jaga flash news

Friday, 21 June 2024

தத்தாத்ரேயர் வரலாறு


தத்தாத்ரேயர் வரலாறு | Dattatreya History in Tamil
 
தத்தாத்ரேயர்:
பிரம்மா,  விஷ்ணு மற்றும் சிவன் ஆகிய மூவரும் ஒருசேர இணைந்த  அவதார ஸ்வரூபமாக விளங்குபவர் தத்தாத்ரேயர். இவரது  பெயர்க் காரணம் - தத்தா என்ற சொல்லுக்கு "கொடுக்கப்பட்டவர் என்று பொருள்.  அத்ரி மகன் என்பதால் ஆத்ரேயா என்று பெயர். அதாவது மும்மூர்த்திகள் தங்களையே, அத்ரி அனுசூயா தம்பதிக்கு மகனாக கொடுத்ததால் அவருக்கு தத்தாத்ரேயர் என்ற பெயர் ஏற்பட்டது.

 




மும்மூர்த்திகளின் திருவிளையாடலும் தத்தாத்ரேயரின் பிறப்பும்:
சப்த ரிஷிகளில் இரண்டாவது ரிஷியான  அத்ரி முனிவர், கர்தபிரஜாபதியின் மகளான அனுசூயாவை மணந்து கொண்டார். அனுசூயா கற்பு நெறி தவறாத மங்கையர்க்கரசி. கற்பு நெறி தவறாத அனுசூயாவைக் கண்டு திரிமூர்த்திகளின் மனைவிகளும் பொறாமை கொண்டார்கள். அவளின்  கற்பை சோதனை செய்து பார்க்க வேண்டும் என்பதற்காக தமது கணவன்மார்களை வேண்டிக் கொண்டார்கள்.  தங்கள் துணைவியார்களின் வேண்டுதலின் படி, பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரும் முனிவர்கள் போன்று மாறுவேடமிட்டு அத்ரி முனிவர் இல்லாத போது அனுசூயாவின்  குடிலுக்கு சென்று உணவு தருமாறு கேட்டார்கள். அவளும் வந்துள்ள முனிவர்களுக்கு உணவு சமைத்தாள். மூவருக்கும் இலை போட்டு  உணவு பரிமாற  முற்பட்டாள். உணவை பரிமாற வந்தவளிடம் அவர்கள், ஒரு வினோத கோரிக்கையை வைத்தார்கள். பிறந்த மேனியாக, அதாவது அவள் உடலில் துளிக் கூட ஆடை இல்லாமல் உணவு பறிமாறினால் மட்டுமே, உணவருந்துவோம் என்று கூறிவிட்டனர். வந்துள்ளவர்களோ முனிவர்கள். இயலாது என்று கூற முடியாது.தத்தாத்ரேயர் மகிமைகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.

கற்புக்கரசியான அவளுக்கு அவர்களின் வேண்டுகோளை ஏற்பதும் இயலாது. எனவே அவள் தனக்கு வழி காட்ட வேண்டுமென்று  கணவரை   மனதில் நினைத்து வேண்டினாள். அடுத்த நிமிடமே மும்மூர்த்திகளும் பிறந்த குழந்தைகளாகி விட்டார்கள்.  அந்தக் குழந்தைகளை வாரி எடுத்து தனது மார்பில் இருந்து பாலூட்டினாள். அவள் கணவர் திரும்பி வந்தார். நடந்ததைக் கேட்டு அறிந்தார். தனது ஞான திருஷ்டியினால் நடக்கபோவதை அறிந்து கொண்டார். குழந்தைகள் அவளிடம் கொஞ்சி  விளையாடின.

மும்மூர்த்திகள் திரும்பி வராததைக் கண்டு  பயந்து போன மூன்று தேவியரும் நாரதர் மூலம் நடந்ததை அறிந்து கொண்டார்கள். உடனே  அனுசூயாவிடம் சென்று நடந்ததற்காக மன்னிப்புக் கோரி தமது கணவர்களை திருப்பித் தருமாறு கேட்டார்கள். அனுசூயாவும்  அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு  மும்மூர்த்திகளை மீண்டும் பழைய நிலைக்கு ஆக்க தன் கணவனை வேண்டினாள். குழந்தைகள் மறைந்தன. மும்மூர்த்திகளும்  தமது உண்மையான ரூபத்தை அனுசூயா-அத்ரி முனிவர் தம்பதிகளுக்குக் காட்டி இன்னும் சில நாட்களிலேயே விஷ்ணுவானவர் அவர்களுக்கு மகனாகப் பிறப்பார் எனவும், பிறக்க உள்ள குழந்தை மும்மூர்த்திகளின் அவதாரமாக, அவர்கள் சக்தியை உள்ளடக்கி தத்தாத்திரேயர் என்ற அவதூதராக பிறந்து பூமியில் உள்ள அவல நிலையை ஒழிப்பார் என உறுதி தந்துவிட்டு அவர்களை ஆசிர்வத்தப் பின்னர் திரும்பிச் சென்றார்கள். அவர்கள் கூறியபடியே அத்ரி முனிவருக்கும், அனுசுயா தேவிக்கும் சுசீந்திரம் ஸ்தலத்தில் மார்கழி மாதம் பெளர்ணமி நாளில், மிருகசீரிட நட்சத்திரத்தில் சிவா, விஷ்ணு, பிரம்மா வடிவம் இணைந்தே மும்மூர்த்திகளின் அவதாரமாக மனித உருவில் பூமிக்கு தத்தாத்திரேயராக  விஷ்ணு பகவான் அவதரித்தார்.

இறைவனே குழந்தையாகப் பிறந்ததால், தத்தாத்ரேயர் சாதாரணக் குழந்தையாக வளரவில்லை. மற்ற குழந்தைகளைக் காட்டிலும் அவரின் போக்கு வேறு விதமாகவும் விசித்திரமாகவும்  இருந்தது. யாருடனும் அதிகம் பேசாமல் இருந்தவர் சிறிது வளர்ந்ததும் வீட்டை விட்டு வெளியேறினார். பல இடங்களுக்கும் சுதந்திரமாக சுற்றித் திரிவார். மலைகளிலும், குகைகளிலும், காடுகளிலும் சென்று அமர்ந்து கண்களை மூடியபடி இருப்பார். அவரை சுற்றி எப்போதுமே பெரும் ஒளிவெள்ளம் இருந்தது. அவரைக் கண்ட ரிஷி முனிவர்கள் அவர் சாதாரண பிறவி அல்ல என்பதை புரிந்து கொண்டார்கள்.  மாபெரும் யோகி, ஞானி, அவதூதர் என அவரை பலரும் பலவிதமாக போற்றித் துதிக்கலாயினர். அவர் வேதங்களை நன்கு அறிந்தவர் என்பதை அறிந்து கொண்ட பல ரிஷிகளும் முனிகளும் அவரை  குருவாக வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டார்கள். அவர் குஜராத், மகாராஷ்டிரா, வடக்கு கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற பகுதிகளில்  சுற்றித் திரிந்தார். கனகபுரா  என்று அழைக்கப்படும் கர்நாடகாவில் உள்ள ஒரு ஊரில் அவர் ஞானம் பெற்றதாக நம்பப்படுகிறது. கிர்னாரில் ஒரு தனிமையான சிகரத்தில் அவரது அசல் கால்தடங்களை இன்னும் காணலாம் என்றும் கூறப்படுகிறது.

தாணுமாலயனின் வடிவமே தத்தாத்ரேயர் அம்சம்தான் என்றும் சொல்லப்படுகிறது.  பிறந்தது முதலே ஞானவடிவாக விளங்கிய தத்தாத்ரேயர் வேத உபன்யாச ஞானியர்களுக்கு ஸத்குருவாகவும், பிரம்ம யோகியர்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்து வந்தார்.

தத்தாத்ரேய ஜெயந்தி:
மார்கழி மாதம் பௌர்ணமி தினத்தில் தத்தாத்ரேயர் அவதார தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் வைகாசி மாதம் தசமி திதியில் தத்தாத்ரேயர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமன், மார்க்கண்டேயர் போலவே, தத்தாத்ரேயரும் சிரஞ்சீவியாக வாழும் சிறப்பு பெற்றவர். குழந்தை வரம் வேண்டும் தம்பதிகள் தத்தாத்ரேயரை வழிபாடு செய்தால் அவர்களது கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. தத்தாத்ரேயர் உருவம் வித்தியாசமானது மூன்று முகங்கள், ஆறு கரங்களுடன் சங்கு, சக்கரம், சூலம், தாமரை, ஜெபமாலை, கமண்டலம் முதலானவற்றை கரங்களில் தாங்கியவராகத் திகழ்கிறார். காளையும் அன்னமும், கருடனும் அவருக்கு வாகனங்களாக உள்ளன. அவரைச் சுற்றி நான்கு வேதங்களும் நாய் வடிவம் கொண்டு திகழ்கின்றன. உலகில் பல பெண்கள் தமது தவத்தால் பிரம்மா, விஷ்ணு ஆகியோருக்குத் தாயாக இருந்துள்ளார்கள்.

ஸ்ரீதத்தாத்ரேயர் ஜெயந்தி தத்தாத்ரேயர் வழிபாடு ஸ்ரீ தத்தாத்ரேயரை வழிபட்டால் மும்மூர்த்திகளையும் ஒரே சமயத்தில் வழிபட்ட பலன் கிட்டும். அவரை வழிபட மனோபலமும் தேக பலமும் கிடைத்து, சந்தான ப்ராப்தியுடன் பதவிப் பேறும் பெற்று வளமுடனும் நலமுடனும் வாழலாம். உலகில் வேறெங்கும் இல்லாதவாறு தன்வந்திரி பீடத்தில் மட்டுமே அனுசுயா தேவி, அத்ரி மகரிஷி, கார்த்த வீர்யார்ஜூனர் மற்றும் தத்தாத்ரேயருக்கு விசேஷ சந்நிதிகள் அமைக்கப்பட்டுள்ளது தத்தாத்ரேயர் அவதார தினத்தில் ஸ்ரீ தத்தாத்ரேய காயத்ரி மந்திரம் கூறி வணங்கலாம். 'ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே திகம்பராய தீமஹி தந்நோ தத்த பிரசோதயாத் ' என்ற மந்திரத்தை தினசரி ஜெபித்து வழிபட, நம் வாழ்வு அற்புதங்களால் நிறைந்து 

'ஓம்  தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய  தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத்'
 


Tuesday, 18 June 2024

வீட்டில் இரண்டு பல்லி சண்டை போட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?

 வீட்டில் இரண்டு பல்லி சண்டை போட்டால் என்ன அர்த்தம் தெரியுமா?  இந்தியாவில் இருக்கும் தொன்மையான நம்பிக்கைகளில் ஒன்று பல்லியை பற்றியதாகும். மற்ற உயிரினங்களை போல பல்லியை ஒதுக்க முடியாது. இதனை இயற்கையின் தூதுவனாகவே மக்கள் நினைக்கிறார்கள். பல்லி விழும் பலன்கள் பார்ப்பது நமது சாஸ்திரங்களில் மிகவும் முக்கியமானதாகும். புதன் உதயமாவதால் உருவாகும் பல்லி உடம்பில் விழுந்தால் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே நம் முன்னோர்கள் சொல்லிவிட்டார். பல்லி அறிவியல் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபட்டது. பல்லி அறிவியலில் இன்னும் பல விஷயங்கள் உள்ளன. பல்லிகள் நம் எதிர்காலத்தை மறைமுகமாக சொல்கிறது. 1. நம் வீட்டில் மேஜைகளில் அடிக்கடி காணப்பட்டாலும், அவை ஏன் வீட்டில் எல்லா இடங்களிலும் சுற்றி திரிகின்றன என்பதைக் கண்டுபிடிப்போம். பல்லிகள் வீட்டில் எங்கு உள்ளது என்பதற்கான சில சமிக்ஞைகளை நமக்கு அதன் சத்தத்தின் மூலம் அனுப்புகிறது. அந்த அடையாளங்களின் விவரங்களை அறிஞர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே நமக்கு விளக்கினர்.  வீட்டில் பல்லிகள் தென்பட்டால் மிகவும் அருவருப்பாக நிறைய பேர் நினைக்கின்றனர். பூச்சிகள், கரப்பான் பூச்சிகள், எறும்புகள், பல்லிகள் தனித்தனியாக காணப்பட்டாலும் அவை பார்ப்பதற்கு கொஞ்சம் அறுவறுபாக தெரியும்.. மிகவும் அசிங்கமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் பல்லியின் உடலில் பல தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உள்ளன. 3. கோயில் மற்றும் பூஜை அறையில் பல்லிகள் தோன்றுவது மிகவும் நல்ல அறிகுறி என்று கூறப்படுகிறது. இது நிதி ஆதாயத்தைத் தருவது மட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினர்களிடையே அன்பையும் அதிகரிக்கிறது. குடும்ப நிதி நிலையில் முன்னேற்றம் காட்டுகிறது. 4. தீபாவளியன்று பல்லியைப் பார்ப்பது மிகவும் நல்ல அறிகுறியாகும். தீபாவளியன்று வீட்டில் பல்லியை பார்த்தால் லட்சுமி தேவி வீட்டிற்குள் நுழைந்தது போல் இருக்கும். புதிய வீட்டிற்குச் செல்லும்போது பல்லியைக் கண்டால், அது முன்னோர்களின் வருகையைக் குறிக்கிறது. 5. பல்லிகள் வீட்டில் சுற்றித் திரிவது யாருக்கும் பிடிக்காது. பல்லிகளுக்கு எதிர்காலத்தை கணிக்கும் ஆற்றல் உண்டு. வீட்டில் ஒரே இடத்தில் இரண்டு பல்லிகள் சண்டையிட்டுக் கொண்டால் அது காதலர்களோ, தம்பதிகளோ பிரிந்து செல்வதற்கான அறிகுறியாகவே கருத வேண்டும். அதனால் பல்லிகள் சண்டையிடுவது வீட்டிற்கும் குடும்பத்திற்கும் ஆகாது.. 6. வீட்டில் பல்லிகள் தரையில் ஊர்ந்து செல்வதைக் கண்டால் புயல், பூகம்பம் என்று அர்த்தம். ஒரு பிரச்சனையை தீர்க்க நினைக்கும் போது பல்லியை கண்டால் பிரச்சனையை தீர்க்காமல் விட்டுவிட வேண்டும் என்று அர்த்தம். 7. வீட்டிற்குள் நுழையும் நேரத்தில் இறந்த பல்லி தென்பட்டால், அந்த வீட்டில் தங்கப் போகிறவர்களுக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பல்லி அறிவியல் கூறுகிறது. பல்லி திரும்பத் திரும்பக் கத்திக் கொண்டிருந்தால், வீட்டின் உரிமையாளர் மன அழுத்தத்திற்கு ஆளாவார் மற்றும் கடினமாக உழைப்பார் என்பதற்கான அறிகுறியாகும். ..

Monday, 17 June 2024

ஒரு எலுமிச்சம் பழம் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா?


 
ஒரே ஒரு எலுமிச்சம் பழம் என்னவெல்லாம் செய்யும் தெரியுமா? எதிர்மறை ஆற்றலை விரட்டும் தன்மையை கொண்ட இந்த எலுமிச்சம் பழத்தின் மகத்துவம் என்ன தெரியுமா?
தேவ கனி என்று சொல்லக்கூடிய எலுமிச்சம் பழமானது, தெய்வங்களுக்கு உகந்த தெய்வ கனி என்பார்கள்.. வேத சாஸ்திரங்களை பொறுத்தவரை, எலுமிச்சம் பழத்திற்கும் உயிர் இருப்பதாகவே கருதப்படுகிறது.


Lemon pariharam Spirituality Pooja Room
மந்திரங்களை கிரகிக்கும் சக்தி எலுமிச்சைக்கு உள்ளதுடன், நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. அதனால்தான், தெய்வ வழிபாட்டில் தவிர்க்கவே முடியாத பழமாகிவிட்டது எலுமிச்சை...




திருஷ்டிப்பழம்: திருஷ்டி கழிப்பதற்காக எலுமிச்சை பழம் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.. அதேபோல, மற்றவர்களுக்கு கெடுதலை தரக்கூடிய செய்வினை செய்வதற்காகவும் இதே எலுமிச்சைதான் பயன்படுத்தப்படுகிறது. மற்றொருபக்கம், துஷ்ட சக்திகளை நம் மீது விழாமல் தனக்குள் கிரகித்துக் கொள்ளவும் செய்கிறது.



குடும்பத்தில் யாராவது அடிக்கடி நோய்வாய்ப்பட்டு கிடந்தால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் நிறைய உள்ளது என்றே அர்த்தம்.. உறவுகளுக்குள் தேவையில்லாத சிக்கல்களும் எழும்.. எனவே, நேர்மறை ஆற்றலை பெருக்க எலுமிச்சம் பழங்கள் உதவுகின்றன.

தெய்வங்கள்: துர்கை, பத்ரகாளி போன்ற உக்ரமான தெய்வங்களுக்கு எலுமிச்சையை மாலையாக அணிவித்தால், நீண்ட நாள் தடைபட்ட காரியங்கள் கைகூடுமாம்.. அதேபோல, எந்த ஒரு நல்ல காரியத்திற்கு செல்வதற்கு முன்பும், 3 எலுமிச்சம் பழங்களை அம்மன் கோவில் வாசலின் முன்புறமுள்ள திரிசூலத்தில் சொருகி விட்டு சென்றால் நல்லது...

அதுமட்டுமல்லாமல், அம்மனுக்கு எழுமிச்சம் மாலை சாற்றுவது குடும்ப ஒற்றுமைக்கு நல்லது. குழந்தை பாக்கியம் கிடைக்க தம்பதியர்கள் எலுமிச்சம் பழ மாலையை அம்மனுக்கு வேண்டிக்கொண்டு சாற்றலாம்.



அதேபோல, எலுமிச்சம் பழத்தில் சில முக்கிய விஷயங்களில் கவனம் கொள்ள வேண்டியிருக்கிறது.. குறிப்பாக,எலுமிச்சை பழத்தை எப்போதுமே பிறரிடமிருந்து கடனாக வாங்கக் கூடாது என்பார்கள்.. தீய எண்ணங்கள் கொண்டவர்களிடமிருந்தும் எலுமிச்சம்பழம் வாங்கக்கூடாது... பரிகாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட எலுமிச்சம்பழத்தையும் தொடக்கூடாது. எப்போதும் சடங்குக்காக வாங்கினால், காசு கொடுத்தே வாங்க வேண்டும்.

எலுமிச்சை: கோவிலில் எலுமிச்சை விளக்கு ஏற்றலாம். ஆனால் கோயிலிலிருந்து பிரசாதமாக வாங்கி வீட்டுக்கு கொண்டுவரும் எலுமிச்சை பழத்தை திருஷ்டி சுத்தி போட பயன்படுத்தக் கூடாது. வீட்டிலிருக்கும் எலுமிச்சை பழத்தையே திருஷ்டி சுத்த பயன்படுத்த வேண்டுமாம்.

நல்ல பழுத்த மஞ்சள் நிறமுள்ள எலுமிச்சம்பழத்தை திருஷ்டிக்கு பயன்படுத்தலாம். இப்பழத்தினை இரண்டாக பிளந்து குங்குமம் தடவி, யாருக்கு திருஷ்டி இருக்கிறதோ, அவரை சூரியனை நோக்கி நிற்க வைத்தோ, அல்லது உட்கார வைத்தோ, 3 முறை எலுமிச்சம் பழத்தால் சுற்றி, அதை கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு என 4 திசைகளிலும் விட்டெரிதலே திருஷ்டி கழித்தல் எனப்படும். இந்தப்பழம் காய்ந்துபோகும் வரை காலால் மிதிப்பதோ, கையால் தொடுவதோ கூடாது...


அதேபோல, வீட்டில் எலுமிச்சையால் கண்டிப்பாக தீபம் ஏற்றக் கூடாது.. திருஷ்டி கழித்து முடித்ததுமே, அந்த எலுமிச்சம் பழத்தை நடுரோட்டில் வீசியெறியக்கூடாது.. அப்படி யாராவது வீசியெறியும் எலுமிச்சம் பழத்தை மிதிக்காமல் கவனமாக செல்ல வேண்டும்..

கெட்ட சக்திகள்: அல்லது ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக வெட்டி, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையை கைகளால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி வீசி விட வேண்டும். இதனாலும், வீட்டிலுள்ள கெட்ட சக்திகள் முழுமையாக நீங்குமாம்.


அதேபோல, எலுமிச்சம்பழத்தை 2 துண்டுகளாக வெட்டி குங்குமமும் மஞ்சளும் தடவி வீட்டு வாசலின் முன்புறத்தின், இரண்டு முனையிலும் வைத்துவிட்டால், கண் திருஷ்டியும், தீய சக்திகளும் விலகி செல்லும். எலுமிச்சை பழத்தில் துர்கா தேவிக்கு ராகுகாலத்தில் தீபம் ஏற்றும்போது பல பிரச்னைகள் தீர்கின்றன.

4 திசைகள்: மஞ்சள் நிறமுள்ள எலுமிச்சம்பழத்தை திருஷ்டிக்கு பயன்படுத்தலாம். இப்பழத்தினை இரண்டாக பிளந்து குங்குமம் தடவி, யாருக்கு திருஷ்டி இருக்கிறதோ, அவரை சூரியனை நோக்கி நிற்க வைத்தோ, அல்லது உட்கார வைத்தோ, 3 முறை எலுமிச்சம் பழத்தால் சுற்றி, அதை கிழக்கு தெற்கு மேற்கு வடக்கு என 4 திசைகளிலும் விட்டெரிதலே திருஷ்டி கழித்தல் எனப்படும். இந்தப்பழம் காய்ந்துபோகும் வரை காலால் மிதிப்பதோ, கையால் தொடுவதோ கூடாது..


எலுமிச்சம் பழம் எனும் அதிசய கனி.. எலுமிச்சை இலை தரும் நன்மை.. எலுமிச்சம்பழத்தை நிறைய யூஸ் பண்ணலாமா?
எலுமிச்சம் பழம் எனும் அதிசய கனி.. எலுமிச்சை இலை தரும் நன்மை.. எலுமிச்சம்பழத்தை நிறைய யூஸ் பண்ணலாமா?
 

 

 

 

சதாபிஷேகம் செய்ய வேண்டிய நாளை கணக்கிடும் முறை

சதாபிஷேகம் செய்ய வேண்டிய நாளை கணக்கிடும் முறையை காண்போம்:

 ஒருவரின் பிறந்த தேதி, நட்சத்திரம், திதி ஆகியவற்றை குறித்துக்கொள்ளவும்.
 பிறந்த நாளிலிருந்து அடுத்து வரும் 'துவித்யை' திதியை குறித்துக்கொள்ளவும். இது முதல் பிறை நாளாகும். இதிலிருந்து 1008 வது பிறை நாளை கணக்கிடவும்.
 அதாவது 1007 * 29.53 = 29736.71 நாட்களாகும். இதை முதல் 'துவித்யை' நாளில் இருந்து கூட்ட 1008 வது பிறை நாளை தெரிந்துகொள்ளலாம்.
 அதன் பிறகு வரும் ஜென்ம நட்சத்திர நாளில் சதாபிஷேகம் செய்ய வேண்டும்.

இப்போது ஒரு உதாரணத்தை பார்ப்போம்: ராமன் என்பவர் 27.04.1929 ல் பிறந்திருக்கிறார் என்று எடுத்துக்கொள்வோம். அவர் சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரம் தேய்பிறை திருதியை திதியில் பிறந்திருக்கிறார். இவர் பிறந்ததிலிருந்து 14 நாட்கள் சென்ற்பின், அதாவது 11.05.1929 அன்று 'துவித்யை' நாளில் தன் முதல் பிறையின் கதிர்களை அனுபவிக்கிறார். அன்று முதல் ஒவ்வொரு 29.53 நாளிலும் ஒவ்வொரு பிறை கதிர்களில் நீராடி தன் 1008 வது பிறையை 09.10.2010 அன்று தரிசிப்பார். (அதாவது 11.05.1929 லிருந்து 29736.71 நாட்கள் சென்ற பின் தரிசிப்பார். வருடம் 1929 ல் எஞ்சியுள்ள 234 நாட்கள், அதிலிருந்து வருடம் 2010 வரை உள்ள சதாரண மற்றும் லீப் வருட நாட்க்ளை கணக்கில் கொண்டு பார்க்கும் பொழுது 09.10.2010 அன்று தனது 1008 வது பிறையை தரிசிப்பார்) இதற்கு அடுத்து வரும் சித்திரை மாத கேட்டை நட்சத்திர நாளில் (மார்ச் / எப்ரல் 2011) சதாபிஷேகம் செய்வது ஏற்றது

Sunday, 16 June 2024

உங்கள் கனவில் பறவைகள் வருகின்றனவா?


 

புறா கனவில் வந்தால் இதுதான் அர்த்தமா? உங்க கனவில் புறாக்கள் வந்தால் "இதை" கவனியுங்க.. கனவு பலன்கள்
உங்கள் கனவில் பறவைகள் வருகின்றனவா? புறாக்கள் கனவில் வந்தால் அதற்கு என்ன பலன் தெரியுமா?

பறவைகள்: உதாரணத்துக்கு பறவைகளின் கீரீச் சத்தம் நம்முடைய கனவில் கேட்டால், மனதிற்கு மகிழ்ச்சியான சம்பவங்கள் நடக்க போவதாக அர்த்தம்.. மயில் பறப்பது போலவும், தோகையை விரித்து ஆடுவது போலவும் கனவில் வந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படுமாம்..



அதைவிட, ஆந்தைகள் கூட்டமாக இருப்பதுபோல கனவில் கனவு கண்டால் விரைவில் நல்ல செய்தி குடும்பத்திற்கு வரப்போகிறது என்று அர்த்தம். ஆனால், ஒரே ஒரு ஆந்தையை மட்டும் கனவில் கண்டால் கெட்ட செய்தி வருமாம்.
குயில்கள்: குயில்கள் சண்டை போடுவதை போல் கனவு வரக்கூடாதாம்.. அதேபோல, கருங்குயில் கனவில் வருவதும் நல்லதில்லை என்கிறார்கள். கொக்கு கனவுகளில் வந்தால் விவசாயத்தில் விளைச்சல் அதிகரிக்கும்..

குருவியை ஜோடியாக கண்டால் நல்ல செய்தியும், குருவிக் கூட்டை கலைப்பது போன்று கனவு வந்தால் கெட்ட செய்தியும் ஏற்படுமாம்.. அந்தவகையில், கனவில் வந்துவிடவே கூடாத பறவை கழுகும், பருந்தும்தான்.. பிணம் தின்னும் கழுகை கனவில் கண்டால் அதைவிட ஆபத்து வரப்போவதாக அர்த்தமாம்.. இவைகள் அபசகுணங்களாக கருதப்படுகிறது..



புறாக்கள்: அந்தவகையில் புறாக்களை பற்றியும் கனவு பலன்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.. அதாவது, புறாக்கள் கூட்டமாக இருப்பதை போல கனவு வந்தால், குடும்ப உறவுகளில் ஏதோ சிக்கல் வரப்போகிறது என்று அர்த்தமாம்.. பறந்துகொண்டிருக்கும் புறாவை பிடிப்பதுபோல கனவு கண்டால், நண்பர்களின் நட்பு வட்டாரம் வலுப்படும்.. பிரிந்த நண்பர்களும் ஒன்றிணைவார்களாம்.

2 புறாக்கள் ஒன்றாக பறந்து கொண்டிருப்பது போல் கனவு கண்டால், நண்பர்களுக்குள் பிரிவு வரப்போகிறது என்று அர்த்தம். புறாவை வேடன் பிடிப்பது போல கனவு வருவது கெடுதலை உணர்த்தக்கூடியதாம்..


வெள்ளை புறா: வெள்ளைப் புறாவை கனவில் வந்தால், இடமாற்றம், தொழிலில் உயர்வு டிரான்ஸ்பர் போன்றவை நடக்கலாம்.. கருப்பு புறாவை கனவில் கண்டால் கெட்ட செய்தி, அதாவது துன்பமான செய்தி ஒன்று விரைவில் உங்களை தேடி வரப்போகிறது என்று அர்த்தமாம். புறாவை நீங்கள் பிடிப்பதற்காக முயற்சி செய்வது போல் கனவு கண்டால் புதிய நண்பர்கள் உங்களுக்கு அறிமுகம் ஆகப்போகிறார்கள் என்று அர்த்தமாம்..


7 குதிரைகள் ஓடும் போஸ்டரை எந்த திசையில் வைக்க வேண்டும்?



7 குதிரைகள் ஓடும் போஸ்டரை எந்த திசையில் வைக்க வேண்டும்? "இந்த" இடத்தில் மட்டும் மாட்டிடாதீங்க?
வீட்டில் செல்வம் பெருக 7 குதிரைகள் ஓடுவது போன்ற ஓவியத்தை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது குறித்து தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். இந்த குதிரை படத்தை எங்கே மாட்ட வேண்டும், எங்கே மாட்டக் கூடாது என்பது குறித்த தகவல்களும் கிடைத்துள்ளது.


: ஏழு குதிரைகள் ஓடும் படத்தை வீட்டின் எந்த திசையில் மாட்டி வைக்க வேண்டும். நம்முடைய வீட்டிலும் நம்மை சுற்றியும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக் கூடிய சில விசயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும்



அதில் முக்கியமானது ஏழு குதிரைகள் கொண்ட புகைப்படங்களை வீட்டில் வைப்பதன் மூலம் நமக்கு நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. சூரிய பகவான் ஏழு குதிரை ரதத்தில் சவாரி செய்யும் படத்தை வீட்டில் வைத்தால் வீடு சுபிட்சமாக இருக்கும்.

வீட்டில் நல்ல காரியங்கள் நடப்பதற்கு, நாம் கிழக்கு திசையை நோக்கி அந்த படத்தை மாட்டிவைக்க வேண்டும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வுக்காகக் காத்திருந்தால் வடக்குத் திசையில் ஓடும் குதிரைகளின் படத்தை மாட்ட வேண்டும்.
வாழ்க்கையில் பெயர், புகழ், மரியாதை பெற வேண்டுமானால் வீட்டின் தெற்கு திசையில் ஓடும் குதிரைகளின் படத்தை மாட்டி வைக்கலாம்.

இது உங்களுக்கு வாழ்க்கையில் விரைவான முன்னேற்றத்தைத் தரும் உங்களின் புகழும் செல்வமும் பாராட்டப்படும். கடன் தொல்லையால் கஷ்டப்படுபவர்கள் ஒரு ஜோடி குதிரை பொம்மைகளை மேற்கு திசையில் வைக்கலாம். இதனால் மகாலட்சுமியின் அருள் வீட்டில் தங்கும் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.



ஏழு குதிரை ஓவியங்களின் பின்னணியில் சூரியன் உதிக்கும் வகையில் இருப்பது மங்களகரமாக கருதப்படுகிறது. இது ஒருவருடைய வாழ்க்கையில் வெற்றியையும் செல்வ வளத்தையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கச் செய்யும்.
சிவப்பு நிற பின்னணியோடு இருக்கக்கூடிய ஏழு குதிரைகளின் ஓவியம் செவ்வாய் கிரகத்தின் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சமூகத்தில் ஒருவருக்கு மரியாதையை அதிகம் ஏற்படுத்திக் கொடுக்கும். நீல நிறப் பின்னணியில் இருக்கக்கூடிய ஏழு குதிரைகள் ஓவியம் சனி கிரகத்தை குறிக்கிறது. இது நல்லிணக்கத்தையும் அமைதியையும் அதிகரித்துக் கொடுக்கும். படுக்கையறையில் இந்த ஏழு குதிரைகள் அடங்கிய ஓவியத்தை வைக்கக் கூடாது.

பூஜை அறை, படிக்கும் அறை, கழிப்பறையை எதிர்கொள்ளும் சுவர்கள், பிரதான கதவு ஆகியவற்றில் ஏழு குதிரை ஓவியத்தை வைப்பது வாஸ்து சாஸ்திரத்தின்படி சரியானதல்ல. ஏழு குதிரைகள் அடங்கிய இந்த ஓவியத்தை உங்களுடைய வரவேற்பறையில் வைக்கலாம். இந்த குதிரைகள் தண்ணீரில் ஓடாமல் திறந்த நிலத்தில் ஓடுவதுபோல இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Saturday, 15 June 2024

15 திதிகளின் பெயர்கள்




15 திதிகளின் பெயர்கள்

ஸூர்யன் இருக்குமிடம் முதல் 12 பாகைகள் சந்திரன் நடப்பினில் ஒரு திதியாகும்.

1. ப்ரதமை

2. த்விதியை

3. த்ருதியை

4. சதுர்த்தி

5. பஞ்சமி,

6. ஷஷ்டி

7. ஸப்தமி

8. அஷ்டமி

9. நவமி

10. தசமி

11. ஏகாதசி

12. துவாதசி

13. த்ரயோதசி

14. சதுர்த்தசி

15. பௌர்ணமி (அல்லது) அமாவாஸ்யை

மாதம் என்பது இரண்டு பக்ஷங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

அமாவாஸ்யை அடுத்த பிரதமை முதல் பௌர்ணமி வரை சுக்லபக்ஷம் என்றும்

பௌர்ணமியை அடுத்து வரும் பிரமை முதல் அமாவாஸ்யை வரை கிருஷ்ணபக்ஷம் என்றும் வழங்கப்படுகிறது.

தமிழில் இதனை வளர்பிறை என்றும் தேய்பிறை என்றும் கூறுகிறோம்.


வெற்றிலை பரிகாரம்



வெற்றிலை பரிகாரம்.. ஒரே ஒரு வெற்றிலை போதும்.. உச்சத்துக்கு போகும் வாழ்க்கை! தொட்டதெல்லாம் வெற்றிதான்
வெற்றிலையின் மருத்துவ குணங்கள் அபரிமிதமானது.. அதேசமயம், ஆன்மீகத்திலும் வெற்றிலைக்கான மகத்துவம் பெருகியபடியே உள்ளது.. குறிப்பாக வெற்றிலை பரிகாரம் அனைவராலும் போற்றப்பட்டு வருகிறது.




எப்போதுமே வீட்டில் மனநிம்மதி குறைந்தாலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் நோயால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது குடும்பத்தில் வறுமை பீடித்தாலோ, இதற்கெல்லாம் வெற்றிலை தீர்வை தருகிறது.



Betel Leaf   Spirituality  Betel Leaves  Pariharam  Betel leaves  Vastu Tips

வெற்றிலை: அதாவது, வெற்றிலையை வாங்கி, அதை தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து, வீட்டின் வாசலிலேயே தொங்கவிட வேண்டுமாம்.. இதனால், வீட்டிற்குள் நேர்மறை ஆற்றல் பரவும் என்று நம்பப்படுகிறது. ஆனால், இந்த இலையை காய்ந்து அப்படியே விடக்கூடாது.. உடனே இதை எடுத்துவிட்டு, புதிய இலையை அதுபோலவே தொங்கவிட வேண்டும்.

அதேபோல, காசு வைத்து வெற்றிலையில் பரிகாரம் செய்யலாம்.. அதாவது கடையில் 10 ரூபாய் நோட்டை தந்து வெற்றிலை வேண்டும் என்று கேட்டு வாங்க வேண்டும்.


ஒற்றை இலக்கம்: இதனை வீட்டிற்குள் வைத்து, எத்தனை வெற்றிலைகள் உள்ளன என்று எண்ணி பார்க்க வேண்டும். ஒற்றைப்படையில் வெற்றிலை வந்தால், நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளுமே வெற்றியை தருமாம். இரட்டைப்படையில் வெற்றிலை உங்கள் கைக்கு வந்தால், எந்த காரியம் செய்தாலும் அது தடைப்பட்டு கொண்டே இருக்குமாம்.

படுக்கையறையில் இதை கவனிச்சீங்களா? உங்க பெட்ரூமில் கண்ணாடி இருக்கா? இப்படி திருப்பி வைங்க: செம டிப்ஸ்
ஒருவேளை இரட்டை இலக்க வெற்றிலைகள் உங்களது கைக்கு வந்துவிட்டால், அதிலிருந்து ஏதாவது ஒரு வெற்றிலை எடுத்து, அதில் 3 மிளகு வைத்து சுருட்டி, நூலில் கட்டி பூஜை அறையில் வைத்துவிட்டால் போதும்.. எந்த செயலை தொடங்கும்போதும், பிரார்த்தனை செய்ய வேண்டும். 3 நாள் கழித்து, அந்த வெற்றிலையை எடுத்து ஏதாவது நீர்நிலைகளில் அல்லது ஒதுக்குப்புறங்களில் போட்டுவிட வேண்டும். இதற்கு பிறகு நீங்கள் முன்னெடுக்கும் காரியங்கள் வெற்றியை தரும் என்கிறார்கள்.


தாம்பூல தட்டு: அதேபோல, ஒரு தாம்பூல தட்டின்மீது ஒரே ஒரு வெற்றிலையும், அதன்மீது பச்சை கற்பூரத்தையும் வைக்க வேண்டும்.. பச்சை கற்பூரத்தில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயை விட்டு, இந்த தட்டை அப்படியே பூஜையறையில் வைத்து பச்சை கற்பூரத்தை ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றும்போது, எந்த கோரிக்கை வைத்தாலும் அது நிறைவேறிவிடும். இதனை தினந்தோறும் செய்யலாம்.

அதேபோல, புதன்கிழமைகளில், விநாயகப் பெருமானின் கோவிலுக்கு சென்று, வெற்றிலை, ஏலக்காய் சேர்த்து தர்ப்பணம் செய்தால், உங்களுக்கிருக்கும் தடைகள் அத்தனையும் நீங்கிவிடும்.

தொங்குதா தொப்பை கொழுப்பு? இந்த சட்னி பெஸ்ட்.. வெற்றிலையை இப்படி ட்ரை பண்ணுங்க.. வெயிட் லாஸ் டிப்ஸ்
image
வெற்றிலை வெற்றி.. வெற்றியிலையுடன் இதை மட்டும் சேர்த்து சாப்பிடுங்க.. இதய நோயும் ஓடிடும்.. சூப்பர்ல

மண்ணீரலை காக்கும் வெற்றிலை.. பித்தம் + கபம் + வாதத்தை விரட்டும் வெத்தல.. கடலை மிட்டாய் இருக்கா? செம
இடுப்பு சதை சர்னு கரையணுமா? அப்ப இந்த 2 பொருள் போதுமே.. மளமளன்னு உடல் எடை குறைக்கும் ஆச்சரிய இலைகள்
வெற்றிலையின் சூப்பர் வெற்றி.. ஜஸ்ட் 4 வெத்தல போதும்.. மொத்த தொந்தரவும் ஓடிரும்.. வாவ் வெத்தல ரசம்
வெற்றி தரும் வெற்றிலை.. இது ரெண்டையும் வெறும் வயிற்றில் மெல்லுங்க.. சர்னு வெயிட் குறையும்.. அசத்தல்

Friday, 14 June 2024

1000 ஆண்டுகளாக கெடாமல் உள்ள ஸ்ரீராமானுஜரின் திருமேனி


1000 ஆண்டுகளாக கெடாமல் உள்ளதாம் ஸ்ரீராமானுஜரின் திருமேனி! உயிர் பிரிந்ததும் நிகழ்ந்த அதிசயம்!
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீராமானுஜரின் பூத உடல் கெடாமல் 100 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு வருவது தெரியுமா? வைணவத்தில் அழியாப் புகழ் பெற்றவர் ஸ்ரீ ராமானுஜர். அவரது திவ்ய உடல் இன்றும் இருப்பதாக சிலர் நம்பிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து குவோரா இணையதளத்தில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது:


ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் உடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு வழிபாடு செய்து வருகிறார்கள், இந்த உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை பச்ச கற்பூரமும் குங்குமப்பூவும் கொண்டு அபிசேகம் செய்து வருகிறார்கள். இந்த செய்தி அருகில் திருச்சியில் உள்ள பலருக்கும் தெரியாது. ஸ்ரீராமனுஜர் சன்னதி ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை.



spirtuality sri ramanujar srirangam
அப்படியே ஸ்ரீராமானுஜர் சன்னதியை பார்ப்பவர்கள் ஸ்ரீராமானுஜர் உடல் என்று அறிவது இல்லை, சன்னதியில் உள்ளது கருங்கல் சிலை என்றே பலர் நினைத்து போகிறார்கள். தானான திருமேனி (இராமனுசர் உடல்) இராமானுசர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை பிரதிஷ்டை செய்தார்கள். இராமானுசர் தமது 120 ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார். அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர்.

உயிர் பிரிந்த உடனே: தர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது என்கிறார்கள். நம்பெருமாள் என்னும் அரங்கன், தான் உடுத்திக் களைந்த பீதகவாடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம். உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த பீதகவாடையையும் சூடிக்களைந்த தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம். பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம்.


4 Reasons Why You Should Consider a Personal Loan for Urgent Financial Needs
இதை வைணவ மொழியில் பிரம்மமேத ஸம்ஸ்காரம் என்கிறார்கள். இதன் பின்பு இராமானுசரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும் ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம். பல்லாயிரக்கணக்கான வைணவ சீடர்கள், வைணவப் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இராமானுசர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது.

திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர். தொடர்ந்து இராமானுஜ நூற்றந்தாதி ஓதியபடி திருவரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.
ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது.


பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர். மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுசர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது: தர்ஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.

தொடர்ந்து அரங்கன்: இராமானுசன் என்தன் மாநிதி என்றும் இராமனுசன் என்தன் சேமவைப்பு என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம். எனவே இராமனுசரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சன்னதிக்குள்ளேயே, (யதி ஸம்ஸ்காரவிதியின் படி), பள்ளிப்படுத்தினர்.

பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப்படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம். இவரின் திருமேனியில் தலைமுடி கை, நகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுசரின் சன்னதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு தானான திருமேனி என்று பெயர்.
உய்ய ஒரே வழி.... உடையவர் திருவடி.... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Thursday, 13 June 2024

கற்பூரம், கிராம்பு ஆகியவை தவறாமல் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றை வீட்டில் எரிப்பதால் பல நன்மைகளைக் கொண்டுள்ளது.



கற்பூரம், கிராம்பு ஆகியவை தவறாமல் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றை வீட்டில் எரிப்பதால் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக சனிக்கிழமை மாலையில் கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பதால் ஏற்படும் பலன்களை தெரிந்து கொள்வோம். 
வாஸ்து சாஸ்திரத்தின்படி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவர பல வழிகள் உள்ளன. வருமானம் பெருக, வீட்டில் உள்ள கண் திருஷ்டி நீங்க, வேலை கிடைக்க, பல சுப பலன்கள் கிடைக்க சிறு விசயம் செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். வாஸ்து படி கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பது பல பிரச்சனைகளை சமாளிக்கும்.
(1 / 7)
வாஸ்து சாஸ்திரத்தின்படி வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டுவர பல வழிகள் உள்ளன. வருமானம் பெருக, வீட்டில் உள்ள கண் திருஷ்டி நீங்க, வேலை கிடைக்க, பல சுப பலன்கள் கிடைக்க சிறு விசயம் செய்தால் எல்லாம் நல்லபடியாக நடக்கும். வாஸ்து படி கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பது பல பிரச்சனைகளை சமாளிக்கும்.

கற்பூரம், கிராம்பு ஆகியவை தவறாமல் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றை வீட்டில் எரிப்பதால் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக சனிக்கிழமை மாலையில் கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பதால் ஏற்படும் பலன்களை தெரிந்து கொள்வோம். 
(2 / 7)
கற்பூரம், கிராம்பு ஆகியவை தவறாமல் வழிபாட்டில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அவற்றை வீட்டில் எரிப்பதால் பல நன்மைகளைக் கொண்டுள்ளது. குறிப்பாக சனிக்கிழமை மாலையில் கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பதால் ஏற்படும் பலன்களை தெரிந்து கொள்வோம். 


பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபட, சனிக்கிழமை இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன், கிராம்பு மற்றும் கற்பூரத்தை வெள்ளிக் கிண்ணத்தில் எரிக்கவும். இப்படிச் செய்தால் பணப் பற்றாக்குறையைப் போக்கலாம்.
(3 / 7)
பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபட, சனிக்கிழமை இரவு படுக்கைக்குச் செல்வதற்கு முன், கிராம்பு மற்றும் கற்பூரத்தை வெள்ளிக் கிண்ணத்தில் எரிக்கவும். இப்படிச் செய்தால் பணப் பற்றாக்குறையைப் போக்கலாம்.

வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை விரட்ட கற்பூரம், கிராம்பு மற்றும் ஏலக்காய் நன்றாக வேலை செய்கிறது. இவை தீய சக்திகளை வீட்டில் இருந்து விலக்கி வைக்கும். கற்பூரம், ஐந்து ஏலக்காய், ஐந்து கிராம்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து எரிக்கவும். முதலில் பூஜையறையில் வைத்து எரித்துவிட்டு அந்த புகையை வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவ விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் அமைதி உண்டாகும், கண் தோஷம் நீங்கும். எதிர்மறை ஆற்றல்கள் அகற்றப்படும். வீட்டில் இருப்பவர் மீது தீய பார்வை இருந்தால் அது நீங்கும். இவற்றை எரிப்பதன் மூலம் வீட்டில் உள்ள எந்த நோய்வாய்ப்பட்ட நபரின் உடலில் இருந்தும் அந்த பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.
(4 / 7)
வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை விரட்ட கற்பூரம், கிராம்பு மற்றும் ஏலக்காய் நன்றாக வேலை செய்கிறது. இவை தீய சக்திகளை வீட்டில் இருந்து விலக்கி வைக்கும். கற்பூரம், ஐந்து ஏலக்காய், ஐந்து கிராம்பு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்து எரிக்கவும். முதலில் பூஜையறையில் வைத்து எரித்துவிட்டு அந்த புகையை வீட்டின் மூலை முடுக்கெல்லாம் பரவ விட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் அமைதி உண்டாகும், கண் தோஷம் நீங்கும். எதிர்மறை ஆற்றல்கள் அகற்றப்படும். வீட்டில் இருப்பவர் மீது தீய பார்வை இருந்தால் அது நீங்கும். இவற்றை எரிப்பதன் மூலம் வீட்டில் உள்ள எந்த நோய்வாய்ப்பட்ட நபரின் உடலில் இருந்தும் அந்த பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியம் மேம்படும்.

சனிக்கிழமை மாலை வீட்டில் கிராம்பு மற்றும் கற்பூரத்தை எரிப்பது குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியையும் அன்பையும் தருகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எதிரிகளிடமிருந்து விடுபடுங்கள். இந்த பரிகாரம் எதிரிகளை விட மேலான கையைப் பெற உதவுகிறது. மேலும் கிராம்பு மற்றும் கற்பூரத்தை எரித்து வர வீட்டில் உள்ள பிணக்குகள் நீங்கும்.
(5 / 7)
சனிக்கிழமை மாலை வீட்டில் கிராம்பு மற்றும் கற்பூரத்தை எரிப்பது குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியையும் அன்பையும் தருகிறது. எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். எதிரிகளிடமிருந்து விடுபடுங்கள். இந்த பரிகாரம் எதிரிகளை விட மேலான கையைப் பெற உதவுகிறது. மேலும் கிராம்பு மற்றும் கற்பூரத்தை எரித்து வர வீட்டில் உள்ள பிணக்குகள் நீங்கும்.


சில சமயங்களில் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்கள் தொழிலில் வெற்றி பெற முடியாது. இது போன்ற சமயங்களில் கற்பூரத்துடன் இந்த தீர்வை முயற்சிக்கவும். இந்த அணுகுமுறை நீங்கள் விரும்பிய வெற்றியைத் தரும். வேலை நேர்காணலுக்குச் செல்லும்போது கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பது நல்லது. மேலும் இரண்டு கிராம்புகளை வாயில் போட்டுவிட்டு வெளியே செல்லவும். நேர்காணலுக்குச் செல்வதற்கு முன் அவற்றை அசைக்கவும். இப்படி செய்தால் வேலை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம். கடுகு எண்ணெயில் இரண்டு கிராம்புகளைப் போட்டு, காலையில் கடவுளுக்கு அருகில் தீபம் ஏற்றவும். அதன் பிறகு நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தொழிலில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும்.
(6 / 7)
சில சமயங்களில் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் உங்கள் தொழிலில் வெற்றி பெற முடியாது. இது போன்ற சமயங்களில் கற்பூரத்துடன் இந்த தீர்வை முயற்சிக்கவும். இந்த அணுகுமுறை நீங்கள் விரும்பிய வெற்றியைத் தரும். வேலை நேர்காணலுக்குச் செல்லும்போது கற்பூரம் மற்றும் கிராம்பு எரிப்பது நல்லது. மேலும் இரண்டு கிராம்புகளை வாயில் போட்டுவிட்டு வெளியே செல்லவும். நேர்காணலுக்குச் செல்வதற்கு முன் அவற்றை அசைக்கவும். இப்படி செய்தால் வேலை கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம். கடுகு எண்ணெயில் இரண்டு கிராம்புகளைப் போட்டு, காலையில் கடவுளுக்கு அருகில் தீபம் ஏற்றவும். அதன் பிறகு நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் தொழிலில் உள்ள தடைகள் அனைத்தும் நீங்கும்.

திருமண உறவில் சிக்கல் இருந்தால் வெள்ளி அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்தில் கற்பூரத்தை எரிக்கவும். அறையின் மூலையில் இரண்டு கற்பூரங்களை வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் இரவில் கற்பூரம் மற்றும் கிராம்புகளை எரிப்பதால் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும். ஆறு கற்பூரம் மற்றும் 36 கிராம்புகளை எடுத்து வீட்டில் தூவி உங்கள் திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும்.
(7 / 7)
திருமண உறவில் சிக்கல் இருந்தால் வெள்ளி அல்லது வேறு ஏதேனும் பாத்திரத்தில் கற்பூரத்தை எரிக்கவும். அறையின் மூலையில் இரண்டு கற்பூரங்களை வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மேலும் இரவில் கற்பூரம் மற்றும் கிராம்புகளை எரிப்பதால் வாழ்வில் உள்ள தடைகள் நீங்கும். ஆறு கற்பூரம் மற்றும் 36 கிராம்புகளை எடுத்து வீட்டில் தூவி உங்கள் திருமண வாழ்க்கையில் உள்ள தடைகள் நீங்கும்.


நேர்மை ஆற்றலும் பெருக வேண்டுமா?

 உங்கள் வீட்டில் வறுமை நீங்க வேண்டுமா? ஆரோக்கியமும், நேர்மை ஆற்றலும் பெருக வேண்டுமா? அப்ப இந்த குட்டி குட்டி டிப்ஸ்களை பாருங்க.



வீட்டில் துளசி செடிக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வருவேண்டும். இதனால், எதிர்மறை சக்திகளிலிருந்து உங்களை காத்து கொள்ளலாம்.. அதேபோல, தினந்தோறும் காலையில் குளிக்கும்போது, ஒரு சிட்டிகை மஞ்சளையும் தண்ணீரில் கலந்து குளிக்கலாம். இதனால், விஷ்ணு பகவான், பிரஹஸ்பதியின் அருள் விலகாமல் இருக்கும்.



ஈசான மூலை.. பூஜை அறையில் சாமி படங்களை எந்த திசையில் வைக்கலாம்? ஈசான்ய மூலை அள்ளி தரும் அதிர்ஷ்டம்ஈசான மூலை.. பூஜை அறையில் சாமி படங்களை எந்த திசையில் வைக்கலாம்? ஈசான்ய மூலை அள்ளி தரும் அதிர்ஷ்டம்
பாக்டீரியாக்கள்: மாலையில் குளிக்கும்போது, தண்ணீரில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து குளிக்கலாம். கிருமிநாசினியாக மஞ்சள் இருப்பதால், உடலிலும் பாக்டீரியாக்கள் உள்ளிட்ட தொற்றுகள் அண்டாது.


விறுவிறு விக்கிரவாண்டி.. முந்திக் கொண்ட திமுக! அதிமுகவில் அடங்கிய பஞ்சாயத்து.. வேட்பாளர் கன்பாஃர்ம்!
அதேபோல, உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில், வாஸ்து குறைபாடுகள் இருப்பதாக தெரிந்தால், அந்த இடத்தில் தினமும் 2 வேளை சங்கு ஊத வேண்டுமாம்.. காலை, மாலை 2 வேளையும் சங்கு ஊதி வரும்போது, வீட்டில் நிலவும் குறைபாடுகள் நிவர்த்தி ஆகும் என்கிறார்கள்.. ஒருவேளை வீட்டில் சங்கு இல்லாவிட்டால், இறைவணக்கம் முடிந்ததும், மணியையும் அடிக்கலாம்... வளிமண்டலத்தின் எதிர்மறை ஆற்றல் மணி வெளியிடும் ஒலியால் அழிக்கப்பட்டு விடுகிறதாம்.

குழாய்கள்: கிச்சனில் எப்பொழுதுமே குழாயில் தண்ணீர் சிந்தவிடக்கூடாது.. கிச்சன் என்றில்லை.. வீட்டில் எந்த குழாய்களிலும் தண்ணீர் கசியாமல் பார்த்து கொள்ள வேண்டும். தண்ணீரில் சிக்கனம் இருந்தாலே, அதிர்ஷ்டம் தாராளமாக கிடைக்குமாம்.

 வாஸ்துப்படி வாஸ்துப்படி "இதை" கிழக்கு திசையில் வெச்சு பாருங்க.. வீட்டில் டபுள் மடங்கு செல்வம், பணம் பெருகுமாம்

கே.எஸ் ரவிக்குமாரை விட்டு பிரிந்த காரணமே இதுதான்! முதல் முறை மனம் திறந்த சேரன்.. நெகிழ்ச்சி வார்த்தை
வீட்டு வாசலுக்கு எதிரேயே தண்ணீர் குழாய், கிணறு, அடி பம்பு இருக்கக்கூடாது.. அப்படியே எதிர்பாராமல் அமைந்துவிட்டால், தண்ணீருள்ள பகுதிகளில் மண்ணை தோண்டி, ஒரு ரூபாய் நாணயத்தை புதைத்து வைக்க வேண்டுமாம். அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்ட தேவையற்ற பழைய பொருட்களை அடைத்து வைக்கலாகாது. ஈசான மூலையில் கழிவறை இருக்கக்கூடாது.

பழைய கடிகாரம்: மொத்தத்தில் வீட்டில் உடைந்த, சேதமடைந்த பொருட்களை வைத்திருக்கக்கூடாது.. அப்படி வைத்திருந்தால், குடும்பத்தில் சண்ட, சச்சரவுகள் வரக்கூடுமாம்.. நின்று போன கடிகாரத்தையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது..

அதேபோல, வீட்டில் வளர்க்கக்கூடிய வாஸ்து செடிகள் என்பதை நன்றாக தெரிந்து கொள்ள வேண்டும். ரோஜாவை தவிர, முட்கள் நிறைந்த செடிகளை வீட்டிற்குள் வளர்க்கக்கூடாது.. இதனால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் பெருகுமாம்.


பம்பளிமாஸுனு


பம்பளிமாஸுனு வாய் கூசாமல் பாடி ஷேமிங் செய்றீங்களே! அந்த பழத்தில் எத்தனை அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் சக்தி ஒரு பழத்திற்கு இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா! ஆம் அதன் பெயர் பம்பளிமாஸ் பழம். இதை பொமலோ பழம் என்றும் கூறுவதுண்டு.


யாராவது குண்டாக இருந்தாலே பம்பளிமாஸ், பப்ளிமாஸ் என கிண்டல் செய்வதுண்டு. அப்படி கிண்டல் செய்யும் போது அவர்களுடைய மனம் எவ்வளவு நொந்து போகும் என்பதை யாரும் கவலைப்பட மாட்டார்கள்.

health fruit
அப்படிப்பட்ட பப்ளிமாஸ் பழத்தில் எத்தனை நன்மைகள் இருக்கின்றன தெரியுமா? பழங்களில் சிட்ரஸ் பழங்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. இதில் விட்டமின் சி இருப்பதால் நிறைய சத்துக்கள் கிடைக்கும்.

இதய ஆரோக்கியமாக இருக்க, கல்லீரல் வலுப்பெற, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த ஒரு பழம் உதவி செய்கிறது என்பது தெரியுமா. அதுதான் அந்த பம்பளிமாஸ் பழம். இந்த பழத்தால் ஏற்படும் ஆரோக்கியமான நன்மைகளை நாம் தெரிந்து கொள்ளலாம்.

இந்த பழத்தில் விட்டமின் சி, ஆண்டி ஆக்ஸிடென்ட் போல் செயல்பட்டு மனித செல்கள் சேதமடைவதை தடுக்கும். இதில் அஸ்கார்பிக் அமிலம் இருக்கும். இந்த அமிலம் ஆப்பிளில் இருக்கும். உடலில் உள்ள வெள்ளை அணுக்களை தூண்டி நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. இந்த நிலையில் இதில் இருக்கும் நரின்ஜினின், நரின்ஜின் ஆகியவை கல்லீரலுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறது.

இதனால் கல்லீரல் செயலிழப்பிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். இதில் இருக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் வயதான தோற்றத்தை தடுக்கும். தோல் சேதமடைவதை தடுத்து நிறுத்தி இளமையாகவே வைத்திருக்கும். அதிக நார்சத்து, விட்டமின் சி இருப்பதால் உடல் எடையும் குறையும். கொலஸ்ட்ரால் அளவு குறையும்.

தொடர்ந்து இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். சாத்துக்குடி, ஆரஞ்ச் இனத்தை சேர்ந்தது. இந்த பழம் பெரிய சாத்துக்குடி பழம் போல் இருக்கும். குறைந்த அளவு கிளைசெமீக் குறியீடு கொண்டிருக்கிறது. ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பண்பும் இந்த பழத்திற்கு உள்ளது.


கலோரிகள், நார்ச்சத்து, பொட்டாசியம் என உடலுக்கு தேவையான ஊட்டசத்துகள் உள்ளன. முக்கியமாக ரத்த அழுத்தத்தை குறைக்கும். பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. செரிமானத்திற்கு உகந்தது. இதில் நார்ச்சத்து அதிகமாக இருக்கிறது. மலச்சிக்கலை போக்கும்.

கலோரிகள் குறைந்த பழம் என்பதால் உடல் பருமனை கட்டுப்படுத்த உதவுகிறது. ப்ரீ ரேடிக்கல் நிறைந்த இந்த பம்பளிமாஸ் பழம் புற்றுநோய்க்கு காரணமான செல்களை அழிக்கும். கெட்ட கொழுப்புகளையும் கரைக்கும். எல்லா உறுப்புகளுக்கும் ரத்த ஓட்டம் கிடைக்க வழிவகை செய்கிறது.


Wednesday, 12 June 2024

எந்தெந்த கிழமைகளில் எந்த நிற உடைகள் அணிந்தால் நமக்கு அதிர்ஷ்டம்



எந்தெந்த கிழமைகளில்.. எந்த நிற ஆடை அணிந்தால் அதிர்ஷ்டம் கிடைக்கும்.. தெரிஞ்சுக்கோங்க!

ஜோதிடத்தின் படி எந்தெந்த கிழமைகளில் எந்த நிற உடைகள் அணிந்தால் நமக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

astrology
1/7
திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் நீளம், வெள்ளை, கிரீம், இளஞ்சிவப்பு, வெளிர் நீளம் ஆகிய நிறங்களில் உடை அணிவது அதிர்ஷ்டத்தை கொண்டுவரும்.

astrology
2/7
செவ்வாய்க்கிழமை அனுமனுக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. சிவப்பு, குங்குமம், ஆரஞ்சு, மஞ்சள் ஆகிய நிற உடைகளை அணிவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
astrology
3/7
புதன்கிழமை கணபதி அல்லது விநாயகருக்கு உகந்த நாளாகும். இந்நாளில் பச்சை நிற உடை அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

astrology
4/7
வியாழக்கிழமை விஷ்ணுவுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் மஞ்சள் நிற உடைகளை அணிவது அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
astrology
5/7
வெள்ளிக்கிழமை லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் சிவப்பு நிற உடை அணிந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்.
astrology
6/7
சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாளாகவும். கருப்பு, அடர் பழுப்பு, அடர் நீளம், ஊதா நிற உடை அணிந்தால் அதிர்ஷ்டம் தேடி வரும்.

7/7
ஞாயிற்றுக்கிழமைசூரிய பகவானுக்கு ஏற்ற நாளாகும். சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் நிற உடை அணிந்தால் அதிர்ஷ்டம் 


Tuesday, 11 June 2024

வசம்பில் கல் உப்பு போட்டு வைத்தால் நடக்கும் மேஜிக்கை பாருங்க.. வீட்டில் செல்வம் தங்க சூப்பர் டிப்ஸ்

 
வசம்பில் கல் உப்பு போட்டு வைத்தால் நடக்கும் மேஜிக்கை பாருங்க.. வீட்டில் செல்வம் தங்க சூப்பர் டிப்ஸ்
வீட்டில் சில குறிப்பிட்ட பொருட்களை வைத்திருப்பதால், வறுமை நீங்கி குடும்பத்தில் சுபிட்சம் தழைக்கும் என்று நம்பப்படுகிறது.. இதற்குரிய காரணத்தையும் நம்முடைய முன்னோர்கள் அன்றே எடுத்துரைத்திருக்கிறார்கள்.


வீடுகளில், செல்வம் தழைக்க மணிபிளான்ட் போன்ற செடிகளை வளர்ப்பது வழக்கம்.. அதுபோல, வீட்டின் பூஜை அறை, பணம் சேமிக்கும் இடம் போன்றவற்றில் பணக்கஷ்டம் தீர வேண்டுமானால், மங்கலகரமான பொருட்களை நிலையாக வைத்திருகக் வேண்டும்.


முக்கியமாக, நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்யும் பொருட்களை, தெய்வீக சக்திகளை ஈர்க்கும் பொருட்களை வீட்டிற்குள் வைத்திருந்தாலே, குடும்பம் வறுமையில் சிக்காமல், அள்ள அள்ள செல்வம் பெருகிக் கொண்டேயிருக்குமாம். அப்படி பெரிதும் நம்பப்படும் பொருள்தான் வசம்பு.


கல் உப்பு மகத்துவம்: ஒரு சிறிய மண் பாத்திரத்தில் கல் உப்பை நிரப்பி, அந்த கல் உப்பிற்கு நடுவே ஒரே ஒரு சின்ன துண்டு வசம்பு வைக்க வேண்டும்.. வசம்பு வெளியே தெரியாத அளவுக்கு அதற்கு மேலும் உப்பைக் கொட்டி மூடிவிட வேண்டும்.. பிறகு இந்த மண் பாத்திரத்தின் மீது 520 என்ற எண்ணை மேல்புறத்திலும், 741 என்று எண்ணை கீழ்புறத்திலும் எழுதி, இதனை யாரும் பார்க்காதவாறு, சுவாமி படங்களுக்கு பின்புறம் மறைத்துவிட வேண்டுமாம்.

மாதம் ஒருமுறை இந்த மண் பாத்திரத்தை வெளியே எடுத்து, அதிலிருக்கும், உப்பு, வசம்பு இரண்டையும் எடுத்துவிட்டு, வேறு வசம்பு, உப்புவை மாற்றிவிட்டு, மறுபடியும் யார் கண்ணிலும் படாமல் வைக்க வேண்டும். இப்படி செய்துவரும்போது வீட்டில் பணம் தங்குதடையின்றி வந்து கொண்டே இருக்கும் என்று நம்பப்படுகிறது.. அதுமட்டுமல்ல, நாம் செலவு செய்த பணமும் இரட்டிப்பாகிவிடுமாம்.


மகாலட்சுமி: மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் உப்புவிற்கு நேர்மறை சக்திகளை ஈர்க்கும் ஆற்றல் அதிகமாகவே உண்டு.. வசம்பிற்கும் செல்வத்தை ஈர்க்கும் தன்மை அதிகம் என்பதால், இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து வைக்க வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள்.

இந்த வசம்பு வைத்து வேறொரு பரிகாரத்தையும் செய்வார்கள்.. வீட்டிலுள்ள கஷ்டம் நீங்கி, செல்வம் பெருக இந்த பரிகாரத்தையும் கடைப்பிடிக்கலாம். அதாவது, ஒரு சிறிய துண்டு வசம்புவை கையில் எடுத்துக் கொண்டு, பூஜை அறையில் விளக்கேற்றி பண கஷ்டம் நீங்கி பண வரவு அதிகரிக்க வேண்டும் என்று வேண்டி கொள்ள வேண்டும்.


1 ரூபாய் நோட்டு: பிறகு, கையிலுள்ள வசம்பினை 1 ரூபாய் நோட்டில் வைத்து சுருட்டி, ஒரு நூலில் கட்டிவிட வேண்டும். இதனை கல் உப்பு போட்டு வைத்திருக்கும் மண் பாத்திரத்தில் போட்டு, இதன்மீதும் சிறிது கல் உப்பினை கொட்டி, இந்த பாட்டிலை யார் கண்ணிலும் படாதவாறு மறைத்து வைக்க வேண்டும்.. இந்த கல் உப்பினை மட்டும் வார வாரம் மாற்றிக் கொண்டே வரவேண்டும்..

வசம்புடன் கல் உப்பும் சேர்த்து வைத்தால், மகாலட்சுமியின் ஆதரவு முழுமையாக கிடைத்து, வீட்டிலுள்ள பணக்கஷ்டங்கள் நீங்கிவிடும்.. தொடர்ந்து இதனை செய்து வந்தால், வீட்டிலும் பண வரவு அதிகமாக இருக்கும் என்கிறது ஆன்மீகம்.



வசம்பு வாசம்: அதேபோல மருத்துவ குணம் நிறைந்த வசம்பானது, மிகச்சிறந்த கிருமிநாசினியாகும்.. எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் அகற்றக்கூடிய சக்தி வசம்புவுக்கு உண்டு.. அதனால் ஒவ்வொரு வீடுகளிலும் கட்டாயம் இருக்கக்கூடிய அற்புதமான மூலிகை பொருள் வசம்பு என்பது குறிப்பிடத்தக்கது.


Sunday, 2 June 2024

புது வீட்டிற்கு பால் காய்ச்சும்...

*புது வீட்டிற்கு பால் காய்ச்சும் போது பாலில் இந்த 1 பொருளை மட்டும் போட்டு காய்ச்சினால் போதும், தினம் தினம் உங்கள் வீட்டில் சந்தோஷம் பால் போல பொங்கி வழியும்.!*

குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, ஒருவருடைய விருப்பங்களுக்கு மற்றவர்கள் மரியாதை கொடுத்து, அனுசரித்து சென்றாலே போதும். குடும்பத்தில் சந்தோஷம் தினம் தினம் பால் பொங்கி வழிந்து கொண்டே இருக்கும். இதுதவிர வீட்டில் இருக்கும் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் அனைவரும் மனம் விட்டு பேசக் கூடிய பழக்கத்தை கொண்டு வர வேண்டும். வாய் விட்டு சிரிக்க கூடிய பழக்கம் வரவேண்டும். ஒருவருக்கு ஒருவர் எந்த விஷயத்தையும் பேசி கலந்தாலோசிக்காமல், ‘இவங்க என்னைப்பற்றி இப்படி நினைத்திருப்பார்களோ! அப்படி நினைத்திருப்பார்களோ! என்று தனக்குத்தானே எதையாவது எதிர்மறையாக கற்பனை செய்து கொண்டு’, அடுத்தவர்கள் மேல் பழி போடும் பழக்கத்தை விட்டுவிட்டு, நேருக்குநேர் பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்ளக் கூடிய குடும்பத்தில் சந்தோஷத்திற்கு ஒரு துளி அளவும் குறைவிருக்காது. மேல் சொன்ன இந்த விஷயத்தை மட்டும் உங்களுடைய வீட்டில் நீங்கள் பின்பற்றித்தான் பாருங்களேன். வாழ்க்கையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை. இந்த ஒரு நல்ல தகவலுடன் இன்றைய பதிவிற்குள் செல்வோமா.

தினம் தினம் வீட்டில் சந்தோஷம் பொங்கி வழிய வேண்டும் என்ற காரணத்தால் தான், மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய பசு மாட்டின் பாலை புது வீட்டிற்கு செல்லும்போது காய்ச்சும் வழக்கத்தை நாம் பின்பற்றி வருகின்றோம். புது வீடு பால் காய்ச்ச செல்லும்போது, சில்வர் பாத்திரத்தைப் பயன்படுத்த வேண்டாம். வெண்கலப் பாத்திரத்தில் பால் காய்ச்சுவது மிக மிக சிறப்பு. இல்லையென்றால் பித்தளை பாத்திரத்தில் பால் காய்ச்சலாம். வெள்ளி பாத்திரத்திலும் பால் காய்ச்சலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு அடிக்கடி வீடு மாற்ற வேண்டிய சூழ்நிலை இருக்காது. வாடகை வீட்டில் இருப்பவர்கள் அடிக்கடி வீடு மாறும் போது ஒவ்வொரு முறையும் புதிதாக ஒரு பாத்திரமாக வாங்க முடியாது. ஒரு பாத்திரத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தை எச்சில் படாமல் தனியாக எடுத்து வைத்துவிடுங்கள். மீண்டும் மீண்டும் வாடகைக்கு புது வீட்டில் பால் காய்ச்சும் போது அதே பாத்திரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சரி, விஷயத்திற்கு வருவோம். பால் போல நமது குடும்பத்தில் செல்வ வளம் பொங்கி வழிய சந்தோஷம் பொங்கி வழிய நாம் இதை மட்டும் செய்தால் போதும். ஒரு வெள்ளி நாணயம் நமக்கு இந்த பரிகாரத்திற்கு தேவை. புதிதாக வாங்கப்பட்ட வெள்ளி நாணயத்தை வாங்கி வைத்துக் கொண்டால் மிகவும் நல்லது. அப்படி புதியதாக நாணயம் வாங்க முடியாதவர்கள் வசதியில்லாதவர்கள் சிறிய வெள்ளி மோதிரம் இருந்தால் கூட அதை நன்றாக சுத்தம் செய்து விட்டு இந்தப் பூஜைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். (மிக சிறிய அளவில் இரண்டு கிராம் அளவில் வெள்ளி நாணயம் இருந்தால் கூட போதும்.)

புது வீட்டில், அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்து பால் ஊற்றி காய்ச்சி பொங்கி வழியும் போது, அதில் இந்த வெள்ளி நாணயத்தை போட்டுவிடுங்கள். பால் பொங்கி வழியும்போது பாலுக்குள்ளே வெள்ளி நாணயம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. தங்கத்தைவிட சுபிட்சத்தை கொடுக்கக் கூடிய பொருள் வெள்ளி. இப்படிப்பட்ட வெள்ளியை புது வீட்டில் முதன் முதலில் பால் காய்ச்சும் போது அந்தப் பாலில் போடுவது நம் வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தையும் சுபீட்சத்தையும் கொடுக்கும்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக சிறிய குழந்தைகளுக்கு வெள்ளிப் பாத்திரத்தில் சாதம் ஊட்டுவார்கள். ஒருவேளை வீட்டில் இருப்பவர்கள் நோய் நொடி இல்லாமல் எதிர்ப்பு சக்தியோடு இருக்க வேண்டும் என்பதற்காக கூட இந்த பரிகாரத்தை நமக்கு, நம்முடைய முன்னோர்களால் சொல்லப்பட்டிருக்கலாம். ஆரோக்கிய ரீதியாக பார்த்து இந்த பரிகாரத்தை நீங்கள் செய்தாலும் சரி, ஆன்மீக ரீதியாக பார்த்து இந்த பரிகாரத்தை செய்தாலும் சரி, நம் குடும்பத்திற்கு இது நன்மையை மட்டுமே தரக்கூடிய பரிகாரம்.

இப்படி புது வீட்டிற்கு பால் காய்ச்ச வாங்கிய வெள்ளி நாணயத்தை, தினம்தோறும் நம் வீட்டில் பால் காய்ச்சும் போது கூட அந்த பாலில் போட்டு காய்ச்சி விட்டு ஞாபகமாக பாலிலிருந்து அந்த நாணயத்தை எடுத்து விட்டு, அதன் பின்பு அந்தப் பாலை நம் வீட்டில் இருப்பவர்களுக்கு பருகக் கொடுக்க வேண்டும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குழந்தைகளுக்கு நாணயத்தோடு போட்டு பாலை ஊற்றி, குடிக்கக் கொடுத்து விட்டால் பின்பு விளைவுகள் விபரீதமாகி விடும். அந்த கவனம் நமக்கு கட்டாயம் இருக்க வேண்டும். நம்பிக்கை உள்ளவர்கள் கவனத்தோடு இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம்.