயையில் சிக்கிக் கொள்ளும் என்பது ஐதீகம். மாயையை உருவாக்கும் சடம் என்னும் இக்காற்று உச்சந்தலையில் படுவதாலேயே குழந்தைகள் பிறந்தவுடன் அழுகின்றன என்று சொல்லப்படுகிறது. சடவாயுவின் சேர்க்கையினாலே நம் மனம் பக்தியில் ஈடுபடுவதில்லை. 🌐💠🌀🔶✨🔔✨🔶🌀💠🌐 ஆனால் விஷ்வக்சேனரின் அம்சமாகப் பிறந்த நம்மாழ்வார் தம் தாயின் கருப்பையில் இருக்கும்போதே தம்மைச் சேர வந்த அந்த சடம் என்னும் இக்காற்றை கோப மாக முறைத்ததால் சடகோபன் என்று அழைக்கப்படுகிறார். பிறவிச்சூழலில் இருந்து விடுதலை பெற்றதால் பரந்தாமனையே நினைந்து வாழ்ந்து வந்தார். இவரை திருமாலின் திருவடி அம்சம் என்றும் கூறுவதுண்டு. அதனால், பெருமாள் சன்னதியில் பெருமாளின் திருவடியில் இருப்பதும் சடகோபம் (சடாரி) என்று பெயர் பெறுகிறது. சடாரியை தலையில் தாங்கினால், நம் மனம் பந்தபாசங்கள் நீங்கப் பெற்று பக்தியில் திளைக்கும். 🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁🍃🍁 சடம் + ஹரி ( பாதம் ) சடாரி என்று அழைக்கப்படுகிறது. ஆகவே சடாரி எனப்படும் நம்மாழ்வாரையே பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது. எனவேதான் சடாரி நம் தலையில் வைக்கும் பொழுது பேரானந்தம் நம் மனதில் ஏற்படுகிறது. ஸ்ரீராமாவதாரம் நிகழும்போது, சக்கரமும் சங்கும் என் சகோதரர்களாக பரதன், சத்ருகன் என்ற பெயர்களில் அவதரிப்பார்கள். அந்த அவதாரத்தில் நான் அரச பதவியை ஏற்று சிம்மாசனத்தில் அமர முடியாத ஒரு சூழ்நிலை ஏற்படும். அப்போது இந்தத் திருமுடியை சிம்மாசனத்தில் வைத்து அதன் மீது பாதுகைகளான உங்களை வைத்து, சங்கும் சக்கரமும் 14 வருடங்கள் உங்களைப் பூஜிப்பார்கள். 🦚🐄🦚🐄🦚🐄🦚🐄🦚🐄🦚 அவரவர் வினைக்கேற்ப அவரவர் தேடிக் கொள்ளும் பயன் இது" என்றார் பகவான். பகவான் சிரசை அலங்கரிக்கும் திருமுடி, ஒருவகையில் உயர்ந்தது என்றால், அவரின் திருப் பாதங்களை அலங்கரிக்கும் பாதுகைகளும் மற்றொரு வகையில் உயர்ந்தவையே. சடாரியை நம் தலையில் வைத்துக்கொள்ளும்போது நம்முடைய 'நான்' என்ற ஆணவம், அகங்காரம் அழியவேண்டும், என்பதே சடாரி சாதித்தலின் பின்னணியில் உள்ள தாத்பரியம்... 🌸🌿🌸🌿🌻🐚🌻🌿🌸🌿🌸 சடாரி வைக்கும் பொழுது பணிந்து புருவங்களுக்கு நடுவில் வலக்கை நடுவிரல் வைத்து நாசி , வாய் பொத்தி குனிந்து பெருமாளின் திருபாதத்தினை ஏற்றுகொள்ள வேண்டும்...!!! இனி நாம் கோவிலுக்கு செல்லும் போது,இதை நம் குழந்தைகளுக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும். நம் இந்து மதத்தின் சம்பிரதாயங்களுக்குப் பின் வாழ்வியல் தத்துவங்கள் அடங்கியுள்ளது என்பதை நாம் உணர்ந்துப் போற்ற வேண்டும்...!!! "சர்வம் கிருஷ்ணார்ப்பணம்"

Sunday, 10 October 2021

கிராம்பு பலன்

தினமும் வெந்நீர் குடிப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து எடையை குறைக்க உதவுகிறது. இதனுடன் கிராம்பு சேர்த்து சாப்பிடுவதால் பல ஆயுர்வேத நன்மைகள் உள்ளது. கிராம்பில் பொட்டாசியம், சோடியம், இரும்பு போன்ற சத்துக்கள் நிரம்பி உள்ளது. இத்தனை சத்துமிக்க கிராம்பை தினமும் காலையில் எடுத்து கொள்வதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பார்க்கலாம். இரவில் தூங்குவதற்கு முன் 1 கிராம்பு சாப்பிட்டு அதனுடன் 1 டம்ளர் சூடான நீரை குடிக்க வேண்டும். அது பலவகையான கடுமையான நோய்களை நீக்குகிறது. இதன் மூலம் செரிமான செயல்முறையை மேம்படுத்துகிறது. மேலும் இது பல வயிற்று பிரச்சனைகளுக்கும் தீர்வாகவும் அமைகிறது. வயிற்று எரிச்சல், வாந்தி மற்றும் அஜீரணம் போன்ற பல சிக்கல்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். தொண்டை புண் மற்றும் வலியைப் போக்க கிராம்பு உங்களுக்கு உதவும். கை, கால்கள் நடுங்கும் பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் தூங்குவதற்கு முன் 1-2 கிராம்புகளை உட்கொள்வதால் இந்த பிரச்சினையிலிருந்து நிவாரணம் பெறலாம். கிராம்பு ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இதில் முகப்பருவைத் தடுக்க உதவும் ஒரு வகை சாலிசிலேட் உள்ளதால் முகத்தில் முகப்பரு வராமல் தடுக்கின்றது. இது தவிர கிராம்பை உட்கொள்வதன் மூலம் மார்பு சளியையும் வெளியே கொண்டு வருகிறது. செரிமானம், பித்தம், வாயு பிரச்சனைகள், ஆஸ்துமா, காய்ச்சல், அஜீரணம், காலரா, தலைவலி, விக்கல் மற்றும் இருமல் போன்ற நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.

Thursday, 30 September 2021

கோபம் எதனால் வருகிறத

கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது.● அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ●ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள். இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார். ●மற்றொருவர், யாராவது என்னை தவறா சொல்லிட்டாங்கன்னா பட்டுன்னு கோபம் வந்துடும் என்றார். ●அடுத்தவர், நான் செய்யாததை செய்த மாதிரி சொல்லிட்டாங்கன்னா அவ்வளவுதான் அவங்க என்கிறார். ●இன்னொருவர், சொன்னதை திரும்ப திரும்ப சொன்னா, நான் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாதுன்னு சொல்றார். ●வேறொருவரோ, நினைச்சது கிடைக்கலைன்னா சும்மா விடமாட்டேனுட்டார். இப்படி ஒவ்வொருவரும் தங்களுக்கு எதனால் கோபம் வருகிறது என்று கருத்து தெரிவித்தனர். இப்படி அடுத்தவர்கள் ஏதாவது செய்தால் இவர்களுக்கு கோபம் ஏற்படுமாம். அது சரி... நீங்களே ஏதாவது தவறு செய்தால் உங்கள் மீது கோபப்படுவீர்களா? என்றதற்கு, அது எப்படீங்க நம்ம மேலேயே நம்ம கோபப்படுவோமா என்றனர். கோபம்னா என்ன? கோபம் என்பது அடுத்தவர்கள் செய்யும் சிறு சிறு தவறுகளுக்கு நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனைக்கு பெயர் தாங்க கோபம். அதுமட்டுமல்லாமல் நாம் நம் கோபத்தை குறைக்க அடுத்தவர்களிடம் இதே கோபத்துடன் செயல்பட்டால் நட்பு நசுங்கி விடும். உறவு அறுந்து போகும். உரிமை ஊஞ்சலாடும். நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் தண்டனை என்ன? சவுக்கு எடுத்து சுளீர்...சுளீர்ன்னு நம்மளையே அடித்துக்கொண்டால் மட்டும் அதுக்கு பெயர் தண்டனை இல்லீங்க. கோபம் ஏற்படுவதால் பதட்டம்( டென்ஷன்) உண்டாகிறது. இதனால் நமது உடல், மனம் இரண்டும் பாதிக்கப்படுகிறது. இந்த பாதிப்பால் நரம்புத்தளர்ச்சி, ரத்த அழுத்தம், மன உளைச்சல், நடுக்கம் போன்ற உபாதைகள் உண்டாகிறது. இதை தடுக்க டாக்டரிடம் சென்று மாத்திரை மருந்து சாப்பிடுவோம். இதே நிலை நீடித்தால் ஒரு மன நோயாளி போல் ஆகி விடுவோம். இது பொய்யல்ல. சத்தியமான உண்மை இது. அன்பின் வேறொரு விதமான வெளிப்பாடுதான் கோபம். முதல்ல அடுத்தவங்களுக்கு கோபம் வர்ற மாதிரி நீங்க நடக்காதீங்க. அடுத்தவங்கள குறை சொல்லாதீங்க. எதையும் அடுத்தவர்களிடம் எதிர்பார்க்காதீங்க. அவங்க உங்க மேல கோபப்பட்டா முதல்ல சாரின்னு மன்னிப்பு கேளுங்க... ஈகோ பார்க்காதீங்க. நீங்க கோபப்படுற மாதிரி அடுத்தவங்க நடந்து கொள்கிறார்கள் என்று வைத்து கொள்வோமே. முதல்ல பிளீஸ் என்னை கொஞ்சம் யோசிக்க விடுங்கன்னு அமைதியாயிடுங்க. யார்மேல தவறுன்னு சிந்தியுங்க... கொஞ்ச நேரத்தில் எல்லாம் சரியாயிடும். அப்படி இல்லைன்னா அந்த இடத்தை விட்டு நகருங்க... தனியா உக்காந்து யோசிங்க. அடிக்கடி யாரிடம் கோபப்படுகிறீர்களோ அவர்களிடம் மனம் விட்டு சந்தோஷமாக சிரித்து பேசுங்கள். அடுத்தவர்களே தவறு செய்திருந்தால் கூட நீங்க நல்லது பண்ணுங்க. அடுத்தவங்க என்ன செஞ்சுட்டாங்கன்னு கோபப்படுறோம். என்ன நடந்துருச்சு பெருசா. என்னத்த இழந்துட்டோம். மரணம் ஒன்று தான் மாபெரும் இழப்பு. அதை தவிர வேறொன்றுமே இழப்பு கிடையாது. எல்லாத்தையும் சமாளிச்சுடலாம்ங்ற முடிவுக்கு வாங்க. வீட்டு பெரியவர்கள் திட்டும் போது கவனித்திருப்பீர்கள் என்னத்த பெரிசா சாதித்து கிழிச்சன்னு. நாட்காட்டியில் உள்ள தேதி பேப்பரைக் கிழிச்சால் மட்டும் போதாது. ஒவ்வொரு நாளும் தூங்கச் செல்லும் முன் இன்றைக்கு என்ன சாதிச்சோம்னு யோசிச்சிட்டு தூங்குங்க. அடுத்தவர்களுக்கு நல்லது பண்ணாட்டியும் கோபம்ங்ற கொடிய நோயைப் பரப்பாமல் இருந்தாலே, நீங்க அவங்களுக்கு நல்லது செஞ்ச மாதிரிதான். நமக்கோ ஆறு அறிவை ஆண்டவன் கொடுத்துள்ளான். இதில் ஆறாவது அறிவை அப்பப்ப யோசிக்கிறதுக்கு யூஸ் பண்ணுங்க... கோபம் வரவே வராது. நாமெல்லாம் சாதிக்கப்பிறந்தவர்கள். கோபப்படாமல் இருப்பதே ஒரு மாபெரும் சாதனை தான். வாழ்வது இந்த பூமியில் ஒரு முறை தான். அதை கோபப்படாமல் சிறந்த முறையில் வாழ்ந்து சாதிப்போம்.. கோபம் வராதிருக்க யோசிப்போம்...

Wednesday, 29 September 2021

கெட்ட கொழுப்பை கரைத்து எடையை குறைக்கச் செய்யும் கருஞ்சீரக டீ!

நீரிழிவு, ரத்த அழுத்தம், இதய நோய்கள் என பல உடல் நலப் பிரச்சினைகளுக்கு பெரும்பாலும் காரணமாக இருப்பது இந்த உடல் பருமன் பிரச்சினை தான். உடலில் கொழுப்பு எதுவும் சேராமல் பார்த்துக் கொள்வது உடல் பருமனை மட்டுமல்லாது அதனால் ஏற்படும் பிற விளைவுகளில் இருந்தும் தவிர்க்க உதவும். அதற்கு கருஞ்சீரகம் அதிக அளவில உதவுகிறது. கருஞ்சீரகத்தில் தினமும் சிறிதளவு உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலில் தோன்றும் ஏராளமான பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். ரத்த சர்க்கரை அளவைக் குறைப்பது, தலைமுடி உதிர்தலைத் தடுப்பது, சருமப் பிரச்சினை, உடல் எடையைக் குறைப்பது, சிறுநீரகப் பிரச்சினை, இதய நோய்கள் வராமல் தடுப்பது, உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவது என பல பிரச்சினைகளுக்கும் கருஞ்சீரகம் தீர்வாக அமையும். அதனால் கருஞ்சீரகத்தைப் பொடியாகவோ அல்லது சூப்பில் கலந்தோ குடிக்கலாம். உடலில் அகட்ட கொழுப்புகளைத் தேங்க விடாமல் உடல் எடையையும் தொப்பையையும் குறைக்க உதவும். ​கருஞ்சீரக டீ தேவையான பொருள்கள் கருஞ்சீரகம் - 2 ஸ்பூன் புதினா - 1 கைப்பிடியளவு இஞ்சி - 1 துண்டு தேன்- 2 ஸ்பூன் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வையுங்கள். கருஞ்சீரகம் நன்கு கொதித்து அதன் சாறு தண்ணீரில் இறங்க ஆரம்பித்ததும் அதில் இஞ்சியைத் தட்டி சேர்க்க வேண்டும். இஞ்சியும் கருஞ்சீரகமும் சேர்த்து கொதித்து வரும்போது கழுவி சுத்தம் செய்து வைத்திருந்த புதினாவை அதில் சேர்த்து விடுங்கள். புதினா சேர்த்ததும் கொதிக்க வைக்கத் தேவையில்லை.

Tuesday, 28 September 2021

திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!

🤲 திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் திருப்பம் கிடைக்குமா கிடைக்காதா? விஞ்ஞான பூர்வமான ஆதாரத்துடனான பதிவு!

🤲 யாரெல்லாம் திருப்பதி சென்றால் அதிக பலன்கள் பெற முடியும் எந்த ராசி காரர்களுக்கு நன்மை செய்யும் என்பதை இந்தப்பதிவில் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்...

🤲 இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

🤲 திருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவமாகும் ..

🤲 ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளதால் அவற்றின் சக்தி கடல் அளவு என்பர் .

🤲 கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும், செய்வினை தோஷம், வறுமை போக்கும் மற்றும் சந்ததி விருத்தி உண்டாகும்.

🤲 பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமமாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,இதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது.

🤲 வாஸ்துப்படி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன.

🤲 வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும்..

🤲 செல்வம் மலை போல குவியும்.

🤲 உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்யுடன் உள்ளார்கள்.

🤲 அதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும்.

🤲 சந்திரன் சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது.

🤲 மூலிகைகள் அதிகம் இருப்பதால் ஆரோக்கியம் உண்டாகிறது. மகான்கள் நிறைந்த பூமி என்பதால் அருளாசியும் நிறைந்து காணப்படுகிறது.

🤲 வாஸ்துப்படி மிக பலமாக இருப்பதால் இத்திருக்கோயில் மிக அதிக சக்தியுடன் உள்ளது.

🤲 இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான்.

🤲 கலி காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்கு உதவி செய்வதை பலர் பக்தியுடன் சொல்கின்றனர்.

🤲 குல தெய்வம் இல்லாதவர்கள் திருப்பதி பெருமாளை தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள்.

🤲 நடந்து நாம் மலை ஏறினால் அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோக்யத்திற்கு உதவுகிறது.

🤲 நிமிர்ந்து மலை ஏறுவதால் நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழலும்.

🤲 சந்திர தசை மற்றும் சந்திர புக்தியால் நடப்பவர்கள்,

🤲 தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கபட்டவர்களுக்கு இத்திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.

🤲 திங்கள் கிழமை அங்கு சென்று தங்குவது மிகவும் சிறப்பு.

🤲 திருப்பதி மலை மீது எவ்வளவு நேரம் இருக்கிறார்களோ அவ்வளவு நன்மையை தரும்.

🤲 அட போங்கய்யா திருப்பதி போனாலே அனைவரையும் போட்டு பூட்டி வைப்பார்கள் நான் வரவே மாட்டேன் என சொல்லும் அன்பர்கள் தான் அதிகம் காரணம் என்ன தெரியுமா உங்களுக்கு..

🤲 அதே போல அங்கு சென்றவுடன் ஜெயிலில் போடுவது போல அனைவரையும் ஒரு அறையில் போட்டு பூட்டி வைப்பதின் நோக்கம் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பதினோரு மணி நேரம் மலை மேல் இருக்க வேண்டும் என்பது ஐதீகம்

🤲 அதை யாரிடமும் சொல்லி புரிய வைக்க முடியாது ஆகையால் தான் அனைவரையும் போட்டு ஒரு அறையில் பூட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

🤲 அந்த அறையில் மவுனமாக இருந்து உங்கள் வேண்டுதலை செய்யலாம் ஆனால் அங்கு யாரும் அதை செய்வதே கிடையாது .

🤲 மாறாக அங்கு கூச்சலும் குழப்பமாக தான் இருக்கும்...இனிமேல் நீங்கள் திருப்பதி சென்று வந்தால் அங்கு நீங்களாவது அமைதியாக இருங்கள்.

🤲 அதிகம் திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாளை பிடித்து கொள்ளும் லக்னக்காரர்கள் தெரியுமா.?

🤲 மேஷம் , ரிஷபம் , மிதுனம் ,கடகம் , கன்னி , துலாம் .விருச்சிகம் , மகரம், மீனம் லக்னம் உடையவர்கள் அனைவரும் அதிகமாக பிடித்து கொள்ள வேண்டும்.

🤲 வருடம் ஒரு முறை மட்டும் செல்லும் லக்னம் காரர்கள் .சிம்மம் , தனுசு , கும்பம்.

🤲 ஓம் நமோ வேங்கடேசாயா நமஹ சகல ஐஸ்வர்யங்களும் கிட்ட பலன் தரும் ஏழுமலையான் ஸ்லோகம் " 

ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”

ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!

🤲 பொதுப் பொருள்: 

🤲 திருவேங்கடமலையில் வாசம் செய்யும் ஸ்ரீநிவாஸப் பெருமாளே, நமஸ்காரம். அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே, வேண்டும் வரங்களையெல்லாம் வழங்குபவரே, மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம். மகாலட்சுமி வசிக்கும் அழகு மார்புடையவரே, துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.

🤲 ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா உங்கள் திருவடிகளே சரணம் " சரணம் " சரணம்...

👉 அனைவருக்கும் பகிருங்கள்..

Friday, 24 September 2021

கொஞ்சம் சாஸ்திரம் தெரிந்து கொள்வோமா !!

கொஞ்சம் சாஸ்திரம் தெரிந்து கொள்வோமா !! 1. கிழக்கு நோக்கிச் சாப்பிட ஆயுள்வளரும். தெற்கு நோக்கிச் சாப்பிட புகழ் உண்டாகும். மேற்கு நோக்கிச் சாப்பிட செல்வம் வளரும். வடக்கு நோக்கிச் சாப்பிடக் கூடாது 2. பித்ருக்களின் திதியன்று வீட்டில் அன்னதானம் செய்ய முடியாவிட்டால் உணவு விடுதியில் (ஹோட்டல்) பத்துடோக்கன் வாங்கி ஏழைகளிடம் கொடுத்து உண்ணச் செய்யலாம். அவர்களிடம் பணமாகக் கொடுக்கக் கூடாது. 3. அன்னத்தால் பிராணனையும் பிராணனால் பலத்தையும் பலத்தால் தவத்தையும் தவத்தால் சிரத்தையையும் சிரத்தையால் புத்தியையும் மனத்தால் சாந்தியால் சித்தத்தையும் சித்தத்தால் நினைவால் ஸ்திதப் பிரக்ஞையால் விஞ்ஞானத்தையும் விஞ்ஞானத்தால் ஆத்மாவையும் பெறுவதால் அன்னத்தைக் கொடுப்பது இவை எல்லாவற்றையும் கொடுத்தாகிறது. என தைத்தரீயோபநிஷத் கூறுகிறது. எனவே முடிந்த போது முடிந்த அளவிற்கு அன்னதானம் செய்யுங்கள். 4. அளவிற்கு அதிகமாக உண்டால் நோய்வரும். ஆயுள் குறையும். எனவே வயிறு புடைக்க மூச்சு முட்ட உண்ணக் கூடாது. 5. பசிக்கும் போது மட்டுமே தான் சாப்பிட வேண்டும். 6. மிளகு சேர்ப்பதால் உணவில் உள்ள விஷம் நீங்குகிறது. உடலில் உள்ள விஷமும் முறிகிறது. 7. உணவில் சீரகம் (சீர் அகம்) சேர்ப்பதால் உடம்பை சீராக வைப்பது மட்டும் அல்லாமல் குளிர்ச்சியை தருகிறது. 8. வெந்தயம் உஷ்ணத்தைக் குறைக்கிறது. வெந்தயத்தை இரவே தண்ணீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் தண்ணீருடன் பருகி வந்தால் உடம்பில் உள்ள உஷ்ணத்தை குறைக்கிறது. 9. கடுகு உடலில் உள்ள உஷ்ணத்தை ஒரே அளவாக வைக்கிறது. 10. இஞ்சியை உணவில் சேர்ப்பதால் பித்தம் தலை சுற்றல் வாந்தி போன்ற கோளாறுகள் வருவதில்லை. 11. உணவு உண்பதற்கு முன்பு கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். 12. காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். 13. உணவு உண்ணும் போது பேசக் கூடாது. படிக்கக் கூடாது. இடதுகையை கீழே ஊன்றக் கூடாது 14. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே அமர்ந்து உண்ணக் கூடாது. 15. காலணி அணிந்துக் கொண்டு உண்ணக் கூடாது. 16. சூர்ய உதயத்திலும் மறையும் பொழுதும் உண்ணக் கூடாது. 17. உணவு உண்ணும் போது உண்பதில் கவனமாக இருக்க வேண்டும். 18. நிலவின் ஒளியில் உண்ணக் கூடாது. பௌர்ணமியில் நிலாச் சாப்பாடு தனியாகச் சாப்பிடக் கூடாது. பலருடன் சேர்ந்து சாப்பிடலாம். 19. இருட்டிலோ நிழற்படும் இடங்களிலோ உண்ணக் கூடாது. 20. சாப்பிடும் பொழுது நடுவில் எழுந்து சென்று மீண்டும் வந்து சாப்பிடக் கூடாது. நின்று கொண்டு சாப்பிடக் கூடாது. 21. அதிக கோபத்துடன் உணவு உண்ணக் கூடாது. 22. சாப்பிடும் போது தட்டினைக் கையில் எடுத்துக் கொண்டு உண்ணக் கூடாது. தட்டை மடியில் வைத்துக் கொண்டும் படுத்துக் கொண்டும் உண்ணக் கூடாது. 23. இலையைத் துடைத்து வலித்துச் சாப்பிடுவதும் விரலில் ஒட்டி உள்ளதை சப்பிச் சாப்பிடுவதும் தரித்திரத்தை வளர்க்கும்;. 24. வெங்கலம் அலுமினியம் மற்றும் செம்பு பாத்திரங்களில் சமையல் செய்யக் கூடாது. 25. புரச இலையில் சாப்பிட்டால் புத்தி வளரும். 26. வெள்ளித் தட்டில் மற்றும் வாழை இலையில் சாப்பிட்டால் நல்ல அழகு அறிவு மன ஒருமைப்பாடு குடும்ப ஒற்றுமை கிடைக்கும். 27. நாம் சாப்பிட்ட தட்டுக்களை வைத்து சாப்பாட்டையோ அல்லது மற்ற உணவுப் பதார்த்தங்களையோ மூடி வைக்கக் கூடாது. 28. இரவில் இஞ்சி, கீரை, பாகற்காய், கஞ்சி, தயிர், நெல்லிக்காய் ; ஆகியவற்றை சேர்க்கக் கூடாது. 29. உண்ணும் தட்டில் அல்லது இலையில் முதலில் காய்கறிகளோ அப்பளமோ பரிமாறாமல் சாதத்தை பரிமாறக் கூடாது. 30. அதே போல் முதலில் கீரையோ வத்தலோ இலையில் வைக்கக் கூடாது. அசுப காரியத்தில் மட்டுமே பயன்படுத்துவர். வாழ்வில் நாம் செய்யக் கூடாதவை: 1. நம்மை விடப் பெரியவர்கள் முன் கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது. 2. செவ்வாய், வெள்ளி ஆகிய இரு நாட்களிலும் தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் சவரம் செய்து கொள்ளுதல் கூடாது. 3. தலைமுடிக்கு மந்திரங்களை எளிதில் கிரகிக்கும் தன்மை உண்டு. தலைமுடியைக் கொண்டு பில்லி சூனிய ஏவல் வைக்கவும் செய்வர். எனவே தலைமுடியையும் நகத்தையும் எக்காரணம் கொண்டும் பிறர் பார்க்கும் படி வெளியில் எறியலாகாது. 4. நான்காம் பிறைச் சந்திரனைப் பார்க்கக் கூடாது. 5. செப்புப் பாத்திரத்தில் பாலை வைக்கக் கூடாது. பால் திரிந்து விடும். அதிக உப்பு அதிக காரம் அதிக இனிப்பு அதிக புளிப்பு சேர்க்கக் கூடாது. காளானைக் கர்ப்பிணிப் பெண்கள் சாப்பிடக் கூடாது. 6. பட்டு வேட்டி மற்றும் புடவைகளை அணிந்துக் கொண்டு வைதீக காரியங்களைச் செய்யக் கூடாது. 7. கர்ப்பிணி பெண்கள் மாலை வேளையில் சாப்பிடக் கூடாது. 8. மருந்து மாத்திரை ஆகியவற்றை முகர்ந்து பார்க்கக் கூடாது. 9. பெருமூச்சு விடுவது மிகப் பெரும் தவறு அதனால் துன்பங்கள் தான் அதிகரிக்கும் பெருமூச்சு விடுபவரின் மூச்சுக் காற்று அருகில் உள்ளவர் மேல் படக் கூடாது. பட்டால் அவருக்கும் கெடுதல் ஏற்படும். 10. இலவசமாக யாரிடமும் எள் பெறக் கூடாது. 11. நமக்கு ஒருவர் இட்ட உணவைப் பழிக்கக் கூடாது. 12. வீட்டில் எலுமிச்சை மூடியில் விளக்கேற்றக் கூடாது. 13. விளக்கில் அல்லது நெருப்பில் தீப்பற்றிய துணியை மீண்டும் உடுத்திக் கொள்ளக் கூடாது. 14. விளக்கு வைத்த பிறகு தலை வாருதல் முகம் கழுவுதல் பேன் எடுத்தல் போன்றவற்றைச் செய்யக் கூடாது. 15. வெள்ளிக்கிழமை அரிசி புடைப்பது அரிசி வறுப்பது கூடாது. மிளகாய் வறுப்பது மிளகாய் பொடி அரைப்பது கூடாது. இதெல்லாம் ஒரு 80 வருடங்களுக்கு முன்பு மிகச் சரியாக கடைபிடித்து வந்தார்கள். அதனால் தான் அவர்களின் ஆயுள் 120 வயது வரை திட காத்திரமாக இருந்தது.‌ ஆனால் இப்போது பல வகையான நோய்கள் சிறுவயதிலேயே தொற்றிக் கொள்கிறது. முடிந்த வரை வெளி உணவுகளை தவிர்த்து விடுங்கள். இப்போது தான் யூடியூப் இருக்கிறதே நீங்களே அழகாக சமைக்கலாமே !! ஆரோக்கியம் உங்கள் கையில் இருக்கிறது...

Monday, 20 September 2021

தொண்டை கரகரப்பா? இதிலிருந்து விடுபட இதோ சூப்பரான எளிய வைத்தியம்

தேவையான பொருள் வால் மிளகு - 50 கிராம் சுக்கு - 50 கிராம் திப்பிலி - 50 கிராம் ஏலரிசி - 50 கிராம் தேன் - தேவையான அளவு செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு வால் மிளகு,சுக்கு,திப்பிலி மற்றும் ஏலரிசி ஆகிய நான்கு பொருட்களையும் நன்கு பொன்னிறமாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். வறுத்த பொருட்களை இடித்து பொடியாக்கி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும். மேலும் தேனுடன் இடித்த பொடி ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொண்டு நன்கு கலக்கவும். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் தொண்டை கரகரப்பு முற்றிலுமாக குணமாகும்.

2 டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் ஓமம்! இந்த கலவையை தினமும் குடிச்சு பாருங்க... அற்புத மாற்றங்கள் உடலில் நடக்குமாம்!

தேவையான பொருட்கள்: தண்ணீர் - ஒரு கிளாஸ் சீரகம் - 2 தேக்கரண்டி ஓமம் விதைகள் - 1 தேக்கரண்டி செய்முறை சீரக விதைகள் மற்றும் ஓமம் விதைகளை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து ஒரே இரவில் ஊறவைக்கவும். காலையில் தண்ணீரை வடிகட்டி, அதனை குடிக்கவும். மற்றொரு முறை தண்ணீரை பாதியாகக் குறைக்கும் வரை கொதிக்க வைத்து பின்னர் தேநீர் போல உட்கொள்ளவும். இதில் சுவை அதிகரிக்க சிறிது துருவிய இஞ்சி மற்றும் எலுமிச்சை சேர்த்து பருகலாம் . நன்மைகளை என்ன? ஓமம் தண்ணீர் உங்கள் வயிறு மற்றும் கருப்பையை சுத்தம் செய்ய உதவுகிறது. இது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிக்கும்போது கூட நல்லது. சீரக விதைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன, இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்கிறது. உடலில் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கிறது. சீரக தண்ணீர் உடலில் உள்ள நச்சு கூறுகளை அகற்ற உதவுகிறது.

வாழைப்பழ தேநீர்

இரவில் தூங்கச் செல்லும்முன் இயற்கையாக தூக்க மாத்திரை போட்டுக் கொள்ளும் அதிகரித்து விட்டது. அப்படி இருப்பவர்கள் தூங்கும்முன் வாழைப்பழ டீ குடித்துவிட்டு தூங்குவது நல்லது . ஏனெனில் வாழைப்பழத்தில் ட்ரிப்டோபன் என்னும் அமினோ அமிலம் உள்ளது. இந்த அமிலம் நமது மூளையில் செரோடோனின் என்ற வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. செரோடோனின் நமது தூக்கத்திற்கு நன்மை பயக்கக்கூடியது. எனவே தற்போது இந்த வாழைப்பழ டீயை எப்படி தயாரிக்கலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம் தேவையானவை வாழைப்பழம் - 1 இலவங்கப்பட்டை தூள் - 1 தேக்கரண்டி ​தயாரிக்கும் முறை வாழைப்பழத்தின் முனைகளை நன்கு வெட்டிக் கொள்ளவும், ஆனால் அதன் தோல்களை அகற்ற தேவையில்லை, ஏனெனில் வாழைப்பழ தோல்களும் பல நன்மைகளை கொண்டவையாகும். பின்னர் வாழைப்பழத்தை தோலுடன் பெரிய பெரிய துண்டுகளாக வெட்டவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் ஒரு கப் அளவிற்கும் சற்று கூடுதலாக நீரை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அந்த நீரில் தயாராக வைத்துள்ள இலவங்கப்பட்டை தூள் அல்லது இலவங்கப்பட்டையை சேர்க்கவும். பின்னர் இரண்டையும் கொதிக்க வைக்கவும், பிறகு அதில் வெட்டி வைத்துள்ள வாழைப்பழத்தை சேர்த்து வெப்பத்தை குறைத்து 10 நிமிடங்களுக்கு இளம்சூட்டில் நீரை கொதிக்க வைக்கவும். 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பிறகு சிறிது ஆற விட்டு பிறகு வடிக்கட்டியை பயன்படுத்தி அதில் உள்ள நீரை மட்டும்தனியாக பிரித்தெடுக்கவும். இப்போது நமக்கு தேவையான வாழைப்பழம் தேநீர் தயார். இதை படுக்கைக்கு செல்வதற்கு 20 நிமிடங்கள் முன்பாக அருந்தவும். நன்மை சரியான தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் சிறந்த தூக்கத்தை பெற தினமும் இந்த தேநீரை செய்து அருந்தலாம். இதன் மூலம் நீங்கள் நல்ல தூக்கத்தை பெற முடியும். எனவே இனி தூங்க செல்வதற்கு முன்பாக வாழைப்பழ தேநீரை எடுத்துக் கொள்ள மறக்க வேண்டாம்.

Saturday, 18 September 2021

மாளயபட்சம்

மாளயபட்சத்தின் பதினாறு தினங்களிலும் நித்தியத் தர்ப்பணம். தினமும் அன்னதானம் அவசியம். மாளயபட்சத்தில் ஆற்றும் நித்திய அன்னதானத்திற்கும் அன்ன சிரார்த்தம், அன்னத் தர்ப்பணம் என்றே பெயர் உண்டு. இந்த மாளய பட்சத்தில் விநாயகருக்கான சதுராவிருத்தி தர்ப்பணம் எனும் விசேஷமான பூஜையை நிகழ்த்துதல் விசேஷமானது. தாய் அமாவாசை புரட்டாசியின் மாளய அமாவாசை : சூரிய, சந்திர கிரஹ மூர்த்திகள் ஒரே இடத்தில் (ஒரே ராசியில்) கூடும் நாள் அமாவாசை. இவ்விரு கிரஹங்களும் வானில் தொண்ணூறு டிகிரி கோணத்தில் எதிரெதிரே வரும் (எதிர் ராசியில் வரும்) தினம் பௌர்ணமி. மேலும் பௌர்ணமி, அமாவாசையில் சந்திர கிரஹத்தின் உவா ஏற்றம், இறக்கம் என்பதாக - பூமியின் ஆகர்ஷணம், சந்திர கிரஹத்தின் ஆஹர்ஷணத்தில் சில விளைவுகள் உண்டாகி இவை கடலிலும், மனித உடலிலும் பிரதிபலிக்கும். இதை நன்முறையில் சீர்படுத்திடவே இந்நாட்களில் விசேஷமானப் புனிதத் தீர்த்த நீராடல், ஆலய தரிசனம், விளக்கேற்றுதல், பௌர்ணமி விரதம், பௌர்ணமி கிரிவலம், பௌர்ணமி பூஜை. அமாவாசை விரதம், பிதுர்ப் பூஜை. அன்னதான தர்மங்கள் போன்றவற்றைக் கடைபிடிக்கிறோம். இதற்காகவே பௌர்ணமி, அமாவாசையில் புனித நீராடுகிறோம். இக்காரணப்படியாகக் கடலில் தினமும் நீராடலாகாது, குறித்த நாட்களில் மட்டுமே கடலில் நீராட வேண்டும். என்ற ஆன்மக் கட்டுப்பாடும் உள்ளது. கடல் நீரில் ஆசமனம் செய்வது கிடையாது எனும் நியதியும் உண்டு. உண்மையில் ஒவ்வொரு பௌர்ணமியும், ஒவ்வொரு அமாவாசையும் முறையே சந்திர கிரஹணம், சூரிய கிரஹணமும்தான். ரவிச்சந்திர அமாவாசை : பூ லோகத்தில் முதன் முதலாக ஏற்பட்ட அமாவாசை - பாத்ரபத மாதம் எனப்படும் புரட்டாசி தமிழ் மாதத்தில் வரும் மாளய பட்ச அமாவாசைத் திதி தினமாகும். எனவே இதுவே தாய் அமாவாசை, தலைஅமாவாசை. எவ்வாறு சூரிய, சந்திர மூர்த்திகள் கிருஷ்ண பரமாத்மாவின் முன் ஒன்று சேர்ந்து தோன்றிட - சூரிய, சந்திர கிரஹ சங்கமமே அமாவாசை ஆவதால் முதல் ஸ்ரீகிருஷ்ணரின் சங்கல்பப்படியாக அன்று மாலையில் சூரிய சந்திரர்கள் சேர்ந்து (உ)வந்தமையால் அமாவாசைக்கு முதல் நாளில் அமாவாசைத் திதி திகழுமாயின் இது போதாயன அமாவாசை எனும் சாங்க்யமாகக் கடைபிடிக்கப் பெறுகிறது. இதே போல்தான் பூலோகத்தின் முதல் அமாவாசையாகப் புரட்டாசி மாதத்தில் சூரிய, சந்திர சங்கமத்தில் உற்பவித்ததே விசேஷமான ரவிச்சந்திர அமாவாசை எனும் மாளயபட்ச அமாவாசை (ரவி சூரியன்). ஆகவே புரட்டாசி மாதத்தைய அமாவாசை தினமானது அமாவாசைகளுக்கு எல்லாம் தாய் அமாவாசை, தலைஅமாவாசை, மூத்த அமாவாசையாகப் போற்றப்படுகின்றது. மஹாளய அமாவாசை, மஹாலய அமாவாசை, மாளய அமாவாசை, பெரிய அமாவாசை எனப் பல பெயர்களில் பிரசித்தி பெற்றுள்ள புரட்டாசி மாதத்தின் அமாவாசையே வருடத்தின் பன்னிரு அமாவாசைத் திதிகளுக்குமான தலைமைத் திதிப் பீடமாகும். பிரதமை முதல் அமாவாசை / பௌர்ணமி வரை ஒவ்வொரு திதிக்குமான காலதேவதையும் உண்டு. இது பற்றி லலிதா சஹஸ்ரநாமத் துதியிலும் வரும். இதற்கான விளக்கத்தை நவம்பர் 2020 இதழில் அளித்துள்ளோம். சாகாவரந் தரும் அமிர்தத்தை அடைவதற்காக ஆதியுகமொன்றில் தேவர்களும், தேவர்களின் சகோதரர்களான அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த போது அதிலிருந்து மஹாலக்ஷ்மீ தேவியும், சந்திர மூர்த்தியும் ஏனையோரும் ஏனையவையும் தோன்றினர். இதனால் சந்திர மூர்த்தியைத் திருமகளின் சகோதரராகப் போற்றுவர். இதை லலிதா சஹஸ்ரநாமம் எனப் போற்றும். அமாவாசைத் திதி பிறத்தல்: பாற்கடலில் சந்திர மூர்த்தி தோன்றியப் பல யுகங்களுக்குப் பிறகு தட்சரின் சாபத்தினால் சந்திரனின் ஈரெட்டுப் பதினாறு கலைகளும் தேயலுற்ற போது அமாவாசை எனும் திதி வைபவம் ஏற்பட்டது. இதற்கு முன் வரையில் வானில் சூரிய, நட்சத்திரப் பிரகாசங்களே பொலிந்தன. நாம் பொதுவாக நினைப்பது போல வானில் இருப்பது ஒரே ஒரு இப்பிரபஞ்சத்தில் கோடானு கோடி நட்சத்திரங்கள் திகழ்வது போல் எண்ணற்ற பூமிகளும், லோகங்களும் உள்ளன. சில பூமிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட சூரிய, சந்திரர்கள் இன்றும் ஒளி வீசிக் கொண்டுதாம் உள்ளன. . நம் பூமியிலும் எதிர்காலத்தில் இரண்டாவது சூரியன் வரும் என வேங்கடராம சுவாமிகள் தீர்கதரிசனமாக உரைத்துள்ளார். இவை யாவும் மானுடப் பகுத்தறிவுக்கு இன்னமும் எட்டாத ஆன்மீக ரகசியங்கள். இது இப்போதைக்குப் புலப்படாது. விஞ்ஞானத்துக்கு அப்பாற்பட்ட மெய்ஞ்ஞான விஞ்ஞானமிது. தக்க சத்குரு மூலமாகவே அறியற்பாலது. ஆனால் சத்குருவின் மீதும், சத்குருவின் சர்வஞானத்திலும் ஆழ்ந்த நம்பிக்கை ஏற்பட வேண்டுமே. மாதத்திற்கு ஒரு சூரிய மூர்த்தி : நம் பூமியிலும் ஒவ்வொரு மாதத்திற்கு ஒரு சூரிய மூர்த்தியாக வருடத்திற்குப் பன்னிரு சூரிய மூர்த்திகளின் விஜயமும் அருள்பாலிப்பும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. சூரிய ஒளி இல்லையேல் ஜீவ வாழ்க்கை இல்லை. அமாவாசைத் திதி என்பது சூரிய மூர்த்தியின் நேரடியான அனுகிரஹத்தையும், சந்திர மூர்த்தியின் சூக்கும அனுகிரஹத்தையும் பொழிவதாம். தாய் வழி மாத்ருகாரகர் சந்திர மூர்த்தி. இவரே மனகாரகரும் ஆவார். தந்தை வழி பித்ருகாரகர் சூரியர் எலும்பு அங்கத்துக்குமான மூர்த்தியும் ஆவார். ஆகவே அமாவாசையில் பிதுரர் வழிபாடாக தாய், தந்தை இரு தலைமுறை வகை மூதாதையர்கட்கும் தர்ப்பணம், திவசம், படையல், திதி கொடுத்தல், சிரார்த்தம் போன்றவற்றை நிகழ்த்தி வழிபடுகின்றோம். இதில் தாய் அமாவாசையான புரட்டாசி மாதத்தின் மாளய பட்சத்தின் புனிதச் சிறப்பு யாதெனில் ... பிரபஞ்சத்தின் அத்தனைக் கோடிப் பித்ரு மூர்த்திகளும், வசு, ருத்ர, ஆதித்ய, விஸ்வதேவ, பந்து தரணி பித்ருக்களும் பூலோகத்திற்கு நேரடியாக வருகை தரும் வைபவம். பூமிக்கு நேரடியாக வரும் பிதுர்க்கள் : புரட்டாசி மாதத்தின் தேய்பிறைக் காலமாகிய இந்த இருவாரக் காலத்தைய (15 தினங்கள் பிரதமைத் முதல் அமாவாசைத் திதி வரை) மாளயபட்சத்தில் இந்த பூலோகத்தில் எந்த நாட்டில் எந்த மூலையில் எவர் தர்ப்பணம் அளித்தாலும் அதனை அவரவருக்கு உரித்தான மூதாதையரே - அந்தப் பிதுரரே தற்போது எந்த நிலையிலும் இருந்தாலும் நேரடியாக வந்து தர்ப்பணம், திதி கொடுத்தல், படையலை ஏற்பது மாளய பட்சப் பிதுர்ப் பண்டிகைக் காலத்தின் சிறப்பு. கழிவு படாது மலை போல் நெடுங்காலமாகத் தேங்கி இருக்கும் கர்மவினைகள் : மேலும் வருடம் முழுவதும், தினந்தோறும் நித்திய தர்ப்பணமாகப் பிதுர்ப் பூஜையை ஆற்ற வேண்டிய இவ்வுலக மானுடச் சமுதாயத்தார் - காலப்போக்கில் நித்தியத் தர்ப்பணத்தைக் கை விட்டு விட்டமையால் உலகெங்கும் இப்போது பணக்கஷ்டம், நோய்க கடன்கள், மனக்கஷ்டம், விவாகரத்து, குடும்பத்தில் பிளவு, தொற்று நோய் போன்று பல வகைகளிலும் அல்லல்படுகின்றனர். மூதாதையர்க்கு தினமுமே தர்ப்பணம் அளிக்கும் நித்தியத் தர்ப்பணம் என்பதானது உலக மக்கள் சமுதாயத்தின் அவநம்பிக்கை, அசிரத்தையால் தற்போது மாதாந்திர அமாவாசையில் மட்டும் தர்ப்பணம் என்பதாக மிகவும் குறுகி விட்டது. இதனால் மக்கள் சமுதாயத்தில் முற்காலத்தே துலங்கிய பிறர் நலன்களுக்காகச் சேவை ஆற்றித் தம்மை அர்ப்பணிக்கும் தியாக உணர்வு. பெருந்தன்மையான உள்ளமும் சுருங்கி சுயநலம், பேராசை, முறையற்ற காமம் போன்றவை மனித மனத்துள், மானுடச் சமுதாயத்துள் - ஆட்டிடையில் நரி போல் - புகுந்து விட்டன. இதன் காரணமாக நடப்பு உலகச் சமுதாயமானது பலத்த பிதுர் தோஷங்களுக்கு ஆட்பட்டுத் துன்புறுவதோடு நித்தியத் தர்ப்பணத்தின் மூலம் எளிதில் கழியக் கூடிய, கரைய வேண்டிய கோடானு கோடி கர்மவினைகள் உலகெங்கும் 195 நாடுகளிலும் ஒவ்வொரு குடும்பத்திலும் கழிவு படாமலேயே நெடுங்காலமாகத் தேங்கி உள்ளன. இத்தகையப் பெருங்குறைகள், குற்றங்கள், பாவங்கள் அனைத்திற்கும் தீர்வு தருவதாகப் புரட்டாசி மாதத்தின் மாளயபட்சம் வந்தமைந்திருப்பதும் கடவுளின் பெருங்கருணையால் நாம் பெற்ற பாக்யமே. ஆகவே புரட்டாசி மாதத்தின் மாளய பட்சத்தின் பதினைந்து நாட்களிலும் தினமும் தர்ப்பணம் செய்து - இதுகாறும் வாழ்வில் விடுபட்டுப் போன நித்தியத் தர்ப்பணப் பூசனையை ஓரளவேனும் வாழ்வில் புனரமைத்துத் தாய், தந்தையர், இவ்விரு வர்கத்தினருக்கும் திவசம், சிராத்தம், படையல், தர்ப்பணம், திதி கொடுத்தலை ஆற்றி கர்மவினைகள், பாவங்களைக் களைந்து பக்திமிகு நல்வாழ்வில் உய்ந்திடவும். முக்கியமான மாளயபட்சத் திதிகள் மேலும் பிரதமைத் திதி முதல் அமாவாசைத் திதி வரையில் வரும் இரு வாரக் காலத்தின் பதினைந்து திதிகளில் வரும் மிகவும் முக்கியமான திதி தினங்களிலாவது தர்ப்பணம், திவசம், சிராத்தம், படையல்களை அவரவர்க்கு இயன்ற வகையில் அன்னதான தர்மங்களுடன் நிகழ்த்திடவும். 24.9.2021 மஹாபரணி நட்சத்திர - தினம் - நெடுநாள் மருத்துவ மனையில், படுக்கையில், நோயில் கிடந்து உயிர் துறந்தோர்க்கு விசேஷத் தர்ப்பணம் வீட்டில், கோயிலில் நிறைய விளக்குகளை ஏற்றி வழிபடுதல், 16 வகை ஷோடசோபார தீபாரதனை. 29.9.2021 அஷ்டமித் திதி மத்யாஷ்டமி, புதாஷ்டமி, ருத்ராஷ்டமி - சகோதர, சகோதரிகளுக்கு, விசேஷத் தர்ப்பணம். பெற்றோர்கள் தாம் இழந்த வாரிசுகளுக்குத் தர்ப்பணம் அளிக்கவும். 30.9.2021 - மஹாநவமி - பெண் குலத்தார்க்கு, மாதா வர்கத்தினருக்குக் கூடுதல் தர்ப்பணம் 3.10.2021 - யதிமாளயம் - துறவிகள், சந்நியாசிகள், மஹான்கள், யோகியர், ஞானியர், உத்தமப் பெரியோர், தியாகத்துடன் வாழ்ந்தோர்க்கு அர்க்யம், தர்ப்பணம். மஹான்களின் ஜீவ சமாதிகளில் வழிபாடு. 5.10.2021 சஸ்த்ர ஹதமாளயம், கஜச்சாயா, போதாயன அமாவாசை, கிருஷ்ணாங்காரக சதுர்த்தசி - விபத்து, நெருப்பு, ஆயுதம், போர், தற்கொலை மூலமாக இறந்தோர்க்கு விசேஷப் பிதுர்ப் பூஜை 6.10.2021 ஸர்வ மாளய அமாவாசை எல்லோருக்கும் சகல ஜீவன்களுக்கும் காருண்யத் தர்ப்பணம்

Monday, 13 September 2021

உங்களுக்கு குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கா..?

உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என்கிறனர் ஆய்வாளர்கள். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது.
 குளிக்கும் போது சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு செய்வது உண்மையில் நல்ல விஷயம் என்கிறார்கள் மருத்துவர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும்.. எப்படி..?
1/ 7
குளிக்கும் போது சிலருக்கு சிறுநீர் கழிக்கும் பழக்கம் உண்டு. அவ்வாறு செய்வது உண்மையில் நல்ல விஷயம் என்கிறார்கள் மருத்துவர்களும், சுற்றுச் சூழல் ஆர்வலர்களும்.. எப்படி..?

 உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என்கிறனர் ஆய்வாளர்கள். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது. எனவே உடலில் படும்படி சிறுநீர் கழிப்பதால் எந்த தொற்றும் ஏற்படாது.
2/ 7
உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என்கிறனர் ஆய்வாளர்கள். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது. எனவே உடலில் படும்படி சிறுநீர் கழிப்பதால் எந்த தொற்றும் ஏற்படாது.

 அதேசமயம் சிறுநீர் சருமத்திற்கும் நல்லது. அதாவது சருமப் பாதுகாப்பிற்காக காஸ்மெடிக்ஸ் பொருட்களிலும் யூரியா சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இயற்கையான சிறுநீரில் இது இருப்பது மிகவும் நல்லது. சிலர் சரும அழகுக்கு சிறுநீரை குடிப்பதும் நிகழ்கிறது.
3/ 7
அதேசமயம் சிறுநீர் சருமத்திற்கும் நல்லது. அதாவது சருமப் பாதுகாப்பிற்காக காஸ்மெடிக்ஸ் பொருட்களிலும் யூரியா சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. எனவே இயற்கையான சிறுநீரில் இது இருப்பது மிகவும் நல்லது. சிலர் சரும அழகுக்கு சிறுநீரை குடிப்பதும் நிகழ்கிறது.

 அத்லெட்டுகளும் தங்கள் பாதங்களில் உள்ள பூஞ்சைகளை அகற்ற யூரின் தெரப்பி என்ற முறையில் சிறுநீரில் பாதங்களை முக்கி சுத்தம் செய்கின்றனர். ஆனால் இதற்கு எந்தவித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை.
4/ 7
அத்லெட்டுகளும் தங்கள் பாதங்களில் உள்ள பூஞ்சைகளை அகற்ற யூரின் தெரப்பி என்ற முறையில் சிறுநீரில் பாதங்களை முக்கி சுத்தம் செய்கின்றனர். ஆனால் இதற்கு எந்தவித ஆதாரமும் நிரூபிக்கப்படவில்லை.

 சுற்றுசூழல்படி பார்க்கும் போது, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. அதைக் கழுவ ஃபிளஷ் செய்ய கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துவார்கள்.
5/ 7
சுற்றுசூழல்படி பார்க்கும் போது, குளிக்கும்போதே சிறுநீர் கழிப்பதால் தண்ணீர் மிச்சமாகிறது. அதைக் கழுவ ஃபிளஷ் செய்ய கூடுதல் நீரும் தேவைப்படாது. உலக நாடுகளில் தண்ணீர் தட்டுப்பாட்டின் போது இந்த ட்ரிக்ஸை பயன்படுத்துவார்கள்.

 எனவே குளிக்கும்போது சிறுநீர் மட்டுமல்ல உடல் வெளியிடும் மற்ற திரவங்களான வியர்வை, சளி, மாதவிடாய் இரத்தம் ஏன் மலம் கூட கழிக்கலாம் என்கிறது ஹெல்த் லைன் இதழ்.
6/ 7
எனவே குளிக்கும்போது சிறுநீர் மட்டுமல்ல உடல் வெளியிடும் மற்ற திரவங்களான வியர்வை, சளி, மாதவிடாய் இரத்தம் ஏன் மலம் கூட கழிக்கலாம் என்கிறது ஹெல்த் லைன் இதழ்.

 இதில் முக்கிய விஷயம் அவற்றை செய்யும்போது மற்றவர்களும் அந்த பாத்ரூமை பயன்படுத்துகிறார்கள் எனில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே இனி குளித்துக் கொண்டிருக்கும்போது சிறுநீர் வந்தால் தயங்காமல் கழிக்கலாம்.
7/ 7
இதில் முக்கிய விஷயம் அவற்றை செய்யும்போது மற்றவர்களும் அந்த பாத்ரூமை பயன்படுத்துகிறார்கள் எனில் சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியம். எனவே இனி குளித்துக் கொண்டிருக்கும்போது சிறுநீர் வந்தால் தயங்காமல் கழிக்கலாம்.




Saturday, 11 September 2021

வாஸ்து படி பாசிட்டிவ் எனர்ஜி கொடுக்கும் மணி பிளான்ட் செடியை வீட்டில் தவறியும் இந்த திசையில் மட்டும் வைத்து விடவே கூடாது

பலரது வீட்டு வாசலில் மணிபிளான்ட் செடி இருப்பதை பார்த்திருப்போம். பெரும்பாலானோர் அவர்களது வீட்டில் அதிர்ஷ்டம் உண்டாவதற்காக மணி பிளான்ட் செடியை வளர்த்து வருவார்கள். ஆனால் ஒரு சில வீடுகளில் என்னதான் முயற்சித்தாலும் சீக்கிரத்தில் இந்த செடி வளர்ந்து விடாது. இதற்கு காரணம் என்னவென்றால் மணி பிளான்ட் செடி வைப்பதற்கென்று உரிய இடம் இருக்கிறது. அந்த இடத்தில் வைத்து வளர்த்தால் மட்டுமே இந்தச் செடி நன்றாக தழைத்து வளர்ந்து உங்கள் வீட்டிற்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். இவ்வாறு உங்கள் வீட்டிற்கும் அதிர்ஷ்டம் உண்டாக இந்த மணி பிளான்ட் செடியை எந்த திசையில் வைத்து வளர்க்க வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.




மணி பிளான்ட் செடி தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கொடி வகையாகும். மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் இந்த செடி மிகவும் பிரபலம் வாய்ந்தாக உள்ளது.வன பகுதிகளில் வளரும் மணி பிளான்ட் ஐம்பதிலிருந்து அறுபது அடி உயரத்திற்கு வளரும். ஆனால் வீட்டில் சிறிய தொட்டியில் வளர்க்கப்படும் மணிபிளான்ட் 15 முதல் 20 அடி மட்டுமே வளரும். ஒரு சிலர் மணி பிளான்ட் செடியை வீட்டை அலங்கரிப்பதற்காகவும் வளர்க்கின்றனர். இதனை வளர்ப்பதற்கு பெரிதாக செலவுகள் ஒன்றும் ஆகாது. ஆனால் வாஸ்துப்படி இதனை சரியான இடத்தில் வைத்து வளர்ப்பது என்பது மிகவும் அவசியமாகும்.


மணி பிளான்ட் வைக்க வேண்டிய திசை:
வாஸ்து நிபுணர்களின் கூற்று படி இந்தச் செடியை தென்கிழக்கு திசையில் வைத்துதான் வளர்க்கவேண்டும். ஏனென்றால் தென் கிழக்கு திசையில்தான் பாசிட்டிவ் எனர்ஜி அதிகமாக கிடைப்பதாகவும், இந்த திசையில் மணிபிளான்ட் செடி வைத்து வளர்ப்பதன் மூலம் அது நன்றாக வளர்ந்து, அதன் வேகமான வளர்ச்சி போலவே வீட்டில் செல்வ வளமும் பெருகும் என்பது வாஸ்து நிபுணர்களின் கூற்றாக உள்ளது 

தென்கிழக்கு திசை விநாயகருக்கு உரிய திசையாகவும், சுக்கிரன் பிரதிநிதித்துவம் செய்யும் திசையாகவும் கருதப்படுகிறது. எவ்வாறு விக்னம் என்னும் சொல்லிற்கு ஏற்றவாறு விநாயகர் நமது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக இருக்கிறாரோ, அதுபோல இந்த திசையில் வைக்கப்படும் மணிபிளான்ட் செடியும் நமது வீட்டில் உள்ள பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் வல்லமை பெற்றதாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் சுக்ரனுக்கு உரிய திசை என்பதால் செல்வ வளமும் பெருகும் என்பது அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.



மணி பிளான்ட் வைக்கக்கூடாத திசை:
மணிபிளான்ட் செடியை எக்காரணம் கொண்டும் வடகிழக்கு திசையில் மட்டும் வைத்து விடக்கூடாது. ஏனென்றால் இந்த திசை எதிர்வினையை அதிகரிக்கும் திசை என்பதால நமது வீட்டில் நஷ்டம் தான் அதிகரிக்கும். வீண் விரயங்களும் ஏற்படும்.


மணி பிளான்ட் வளர்க்க வேண்டிய முறை:
வீட்டில் அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் மணி பிளான்ட் செடியை மண் அல்லது நீரில் வைத்து வளர்த்தாலும் நன்றாக வளரும். அவ்வாறு வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் இவ்வாறு உங்களுக்கு விருப்பமான எந்த இடத்தில் வைத்தும் வளர்க்கலாம். ஆனால் நீங்கள் வைக்கும் திசையை மட்டும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும். இந்த செடியில் இருக்கும் இலைகள் ஏதேனும் ஒன்றிரண்டு வாடி இருந்தாலும் அதனை உடனே அகற்றி விட வேண்டும். இல்லையென்றால் அவை முழுச் செடியையும் பாதித்துவிடும். இவ்வாறு இந்தச் செடி பாதிப்படைவதென்பது வீட்டிற்கு நன்மையை கொடுத்திடாது.

Friday, 10 September 2021

காலில் விழுந்து ஆசி ...

வலது கையில் சுக்கிரனும்,வளர்பிறை சந்திரனும் இருக்கிறார்கள்...சுக்கிரன்,சந்திரன் பலம் பெற்றவர்கள் காலில் விழுந்து ஆசி பெற்று அவர்கள் நம் தலையில் கை வைத்தோ அட்சதை தூவியோ ஆசி செய்யும்போது நம்மை சுற்றி உள்ள கெட்ட சக்திகள்,கண் திருஷ்டிகள் விலகுகின்றன...நல்ல எண்ணம் கொண்டவர்கள் கால் கட்டை விரலை தொட்டு வணங்கும்போது அவர்கள் பாசிடிவ் எனர்ஜி நமது மூளைக்கு புத்துணர்ச்சி தருகிறது.

தாயிடம் தந்தையிடம் ஆசி பெறும் போதும் நம்மை சுற்றியிருக்கும் துர் சக்திகள் விலகி அதிர்ஷ்டம் பெருகும்

Tuesday, 7 September 2021

புதினாக்கீரை பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள்

புதினாக்கீரை
 
புதினாக்கீரை பயிரிடும் முறைகள் மற்றும் பயன்கள்
👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇

கீரை வகைகளில் ஒன்றான புதினா நல்ல நறுமணம் கொண்ட ஒரு மருத்துவ மூலிகையாகும்.

கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லியை போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காக பயன்படுத்தப்படுகிறது.

புதினா வருடம் முழுவதும் அறுவடை செய்யக்கூடிய பயிர்களில் ஒன்றாகும். இதற்கு காலநிலை எதுவும் கிடையாது. ஆனால் ஜூன் – ஜூலை மாதங்களில் நடவு செய்ய சிறந்த பருவம் ஆகும்.

பயிரிடும் முறை:👇👇👇

நிலத்தை நன்கு பண்படுத்தி மக்கிய தொழு உரம் இட வேண்டும். பின்பு சாகுபடிக்கு ஏற்றவாறு பாத்திகள் அமைத்துக் கொள்ளவேண்டும். பாத்தி கட்டி புதினா நாற்றை நடவு செய்ய வேண்டும்.
இது பொதுவாக பத்தியங்கள் மூலம் இனப்பெருக்கம் செய்யக்கூடியது. சிறிது வேர் இருந்தாலும் நன்கு தழைத்து வளரும் தன்மை உடையது.
தயார் செய்துள்ள பாத்திகளில் 40 x 40 செ.மீ இடைவெளியில் புதினாவை நடவு செய்ய வேண்டும். புதினா சாகுபடிக்கு உப்பு நீரை பாய்ச்சினால், அது விளைச்சலை பாதிக்கும். எனவே நல்ல நீரை மட்டும் பாய்ச்ச வேண்டும். பின்னர் மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.
ஒரு எக்டருக்கு தழைச்சத்து 30 கிலோ, மணிச்சத்து 60 கிலோ மற்றும் சாம்பல் சத்து 10 கிலோ கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இட வேண்டும்.
நடவு செய்த 60 மற்றும் 120 வைத்து நாளில் ஒரு எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து உரத்தை இரண்டு முறை பிரித்து இடவேண்டும். ஒவ்வொரு அறுவடைக்கு பின்னரும் உரமிட வேண்டும்.
தேவைக்கேற்ப கைகளை எடுத்து களைகளை கட்டுப்படுத்த வேண்டும்.
பூச்சி தாக்குதல் அதிகமாக இருக்காது. சில இடங்களில் வெள்ளை பூச்சி அல்லது புரோட்டான் கருப்புப் புழு தாக்குதல் காணப்பட்டால் இஞ்சி பூண்டு கரைசல் தெளிக்கலாம்.
நடவு செய்த 5 வைத்து மாதத்தில் முதல் அறுவடையும் அதன் பின்னர் மூன்று மாத கால இடைவெளியிலும் அறுவடை செய்ய வேண்டும். நல்ல முறையில் பராமரிப்பு செய்தால் நான்கு ஆண்டுகள் வரை மகசூல் எடுக்கலாம்.
ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 15 – 20 டன் புதினா கிடைக்கும்.

பயன்கள்:👇👇👇

உடலுக்கு நோய் எதிர்புச் சக்தி அளிக்கக்கூடியது. உணவை செரிமானம் செய்யவும், உணவு செரிமானம் சம்மந்தமாக வரும் வெப்பத்தையும் ஜூரத்தையும் நீக்கவல்லது.
வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.
மூச்சுத்திணறல் நிற்க புதினா இலையைச் சிறிதளவு எடுத்து மூன்று மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் அந்த நீரை குடித்தால் மூச்சுத்திணறல் பிரச்னை நீங்கும்.
புதினாவை உலர்த்திப் போடி செய்து பற்பொடியாக உபயோகப்படுத்தினால் பற்களுக்கு நல்லது. ஈறுகளும் வலிமை பெரும்.
மஞ்சள் காமாலை, வாதம்,வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.

Friday, 3 September 2021

நாகலாபுரம் மச்ச அவதார ஸ்ரீவேதநாரயணபெருமாள்...

நாகலாபுரம் மச்ச அவதார ஸ்ரீவேதநாரயணபெருமாள்... பெருமாளையும் தாயாரையும் ஒரே இடத்தில் நிம்மதியாக தரிசனம் செய்வதற்கு உதவும் ஆலயம் அமைந்துள்ள ஆலயம் பற்றி உங்களுக்கு தெரியுமா? திருப்பதி தரிசனத்திற்கு சமமான பத்மாவதி, ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்த இடம் என்ற வரலாற்று பெருமையுடைய நாராயணவனம் தலத்திற்கும் மற்றும் அத்தி வரதருக்கு சமமான தரிசனம் பெறக்கூடிய ஒரு ஆலயம் என்கிற பெருமை உடையதுமான நாகலாபுரம் ஸ்ரீவேதநாரயண பெருமாள் தலத்திற்கும் தான் இந்த பதிவின் மூலம் நாம் பயணம் செல்ல போகிறோம்! சந்திரனை அடிப்படையாக கொண்ட சந்திர மாஸ கணக்குபடி வைகாசி மாத சுக்ல பட்ச தசமி திதியன்று நாராயணவனம் என்கிற இடத்தில்தான் பத்மாவதி ஸ்ரீநிவாசப்பெருமாளுக்கு திருமணம் நடந்துள்ளது அப்படிபட்ட வரலாற்று பெருமையுடைய தலத்தையும் ஆயிரம் அத்தி வரதர்க்கு சமமான வேத நாராயண பெருமாள் கோவில் தலத்தையும் இன்று நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். பெரும்பாலானோருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். பொதுவாக நாம் எந்த பெருமாள் கோயிலுக்குச் சென்றாலும் அங்கே அருகிலேயே தாயார் சன்னதியும் இருக்கும். ஆனால் திருப்பதியில் மட்டும் தாயார் எங்கோ தொலைவில் திருச்சானூரில் இருக்கிறாரே! ஏன் இப்படி? இதற்கு விடை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாளின் ஊர். திருச்சானூர் பத்மாவதி தாயாரின் ஊர். பெருமாள் தாயாரைப் பார்க்க திருச்சானூருக்கு வந்தார். அதனால் அங்கு பெருமாளுக்கு தனி சன்னதி இருக்கிறது. ஸ்ரீ வெங்கடேச பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்த இடம் நாராயண வனம். இங்கு பெருமாளும், தாயாரும் ஒரு சேரக் காட்சியளிக்கின்றனர். தலசிறப்பு: இங்கு பெருமாளும் தாயாரும் மணம் முடித்தக் காரணத்தால் இது கல்யாணக் களையுடன் மகிழ்ச்சியைக் குறிக்கும் மங்களகரமான இடம். இங்கு பெருமாள் மணமகன் அலங்காரத்திலும், தாயார் மணமகள் அலங்காரத்திலும் அருள்பாலிக்கின்றனர். திருப்பதியிலும், திருச்சானூரிலும் தனித்தனியாக இருக்கும் இவ்விருவரும் ஒன்று சேர்ந்து எழுந்தருளியிருப்பது காணக் கிடைக்காத அற்புதக் காட்சி நாராயணவனத்தில் உள்ள கல்யாண ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் திருப்பதியை விட பழமையான கோவிலாகும். இது தான் பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம். நாராயணவனத்தில் தான் பெருமாளுக்கும், பத்மாவதி தாயாருக்கும் திருமணம் நடந்தது. உடைவாள், கையில் திருமண காப்போடு பெருமாள் அருளும் இந்த க்ஷேத்ரம் தான் உலகின் முதல் வெங்கடாஜலபதி கோவில். இரண்டாவதுதான் திருப்பதி! திருப்பதி வெங்கடாஜலபதி பத்மாவதி தாயாரை இங்கு தான் மணந்தார். பத்மாவதி தாயாரின் அவதார ஸ்தலம் இது. இடுப்பில் உடைவாளோடு, கையில் கல்யாண காப்போடு பெருமாள் இருக்கும் கோவில்கள் இரண்டு. ஒன்று குணசீலம் இன்னொன்று நாராயணவனம். திருப்பதி கோவிலை காட்டிலும் இந்த கோவில் மிக பழமையானது. இந்த கோவிலை திருமணம் ஆகாதவர்கள் தரிசித்தால் திருமணம் தடை விலக்கும் ஸ்தலம் இது. சுருக்கமாக நாராயணவனம் கல்யாண பெருமாள் என்று சொன்னால் தான் அனைவர்க்கும் இங்கே தெரியும் இந்த நாராயணவனம் க்ஷேத்ரத்தை ஒருமுறை தரிசித்தால் திருப்பதிக்கு 100 முறை சென்று வந்த புண்ணியம் கிடைக்கும். கையில் திருமண காப்போடு இருக்கும் இந்த பெருமாள் திருமண தடையை நீக்குவதில் வல்லவர். திருப்பதியில் ஸ்ரீநிவாசப்பெருமானை தரிசனம் செய்ய அருகில் செல்லும்போதே ஜருகண்டி, ஜருகண்டி என்று சொல்லி நம்மை நிம்மதியாக தரிசனம் செய்ய விடமாட்டார்கள். ஆனால் இந்த நாராயணவனத்தில் இப்படிபட்ட நாம் நிம்மதியாக பெருமாள் மற்றும் தாயாரின் தரிசனத்தை பெற முடிகிறது. திருமலையில் பெருமாளை நீண்டநேரம் காத்திருந்து தரிசிக்க முடியாத குறையைப் போக்க விரும்புபவர்கள், இந்தத் நாராயணபுரம் தலத்துக்கு வந்து, தாங்கள் விரும்பும் அளவுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பெருமாளையும் தாயாரையும் ஒருசேர தரிசித்து மகிழலாம் உள்ளே சென்று பெருமாளை வணங்கிவிட்டு, வெளியே வரும்போது ஸ்ரீ பத்மாவதி தாயார் திருமணத்திற்கு மாவு அரைத்த இயந்திரம் ஒன்றை பார்க்கலாம்! இப்போதெல்லாம் இது போன்ற கையால் மாவு அரைக்கின்ற இயந்திரம் எங்கே இருக்கிறது? என்று தேடும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். தரிசனம் முடித்து வெளியே வந்ததும்,அருமையான ருசியோ ருசியான கோயில் பிரசாதம் புளியோதரையை சிந்தாமல் சிதறாமல் தொன்னையில் அள்ளிக் கொடுக்கின்றார்கள். பக்தர்கள் தங்களுக்கு திருமணம் கைக்கூடவும், கடன்தொல்லையில் இருந்து விடுபடவும், சகல செல்வங்களும் கிடைக்க பெருமாளை வேண்டி செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி திருக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்திற்கு உட்பட்டது. மிக மிக அழகாய் பராமரித்துக் கொண்டு வருகின்றார்கள். பெயர்ப்பலகை அனைத்தும் மின்னும் வண்ண செப்பேட்டில், திருப்பதியில் உள்ளது போன்றே இங்கும் உள்ளது. திருப்பதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நாராயண வனம் உள்ளது இந்த நாராயண வனத்தில் அருணா நதி பள்ளத்தாக்கு உள்ளது. பத்மாவதி என்று அழைக்கப்படும் தாயார் இந்த இடத்தில்தான் வளர்ந்தார்கள். திரு வெங்கடேசப் பெருமானின் திருமணம் இந்த இடத்தில்தான் நடந்தது. அந்த திருமணத்தை காண 33 கோடி கடவுள்களும் அணிவகுத்து நின்றார்களாம் . வெங்கடேசப்பெருமான் மற்றும் பத்மாவதி தேவி அவர்கள் திருமணம் முடிந்த பின்பு திருப்பதிக்கு செல்லும் வழியில் அப்பலயகுண்ட என்ற ஊரில் ஓய்வெடுத்துவிட்டு சென்றுள்ளார்கள். இந்த ஊர் திருப்பதியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்செந்தூர் செல்லும் வழியில் அமைந்துள்ளது. திருப்பதிக்கு செல்லும் வழியில் இது அமைந்திருப்பதால் இதை மறக்காமல் பார்த்து விட்டு செல்ல வேண்டும். இது மிக அழகான முறையில் கட்டப்பட்ட கோவில்களில் ஒன்றாகும் இந்தக் கோவிலில் உள்ள தெய்வங்கள் கம்பீரமாகவும் அழகாகவும் காட்சியளிக்கின்றார்கள். இந்த கோவிலில் மிக முக்கியமான இரண்டு கடவுள் யார் என்றால் பத்மாவதியும் ஆண்டாளும் ஆவார்கள். இந்தக் கோவிலில் தரிசனம் பெறுவது மிக சுலபமான ஒன்றாகும். பத்மாவதி தாயாருக்கும் சீனிவாச பெருமாளுக்கும் நாராயணவனம் என்னும் இடத்தில் திருமணம் நடந்து முடிந்ததும், சீனிவாச பெருமாள் பத்மாவதி தாயாருடன் திருமலைக்குப் புறப்பட்டார். அப்போது மணமக்கள் இருவரும் வேங்கட மலைக்கு செல்லும் வழியில் அகத்தியர் ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அவர்களுக்கு அகத்தியர் தடபுடலாக விருந்தளித்தார். அப்போது அகத்தியர், ‘திருமணமான தம்பதிகள் ஆறு மாதத்துக்கு மலையேறக் கூடாது’ என கூறிவிட்டார். மகரிஷியின் வார்த்தைக்கு மறுப்பேது? அகத்திய மகரிஷி கூறியபடி, பெருமாளும், பத்மாவதி தாயாரும் திருமலைக்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டனர். அப்படி பெருமாள் தங்கிய தலம்தான் இப்போதைய சீனிவாசமங்காபுரம் என்று கூறப்படுகிறது. சீனிவாசனும், அலமேலு மங்கையாகிய பத்மாவதியும் தங்கியதால் இருவரின் பெயராலும் சீனிவாசமங்காபுரம் என அழைக்கப்படுகிறது. புராதன காலத்தில் சித்புருஷர்கள் தவம் செய்த இடமானதால் சித்தர் கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. தனக்கு திருமணம் நடந்த நாராயண வனத்தில் 5அடி உயரத்தில் பால்ய வடிவிலும், சீனிவாசமங்காபுரத்தில் 8 அடி உயரத்தில் கம்பீரமான வாலிப வடிவத்திலும், திருமலையில் 6அடி உயரத்தில் குடும்பதலைவர் கோலத்திலும் பெருமாள் காட்சி தருகிறார். இம்மூன்று முர்த்திகளும் சீனிவாச பெருமாளின் ஒரே வடிவங்களே. சீனிவாசமங்காபுரம் கோயிலில் உள்ள கருவறையில் பெருமாள் மூன்று திருக்கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நடுநாயகமாக சீனிவாச பெருமாளாக நின்ற திருக்கோலத்திலும், வலது புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த திருக்கோலத்திலும், இடது புறம் ஸ்ரீரங்கநாதரைப் போல் சயனக் கோலத்திலும் சேவை சாதிக்கிறார். நாராயண வனம் எங்கு இருக்கிறது? ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 35 கிமீ தொலைவிலும் புத்தூரிலிருந்து 5 கிமீ தொலைவிலும் உள்ளது. திருச்சானூரிலிருந்து 31கிமீ தொலைவும், சென்னையிலிருந்து 95 கிமீ தொலைவில் ஊத்துக்கோட்டை திருப்பதி சாலையில் உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 5 மணியிலிருந்து இரவு 8 மணி வரை கோயில் திறந்திருக்கும். இங்கு ஆறு கால பூஜைகளும், பலவிதமான உற்சவங்களும் நடப்பதால் பக்தர்கள் எப்பொழுது சென்றாலும் ஏதேனும் ஒரு பூஜை அல்லது உற்சவத்தில் கலந்து கொள்ளலாம். இத்தலத்திற்கு 7கிமீ தொலைவில் நாகலாபுரம் தலம் உள்ளது. இது மச்சாவதாரத் திருத்தலம். இன்னும் சற்றுத் தொலைவில் பிரதோஷப் பூஜை தோன்றுவதற்கு மூலக்காரணமாக இருந்த தலமான சுருட்டப்பள்ளி பள்ளிக்கொண்டீஸ்வரர் ஆலயம் இருக்கிறது. நாராயணவனத்தில் தரிசனம் முடித்து அப்படியே அருகில் நாகலாபுரத்தில் இருக்கின்ற வேதநாராயணப் பெருமாள் திருக்கோயிலுக்கு சென்றால் ஒரே கல்லுல ரெண்டு மாங்கா என்பது போல,ஸ்ரீ கல்யாண வெங்கடேஸ்வர ஸ்வாமி தரிசனம் பெற்ற மகிழ்ச்சியுடன் அத்திவரதர் தரிசனத்திற்கு சமமான ஸ்ரீ வேதநாராயண பெருமாளின் தரிசனத்தையும் நாம் பெறலாம். பெருமாளின் பத்து அவதாரங்களில் முதல் அவதாரமான மச்ச அவதாரமாக இறைவன் பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் மிக அற்புதமான அரிதான தலம் நாகலாபுரம் தலமாகும். வேதநாராயணப் பெருமாள் என்ற திருநாமம் கேட்ட உடனே வேதத்திற்கும் இத்தலத்திற்கு சம்பந்தம் உண்டு என்று தெரிகின்றது. நமது “ஸநாதன தர்மத்துக்கு’ ஆதாரமானவை வேதங்களே! நான்மறைகள் இல்லையேல் நமது மதமே இல்லை. காக்கும் கடவுளான திருமால், தர்மத்தை நிலை நாட்டப் பல அவதாரங்கள் எடுத்திருப்பினும், அவற்றுள் வேதங்களைக் காத்த பெருமையினால் பெரிதும் போற்றப்படுவது மத்ஸ்ய ரூபத்தில் (மீன் உருவம்) எடுத்த அவதாரமே! ‘தசாவதாரங்களில்’ இதுவே முதன்மையானது. அது மட்டும் அல்லாமல் மிகவும் சிறப்பான அமைப்பான இறைவன் தன கையில் சுதர்சன சக்கரத்தை செலுத்துவதிற்கு தயாராக உள்ள நிலையில் இத்தலத்தில் அருள் பாலிக்கின்றார் . இந்த மச்ச அவதார நோக்கமே அசுரர்களால் திருடப்பட்ட வேதங்களை காப்பாற்ற மஹா விஷ்ணு எடுத்த அவதாரமாகும் . ஒரு யுகம் முடிவு அடைய போகும் கால கட்டத்தில் பிரம்மாவுக்கு உறக்கம் ஏற்பட்டது. அவர் கண்களை மூடி வாயை திறந்து தூங்கும் போது அவர் வாயில் இருந்து வேதங்கள் வெளி வந்து விழுந்தன . அவற்றை அசுரரான சோமகுரு என்ற அசுரன் அதை திருடி எடுத்து சென்றுவிட்டான் . இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரம்மா மற்றும் தேவர்கள் இருந்தால் தான் புது யுகத்தை உருவாக்க முடியும் அதில் எல்லா உயிரினங்களை படைக்க முடியும் என்று கூறினார் . மத்திய புராணத்தில் இந்த மச்ச அவதாரத்தை பற்றி கூறியுள்ளார்கள். விஷ்ணுவின் பக்தரான சத்தியவரதா சந்தியா வந்தனம் செய்யும் போது அந்த கமண்டலத்தில் இருந்து சிறிய மீனாக தோன்றிய பெருமாள் படிப்படியாக ஒரே நாளில் பெரிய மீனாக உருவெடுத்தார் . பகவான் தன் மச்ச அவதாரத்தின் மூலம் அசுரன் சோமகுருவை அழித்து வேதங்களை திரும்ப பெற்றார் . அவற்றை பிரம்மாவிடம் ஒப்படைத்தார் . பிரம்மா தன் படைக்கும் தொழிலால் ஒரு புதிய யுகத்தை உருவாக்கினார் . முதல் அவதாரமாகிய மச்சாவதாரக் கோலத்திலேயே திருக்கோயில் கொண்டு அருள்புரியும் திருமால் ஆலயத்தை, இந்த நாகலாபுரத்தில் காணலாம். இத்தகைய கோலம், வேறு எங்கும் காணப்படாத ஒன்று. பிற ஆலயங்களில் புடைப்புச் சிற்பமாகவோ, சித்திரமாகவோ மட்டுமே மீனாகிய தேவனை தரிசிக்க முடியும். மூலவராக தனி சந்நிதி கொண்டு அருள்புரிவது இங்கு மட்டுமே என்கின்றனர். 16ம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவராயரால், அவர் தம் தாயின் நினைவாக இக்கோயில் கட்டப்பட்டது. மூலவர் வேதநாராயணப் பெருமாள்,ஸ்ரீதேவி-பூதேவி யுடன் காட்சி தருகிறார். திருமாலின் திருப்பாதங்கள் மீனின் அடிப்புறம் போலவே அமைந்துள்ளது. இந்த அற்புதக் காட்சியை இன்றைக்கெல்லாம் கண் குளிர சேவிக்கலாம். இவ்வாலயத்தில் வேதவல்லித் தாயார், லட்சுமி நரசிம்மர், வீரஆஞ்சநேயர், பக்த ஆஞ்சநேயர், ராமபிரான் ஆகிய தெய்வங்களுக்கு தனி சந்நிதிகள் அமைந்துள்ளன. திருச்சுற்று மதிலுடனும், ராஜகோபுரங்களுடனும் ஒரு பெரிய ஆலயமாகவே இது திகழ்கிறது. இந்த ஆலயத்தின் கோபுரம் பார்க்கும் போதே நமக்கு பல்லாண்டு பல்லாண்டு! பல்லாயிரத்தாண்டு! பலகோடி நூறாயிரம் மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!* உன் சேவடி செவ்வித்திருக்காப்பு என பல்லாண்டு பாடத் தோன்றுகிறது .. வேதநாராயணப் பெருமாள் கோவிலின் அறிவிப்பு பதாகை நம்மை வரவேற்கின்றது, பெருமாள் மச்சாவதார கோலத்தில் அதுவும் சுயம்பு மூர்த்தமாக இவர் இருக்கும் அந்த அழகு இங்கே கிடைக்கும் தெய்வீக அதிர்வலையை வர்ணிக்க வார்த்தைகள் எதுவும் இல்லை. பெருமாள் கோவிலில் சுற்று பிரகாரத்தில் சிவன் சந்நிதியை பார்ப்பது என்பது மிக, மிக அபூர்வம் இங்கே சுற்று பிரகாரத்தில் வீணா தக்ஷிணாமூர்த்தியை பார்க்கலாம். இந்த பெருமாளை வழிபடுவதன் மூலம் பித்ரு தோஷம், சர்ப்ப தோஷம் முதலான பல தோஷங்கள் நீங்கும். இந்த கோவில் அனைத்து ராசியினரும் வழிபட வேண்டிய கோவில், குறிப்பாக மீன ராசியினர் அவசியம் வழிபட வேண்டும். இந்த கோயிலானது கிருஷ்ண தேவராயரால் கட்டப்பட்டது ஆகும் . இவ்வூரான நாகலாபுரம் என்ற பெயரானது தன் அம்மா பெயரான நாகமா என்ற பெயரை ஞாபகப்படுத்துமாறு வைத்தார் . இக்கோயின் மற்றொரு சிறப்பு அம்சம் . இக்கோயில் மேற்கு அமைந்துள்ளது. சூரியனது கதிரானது ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12 ,13 ,14 ஆம் தேதிகளில் மாலை 6 மணி முதல் 6 .15 மணி வரை இறைவனின் மீது படும் .அதுவும் முதல் நாள் சூரிய கதிர் இறைவனின் கால் பகுதியிலும் ,இரண்டாம் நாள் இறைவனின் மார்பு பகுதியிலும் ,மூன்றாம் நாள் இறைவனின் தலை பகுதியில் படும் . இக்கோயில் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது . திறந்திருக்கும் நேரம் : காலை 6 .00 -12 .00 ,மாலை 4 .00 -8 .00 செல்லும் வழி: இக்கோயில் சென்னையில் இருந்து சுமார் 80 km தொலைவில் சிறிய கிராமத்தில் அமைந்துள்ளது. சென்னை -திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது சுருட்டப்பள்ளியில் இருந்து சுமார் 15 km தொலைவில் இக்கோயில் உள்ளது... ஓம் நமோ நாராயணா நமஹா