jaga flash news

Friday 14 June 2024

1000 ஆண்டுகளாக கெடாமல் உள்ள ஸ்ரீராமானுஜரின் திருமேனி


1000 ஆண்டுகளாக கெடாமல் உள்ளதாம் ஸ்ரீராமானுஜரின் திருமேனி! உயிர் பிரிந்ததும் நிகழ்ந்த அதிசயம்!
திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் ஸ்ரீராமானுஜரின் பூத உடல் கெடாமல் 100 ஆண்டுகளுக்கு மேலாக பாதுகாக்கப்பட்டு வருவது தெரியுமா? வைணவத்தில் அழியாப் புகழ் பெற்றவர் ஸ்ரீ ராமானுஜர். அவரது திவ்ய உடல் இன்றும் இருப்பதாக சிலர் நம்பிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து குவோரா இணையதளத்தில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது:


ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஸ்ரீராமானுஜர் உடல் கெடாமல் பாதுகாக்கப்பட்டு வழிபாடு செய்து வருகிறார்கள், இந்த உடலுக்கு வருடத்திற்கு இரண்டு முறை பச்ச கற்பூரமும் குங்குமப்பூவும் கொண்டு அபிசேகம் செய்து வருகிறார்கள். இந்த செய்தி அருகில் திருச்சியில் உள்ள பலருக்கும் தெரியாது. ஸ்ரீராமனுஜர் சன்னதி ஸ்ரீரங்கம் கோவிலில் இருப்பதே பலருக்கும் தெரியவில்லை.



spirtuality sri ramanujar srirangam
அப்படியே ஸ்ரீராமானுஜர் சன்னதியை பார்ப்பவர்கள் ஸ்ரீராமானுஜர் உடல் என்று அறிவது இல்லை, சன்னதியில் உள்ளது கருங்கல் சிலை என்றே பலர் நினைத்து போகிறார்கள். தானான திருமேனி (இராமனுசர் உடல்) இராமானுசர் ஸ்ரீரங்கத்தில் பரமபதம் அடைந்தவுடன், அரங்கனுடைய வசந்த மண்டபத்திலேயே அவருடைய திருமேனியை பிரதிஷ்டை செய்தார்கள். இராமானுசர் தமது 120 ஆவது வயதில் (கி.பி. 1137), தாம் பிறந்த அதே பிங்கள வருடம் மாசி மாதம் வளர்பிறை தசமி திதியில், சனிக்கிழமை நண்பகலில், ஜீயர் மடத்தில் மரணம் (பகவத் சாயுஜ்யம்) அடைந்தார். அவருடைய சீடர்களான கந்தாடையாண்டான், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், எம்பார், வடுகநம்பி முதலானோர் வேரறுந்த மரம் போல் விழுந்து கிடந்து துடித்தனர்.

உயிர் பிரிந்த உடனே: தர்மோ நஷ்ட (தர்மத்திற்கே பெருத்த நஷ்டம்) என்று அசரீரி ஒலித்ததாம். அப்போது நடந்த நிகழ்வுகள் எல்லாம் அதிசயத்திலும் அதிசயமானது என்கிறார்கள். நம்பெருமாள் என்னும் அரங்கன், தான் உடுத்திக் களைந்த பீதகவாடையையும், சூடிக்களைந்த துழாய் மலரினையும், எண்ணெய்க் கிண்ணத்தையும் தம் இறுதி மரியாதையாக ஒரு பொற்கிண்ணத்தில் இட்டு உத்தம நம்பி என்ற சீடர் மூலம் ஜீயர் மடத்திற்கு அனுப்பினாராம். உத்தம நம்பிகள் ஜீயர் மடத்தில் இருந்த சீடர்களுக்கு ஆறுதல் சொல்லி அதன் பிறகு எண்ணெயை இராமானுசரின் திருமுடியில் தேய்த்துப் பின் அவர் திருவுடலை நீராட்டி, அரங்கன் உடுத்திக் களைந்த பீதகவாடையையும் சூடிக்களைந்த தொடுத்த துழாய் மலரினையும் திருமேனியில் சாற்றினாராம். பின்பு எண்ணெய் மற்றும் ஸ்ரீ சூர்ணங்களும் பிரசாதமாக அங்கிருந்தோருக்கு வழங்கப்பட்டதாம்.


4 Reasons Why You Should Consider a Personal Loan for Urgent Financial Needs
இதை வைணவ மொழியில் பிரம்மமேத ஸம்ஸ்காரம் என்கிறார்கள். இதன் பின்பு இராமானுசரின் திருமேனி ஒரு வாகனத்தில் (திவ்ய விமானத்தில்) அமர்த்தப்பட்டு இதன் முன்னின்று அவருடைய முக்கிய சீடர்களும் ஜீயர்களும் பரஹ்மவல்லி, ப்ருகுவல்லி, நாராயணானுவாகம் போன்ற மந்திரங்களை ஓதினராம். பல்லாயிரக்கணக்கான வைணவ சீடர்கள், வைணவப் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் புடை சூழ இராமானுசர் திருமேனி தாங்கிய வாகனம் இறுதிப்பயண ஊர்வலத்தைத் தொடங்கியது.

திருவரங்கப் பெருமாளரையர் தலைமை தாங்கி திருவாய்மொழியரையர், ஆப்பான், திருவழுந்தூரரையர், திருநறையூரரையர், அழகிய மணவாரரையர் முதலிய எழுநூறு திருவாய்மொழி ஓதும் அரையர்கள் திருவாய்மொழியினை ஓதியபடி பின் தொடர்ந்தனர். தொடர்ந்து இராமானுஜ நூற்றந்தாதி ஓதியபடி திருவரங்கத்து அமுதனார், பெரியகோவில் வள்ளலார் முதலியவர்கள் வாகனத்தின் பின் வந்தனர்.
ஸ்ரீரங்கத்தில் ஜீயர் மடத்திலிருந்து நகரின் நான்கு உத்திர வீதி, சித்திரை வீதிகளிலும் வாகனம் ஊர்ந்தது. மக்கள் கூட்டம் வீதியெங்கும் நிரம்பி வழிந்தது.


பெண்கள் தங்கள் வீதிகளில் நீர் தெளித்துக் கோலமிட்டுக் கூடி நின்றனர். மக்கள் பூவும் பொரியும் கலந்து தூவினார்களாம். அரங்கன் கோவில் திருநடை மூடி, கரும்பும் குடமும் ஏந்தினராம். அடியார்கள் சாமரம் வீச, வானில் கருடன் வட்டமிட இராமானுசர் இறுதி ஊர்வலம் திரும்ப கோவில் வாயிலை அடைந்தபோது: தர்ஸனத்தில் எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளினார் என்று அசரீரி மீண்டும் ஒலித்ததாம்.

தொடர்ந்து அரங்கன்: இராமானுசன் என்தன் மாநிதி என்றும் இராமனுசன் என்தன் சேமவைப்பு என்றும் திருவாய் மலர்ந்தருளினாராம். எனவே இராமனுசரின் பூத உடல் என்ற அந்த நிதி வெளியே எங்கும் போகலாகாது என்று அரங்கன் தன் திருக்கோவில் வளாகத்திலேயே (ஆவரணத்துக்குள்ளேயே) எவ்வாறு ஒரு அரசன் தன் பெண்டிரை தன் அந்தபுரத்திலே அடக்கி வைப்பானோ அதுபோல தன்னுடைய சன்னதிக்குள்ளேயே, (யதி ஸம்ஸ்காரவிதியின் படி), பள்ளிப்படுத்தினர்.

பல வருடங்களுக்கு முன் வைணவ மரபில், துறவிகளை எரிக்கும் வழக்கம் கிடையாது. மாறாக அவர்களை திருப்பள்ளிப்படுத்துவார்கள் (புதைத்தல்). இராமானுசரின் பூதவுடலை ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் (முன்னாள் வசந்த மண்டபம் என்றழைக்கப்பட்ட இடத்தில்) திருப்பள்ளிப்படுத்தி அதன் மேல் எழுப்பப்பட்டது தான் தற்போதைய உடையவர் சன்னிதி. இன்றும் நாம் இவருடைய பூத உடலை தரிசிக்கலாம். இவரின் திருமேனியில் தலைமுடி கை, நகம் போன்றவற்றைக் கூட எளிதாகக் காண இயலும். ஸ்ரீரங்கத்தில் இராமானுசரின் சன்னதியில் எழுந்தருளியுள்ள திருமேனிக்கு தானான திருமேனி என்று பெயர்.
உய்ய ஒரே வழி.... உடையவர் திருவடி.... இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


4 comments:

  1. அய்யா வெ.சாமி அவர்களுக்கு நமஸ்காரம். அருமை அய்யா.

    ReplyDelete
  2. *கைவல்ய அஷ்டகம்*

    1. மதுரம் மதுரேப்யோ" பி மங்கலேப்யோ "பி மங்கலம்
    பாவநம் பாவநேப்யோ" பி ஹரேர்நாமைவ கேவலம்

    2. ஆப்ரம்மஸ்தம்ப பர்யந்தம் ஸர்வம் மாயாமயம் ஜகத்
    ஸத்யம் ஸத்யம் புந: ஸத்யம் ஹரே: தாமைவ கேவலம்

    3. ஸ குரூ ஸ பிதா சாபி ஸ மாதா பாந்தவோ"பி ஸ:
    சி௯ஷயேத் சேத் ஸதா ஸமர்தும் ஹரே: நாமைவ கேவலம்

    4, நிஶ்: வாஸே ந ஹி விஸ்வாஸ சுதா ருத்தோ பவிஷ்யதி
    கீர்த்தநீயமதோ பால்யாத் ஹரே: நாமைவ கேவலம்

    5. ஹரி ஸதா வஸேத் தத்ர யத்ர பகவதா ஜநா:
    காயந்தி பக்திபாவநே ஹரே: நாமைவ கேவலம்

    6. அஹோ தூக்கம் மஹா துக்கம் துக்காத் துக்கதரம் யத:
    காசார்த்தம் விஸ்ம்ருதம் ரத்நம் ஹரே: நாமைவ கேவலம்

    7. தீயதாம் தீயதாம் கர்ணோ நீயதாம் தாயதாம் வச:
    கீயதாம் கீயதாம் நித்யம் ஹரே: நாமைவ கேவலம்

    8. த்ருணீக்ருத்ய ஜகத் ஸர்வம் ராஜதே ஸகலோபரி
    சிதாநந்தமயம் ஶ்¬த்தம் ஹரேர் நாமைவ கேவலம்.

    *இதி கைவல்யாஷ்டகம் ஸம்பூர்ணம்.*

    ReplyDelete
  3. Fri. 28, Jun. 2024 at 11.31 pm.

    *பாடல் : 1*

    ஆறிரு தடந்தோள் வாழ்க ஆறுமுகம் வாழ்க வெற்பைக்
    கூறுசெய் தனிவேல் வாழ்க குக்குடம் வாழ்க செவ்வேள்
    ஏறிய மஞ்ஞை வாழ்க யானைதன் அணங்கு வாழ்க
    மாறிலா வள்ளி வாழ்க வாழ்கசீர் அடியார் எல்லாம்.

    * இருப்பிடம் : கந்தபுராணம் : வள்ளியம்மை திருமணப் படலம்.
    *அதில் "தட்ச காண்டத்தில்" பக்கம் : 524-ல்; பாடல் : 10339 உள்ளன.

    *விளக்கம் :*

    *செம்மையான தூய விருப்பத்துக்கு இடமான முருகப் பெருமானின் அகன்ற 12− தோள்கள் வாழ்க !

    *6−திருமுகங்கள் வாழ்க !

    *கிரவுஞ்ச மலையைப் பிளந்த நிகரற்ற வெற்றி வேல் வாழ்க !

    *சேவல் கொடி வாழ்க !

    *அப்பெருமான் ஊரும் மயில் வாழ்க !

    *தெய்வ யானை வாழ்க !

    *நிகரில்லாத வள்ளி நாயகியார் வாழ்க !

    *சிறப்புடைய அடியார் எல்லாம் பேரானந்தப் பெருவாழ்க வாழ்க !
    என்பதே இப்பாடலின் விளக்கம்.

    **************

    *பாடல் : 2*

    வான்முகில் வழாது பெய்க ! மலிவளம் சுரக்க மன்னன்
    கோன்முறை அரசு செய்க! குறைவிலாதுயிர்கள் வாழ்க !
    நான்மறை அறங்கள் ஓங்க ! நற்றவம் வேள்வி மல்க !
    மேன்மைகொள் சைவநீதி விளங்குக ! உலகமெல்லாம் !

    *விளக்கம் :* இந்த உலகம் எங்கும் வானத்து மேகங்கள் தப்பாமல் மழை பொழிக !

    *நிறைந்த வளங்கள் பெருகுக ! அரசன் செங்கோல் ஆட்சி செய்க !
    உயிர்கள் குறையில்லாமல் வாழ்க ! நான்கு வேதங்கள் கூறும் தருமங்கள் தழைக்க ! நல்ல தவங்களும், யாகங்களும் பெருகுக !
    *சிறப்பு மிக்க சைவ சமய நீதி எங்கும் திகழ்க !*

    *இருப்பிடம் : கந்தபுராணம் : வாழ்த்து பாடல்.*

    *******

    *பாடல் : 3*

    பூதலமாதும் வாழ்க, பொன்மழை பொதிந்து வாழ்க
    வேதாகமும் வாழ்க, வேந்தர் செங்கோலும் வாழ்க
    தீதில் ஐந்தெழுத்தும் நீறுஞ் சிவனடியாரும் வாழ்க
    வாதவூரிறை புராணம் படித்தவர் கேட்டோர் வாழ்க.

    *இருப்பிடம் :*

    *திருவாதவூரர் புராணம் : திருவடி பெற்ற சருக்கத்தில் கடைசி பாடலாக அமைந்துள்ளது.*

    *திருவாதவூரர் புராணம் எழுதிய ஆசிரியர் : "கடவுண் மாமுனிவர்".*

    *பொருள் + விளக்கம் :*

    * பூதலமாதும் வாழ்க = பூமி தேவியும் வாழ்க.

    * பொன்மழை பொழிந்து வாழ்க = பொன்போலும் முகில்கள் மழை பொழிந்து வாழ்க.

    * வேத ஆகமமும் வாழ்க = வேதாகமங்களும் வாழ்க.

    * வேந்தர் செங்கோலும் வாழ்க = அரசருடைய செங்கோலும் வாழ்க.

    * தீது இல் ஐந்து எழுத்தும் நீறுஞ் சிவனடியாரும் வாழ்க = தீதற்ற பஞ்௯ஷாட்சரமும், விபூதியும் சிவபத்தர்களும் வாழ்க.

    * வாதவூரிறை புராணம் படித்தவர், கேட்டோர் வாழ்க = இத் திருவாதவூரர் புராணத்தை அன்போடு படித்தவர்களும், கேட்டவர்களும் வாழ்க.

    என்பதே இப்பாடலின் பொருளும் விளக்கமும் ஆகும்.

    திருச்சிற்றம்பலம்

    *மீண்டும் சந்திக்கலாம் !*
    Sivajansikannan@gmail.com

    ReplyDelete
  4. Thu. 4, July, 2024 at 5.11 am.

    *ஶ்ரீமதுராஷ்டகம் :*

    அதரம் மதுரம் வதநம் மதுரம்
    நயநம் மதுரம் ஹஸிதம் மதுரம்
    ஹ்ருதயம் மதுரம் கமநம் மதுரம்
    மதுராதிபதேரகிலம் மதுரம்

    வசநம் மதுரம் சரிதம் மதுரம்
    வஸநம் மதுரம் வலிதம் மதுரம்
    சலிதம் மதுரம் ப்ரமிதம் மதுரம்
    மதுராதிபதேரகிலம் மதுரம்

    வேணுர் மதுரோ ரேணுர்மதுர:
    பாணிர்மதுர: பாதெள மதுரெள
    ந்ருத்யம் மதுரம் ஸக்யம் மதுரம்
    மதுராதிபதேரகிலம் மதுரம்

    கீதம் மதுரம் பீதம் மதுரம்
    புக்தம் மதுரம் ஸுப்தம் மதுரம்
    ரூபம் மதுரம் திலகம்"மதுரம்
    மதுராதிபதேரகிலம் மதுரம்

    கரணம் மதுரம் தரணம் மதுரம்
    ஹரணம் மதுரம் ஸ்மரணம் மதுரம்
    வமிதம் மதுரம் ஶமிதம்"மதுரம்
    மதுராதிபதேரகிலம் மதுரம்

    குஞ்ஜா மதுரா மாஸா மதுரா
    யமுனா மதுரா மதுரா வீசீ மதுரா
    ஸலிலம் மதுரம் கமலம் மதுரம்
    மதுராதிபதேரகிலம் மதுரம்

    கோபீமதுரா லீலா மதுரா
    யுக்தம் மதுரம் புக்தம் மதுரம்
    த்ருஷ்டம் மதுரம் ஶிஷ்டம் மதுரம்
    மதுராதிபதேரகிலம் மதுரம்

    கோபா மதுரா காவோ மதுரா
    யஷ்டிர் மதுரா ஸ்ருஷ்டிர் மதுரா
    தலிதம் மதுரம் பலிதம் மதுரம்
    மதுராதிபதேரகிலம் மதுரம்.

    Sivajansikannan@gmail.com

    ReplyDelete