jaga flash news

Friday 1 March 2024

டோபமைன்


இயற்கையாகவே மூளையில் டோபமைன் அளவை அதிகரிக்க சில வழிகள்..!!

டோபமைன் என்பது மூளையில் உற்பத்தி செய்யப்படும் ஒரு நரம்பியக்கடத்தி ஆகும். இது நினைவகம், இயக்கம், உந்துதல், மனநிலை, கவனம் மற்றும் பல உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Increase Brain Dopamine Levels
1/5
வான்கோழி, மாட்டிறைச்சி, முட்டை, பால், சோயா மற்றும் பருப்பு வகைகள் போன்ற புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம். அதேபோல், தயிர், மோர் போன்ற புரோபயாட்டிக் உணவுகளை எடுத்து கொள்ளலாம்.

Increase Brain Dopamine Levels
2/5
பூனைக்காலி எனும் வெல்வெட் பீன்ஸ்-ஐ உணவில் அதிகாமாக எடுத்து கொள்ள வேண்டும். பால், வெண்ணெய், பாமாயில் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற கொழுப்பு நிறைந்த உணவுகளை குறைவாக உட்கொள்ள வேண்டும்.
Increase Brain Dopamine Levels
3/5
தினசரி உடற்பயிற்சி செய்து மனநிலையை மேம்படுத்தலாம். இதனை தவறாமல் செய்யும்போது டோபமைன் அளவை அதிகரிக்கலாம்.

Increase Brain Dopamine Levels
4/5
ஒவ்வொரு நாளும் ஒரே நேரத்தில் தூங்கி விழிப்பதன் மூலம் டோபமைன் அளவை அதிகப்படுத்தலாம். மனதிற்கு பிடித்த பாடலை கேட்கும்போது டோபமைன் அளவு அதிகரிக்கிறது.
Increase Brain Dopamine Levels
5/5
சூரிய ஒளி டோபமைன் அளவை அதிகரிக்கிறது மற்றும் மனநிலையை மேம்படுத்துகிறது. எனவே காலையில் எழுந்ததும் சூரிய ஒளியில் 1 மணி நேர தியானம் செய்வதன் மூலம் டோபமைன் அளவை அதிகரிக்கலாம்.

1 comment:

  1. Mon. 1, Apl. 2024 at 8.56 am.

    *நாவுக்கரசர் தேவாரம் : 5−ஆம் திருமுறை :*

    *திருப்பூந்துருத்தி :*


    *திருப்பூந்துருத்தி (ஆதிபுராணத் திருக்குறுந்தொகை − 18)

    *காலப் பிரமாணம் :*

    பாடல் : *நூறு கோடி பிரமர்கள் எனத் தொடங்கும் பாடல்.*

    * இப் பாடல் *காலப் பிரமாணத்தைக் குறிக்கிறது.*

    * காலப் பிரமாணமாவது :

    15 − நிடம் கொண்டது = 1 காஷ்டை
    30 − காஷ்டை = 1 கலை
    30 − கலை = 1 முகூர்த்தம் அல்லது 2−நாழிகை
    30 − முகூர்த்தம் கொண்டது = 1 நாள் அல்லது 60 − நாழிகை
    15 − நாள் கொண்டது = 1− பட்சம்
    2 − பட்சம் கொண்டது = 1 திங்கள் (அதாவது மாதம்)
    2 − மாதம் கொண்டது = 1 −ருது
    3 ருது (6−மாதம்) = 1−அயனம்
    2 −அயனம் = 1−ஆண்டு

    * குறிப்பு : ஒவ்வோர் ஆண்டும் (மண்ணுலகில்) தேவர்கட்டு 1−நாள்.

    * உத்தராயனம் முதல், ஆறு மாதங்கள் தேவர்களுக்குப் பகல். (தை முதல் ஆனி வரை).

    * தட்சிணாயனம் = 6 மாதங்கள். இரவு. (ஆடி முதல் 6− மாதம்.

    * மானுட வருடம் 360 = தேவர்களுக்கு ஒரு ஆண்டு.

    * யுகம் − தேவ ஆண்டு − மானுட ஆண்டு :

    1. கிரேதா யுகம் − 4,800 − 17,28,000
    2. திரேதா யுகம் − 3,600 − 12,96,000
    3. துவாபர யுகம் − 2,400 − 8,64,000
    4. கலி யுகம் − 1,200 − 4,32,000

    * ஆக மொத்தம் : *தேவ ஆண்டு = 12,000; மானுட ஆண்டு = 43,20,000.*

    * இவ்வாறு *சதுர்யுகம் 1000 ஆனால், பிரமனுக்கு 1−பகல். பின்னும் ஓர் ஆயிரம் சதுர்யுகம் 1−இரவு (அதாவது 2,000 சதுர்யுகம் பிரமனுக்கு 1−நாள் ஆகும்.

    * இத் தன்மையில், 30 − நாட்கள் கொண்டது 1− மாதமும்; 12 − மாதங்கள் கொண்டது 1−ஆண்டும் ஆகும்.

    * அவ்வாறு 100 − ஆண்டுகள் கொண்டது ஒரு பிரமனின் ஆயுட்காலம். இதனை *1 − கற்பம்* எனக் கொள்வர்.

    * 1 − கோடி கற்பம் கொண்டது *நாராயணருக்கு 1− நாள். இவ்வாறு 100 − ஆண்டுக் கணக்கில் அவருக்குப் பின் வேறு ஒருவர் வருவார்.

    * பிரமனின் 1− நாளில் 14 − இந்திரர்கள் மாற்றம் பெறுவர்.

    * மகா சங்கார காலத்தில் நாராயணர், பிரமன் ஆகியோருடைய மண்டையோடுகளைக் கோத்து மாலையாக்கிக் கழுத்தில் அணிந்து இசன் ஏதாந்தமாக நின்று நடனம் புரிவார். (நூல் வைத்திருப்போர் பாடல் : 3 ன் கடைசி வரியைக் கவனியுங்கள்..) *ஈறு இலாதவன் ஈசன் ஒருவனே.* என ஓதப் பெறுவதாயிற்று.

    (முக்கிய குறிப்பு : இதுதாங்க சோதிடம்).

    *மீண்டும் சந்திக்கலாம் !*

    Sivajansikannan@gmail.com

    ReplyDelete