jaga flash news

Sunday 11 December 2022

ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு?

ஷஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன? ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு? ஷஷ்டாஷ்டக தோஷம் பாதிப்பு என்ன?


ஷஷ்டாஷ்டக தோஷம் என்றால் என்ன?

வட மொழி சொல்லான ஷஷ்டாஷ்க என்பதற்கு ஒற்றுமை இன்மை என்று தமிழில் பொருள்படும்.

ஷஷ்டாஷ்க தோஷம் என்றால், ஆண் பெண் இராசிக்களின் கோள்கள் அல்லது லக்ன கோள்கள் ஒற்றுமை இல்லா நிலையில் உள்ளன என்பதாகும்.

இராசி அதிபதி பொருத்தம் இல்லாத நிலையும் இந்தகைய தோஷம் எனலாம்.


ஷஷ்டாஷ்டக தோஷம் கண்டறிவது எவ்வாறு?

பெண் ராசியிலிருந்து ஆண் ராசி வரை எண்ணினால்

பெண் ராசிக்கு ஆண் ராசி 6, 8 ஆகவோ அல்லது 8, 6 ஆகவோ வந்தால் சஷ்டாஷ்டக தோஷம் எனப்படும். அதாவது ஒற்றுமை இல்லாத நிலை இருக்கிறது.

இது திருமணம் முடிப்பதற்கு ஒவ்வாத நிலையாகும்.

ஷஷ்டாஷ்டக தோஷம் விதிவிலக்கு


பெண் ராசி பிள்ளை ராசி

மேஷம் கன்னி

தனுசு ரிஷபம்

துலாம் மீனம்

கும்பம் கடகம்

சிம்மம் மகரம்

மிதுனம் விருச்சிகம்

-ஆக இருந்தால் சஷ்டாஷ்டக தோஷம் கிடையாது.


அதே வேளையில் கும்பம் - சிம்மம் என்றால் முற்றிலும் பகை.


ஷஷ்டாஷ்டக தோஷம் பாதிப்பு என்ன?


இத்தகைய தோஷ முரன்பாட்டுடன் ஆண் பெண் இனைந்தால், அந்த தம்பதிகள் மட்டும் இன்றி இரு வீட்டின் மொத்த குடும்பமும் பகை நிலையில் வாழும்.

மேலும் திடீர் விபத்துக்களால் ஆண் அல்லது பெண் பலியாகலாம்.

இந்த தோஷம் இருப்பவர்களை மனம் முடிப்பதால் மன முறிவு ஏற்படாது. ஆனால் வாழ் நாள் முழுவதும் பகை நிலை இருந்து கொண்டே இருக்கும்

1 comment:

  1. அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம்.

    ReplyDelete