jaga flash news

Saturday 15 October 2022

அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் மின்னூட்டங்கள்

குலதெய்வ வழிபாடு நம் தந்தை ,தாத்தா,அவரது தந்தை என வருடம்தோறும் அவர்கள் பார்த்து வழிபட்டு அவர்களது சக்தி ,ஆகர்ஷணம்,ஆன்ம சக்தி எல்லாம் அந்த சிலையில் ஏற்றி வைத்திருப்பர்.குலதெய்வத்தை நீங்கள் கண்களால் காணும்போதே உங்கள் கண்கள் வழியாக உங்கள் ஆன்ம சக்தி சிலையோடு கலந்து விடும்.இவ்வாறு முன்னோர் ஆன்ம சக்தி கருங்கலால் ஆன அந்த சுவாமி சிலையில் ஊடுருவி இருப்பதால் அவர்கள் காலமான பின்னரும் அதன் தெய்வீக சக்தி உங்கள் ஆன்மாவோடு கலந்து பலன் கொடுக்க உங்களை வழிநடத்த குலதெய்வத்தை அடிக்கடி காண வேண்டும் வருடம் ஒருமுறையாவது பார்த்து வர உங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.திருப்பதி ,திருச்செந்தூர் போன்ர ஸ்தலங்களில் சித்தர்கள்,மகான்கள் ஆசி கிடைக்கிறதோ அது போல உங்கள் வம்சாவழியினர் ஆசி கிடைக்க குலதெய்வம் வழிகாட்டும்.

ஆலய கருவறையில் உள்ள கற்சிலை, பிரபஞ்ச சக்திகளை எல்லாம் ஒருங்கேப் பெற்று அதை ஆலயம் முழுவதும் பரவச் செய்து கொண்டிருப்பதை படித்து இருப்பீர்கள். அபிஷேகம் செய்யப்படும் போது மூலவர் சிலை வெளிப்படுத்தும் சக்தியானது அதாவது அருள் அலைகள் இரட்டிப்பாக உயர்ந்து விடுமாம்.

,தயிர், பால், சந்தனம், தண்ணீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யும்போது மூலவர் சிலையில் அதிக அளவில் மின் கடத்தும் திறன் ஏற்படுவதை குற்றாலம் பராசக்தி கல்லூரி ஆராய்ச்சிக் குழுவினர் சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டு பிடித்தனர். அபிஷேகம் செய்ய, செய்ய கருவறையில் உள்ள காற்று மண்டலத்தில் எதிர் மின்னூட்டங்கள் அதிகரிப்பதையும் கண்டு பிடித்தனர்.

அபிஷேகம் காரணமாக கருவறையில் உள்ள காற்றில் அதிக ஈரப்பதம் இருக்கும். ஈரப்பதத்தில் ஒளி வேகம் அதிகமாக இருக்கும். அதனால்தான் அபிஷேகத்தின் போதும் தீபம் காட்டும்போதும் கருவறை காற்று மண்டலம் அயனியாக்கப்பட்ட மூலக்கூறுகளுடன் வெளியில் வருகிறது. அது பக்தர்களுக்கு உள்ளத்தில் பலத்தை ஏற்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

திருமஞ்சனம்,பால்,தயிர்,இளநீர்,சந்தனம்,கரும்புசாறு ,பன்னீர்,விபூதி என 16 வித அபிசேக பொருட்களால் அபிசேகம் செய்து ,புது ஆடை அணிவித்து நெய்தீபம் ஏற்றி உங்கள் குலதெய்வத்தை வழிபடவும்.சர்க்கரை பொங்கல் வைத்து நைவேத்யம் செய்யவும்.சர்க்கரை பொங்கலை அங்கு வருவோர்க்கு பிரசாதமாக கொடுக்கவும்.

பெண் தெய்வமாக இருப்பின் பெளர்ணமி வழிபாடு மிக சிறப்பு.ஆண் தெய்வம் அமாவாசை நல்லது ...பெரும்பாலும் பெளர்னமி இரவில் செய்யப்படும் பூஜைக்கு அதிக வலிமை உண்டு.சித்திரா பெளர்ணமி ,வைகாசி விசாகம் ,ஆடி அமாவாசை,ஆடி வெள்ளி,ஆவணி அவிட்டம்,புரட்டாசி அமாவாசை,தை அமாவாசை ,பங்குனி உத்திரம் நாட்கள் எல்லாம் விசேசமானவை.உங்கள் ஜென்ம நட்சத்திர வழிபாடு மிக சிறப்பு.

No comments:

Post a Comment