jaga flash news

Monday 12 December 2022

கடவுளுக்கு ஆகாத தீட்டுக்கள்!

மாதவிலக்கு, குழந்தை பிறப்பு, இறப்பு போன்றவை மிக மோசமான தீட்டு, இந்த நாட்களில் இறை வழிபாடு கூடாது என்ற கருத்து அனைவர் மத்தியிலும் உள்ளது. தீட்டுடன் கடவுளை வழிபட்டால் கடவுள் நம்மை ஏற்கமாட்டார். பாவம் வந்து சேரும். கடவுளின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற எண்ணமும் உள்ளது. உண்மையில் இது எல்லாம் தீட்டே இல்லை, காமம், கோபம், சுயநலம், ஆணவம், பொறாமை ஆகிய ஐந்துதான் கடவுளுக்கு ஆகாத தீட்டு என்று ஞானிகள் தெரிவிக்கின்றனர். மாதவிலக்கு என்பது இயற்கை

மாதவிலக்கு, குழந்தை பிறப்பு, இறப்பு போன்றவை மிக மோசமான தீட்டு, இந்த நாட்களில் இறை வழிபாடு கூடாது என்ற கருத்து அனைவர் மத்தியிலும் உள்ளது. தீட்டுடன் கடவுளை வழிபட்டால் கடவுள் நம்மை ஏற்கமாட்டார். பாவம் வந்து சேரும். கடவுளின் கோபத்தை எதிர்கொள்ள நேரிடும் என்ற எண்ணமும் உள்ளது.

உண்மையில் இது எல்லாம் தீட்டே இல்லை, காமம், கோபம், சுயநலம், ஆணவம், பொறாமை ஆகிய ஐந்துதான் கடவுளுக்கு ஆகாத தீட்டு என்று ஞானிகள் தெரிவிக்கின்றனர்


சுயநலத்துடன் வாழும் ஒருவர் மற்றவர்களுக்கு உதவ முடியாது. இவர்கள் தங்களைப் பற்றி மட்டுமே யோசிப்பார்கள். அப்படி இருக்கும்போது கடவுளை நினைக்க இவர்களுக்கு நேரம் இருக்காது. தான் மட்டும்தான் வாழ வேண்டும் என்று மற்றவர்களின் உடைமைகளை அபகரித்துக்கொள்ளத் தயங்கமாட்டார்கள், அல்லது அடுத்தவர்களுக்கு கிடைக்கக் கூடாது என்று காரியங்களில் இறங்கிவிடுவாரக்ள். இதுவும் கடவுளுக்கு ஆகாத தீட்டாகும்.


ஆணவம், கர்வம் இருக்கும் மனம் மற்றவர்களை மதிக்காது. உடலால், மனதால் மற்றவர்களை காயப்படுத்திக்கொண்டே இருக்கும். அதே போல் மற்றவர்கள் வாழ்வதை, மற்றவர்களுக்கு நல்லது நடந்ததை ஏற்க முடியாது, மற்றவர்களுக்கு கெடுதல் நடக்கவே விரும்புவார்கள் பொறாமை கொண்டவர்கள். இத்தகைய எண்ணம் கடவுளுக்கு பிடிக்காத, தீட்டாக மாறிவிடுகிறது!




No comments:

Post a Comment