jaga flash news

Friday 16 July 2021

ஆடி மாசம் ஏன் புதுமண தம்பதிகளை பிரிக்கிறார்கள்..?



ஆடி மாசம் ஏன் புதுமண தம்பதிகளை பிரிக்கிறார்கள்..?

ஒரு குழந்தை கருவில் உருவாகும்போது அதன் நான்காவது மாதத்தில்தான் எலும்புகள் உருவாகும்.சூரியன் எலும்புகளுக்கு அதிபதி.சூரியன் பாவருடன் சேர்ந்த ஜாதகர்களுக்கு விபத்தில் எலும்புகள் உடைவதை பார்க்கிறோம்.

ஆடி மாதம் புதுமண தம்பதிகள் ஒன்று சேர்ந்து கரு உருவாகும்போது ஐப்பசி மாதம் நான்காவது மாதமாக வரும்.ஐப்பசியில் சூரியன் நீசமாகும் .நான்காவது மாதத்தில் எலும்புகள் உருவாகும்போது அதன் அதிபதி சூரியன் கெடுவதால் வலு இல்லாது போய்விடும்.இதனால் உடல் ஊனம் ஏற்படவும் அடிக்கடி எலும்பு சம்பந்தமான பிரச்சினை வரவும் அந்த குழந்தையின் எதிர்காலத்தில் வாய்ப்புகள் நிறைய இருக்கு..இதனால் ஆடியில் கரு உருவாகாமல் இருப்பது நல்லது.

தை மாதம் திருமணம் ஆனால் சூரியன் உச்சம் ஆகக்கூடிய சித்திரை மாதம் அக்குழந்தைக்கு நான்காவது மாதமாக வரும்.வைகாசி திருமணம் ஆகும் போது சூரியன் சிம்மத்தில் ஆட்சி பெறக்கூடிய ஆவணி மாதம் நான்காவது மாதமாக வரும்.இவை எல்லாம் சிறப்பான திருமண மாதங்களாக புகழ் பெற இது முக்கிய காரணம்

No comments:

Post a Comment