jaga flash news

Saturday 10 June 2023

தொட்டால் சிணுங்கி செடி


ஆரோக்கியம்
தொட்டால் சிணுங்கி செடியை வீட்டில் வளர்ப்பதால் இவ்வளவு நன்மைகள் உள்ளதா..!
By Neve Thitha- October 28, 2022
thotta chinungi plant benefits in tamil
தொட்டால் சிணுங்கி செடியில் உள்ள நன்மைகள்..!
அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் மிகவும் புதுமையான மற்றும் சுவாரசியமான ஒரு தகவல் பற்றித்தான் பார்க்க போகின்றோம். அப்படி என்ன தகவல் என்றால் ஒரு தாவரத்தில் உள்ள சக்தி மற்றும் பயன்கள் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அது என்ன தாவரம் என்றால் தொட்டால் சிணுங்கி செடித்தான்.


நாம் அனைவரும் சிறுவயதில் இந்த தொட்டால் சிணுங்கி செடியை தொட்டு தொட்டு விளையாடிருப்போம். அப்படி விளையாடும் பொழுது இந்த செடியில் உள்ள நன்மைகள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அதனை பற்றி இந்த பதிவில் விரிவாக கூறப்பட்டுள்ளது இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.

தொட்டால் சிணுங்கி செடியின் வேறுபெயர்கள்:
இந்த தொட்டால் சிணுங்கி செடியின் வேறுபெயர்கள் தொட்டால் சுருங்கி, தொட்டால் வாடி, வசிய மூலிகை, மாய மூலிகை, ஈர்ப்பு மூலிகை, மந்திர மூலிகை போன்ற பெயர்களினால் அழைக்கப்படுகிறது.


தொட்டால் சிணுங்கி செடியில் உள்ள நன்மைகள்:
thotta sinungi plant in tamil
பொதுவாக கிராமப்புறத்தில் உள்ள நீர்நிலைகளுக்கு அருகில் இந்த தொட்டால் சிணுங்கி செடியை பார்க்கலாம். இதன் பெயருக்கு ஏற்ப இதனை தொட்டீர்கள் என்றால் அதனுடைய இலைகள் சுருங்கி விடும். இதற்கு காரணம் அதனுடைய தண்டுப்பகுதியில் உள்ள ஒரு விதமான அமிலம் தான்.


இந்த தொட்டால் சிணுங்கி செடியை நமது வீட்டில் வளர்த்தால் மிகுந்த நன்மைகளை இந்த செடியிலிருந்து நாம் பெறலாம். இதில் உள்ள காந்த சக்தி நமது வீட்டிற்கும் நமக்கும் மிகுந்த நன்மைகளை அளிக்கிறது.

பிரம்ம முகூர்த்தம் எனப்படும் அதிகாலை 03.30 – 05.30 மணி வரை உள்ள நேரத்தில் தொட்டால் சிணுங்கி செடியின் மீது நமது இரண்டு கைகளையும் வைத்து தினமும் தொட்டு வருவதால் நமது உடலில் உள்ள காந்த ஆற்றல் அதிகரிக்கும்.

அப்படி இந்த காந்த ஆற்றல் அதிகரிப்பதால் நமக்கு வருங்காலத்தை கணித்து கூறக்கூடிய ஆற்றல் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த செடியை வீட்டில் வளர்ப்பதால் வீட்டில் நிலவுகின்ற சண்டைகள் இல்லாமல் இருக்கும்இந்த தொட்டால் சிணுங்கி செடியை கசாயம்போல் செய்து பருகி வருவதால் நமது உடலுக்கு பல நன்மைகளை அளிக்கின்றது. முதலில் இந்த தொட்டால் சிணுங்கி கசாயம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
தொட்டால் சிணுங்கி – 1 கைப்பிடி அளவு
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகு – 6
மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
தண்ணீர் 1/4 லிட்டர்
முதலில் நாம் எடுத்துவைத்திருக்கும் 1 கைப்பிடி அளவு தொட்டால் சிணுங்கியை நன்கு பொடிப்பொடியாக நறுக்கி அதனை நன்கு சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் நாம் சுத்தம் செய்து வைத்திருந்த தொட்டால் சிணுங்கியை சேர்த்து அதனுடன் 1/4 லி தண்ணீரை சேர்த்து கொள்ளவும். அதில் 1 டீஸ்பூன் சீரகம், 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் நாம் எடுத்துவைத்திருந்த மிளகை நன்கு பொடியாக்கி சேர்த்து கொள்ளவும். இதனை நன்கு கொதிக்கவைத்து பிறகு வடிக்கட்டி பருக வேண்டும்.

இந்த தொட்டால் சிணுங்கி கஷாயத்தை வாரம் இருமுறை பருகுவதால் நமது உடலில் உள்ள அனைத்து வலிகளும் நீங்கும். தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த கஷாயத்தை குடிப்பது நல்ல தீர்வை தரும். மேலும் சிறுநீரகம் சம்மந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் இந்த கஷாயம் ஒரு சிறந்த மருந்தாகும்.

No comments:

Post a Comment